இலங்கைத் தமிழ்மன்னரின் வழிவந்தவர் மரணம்

இலங்கையை ஆண்ட இறுதித் தமிழ் மன்னர் விக்கிரமஇராசசிங்கர். இவரின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த பிருதிவிராசு 17.01.14 அன்று மரணம் அடைந்துள்ளார். வேலூர் சாயிநாதபுரம் நடேச(முதலி)த் தெருவில் வசித்து வந்த பிருதிவிராசு அப்பகுதி மக்களால் இளவரசன் என அழைக்கப்பட்டு வந்துள்ளார். ஏராளமான பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இலங்கை, கண்டியில், மதுரை நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த, தமிழ் மன்னர்கள், கி.பி. 1739 1815 வரை, ஆட்சி செய்தனர்.  இலங்கையை ஆண்ட கடைசித் தமிழ் மன்னர் விக்கிரமஇராசசிங்கர். இவர் மீது, நான்கு முறை, போர்…

அகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்!

  தமிழர்திருநாளாம் பொங்கல் நன்னாளில் அனைவருக்கும் அகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்! இனப்படுகொலைகளு்க்கும் நிலப்பறிப்பிற்கும் பிற துயரங்களுக்கும் ஆளாகி வரும் தமிழ் ஈழ மக்கள், 01.01.1600  இல் பெற்றிருந்த நிலப்பரப்பைப் பெற்றுத் தனியரசாய்த்திகழும் நாளே நமக்கு மகிழ்வு தரும் நாள் என்பதில் ஐயமில்லை. எனினும் துயரத்தை வென்றெடுக்க, ஊக்க உணர்ச்சி பெற, இன எழுச்சி பெற, இடையிடையே வரும் பொங்கற் புது நாள் போன்றன உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.  எனவே உலகத் தமிழர்கள் உவக்கும் வண்ணம் தமிழ் ஈழ விடுதலை விரைவில் அமைய…

மாவீரர்நாள் உரைமணிகள் சில! – 6

 (முன்னிதழ்த் தொடர்ச்சி) . . .வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்கமுடியாது. சிங்களத் தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்கால நல்வாழ்வின்றிச் சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம்.  . . . -மாவீரர் நாள் உரை – 2004 நிலையற்ற வாழ்வையும்,உறுதியற்ற எதிர்காலத்தையும் இனியும் எமது…

இலங்கை அமைச்சர் பெரிசு தில்லி வர இசைவளிக்கக் கூடாது :இராமதாசு

  இனப்படுகொலை தொடர்பான உசாவல் நடவடிக்கையைத் தடுக்கும் வகையில் இந்தியா வரும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்  பெரிசு, தில்லி வர இடம்தரக்கூடாது என்று பாமக நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,    இலங்கையில் ஒன்றரை இலட்சம் அப்பாவித் தமிழர்களை இனப்படுகொலை செய்த இராசபக்சேவும் அவரது கூட்டாளிகளும் தண்டிக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.    இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து கடந்த ஆண்டு ஆகசுட்டு மாதம் நேரில் விசாரணை நடத்திய ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் அவரது…

மக்கள் குரல்கொடுத்தால்தான் பேரறிவாளன் விடுதலை ஆவான்! – தாயார் அற்புதம்

பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மையார் தூத்துக்குடியில் 07.01.14 திங்கள்கிழமை அன்று வந்திருந்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: “இராசீவு கொலை வழக்கில் என் மகன் பேரறிவாளனுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்த வழக்கின் உசாவல் அலுவலர் அதிகாரி தியாகராசன் தற்போது உண்மையை வெளியிட்டுள்ளார். அதன்மூலம், நாங்கள் இத்தனைக் காலம் கூறி வந்தது உண்மைதான் என்பதை மக்கள் புரிந்துள்ளனர்.”  “சிறையில் இருந்து என் மகன் மிக விரைவில் விடுதலையாகி வெளியே வருவான். அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன்.  வழக்கு அதிகாரி உண்மையை வெளியிட்ட உடனே என் மகன் விடுதலை…

புத்தாண்டு வாழ்த்தும் வேண்டுகோள்களும்

  திருவள்ளுவர் ஆண்டு 2045, நடைமுறை ஆண்டு 2014 ஆகியன பிறக்க உள்ளன. அல்லன நீங்கி நல்லன நடைபெறவும் எண்ணியன எய்தவும் வரும்ஆண்டு துணை நிற்க வாழ்த்துகள்.   தமிழ் ஈழம்  தனியரசாகித் திறமையும் வலிமையும் மிக்க ஈழத்தமிழர்கள், துயரம் மறந்து மகிழ்ச்சிக்கடலில் திளைக்க வாழ்த்துகள்!   நாள் குறிக்கப் பெறும் அனைத்து இடங்களிலும் திருவள்ளுவர் ஆண்டைக் குறிக்க வேண்டுகின்றேன். அரசாணைகள், தமிழ் இலக்கிய இதழ்கள் தவிர, வேறு இடங்களில் திருவள்ளுவர் ஆண்டு குறிக்கப் பெறுவதில்லை. தமிழ்த்துறைகளில் இருப்பவர்களின் அழைப்பிதழ்களிலும் திருவள்ளுவர் ஆண்டைப் பார்க்க…

மாவீரர்நாள் உரைமணிகள் சில! – 5

(முன்னிதழ்த் தொடர்ச்சி)   போராளிகள் இனத்தைப் பேரழிவிலிருந்து பாதுகாத்து, எமது தாயக நிலத்தை அயலவனிடமிருந்து மீட்டெடுக்க எமது விடுதலை இயக்கம் அளப்பரிய  ஒப்படைப்புகளைச் செய்துள்ளது. எமது மாவீரர்களின் இம்மகத்தான  ஈகங்களால், எத்தனையோ தடவைகள் நாம் பேரழிவுகளின் விளிம்பிலிருந்து மீண்டிருக்கின்றோம். மரணத்தின் வாயிலுக்குச் சென்று மறுபிறவி எடுத்திருக்கின்றோம். வல்லாதிக்க  ஆற்றல்களின் தலையீடுகளைத் தனித்து நின்று தகர்த்திருக்கின்றோம். . . . . . . . . . . . . ஆயுத வன்முறையில் ஆசைகொண்டு நாம் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கவில்லை. இன அழிவை…

தமிழ் பிரபாகரனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வைகோ வேண்டுகோள்

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழகச் செய்தியாளர் மகா.தமிழ் பிரபாகரனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தித் தலைமையாளர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாகத் தலைமையாளருக்கு வெள்ளிக்கிழமை தொலைநகலி(ஃபேக்சு) மூலம் அனுப்பிய  மடலில் அவர் கூறியிருப்பதாவது: “சுற்றுலா நுழைவு உரிமை பெற்று இலங்கைக்குச் சென்ற, தமிழகச் செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரன், இலங்கைப் படையினரால்  தளையிடப்பட்டுள்ள செய்தியை, உடனடியாகத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிரீதரன், வடக்கு மாகாண  அவை உறுப்பினர்…

தமிழ் பிரபாகரனை உடனே விடுதலை செய்க!

இலங்கைக்குச் சுற்றுலா  புகவுச் சீட்டு பெற்று  இதழாளர் மகா.தமிழ் பிரபாகரன் சென்றுள்ளார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிரீதரன் அலுவலகத்தில் தங்கியிருந்தார். அவர் வந்த இரண்டு நாளிலும் உடல் நலிவால் வெளியே செல்லாமல் இருந்துள்ளார். பின்னர், சிரீதரன் அவர்களுடனும்  வடக்கு மாகாண அவை உறுப்பினர் பசுபதி(பிள்ளை) அவர்களுடனும் அவர்கள் மேற்கொண்ட தொகுதி நலப்பணி தொடர்பான பயணத்தில் உடன் சென்றுள்ளார். இம்மூவரும் வலைப்பாடு  என்னும்   ஊரில்  தூய அந்தோணியார் தேவாலயத்தின் பங்குத் தந்தை அவர்களோடு உரையாடிக் கொண்டு இருந்தபோது, 25.12.2013 பகல் 1.30 மணி அளவில், இலங்கைப்…