கலைச்சொல் தெளிவோம் 27 : முகிலம் – nebula

27. முகிலம் – nebula குறுங்கோள் வகைகளையும் நம்மிடம் பழங்காலந்தொட்டு நிலவும் சொற்களின் அடிப்படையில் பின்வருமாறு மீட்டுருவாக்கம் செய்வதே எளிமையாக உள்ளது. கார்பன் என்றால் கரியம், கரி, (வேளா.) கரிமம்( பொறி., சுற்., மீனி., மனை.) கார்பன் (சுற்.) எனக் கூறுகின்றனர். கரி(23) என்பதன் அடிப்படையில் கரியம் மிகுதியாக உள்ளது கரிமி எனலாம். இரும்பு(29) என்பதன்அடிப்படையில்இரும்பு மிகுதியாக உள்ளது இரும்பி எனலாம். மாழை மிகுதியாக உள்ளது மாழையம் வெண் (254), செம்(359), வெள்ளிடை(1) என்னும் சொற்களின் அடிப்படையில் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். வெண்மை நிறமானது வெண்மி…

கருவிகள் 1600 : 121 – 160 : இலக்குவனார் திருவள்ளுவன்

  121.  இடைவீழ் மழைமானி    –    interceptometer  :        மரங்களின் கீழ் அல்லது இலைதழைகளின் வழியாக விழும் மழையளவை அளக்கும் மழைமானி. இடைவெட்டு மழைநீர் அளவி (-இ.) எனச்சொல்வதைவிட இடைவீழ் மழைமானி என்பது ஏற்றதாக அமையும்.     122.   இடையீட்டு அளவி –  slip gauge / Gauge block / gage block / Johansson gauge / Jo blocks  : இடைவெளியைத் துல்லியமாக அளவிடும் கருவி. நேர் பொருளாக நழுவு அளவி / நழுவல் அளவி என்றெல்லாம் சொல்லாமல்…

கருவிகள் 1600 : 1 – 40 – இலக்குவனார் திருவள்ளுவன்

‘வளை ப’(U) வடிவ வளியழுத்தமானி – U-tube manometer ‘வளை ப’(U) வடிவக் குழாய் வளியழுத்தமானி > ‘வளை ப’(U) வடிவ வளியழுத்தமானி அகச்சிவப்பருகு படவரைவு கதிர்நிரல் மானி(அ. ப. க) – near-infrared mapping spectrometer (nims) அகச்சிவப்பு ஒளி முனைவுமானி (அ.சி.ஒ.மு.மா) – infrared photo-polarimeter (isophot) : வான்பொருள் வெளிப்படுத்தும் அகச்சிவப்புக் கதிரியத்தைக் கண்டறிய உதவும் கருவி. அகச்சிவப்பு நிறமாலைமானி – infrared spectrometer : வேதியல் கலவைகளின் செறிவை அகச்சிவப்புக் கதிரியத்தை அளப்பதன் மூலம் கண்டறியப்பயன்படும் கருவி. அகச்சிவப்பு…

கருவிகள் 1600 : 81 – 120 : இலக்குவனார் திருவள்ளுவன்

81. ஆரையளவி – fillet gauge / radius gauge 82. ஆவன்னா – இகர அளக்கைமானி – beta-gamma survey meter : அளவை மானி என்றால் அளவிடும் கருவி( guage) எனத் தவறாக எண்ணலாம். எனவே, அளக்கை மானி எனலாம். 83. ஆவன்னாக் கதிர் எதிர்ச்சிதறல் தடிம அளவி – beta-ray backscatter thickness gauge          : அகரக்கதிருக்கு அடுத்ததை ஆகாரக்கதிர் எனக் குறிக்கும் பொழுது உணவு எனத் தவறாக எண்ணலாம். எனவே, இங்கே ஆவன்னாக்கதிர் எனக் குறிக்கப்பெறுகிறது. 84. ஆவி…

கலைச்சொல் தெளிவோம் 28 : குறுமி – dwarf

 28. குறுமி- dwarf    ஞாயிற்றைவிடப் பெரியவிண்மீன்களை gaint என்றும் மிகவும் சிறிய விண்மீன்களை dwarf என்றும் தமிழிலேயே ஒலிபெயர்ப்பாகக் குறிக்கின்றனர். அல்லது அரக்கன் என்றும் குள்ளன் என்றும் மாந்தர்களைக் குறிப்பதுபோல் நேர்மொழிபெயர்ப்பாகக் குறிப்பிடுகின்றனர். dwarf – குட்டை, குள்ளமான என வேளாணியலிலும் குள்ளர் எனச் சூழறிவியலிலும் குட்டையான, குள்ளன் என மனையறிவியலிலும் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில், குள்ளமாக உள்ள மனிதர்களைக் குறிக்கும் சொல்லால் விண்பொருளையும் குள்ளன் என்று குறிப்பது பொருத்தமில்லை. குறு(56), குறுக்கை(2), குறுக(6), குறுகல்(7), குறுகல்வேண்டி(3), குறுகல்மின்(1), குறுகா(2), குறுகாது(3), குறுகார்(1),…

கலைச்சொல் தெளிவோம் 26 : உழலி – wanderer

  26 : உழலி – wanderer கோள்கள், விண்மீன்கள், உலவிகள் தவிர விண்ணில் திரிவனவற்றைத் திரிவன,  வாண்டரர்/wanderer என்றே சொல்கின்றனர். மனையியலில் இதற்கு அலைபவர் எனப் பொருள் தந்துள்ளது, அலைந்து திரியும் மக்களைத்தான் குறிக்கும்; விண்பொருளைக் குறிக்காது. ஆதிமந்திபோல் ‘உழல்வென்கொல்லோ’ எனப் புலவர் வெள்ளிவீதியார் கேட்கிறார்(அகநானூறு 45.15). உழல் அடிப்படையில் பல சங்கச்சொற்கள் உள்ளன. வானில் உழல்வனவற்றை நாம் உழலி எனச் சொல்வதே பொருத்தமாக அமையும். உழலி – wanderer – இலக்குவனார் திருவள்ளுவன்

கருவிகள் 1600 : 41 – 80 : இலக்குவனார் திருவள்ளுவன்

கருவிகள் 1600 : 41 – 80 : இலக்குவனார் திருவள்ளுவன் 41. அதிர்வுக்கோல்மானி – vibrating reed meter  [ அதிர்வுக்கோல்மானி: இயற்கையான அதிர்வு நிகழ்வெண்களுடைய கோல்களைப்பயன்படுத்தும் ஒரு வகை நிகழ்வெண்அளவுமானி. ( ம.660)] 42. அதிர்வுமானி – vibrometer / vibration meter   :     அதிர்வு அலைவீச்சுகளை அளவிடும் கருவி. 43.  அதிர்வுவரைவி – vibrograph : அதிர்வுகளைப் பதிவு செய்யும் கருவி. 44.  அமிழ்த்தளவி – dip guage 45.  அமிழ்வு ஒளிவிலகல்மானி – immersion refractometer 46….

கலைச்சொல் தெளிவோம் 25 : உலவி-moon / satellite

25 : உலவி-moon / satellite வானில்ஒருகோளைச்சுற்றி – உலவி – வரும் விண்பொருளைmoon/satellite என்கின்றனர். வானியல், மனையியல், கணக்கியல் ஆகியவற்றில் மூன் / moon – நிலா,  திங்கள், மதி எனக் குறிப்பிட்டு இருப்பினும் காலத்தைக் கணிக்க உதவும் திங்களை மட்டும்தான் இது குறிப்பதாக அமையும். இவ்வாறு நாம் மூன்/moon என்றால் நிலவைத்தான் நினைப்போம். எனவே, நிலா என்னும் சொல்லைப் பொதுவாகப் பயன்படுத்தினால் பொருட்குழப்பம்தான் வரும். உலவு(1) என்னும் சங்கச் சொல் அடிப்படையில் வானில் உலவி வருவனவற்றை உலவி என்று சொல்வதே பொருத்தமாக…

கலைச்சொல் தெளிவோம் 24 : யாணர் – fresh income

  24. யாணர் – fresh income யாணர்(86), யாணர்த்து(7), யாணரஃது(1), எனப் புலவர்கள் சங்க இலக்கியங்களில் கையாண்டுள்ளனர். பொதுவாகப் புது வருவாய் என்பது செல்வத்தை மட்டுமல்லாமல் புதிய விளைச்சல், புதிய உணவு என்ற வகையில் எல்லா வளத்தையும் குறிக்கின்றது. புதிது படற்பொருட்டே யாணர்க் கிளவி என்னும் தொல்காப்பியத்திற்கேற்ப (உரி.21) புதியனவெல்லாம் யாணர் எனக் குறிக்கப்பட்டுள்ளன. சான்றுக்குச் சில பார்ப்போம். பேரா யாணர்த்தால் வாழ்கநின் வளனே. (பதிற்றுப்பத்து : 24.30) அறாஅ யாணர் அகன் றலைப் பேரூர்ச் (பொருநர் ஆற்றுப்படை: 1) இருங் கதிர்…

கலைச்சொல் தெளிவோம் 23 : எக்கர் – Sand hill; sandy

23 எக்கர் – Sand hill; sandy   மணற்குன்று எக்கர் என்பது பெருமணற்பரப்பை, மணற்குன்றைக் குறிக்கும் 54 பாடல்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. அவற்றில் சில : எக்கர் இட்ட மணலினும் பலவே (புறநானூறு: 43.23) நில வெக்கர்ப் பல பெயரத் (பொருநராற்றுப்படை: 213) தூஉஎக்கர்த் துயில் மடிந்து (பட்டினப்பாலை 117) படுசினை தாழ்ந்த பயிலிணர் எக்கர் (அகநானூறு 11.9) முழங்குதிரை கொழீஇய மூரி எக்கர்(நற்றிணை 15.11) sandy-மணல்மிகு எனப் பொறிநுட்பவியலிலும் மணல் கொண்ட எனக் கால்நடை அறிவியலிலும் பயன்படுத்துகின்றனர். அதைவிட எக்கர்…

கலைச்சொல் தெளிவோம் 22 : அட்டில்- cuisine

அட்டில்- cuisine தமிழில் சமையலறை எனப் பொதுவாகச் சொல்லப்படுவது ஆங்கிலத்தில் இருவகையாகச் சொல்லப்படுகிறது; kitchen-அடுக்களை, சமையலறை என வேளாண்துறையிலும் மனை அறிவியல் துறையிலும் கையாளப்படுகின்றது. cuisine-என்பதும் சமையலறை என்றே கையாளப்படுகிறது. அவற்றுக்குத் தமிழிலும் தனித்தனிச் சொற்களைக் கையாளலாம். புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில் – சிறுபாண் ஆற்றுப்படை 132 அறம்நிலைஇய அகன்அட்டில் – பட்டினப் பாலை 43 விருந்துண்டு ஆனாப் பெருஞ்சோற்று அட்டில் – பட்டினப் பாலை 262 அட்டில் ஓலை தொட்டனன் நின்மே –நற்றிணை 300.12 உதியன் அட்டில் போல ஒலிஎழுந்து –…

கலைச்சொல் தெளிவோம் 19: காழ்நீர் –coffee

   19:   காழ்நீர் –coffee   தேயிலையிலிருந்து ஆக்கும் நீரைத் தேநீர் எனச் சுவையாகச் சொல்கிறோம். ஆனால் காப்பி(coffee) என்பதற்கான சரியான சொல் வழக்கில் வராமையால் காப்பி என்பதே நிலைக்கிறது. காப்பிக் கொட்டையில் இருந்து உருவாக்குவதால் கொட்டை வடிநீர் எனச் சொல்லப்பட்டது வேறு வகையாகத் தோன்றி மக்கள் நாவில் இடம்பெறவில்லை. கன்றின் குளம்படி போன்று உள்ளதால் காப்பி எனப் பெயர் பெற்ற மூலச் சொல் அடிப்படையில் குளம்பி எனச் சொல்லப்பட்டதும் இதனால் குழம்பிப் போவதாகக் கூறிப் பயன்பாட்டுத் தன்மையை இழந்துள்ளது. காழ் எனில் கொட்டை…