இறையன்பு செலுத்த அருகதையற்றோர் யார்? – சொ.வினைதீர்த்தான்

  தொண்டரடிப்பொடியாழ்வார் இறையன்பு செலுத்த அருகதையற்றோர் யார் என்று அற்புதமாகப் பின்வரும் பாசுரத்தில் பதிவுசெய்து  இறைப்பற்றின் நோக்கத்தை அழகுற உணர்த்திவிடுகிறார். “மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோர் இன்சொ லில்லை சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா புனத்துழாய் மாலை யானே பொன்னிசூழ் திருவ ரங்கா எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடைய கோவே.” மனத்தூய்மை வாய்மையால் காணப்படுமென்றது வள்ளுவம். மனத்தினில் தூய்மையில்லாமல் “நமநம” என்று பேசுவதாலும், தலங்கள்தோறும் அலைவதாலும், புறச்சின்னங்களாலும் அரங்கனின் அருள் கிடைத்துவிடாது. கள்ளநெஞ்சத்திற்குப்  பற்று – பக்தி – வசப்படாது…

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் 50 ஆம் ஆண்டு

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட 50 ஆண்டு கடைப்பிடிப்பு: சென்னைக் கலந்தாய்வு – விவரங்கள் இந்தித் திணிப்புக்கு எதிரான 1965 மாணவர் போராட்டத்தின் 50 ஆம் நினைவு ஆண்டை ஒரு மொழி உரிமை ஆண்டாக அறிவித்துத், தொடர்ச்சியாகப் பல கோரிக்கை நிகழ்வுகளையும் போராட்டங்களையும் முன்னெடுக்கவேண்டும் என்று மொழி உரிமைச் செயல்பாட்டாளர்களும் இயக்கங்களும் நவம்பர் 30, 2015 ஞாயிறு அன்று ஒரு முயற்சியைத் தொடங்கியுள்ளன. மக்கள் இணையம் மற்றும் பன்மொழி இந்தியாவுக்கான இயக்கம் ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் முதன்மை அமைப்புகளும் மொழி…

(இ)ரியாத்தில் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா – வ.உ.சி நினைவேந்தல்(2010)

(இ)ரியாத்தில் செந்தமிழ்ச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா – வீரச் செம்மல் வ.உ.சி நினைவேந்தல் (ரியாத் : சவுதி அரேபிய வளைகுடா செந்தமிழ்ச் சங்கம் சார்பாக புரட்டாசி 22, 2041 / 8.10.2010 வெள்ளி அன்று செந்தமிழ்ச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் நூற்றாண்டு விழா- வீரச் செம்மல் வ.உ.சி நினைவேந்தல், முருகேசன் அவர்கள் தலைமையில். தேனி செயராமன் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. பேராசிரியர் இலக்குவனார் பற்றி இணைய அரங்கத்தின் மூலம் சென்னையிலிருந்து இலக்குவனார் திருவள்ளுவன் ஆற்றிய உரை)   அயலகத்தில் கால் ஊன்றியிருந்தாலும் எண்ணமும் சொல்லும்…

ஐரோப்பிய பண்டுவ மருத்துவக் கழகத்தின் விருது பெறும் முதல் ஆசியர் – தமிழர் மரு. வீரப்பன்

விருதாளர் மரு.சி.வீரப்பனைப் பாராட்டிய பொறி.இ.திருவேலன் அறிமுக உரை!   தலைமை விருந்தினர் மாண்பமை நீதிபதி இராசேசுவரன் அவர்களே! சுழற்கழக மாவட்டம் 3230-இன் மேனாள் ஆளுநரும், இந்நாள் உறுப்பினர் சேர்க்கைக் குழுவின் அறிவுரைஞருமான, சிறப்பு விருந்தினர், சுழலர்(ரோட்டேரியன்) ஏ.பி. கண்ணா அவர்களே! இவ்விழாவை நடத்தும் தலைவர் திரு கணேசன், செயலாளர் திரு வெங்கடேசன், திரு இராமநாதன், திரு இளங்கோ, பிற பொறுப்பாளர்களே!! எனது கெழுதகை நண்பரான, மருத்துவத்துறையில் சீர்மையாளர் (Vocational Excellence Award) என விருது பெறவிருக்கும் தகைமையாளர் மருத்துவமணி சிதம்பரம் வீரப்பன் அவர்களே! அவர்கள்தம்…