நரேந்திரரே! வியவற்க உம்மை! நயவற்க எம் பகையை!

  மக்கள் தொகை அடிப்படையில் மக்களாட்சியை ஏற்றுக்கொண்ட பெரிய நாடு இந்தியா. இதன் அரசியல் தலைமையைக் கைப்பற்றுவது என்பது மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரியதுதான்.   அந்தவகையில் நரேந்திரர் தலைமையாளர் பொறுப்பேற்பது அவருக்கு மகிழ்ச்சி தருவதில் வியப்பில்லை. ஆனால், தன் வலிமையைச் சிறப்பாக எண்ணி மகிழ்ச்சிக் கடலில் திளைப்பது இடையிலேயே ஆட்சி கவிழவும் வாய்ப்பாகலாம். அவருக்கு இரு முகம் உண்டு என்பது அவரே அறிந்ததுதான். ஒரு முகம் மக்களை ஈர்க்கும் முகம்! மற்றொன்று மக்கள் வெறுக்கும் முகம்! வெறுக்கப்படும் முகத்தை ஈர்க்கும் முகமாக மாற்றாமல் ஒரு…

எழுவர் வழக்கில் இரத்தப்பசியாறும் ‘மேகலை’யின் குரல்!

    அப்பாவிகள் எழுவரும் அவர்கள் குடும்பத்தினரும் தமிழ்ச்சுற்றத்தினரும் மனிதநேயர்களும் மகிழ வேண்டிய வாய்ப்பு பறிபோய்விட்டது! பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்த நல்ல தீர்ப்பு ஒன்று பொல்லாச் செய்தியாக மாறி விட்டது. ஏனிந்த அவலம்? யாரிதற்குப் பின்னணி? சதியாளர்கள் சொல்லித் தெரியவேண்டிய நிலையில் இல்லை. என்றாலும் இதுபோன்ற இன எதிர்ப்புக் குரல்களும் அதனை இனப்பற்றுள்ளவர் என்ற நம்பிக்கைக்கு ஆளானவர்களே எதிரொலிப்பதும் தமிழினத்திற்கே உரியன போலும்!   ஆட்சியில் இருந்தால் ‘இந்தியனா’கவும் இல்லாவிட்டால் ‘தமிழனா’கவும் நடந்து கொள்ளும் முதுபெரும் தலைவர், ஆட்சியில் இல்லாத பொழுதும் ‘இந்தியனா’க நடந்து…

தேர்தல் ஆணையத்திற்கு ஒரு மடல் : 2 முறையீடு

விடுநர் இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர்,அகரமுதல இணைய இதழ் 23 எச்., ஓட்டேரிச்சாலை, சென்னை 600 091 பேசி 9884481652 ; 044 2242 1759 மின்வரி : madal@akaramuthala.in பெறுநர் தலைமைத் தேர்தல் ஆணையர், பொது(தேர்தல்கள்) துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 மின்வரி :ceo@tn.gov.in நாள் 21.04.2045 / 04.05.2014 மதிப்பிற்குரிய தேர்தல் ஆணையர் அவர்களுக்கு  பொருள்: வாக்காளர் பட்டியலை முழுமையாக்கலும் வாக்குகளை விலைபேசுவோரைத் தண்டித்தலும் வணக்கம்.    தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து உங்களுக்கு நீங்கேள பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால்…

யாருக்கு அளிக்கலாம் வாக்கு? – இ.பு.ஞானப்பிரகாசன்

யாருக்கு அளிக்கலாம் வாக்கு? – வாக்காளப் பெருமக்களுக்கான ஒரு தேர்தல் திட்டம்! இ.பு.ஞானப்பிரகாசன் வந்துவிட்டது நாடாளுமன்றத் தேர்தல்! பத்தாண்டுக்கால அட்டூழியக் காங்கிரசு ஆட்சிக்கு முடிவு கட்ட நமக்குக் கிடைத்திருக்கும் ஓர் அரிய வாய்ப்பு! இதை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம், பயன்படுத்திக் கொள்ளப் போகிறோமா இல்லையா என்பதே இப்பொழுது நம் முன் உள்ள பெரிய கேள்வி.  தெருவில் கிடக்கிற சொறிநாய் கூடக் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் குரைத்துக் கொண்டே இருந்தால் என்ன ஏதெனப் பார்ப்பார்கள். ஆனால், ஈழத் தமிழர்களைக் காப்பாற்றச் சொல்லி ஏறத்தாழ…

நாடாளுமன்றத் தேர்தலும் தமிழர் தம் கடமையும்

இப்பொழுது (ஏப்பிரல் 24, 2014) நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலும் தமிழர் தம் கடமையும் எனும் நோக்கில், தேர்தல் களம் அமைந்துள்ள சூழலை, உண்மை நோக்கில் பார்க்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு உள்ளது. இந்திய ஒன்றியத்தில் வாழும் மொழிவழி இனங்கள், எவ்வகையிலும் ஆளுமையுரிமை அடைந்துவிடக் கூடாது என்பதில், ஆரியம் (பிராமணியம்) கண்ணும் கருத்துமாய் செயற்பட்டு வருகிறது. தனது கரவான நோக்கம் நிறைவேற, ஆரியம் எந்த வடிவத்தை வேண்டுமானாலும்   சிறப்பாக எடுத்து செயற்பட்டு வெற்றியடைகிறது. இந்திய ஒன்றியத்தின் மறைந்த தலைமை அமைச்சர் மதிப்புமிகு வி.பி.சிங்…

தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடும் கட்சிகள்

  (ஐக்கிய) சனதா தளம் அகில இந்திய  பார்வடு பிளாக் அகில இந்திய சமத்துவ  மக்கள் கட்சி அகில இந்திய சனநாயக மக்கள் கட்சி அகில இந்திய திரிணமுல் காங்கிரசு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி அம்பேத்கர் மக்கள் இயக்கம் அனைத்து இந்திய  மூவேந்தர் முன்னணிக் கழகம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இந்திய  மக்கள் கட்சி (சமயச் சார்பற்றது) இந்திய ஒன்றிய முசுலிம் அமைப்பு இந்திய தேசிய  அமைப்பு இந்தியச் சனநாயக கட்சி இந்தியத் தேசிய காங்கிரசு இந்தியப்…

நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் எண்ணிக்கை – தொகுதி வாரியாக

வடசென்னை  40 தென்சென்னை 42 மத்திய சென்னை  20 திருப்பெரும்புதூர்  21 காஞ்சிபுரம்  11 அரக்கோணம்  24 வேலூர்  24 கிருட்டிணகிரி  24 திருவண்ணாமலை  24 ஆரணி 19 சேலம்  25 நாமக்கல்  26 திருப்பூர்  26 நீலகிரி  10 கோவை  25 திண்டுக்கல்  18 கரூர்  25 திருச்சி  29 பெரம்பலூர்  21 கடலூர்  17 சிதம்பரம்  15 நாகை  9 தஞ்சை  12 சிவகங்கை  27 மதுரை  31 தேனி  23 விருதுநகர் 26 இராமநாதபுரம்  31 தூத்துக்குடி  14 தென்காசி…

நரேந்திர மோடி தலைமையாளரானால் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்குப் பாதுகாப்பு இருக்காது-தொல்.திருமாவளவன்

  திருவள்ளூர்(தனி) நாடாளுமன்றத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் இரவிக்குமாரை ஆதரித்து தொல்.திருமாவளவன் திருவள்ளூர், ஈக்காடு, திருப்பாசூர், திருவாலங்காடு போன்ற பகுதிகளில்  தேர்தல் பரப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:– “நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் ஒரு சிறப்பான சனநாயக முற்போக்குக் கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் இரவிக்குமாரை வெற்றி பெறச் செய்து மக்கள் பணியாற்ற அவருக்கு நீங்கள் வாய்ப்பளிக்க வேண்டும். நரேந்திரமோடி தலைமையாளரானால் -பிரதமரானால்- தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்குப் பாதுகாப்பு…

கருணாநிதி இடஒதுக்கீட்டின் பாதுகாவலராக விளங்குகிறார்: திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சனநாயக முற்போக்குக் கூட்டணியின் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளருமான திருமாவளவன் செயங்கொண்டம், தா.பழூர் ஒன்றியத்தில் மோதிரம் சின்னத்திற்கு வாக்கு  திரட்டினார். “தா.பழூர் ஒன்றியத்தில் சிலால், கோடங்குடி, பொற்பதிந்த நல்லூர், நாயகனைப்பிரியாள், சிங்கராயபுரம், பாண்டி அங்காடி, அழிசுக்குடி, சுத்தமல்லி, நாச்சியார்பேட்டை, ஆதிச்சனூர், நத்தவெளி, விக்கிரமங்கலம், முட்டுவாஞ்சேரி, அருள்மொழி, தா.பழூர்  முதலான ஐம்பதுக்கும் மேற்பட்ட  ஊர்களிலும்  வாக்கு கேட்டார். சிலால் என்னுமிடத்தில்  பரப்புரையைத் தொடங்கி வைத்து திருமாவளவன் பேசியதாவது:– இந்தத் தேர்தல்  சமயவாதத்திற்கும், மக்கள்நாயகத்திற்கும் இடையே நடக்கின்ற போர் தலைவர் கலைஞர்…

காங். ஆட்சியில் இந்தியா ஏழை நாடாகி விட்டது: சரத்குமார்

 நெல்லை  நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து, சமக தலைவர் நடிகர் சரத்குமார் களக்காடு, மாவடி, டோனாவூர் பகுதியில் திறந்த ஊர்தியில் பரப்புரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது:– ‘‘மத்தியில் காங்கிரசு ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் நாட்டின் முன்னேற்றம் பாதிப்பு அடைந்துள்ளது. பொதுமக்களின் வாழ்க்கைத் தரமும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 14 ஆண்டுகளாக, காங்கிரசுடன் திமுக கூட்டணியில் இருந்து பதவி நலத்தைத் துய்த்துள்ளனர். தமிழகத்தில் விலைவாசி உயர்ந்து விட்டது என்கிறார்  தாலின். இந்தியாவில்  எரிவளி விலை, …

செயலலிதா தலைமையாளராகும் கனவு பலிக்காது: அன்புமணி

அதிமுக ஆட்சியில் 6,500 கொலைகள்:  செயலலிதா  தலைமையாளராகும் கனவு பலிக்காது: அன்புமணி  இராமதாசு பேச்சு தேசிய சனநாயகக் கூட்டணி சார்பில் தருமபுரி  நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க. சார்பில்  மரு. அன்புமணிஇராமதாசு போட்டியிடுகிறார். இதனையொட்டி தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் தேசிய சனநாயக் கூட்டணிச் செயல்வீரர்கள்  கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அன்புமணி இராமதாசு பேசியதாவது:- வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு வெற்றிக்கூட்டணியை உருவாக்கி உள்ளோம். இந்தத் தேசியசனநாயகக் கூட்டணியை உடைக்க வேண்டும் என்று பலர் முயன்றனர். அவர்களின் முயற்சி பலிக்காது. இந்தியாவின் தலைமையாளருக்கான…

தமிழக மக்களுக்கு நல்லது செய்வது தான் முதல்பணி – விசயகாந்து

    தமிழக மக்களுக்கு நல்லது செய்வது தான் முதல்பணி, விசயகாந்த்து முதலமைச்சராவது இரண்டாம்நிலைதான், என தே.மு.தி.க., தலைவர் விசயகாந்து தூத்துக்குடியில் பேசினார்.   வேலை வாய்ப்பு இல்லை: செல்வநாயகபுரம்  சாலையில் ம.தி.மு.க., வேட்பாளர்  சோயலை ஆதரித்து விசயகாந்த்து பேசியதாவது: தூத்துக்குடி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு மீனவர்கள், கோவில்பட்டியில் தீப்பெட்டித்தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். ஆனால் இங்கு வேலை வாயப்பு இல்லாமல் தொழிலாளர்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் இல்லை: அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் இங்குள்ளது. தமிழகத்தின்…