வெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு!

வெருளி அறிவியல் – உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு! அன்புசால் தமிழார்வலர்களே! வணக்கம். ‘வெருளி அறிவியல்’ என்னும் என் நூலை நான்  ஊக்குவிப்பு வெளியீட்டகமான கிண்டில் வெளியீட்டகத்தில் பதிந்துள்ளேன். உலக மொழிகளில் தாய்மொழியிலான முதல் வெருளி நோய்க் கலைச்சொல் விளக்க அகராதியாகவும் விக்கிப்பீடியாவில் கூட இல்லாத அளவுக்கு மிகுதியான வெருளிக் கலைச்சொற்களைக் கொண்ட பெருந்தொகுப்பாகவும் இந்நூல் உருவெடுத்துள்ளது. மருத்துவத் துறையினருக்கும் மருத்துவம் சார் துறையினருக்கும் அறிவியல் ஆர்வலர், கலைச்சொல் ஆர்வலர், தமிழ் ஆர்வலர் ஆகியோருக்கும் பொது அறிவு நூல்களை விரும்புவோருக்கும் ஏற்ற நூலாக…

தமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

தமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப் பொருட்படுத்தாதவர்களால்தான் தமிழ், மக்கள் பயன்பாட்டில் இருந்து குறைந்து வந்தது. இப்பொழுது விரைவாகவே குறைகிறது. பிற மொழிச் சொற்களைக் கலந்ததால்தான் நாவலந்தீவு முழுவதும் இருந்த தமிழ் இன்றைக்குத் தமிழ்நாட்டில் அங்கும் இங்குமாகப் பயன்படுத்தப்படும் சிறுமை நிலைக்கு வந்து விட்டது. பிறமொழிச் சொற்களின் ஒலிப்பிற்காகப் பிற மொழி எழுத்தொலிகளைத் தமிழ் நெடுங்கணக்கில் புகுத்தியதால்தான் தமிழில் இருந்து புதுப் புது மொழிகள் தோன்றும் நிலை வந்தது. இந்நிலையின் வீச்சைத் தடுத்துக் காப்பாற்றி வருபவர்களில் தனித்தமிழ்க்கடல்…

பயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

பயிர்அறிவியல் சொல் வளம்   தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை உணர்த்துவதாக உள்ளன. சொற்களே அறிவியலை உணர்த்துகின்றன என்றால் அறிவியல் துறையில்  நம் முன்னைப் பழந்தமிழர் மிகச் சிறந்து இருந்திருக்க வேண்டும் அல்லவா? நாம் மீண்டும் அறிவியலில் சிறந்து விளங்கப் பழந்தமிழ் அறிவியல் வளங்களை அறிந்து புதியன படைக்க வேண்டும். இங்கே நாம் பயிர் அறிவியல் சொற்கள் சிலவற்றைப் பார்ப்போம்.   பயிர் வகைகளை வகைப்படுத்திப் பெயர்கள் சூட்டியுள்ளமையே மிகச் சிறந்த அறிவியல் வளத்திற்கு நாம் உரியவர்கள் என்பதை எடுத்து இயம்புகின்றது….

தானமும் தவமும் தமிழே! -இலக்குவனா் திருவள்ளுவன், மின்னம்பலம்

தானமும் தவமும் தமிழே! சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா என்பது பற்றி பார்த்தோம். அதேபோல் இந்த வாரம் தானம், தவம் என்ற சொற்களின் முகவரியைத் தேடும் ஆய்வில் மூழ்குவோம். தானம், தவம் ஆகிய சொற்களை அயற்சொற்கள் என மயங்கி நாம் தவிர்க்கிறோம். இவை நல்ல தமிழ்ச்சொற்களே! அயற்சொல் அகராதி (ப.253) தானம் என்பது ஃச்தான(sthaana) என்னும் சமசுக்கிருதச் சொல்லில் இருந்து வந்ததாகத் தவறாகக் கூறுகிறது. இதற்குப் பொருள் இடம், உறைவிடம், பதவி, கோயில், துறக்கம், இருக்கை, எழுத்துப் பிறப்பிடம், எண்ணின்…

‘தருமம்’ தமிழே! -இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

‘தருமம்’ தமிழே! –இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப் பலர் எண்ணுகின்றனர். நான் அண்மையில் பார்த்த காணொளி ஒன்றில், பேரா.சுப.வீரபாண்டியன், தருமமும் அறமும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்கிறார். இதுபோல் தருமமும் அறமும் வெவ்வேறானவை. காலப்போக்கில் இரண்டும் ஒன்று எண்ணம் வளர்ந்து விட்டது. இவற்றைத்தான் இக்கட்டுரையில் நாம் காணப் போகிறோம். ‘தருமம்’ என்னும் சொல்லை ஒலிக்கையில் முதல் எழுத்தை (ந்)த என்பதுபோல் வலிந்து ஒலிப்பதால் இது தமிழ்ச்சொல் அல்ல என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. தருதல் என்பதன் அடிப்படையில், பயன்கருதாமல் பிறருக்குத்…

இவை தமிழே! ‘ஆதி’ தமிழ்ச்சொல்..! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

இவை தமிழே! ‘ஆதி’ தமிழ்ச்சொல்..!  நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி மீட்பதே மக்கள் இயல்பு. ஆனால் தமிழ் ஆர்வலர்கள் நமக்குரிய தமிழ்ச்சொற்களை அடுத்தவருக்கு உரியவை எனத் தாங்களே கொடுத்து விடுகின்றனர். ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் மிகுதியாக உள்ளன. அவற்றுள் பழக்கத்தில் இல்லாத புதிய சொல்லை மட்டும் தமிழ் என்று ஏற்றுக் கொண்டு பழக்கத்தில் உள்ள நல்ல சொல்லைத் தமிழல்ல என்று தூக்கி எறியும் பழக்கமும் உள்ளது.  எனவே, தமிழல்ல எனத் தவறாக எண்ணும் தமிழ்ச்சொற்களி்ல்ஒன்றை இப்பகுதியில் காணலாம். ‘ஆதி’…

அருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே! – இலக்குவனார் திருவள்ளுவன்

அருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே!      அறிவியல் என்றால் நம்மில் பலர் ஆய்வகத்தில், குடுவைகளில் ஆய்வு செய்வது எனத் தவறாகக் கருதுகிறோம். ஆனால், “கூர்ந்து நோக்குவதாலும்  ஆய்வாராய்ச்சியாலும் கண்டறியப்பட்டு முறைமைப் படுத்தப்படும்” எல்லாம் அறிவியலே.   இத்தகு அறிவியலில் தமிழ் மக்கள் தொடக்கக் காலத்தில் இருந்தே சிறந்து விளங்கியுள்ளமையை இலக்கியங்கள் உணர்த்துகின்றன. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்கிறார் தொல்காப்பியர். இவ்வாறு பொருள் குறித்து அமையும் சொற்கள் எல்லாம் அறிவியல் தன்மை கொண்டுள்ளமைதான் தமிழுக்கே உள்ள சிறப்பு. காலம் செல்லச் செல்ல பல…

தெரிந்து கொள்வோம் : கருவியம்  – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்

(தெரிந்து கொள்வோம் : கருவியம்  – hardware  1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம் : கருவியம்  – hardware 2/2 ware என்பது பொருள் அல்லது பண்டம் என்பதைக் குறிக்கும் என்பது உண்மைதான். எனவே, ஆட்சியியலில்   warehouse –  கிடங்கு, பொருளறை, பண்டக மனை என்றும்  வேளாணியலில் பொருளைத தேக்கி அல்லது சேமித்து வைக்குமிடம் என்னும் பொருளில்  warehouse   –  தேக்ககம், கிட்டங்கி வங்கியியலில் காப்பகம், பண்டகச்சாலை  என்றும் பொறியியலிலும் மனையியலிலும்  glassware – கண்ணாடிப் பொருட்கள்  என்றும் குறிக்கின்றனர். மேசையில் வைக்கப்படும்…