தமிழக மக்களுக்கு நல்லது செய்வது தான் முதல்பணி – விசயகாந்து
தமிழக மக்களுக்கு நல்லது செய்வது தான் முதல்பணி, விசயகாந்த்து முதலமைச்சராவது இரண்டாம்நிலைதான், என தே.மு.தி.க., தலைவர் விசயகாந்து தூத்துக்குடியில் பேசினார். வேலை வாய்ப்பு இல்லை: செல்வநாயகபுரம் சாலையில் ம.தி.மு.க., வேட்பாளர் சோயலை ஆதரித்து விசயகாந்த்து பேசியதாவது: தூத்துக்குடி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு மீனவர்கள், கோவில்பட்டியில் தீப்பெட்டித்தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். ஆனால் இங்கு வேலை வாயப்பு இல்லாமல் தொழிலாளர்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் இல்லை: அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் இங்குள்ளது. தமிழகத்தின்…
அதிமுக–திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்: விசயகாந்து
நாகை நாடாளுமன்றத் தொகுதி தேசிய சனநாயகக் கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் வடிவேல் இராவணன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விசயகாந்து திருவாரூர் கீழவீதியில் பரப்புரை ஆற்றினார். “கடந்த முறை தேர்தல் பரப்புரையின்பொழுது தவிர்க்க இயலாத காரணத்தினால் திருவாரூர் வர இயலவில்லை. அதற்காக முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எங்கள் கூட்டணி மக்கள் கூட்டணி, வெற்றிக் கூட்டணி, தேசிய சனநாயகக் கூட்டணி. தமிழக மக்களுக்கு நல்லது நடப்பதற்காகக் கூட்டணி வைத்துள்ளோம். திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. தண்ணீர் இல்லை, மின்சாரம்…
திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள்: விசயகாந்து பேச்சு
“திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஊழல் செய்த கட்சிகள்” என தேமுதிக தலைவர் விசயகாந்து தெரிவித்தார். தேசிய சனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் பேராசிரியர் சே.கே.இரவீந்திரனுக்கு ஆதரவு தெரிவித்து தேமுதிக தலைவர் விசயகாந்து யானைக்கவுனியில் வாக்கு திரட்டினார். அப்போது, விசயகாந்து பேசிய தாவது: “தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. இந்நிலையில், முதல்வர் செயலலிதா குசராத்தை ஒப்பிட்டுப் பேசுகிறார். ஏற்கெனவே, மதுரவாயல் மேம்பாலம் திட்டம் கிடப்பில் கிடக்கிறது. மதுரவாயல் பாலம் திட்டத்துக்கு, ஏற்கெனவே…
நாங்கள் அமைத்து இருப்பது வெற்றிக்கூட்டணி: விசயகாந்து முழக்கம்!
மத்திய சென்னை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சே.கா.இரவீந்திரனை ஆதரித்து, யானைகவுனி, பட்டாளம், வில்லிவாக்கம், முதலான பகுதிகளில் தே.மு.தி.க. தலைவர் விசயகாந்து பரப்புரை மேற்கொண்டார். யானைகவுனியில் திறந்த ஊர்தியில் நின்றபடி, விசயகாந்து பேசியதாவது:- “குசராத்து தமிழ்நாடு மாதிரி முன்னேறவில்லை என்று கூறுகிறார்கள். அது உண்மை தான். தமிழ்நாட்டில் கையூட்டு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஆனால் குசராத்து கையூட்டில் முன்னேற்றம் அடையவில்லை. அதேபோல், தமிழ்நாடு அரசின் மதுபானக்கடை விற்பனையில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. ஆனால் குசராத்து அதில் முன்னேற்றம் அடையாமல்தான் இருக்கிறது. இதுதான் தமிழ்நாட்டின் முன்னேற்றமாகச் சொல்கிறார்கள்….
எரிநெய், எரிவளி விலையை ஏற்றியவர்களுக்குத் தண்டனை கொடுங்கள்: வைகோ
எரிநெய், கன்னெய். எரிவளி விலை ஏற்றத்துக்குக் காரணமானவர்களுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் தண்டனை கொடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கேட்டுக் கொண்டார். திருபெரும்புதூர் தொகுதி மதிமுக வேட்பாளர் மாசிலாமணியை ஆதரித்து அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகே வைகோ ஞாயிற்றுக்கிழமை தேர்தல் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “இரண்டு நாட்களுக்கு முன்பு தருமபுரியில் அன்புமணி இராமதாசைக் குறிவைத்துத் தாக்குதல் நடந்துள்ளது. இரண்டே கால் கிலோ எடை கொண்ட கல்லைக் கொண்டு அவரைக் கொலை செய்ய முயன்றுள்ளனர். நல்லவேளையாக அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்….
யார் காயப்பட்டுக் கிடந்தாலும் ஓடிச்சென்று காப்பாற்றுவேன் – வைகோ
விருதுநகர் தொகுதியில் என்னைத் தேர்ந்தெடுத்தால், யார் காயப்பட்டுக் கிடந்தாலும் ஓடிச்சென்று காப்பாற்றுவேன் என்று தேர்தல் கூட்டத்தில் வைகோ பேசினார். விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ச.க. கூட்டணியில் ம.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் வைகோ, திருமங்கலம் அடுத்த ஆலம்பட்டியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:– ஆலமரங்களின் கூட்டம் குசராத்து மாநிலத்திற்கு நான் சென்றிருந்த போது, இன்றைய தலைமையாளர் -பிரதமர்- வேட்பாளர் நரேந்திரமோடி என்னை வரவேற்றார். அங்கு நடைபெற்ற அமைதிப்பேரணியில் அவருடன் நானும் நடந்துவர ஏற்பாடு செய்தார். அனைவரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கக்கூடிய வதோரா என்ற ஊருக்குச் சென்றோம்….
தமிழகம் நீதி பெற நாம் 39 தொகுதிகளிலும் வென்றாக வேண்டும் – வைகோ முழக்கம்
செயலலிதா ஏதேனும் தீவினை விலைக்கு வாங்கி அதற்கப் பிரதமர் ஆகப்போகிறாரா: வைகோ பேச்சு பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய சனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய சனநாயகக் கட்சி நிறுவனத் தலைவர் டி.ஆர்.பச்சமுத்துவை ஆதரித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சனிக்கிழமை பரப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தமிழக வெற்றியின் அவசியமின்றியே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார். ஆனால் 39 தொகுதிகளிலும் நாம் வென்றால்தான் நீதி கிடைக்கும். முல்லைப் பெரியாறு, காவிரிச்சிக்கல் இலங்கையுடனான மீனவர் சிக்கல்…
ஈழத்திற்கு எப்போது நீதி கிடைக்கும்? வைகோ வேதனை!
சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீசை ஆதரித்து வைகோ பேசியது வருமாறு: தமிழகத்தைச் சுற்றியும் இப்போது ஏராளமான ஆபத்துகள் காத்திருக்கின்றன. மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி, கர்நாடகம் காவிரியில் தடுப்பணைகள் கட்டுகிறது. முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி, முயற்சித்து வருகிறது. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழர்கள் சுடப்படுகின்றனர், அவர்களது படகுகள் சேதப்படுத்தப்படுகின்றன. வெகு அருகில் ஏழரைக் கோடி உறவுகள் இருந்தபோதும், ஈழத்தில் கொல்லப்பட்ட உறவுகளைக் காப்பாற்ற…
தமிழக மக்களுக்காக நான் 27 முறை சிறைக்குச் சென்றுள்ளேன் : வைகோ உருக்கம்
விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் வைகோ அருப்புக்கோட்டை நெசவாளர் குடியிருப்பு, புதிய பேருந்து நிலையம், அண்ணாசிலை, இராமசாமிபுரம், காமராசர் சிலை, நேரு திடல், பாவடி தோப்பு முதலான பல இடங்களில் பம்பரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பரப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியபோது, ‘’தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து தமிழக மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றுக் கூட்டணியாக தேசிய சனநாயகக் கூட்டணி வந்துள்ளது. தமிழக மக்களுக்காக நான் 27 முறை போராடிச் சிறைக்குச்…
மத்தியில் மதச்சார்பற்ற அரசு உருவாக வேண்டும்: மு.க.தாலின் பேச்சு
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை ஆற்றி வரும் மு.க.தாலின் கரூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சின்னசாமியை ஆதரித்து தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வாக்குஅளிக்குமாறு கேட்டார்விராலிமலையில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அவர் மணப்பாறை, வையம்பட்டி, வட மதுரை, மற்றும் குசிலியம் பாறை ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து கரூர் திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மு.க.தாலின் கலந்து கொண்டு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சின்னசாமியை…
தமிழகத்தில் புரட்சி நடத்த வேண்டிய கட்டாயம் : திருச்சியில் கருணாநிதி பேச்சு
”ஆட்சிக்கு, கொள்கைகளுக்கு, வஞ்சனைகளுக்கு, சூழ்ச்சிக்கு, சொத்துக்குவிப்புக்கு எதிராக மாபெரும் புரட்சியை நடத்த வேண்டிய கட்டாயம் வந்துள்ளது,” என, திருச்சியில் நடந்த தேர்தல் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். தி.மு.க., வேட்பாளர்கள் அன்பழகன் (திருச்சி), சின்னசாமி (கரூர்), சீமானூர் பிரபு (பெரம்பலூர்) ஆகியோரை ஆதரித்து, அவர் பேசியதாவது: “அ.தி.மு.க., ஆட்சியில், மக்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகி உள்ளனர். நீங்கள் கனவு கண்ட ஆட்சி வந்தது. அந்த ஆட்சி, சாதாரண மக்கள் வாங்கிப் புசிக்கின்ற விலைவாசியில் தான் கை வைத்தது. எது உயர்ந்தாலும், உயராவிட்டாலும் விலைவாசி…
தமிழர்களை ஒட்டு மொத்தமாக ஏமாற்றுகிறார் செயலலிதா : கடலூரில் கருணாநிதி பேச்சு
கடலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர்நந்தகோபாலக் கிருட்டிணனை ஆதரித்து கடலூரில் திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: தமிழக முதலமைச்சராக இருக்கிற அம்மையார் செயலலிதா, ஏதோ தமிழ்நாட்டு மக்களுக்காக அவர்தான் கவலைப் படுவதை போலவும் நமக்கெல்லாம் தமிழ்நாட்டு மக்களை பற்றிக் கவலை கிடையாது போலவும் பேசி வருகிறார். தி.மு.க வின் ஈடுபாடு தமிழ்ச்சமுதாயத்தை வாழவைக்க வேண்டும் என்பது ஒன்றுதான். செயலலிதா நம்மை எல்லாம் எந்த அளவிற்கு அவதிக்கு ஆளாக்கியுள்ளார் என்பதை நான் சொல்லாமலேயே பட்டறிவு மூலம் தெரிந்துவைத்திருக்கிறீர்கள். வருகின்ற வழியெல்லாம் சிற்றூர்கள் தோறும்…