மின் ஊடகங்களில் சங்கச்சொல்லடைவுகளும் அகராதிகள் தொகுத்தலும் – கருத்தரங்கம்

மின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகளும் அகராதிகள் தொகுத்தலும் கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி மார்கழி 24-26, 2045 / 08-10.2014         (மங்கல் நிறம். ஆதலின் தெளிவில்லை.)    

சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (நிறைவு) செ.வை. சண்முகம்

  மையக்கருத்துரை   (கார்த்திகை 28, 2045 / 14 திசம்பர் 2014 தொடர்ச்சி)   5.2. இறைச்சி         தொல்காப்பியர் இறைச்சியைப் பொருளியலில் மூன்று சூத்திரங்களில் (35 – 37) விளக்கியுள்ளார். ‘இறைச்சிதானேஉரிப்/பொருட்புறத்ததுவே’   என்பது முதல் சூத்திரம். அதில் உரி/ பொருள் என்ற இரண்டு பாடம் காணப்படுகிறது. இங்கு ‘உரிப்பொருள்’ என்ற பாடம் கொண்டால் அதுவும் மனிதவாழ்க்கை (உரி) ஆனது. கருப்பொருள், முதல்பொருள் (உரிப்புறத்தது) ஆகியவற்றால் தாக்கம்பெறும் என்று ஆகும்.          ‘அன்புறுதகுந இறைச்சியுட் சுட்டலும்          வன்புறையாகும் வருந்திய பொழுதே’ (பொருளியல்…

துறைதோறும் தமிழ்வளர்ச்சி – கருத்தரங்கம் :திருச்சி.

  திருச்சிராப்பள்ளி – தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி  தமிழாய்வுத்துறை தை 22, 23. 2046 – 2015 பிப்.5,6  துறைதோறும் தமிழ்வளர்ச்சி – கருத்தரங்கம் இலங்கை, சிங்கப்பூர், மலேசியத் தமிழன்பர்கள் தங்களின் நாட்டில் பல்வேறு துறைகளில் தமிழ் பெற்ற வளர்ச்சியைக் கட்டுரையாக்கி வழங்கலாம். மற்ற ஆத்திரேலியா, ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் தமிழ் வளர்ச்சி பெற்றிருந்தால் கட்டுரையாக வழங்கலாம். கட்டுரை வழங்கி நேரில் வர இயலாதவர்கள் கருத்தரங்க நாளில் இந்திய நேரப்படி பகல் 1.30 முதல் 4.30 வரை இணையப்பேசி(skype_யில் உரையாற்றலாம். அதற்கான…

வணிகத்துறையில் பயன்பாட்டுத் தமிழ் – முனைவர் கீதா இரமணன்

வணிகத்துறையில் பயன்பாட்டுத் தமிழ் முனைவர் கீதா இரமணன்   ‘‘விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது விளக்கிருந்தாலும் எண்ணெய் இல்லாமல் வெளிச்சம் தோன்றாது” என்ற இலக்கியத் தரமிக்க வைரவரிகளைக் கவியரசர் கண்ணதாசன் திரைப்படப்பாடல் வரிகளாய் நமக்களித்தார். இருப்பினும் நம்மில் பலர் விளம்பரங்களால் ஆட்கொள்ளப்பட்டு அனைத்து வணிகப்பிரிவுகளிலும் விளம்பரங்களை நம்பியும்வணிக அடிப்படை மற்றும் வணிகப் பொருள்களின் தரம் போன்ற இன்றியமையாதனவற்றைப் பின்னுக்குத் தள்ளியும் செயல்பட்டு வருகிறோம்.   ‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’ என்று கூறி ஆண்டுகள் பல கழித்தோம். இதன் அடுத்த நிலையாகத் ‘துறைதோறும் தமிழ்’…

சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் – செ.வை. சண்முகம்

  மையக்கருத்துரை   கார்த்திகை 7, 2045 / நவம்பர் 23, 2014 இதழின் தொடர்ச்சி 4.1.1.முதலும் கருவும்               ‘ஞாயிறுபட்ட அகல்வாய் வானத்து                அளியதாமே கொடுஞ் சிறைப் பறவை                இறையுற வாங்கிய நெறியயல் மராஅத்து               பிள்ளை உள்வாய்ச் செரீஅய               இரைகொண்ட மையின் விரையுமாற் செலவே’ ( குறுந். 92). இங்கு முதலும் ( முதலடி) கருவும் ( ஏனைய அடிகள்) மட்டுமே அமைந்துள்ளன. புலவர் தாமோதரனார். காமமிக்கக் கழிபடர் கிளவியாற் பொழுது கண்டு சொல்லியது என்பது பிற்குறிப்பு….

பாடநூல்களில்பயன்பாட்டுத் தமிழ் – இலக்குவனார் திருவள்ளுவன்

பயன்பாட்டுப் பார்வையில்துறைதோறும் தமிழ் பன்னாட்டுக் கருத்தரங்கம் : கார்த்திகை 9, 10 – 2045 / நவம்பர் 25, 26 – 2014 எத்திராசு மகளிர் கல்லூரி, சென்னை பாடநூல்களில்பயன்பாட்டுத் தமிழ் இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர், அகரமுதல மின்னிதழ் <www.akaramuthala.in> thiru2050@gmail.com கலை, அறிவியல் படைப்புகள் யாவுமே பயன்பாட்டிற்குரியனவே. எனினும் தமிழ்வளர்ச்சி நோக்கில் பார்க்கும் பொழுது, கல்வியில் அன்றாடப் பயன்பாட்டிற்கு முதன்மை அளிக்க வேண்டும். ‘தமிழறிவியல்’ அல்லது ‘அறிவியல் தமிழ்’ எனத் தனியாகக் கற்பிக்கத் தேவையில்லை. முதல் வகுப்பிலிருந்தே பாடநூல்கள் வாயிலாகப் பயன்பாட்டு முறையில்…

சங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் – செ.வை. சண்முகம்

 மையக்கருத்துரை   முன்னுரை    சங்க இலக்கியத்தில் சூழ் என்ற வினை   சூழ்ந்திருத்தல் (surrounding),   படர்தல் (spreading), ஆராய்தல் (deliberation), கருதுதல் (intention),   ஆலோசித்தல் (consultation) என்று ஒருசொல்பலபொருளாகப் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது (அகநானூறு , பார்க்க, சுப்பிரமணியன் 1972 ) . சூழல் என்ற தொழில்பெயர்   பரிபாடலில் (‘புடை வரு சூழல்’ 19. 20 ௦) பயின்றுள்ளது. ‘சுற்றமாச் சூழ்ந்துவிடும்’ ( 475) என்பது திருக்குறள் வழக்கு. இங்குச் சூழ்ந்திருத்தல் என்ற பொருளே பொருந்தும். அது பல பொருள் ஒரு சொல்லாக இருப்பதால், சுற்றுச்சூழல்…

14ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015

  மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015 சிங்கப்பூரில் மே 30, 31 & சூன்1 ஆகிய நாள்களில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.   ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு தலைப்பு முதன்மையாகக் கொடுக்கப்படும். இவ்வகையில் 2015ஆம் வருடம் நடக்கவிருக்கும் இம்மாநாட்டிற்குக் “கணினிவழிக் கற்றல் கற்பித்தல், இயல்மொழியாய்வு, செல்பேசித் தொழில்நுட்பம்” ஆகியவை முதன்மைத் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.   மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்குறிப்பிடும் தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் தங்களது கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். v இயல்மொழிப்…

பயன்பாட்டுப் பார்வையில் துறைதோறும் தமிழ் – பன்னாட்டுக் கருத்தரங்கம்

தமிழ் முதுகலை – உயராய்வுத் துறை எத்திராசு மகளிர் கல்லூரி, சென்னை கார்த்திகை 10 & 11, 2045 –  நவம்பர் 26  & 27 2014  

தமிழ் இன்றும் என்றும் – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் இன்றும் என்றும் – இலக்குவனார் திருவள்ளுவன்   தமிழ் மொழி தமிழ்நாட்டின் அனைத்து நிலைகளிலும் நிலைத்து நிற்கும் மொழியாக இருக்க வேண்டுமென்பது நம் இன்றைய கனவு மட்டும் அல்ல; பல நூற்றாண்டுக் கனவாகும். ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் ஊடக மொழியாகவும் வேலைவாய்ப்பு மொழியாகவும் வணிக மொழியாகவும் என எல்லா இடங்களிலும் தமிழே இருக்க வேண்டும் எனத் தமிழ் அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் மட்டுமல்ல, அரசியல்வாதிகளும் பேசியும் எழுதியும் வருகின்றனர். ஆனால், இத்தகைய நிலையை எட்டும் காலம்…