திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், கவிஞர் பாலா

கவிஞர் பாலா என அழைக்கப்பெறும் பேராசிரியர் இரா.பாலச்சந்திரன் பிறந்த நாள் : மார்கழி 30, 1977 / சனவரி 13, 1946 நினைவு நாள் : புரட்டாசி 06, 2040 / செப்.22, 2009 பெற்றோர்: மா.இராமதாசு – ஞானாம்பாள் மனைவி: மஞ்சுளா மகள்: பிரியா மகன்: கார்த்திக்கு பிறப்பிடம் – கல்வி   கவிஞர் பாலா மார்கழி 30, 1977 / 1946 ஆம் ஆண்டு சனவரி 13 ஆம் நாள் சிவகங்கையில் பிறந்தார்; சிவகங்கை அரசர் உயர் நிலைப்பள்ளியில் படித்தார்; பள்ளிப்பருவத்தில்…

தமிழ் உரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ் உரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழிஆக்கிடு! தமிழ்நாடு உயர்நீதிமன்றம் எனப் பெயர்மாற்றம் செய்திடு! வழக்குரைஞர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கைவிடுக! உயர்நீதிமன்றத்தில் உள்ள நடுவண் படையைத் திரும்பப் பெறு! சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலம் அருகில் தை 21, 2047 / பிப்.04, 2016 வியாழன் மாலை 3 30 மணி அளவில்   உயர்நீதிமன்றத்தில் தமிழ் உரிமையை நிலைநாட்ட தமிழர்களே திரண்டு வாரீர்! அழைக்கிறது தமிழ் உரிமைக் கூட்டமைப்பு தமிழ்த் தேச மக்கள் கட்சி   தமிழ்மகன்…

உ.வே.சா.வுக்கு முந்தைய பதிப்பாசிரியர்கள் – அரிஅர வேலன்

உ.வே.சா.வுக்கு முந்தைய பதிப்பாசிரியர்கள் 1992ஆம் ஆண்டு நாட்குறிப்பை புரட்டியபொழுது கிடைத்த தகவல் இது. ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழிலக்கியங்களை அச்சுச்சுவடிகளாக வெளியிட்டவர் உ.வே.சா.தான் என்றும் முதன்முதலில் வெளியிட்டவர் அவர்தான் என்றும் பலரும் பேசுகின்றனர்; எழுதுகின்றனர். அவர் மட்டும்தான் அம்முயற்சிக்கு மூலவரா என்னும் வினா 1992ஆம் ஆண்டில் எனக்குள் எழுந்திருக்கிறது, அதுபற்றி நூலகவியலாளர் வே.தில்லைநாயகத்திடம் கேட்டபொழுது, “இல்லை. உ..வே.சா. பிறப்பதற்கு முன்னரே தமிழிலக்கியங்கள் அச்சிடப்பட்டு இருக்கின்றன. உ.வே.சா. அதிகமான நூல்களை அச்சிட்டார்” எனக் கூறிவிட்டுத், தனது நினைவிலிருந்து அவர் கூறிய பதிப்பாசிரியர்களின் பட்டியல்தான் இது: ஆறுமுகநாவலர் 02….

தொழூஉப்புகுதல்(சல்லிகட்டு) இலக்கியத்தில் சான்று – சான்றோர் மெய்ம்மறை

முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி நறையோடு துகள் எழ நல்லவர் அணி நிற்பத் துறையும் ஆலமும் தொல்வலி மரா அமும் முறையுளிப் பரா அய்ப் பாய்ந்தனர் தொழூஉ (முல்லைக்கலி 101:10-14) இரும் புலித் தொகுதியும் பெருங் களிற்று இனமும் மாறு மாறு உழக்கியாங்கு உழக்கிப் பொதுவரும் ஏறு கொண்டு ஒருங்கு தொழூஉ விட்டனர்! விட்டாங்கே மயில் எருத்து உறழ் அணிமணி நிலத்துப் பிறழப் பயில் இதழ் மலர் உண்கண் மாதர் மகளிரும்…

புரட்சி மிக்க பொங்கல்! – பா சங்கிலியன்

புரட்சி மிக்க பொங்கல்! – பா சங்கிலியன் கசப்பான இழப்புகள் நடக்கும் களத்தினிலும் எங்கள் வரிப்புலிகள் இனிப்பான பொங்கல் பொங்கித் தமிழரின் பண்பாட்டை தரணி எங்கும் பரப்பினர் தமிழர்கள் நாம் தமிழே மூச்சு தமிழ் மொழியே பேச்சென தலைநிமிர்ந்து வாழ்வோம் அடிமை நிலையை எதிர்ப்போம் அடுத்தவன் காலில் அண்டி வாழ்வதைத் தவிர்ப்போம் அறநெறி கற்க மறவோம் அம்மை அப்பரைத் தொழுவோம் எமக்கென ஓர் இடம் பிடிப்போம் எம்மவரை அங்கு ஆளவைப்போம் எளிமையை என்றும் மறவோம் எதற்கும் துணிந்து நிற்போம் பொங்கு தமிழாய் எழுவோம் புவியெங்கும்…

திருவள்ளுவர் நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் ?

 உலகத் தமிழர்களுக்கு அடையாளமாக விளங்கும் திருவள்ளுவருக்கு ஆண்டுதோறும் ஒரு நாள் கடைப்பிடிக்கப் படுகிறது. தமிழக அரசு இந்நாளை திருவள்ளுவர் நாளாக அறிவித்த போதிலும் இந்த நாளை உலகத் தமிழர்கள் எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்ற செய்தியைத் தமிழர்களிடைய அரசு கொண்டு செல்லவில்லை. தமிழ் அமைப்புகள் மட்டும் தங்களால் முடிந்தவரை சிறிய அளவில் இந்நாளில் நிகழ்சிகளை நடத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் இந்நாளில் அறியப்பட வேண்டிய திருவள்ளுவரின் புகழை இன்று தமிழர்களே அறியாத நிலை தான் இன்றுவரை நீடிக்கிறது. இந்த நிலையை நாம்தான் மாற்ற வேண்டும்….

அரிக்கமேடு – ஓர் ஆவணம் : தாழி இதழியல் கருத்தரங்கம்

  எமது நிறுவனத்தின் சார்பாக பல அரிய வரலாற்று, கலை, மொழியியல், பண்பாட்டு மீட்டுருவாக்க முயற்சியில் தொடர்ந்து எம்மை ஈடுபடுத்தி வருகின்றோம். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத் தூய பேதுரு மேனிலைப்பள்ளி ஆசிரியர், மாணவர்களின் கல்விச் சுற்றுலா, புதுவையில் எமது நிறுவனம் சார்பாக நடைபெற்றது; புதுச்சேரி வரலாற்றில் “அரிக்கமேடு – ஓர்  ஆவணம்” என்ற தலைப்பில் புதுவை நகரில் அமைந்துள்ள தாழி இதழியல் அலுவலகத்தில் கருத்தரங்க நிகழ்வும் நடைபெற்றது.   இந்தத் தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கென எமது நிறுவனத்தால் நடத்தப்படும் நான்காம் கருத்தரங்கம் இதுவாகும்….

பாரதி கும்மி – கவிக்கோ ஞானச்செல்வன்

பாடுங்கள் மக்கள் பாடுங்கள்-நறும் பைந்தமிழ்ப் பாமாலை பாடுங்கள் (பாடு) நாடுங்கள் நற்கவி பாரதியை-நாளும் நாடி நறுந்தமிழ் பாடுங்கள்-புகழ் பாடி அவன்பதம் போற்றுங்கள். (பாடு) வீரம் செறிந்த கவிஞனவன்-தமிழ் வீரம் விளைத்திட்ட வேந்தனவன் ஈரம் படைத்திட்ட நெஞ்சனவன்-அருள் ஈகைக் குணம் சான்ற தூயனவன். (பாடு) சக்தி அருள் பெற்ற சித்தனவன்-கனிச் சாறு பிழிந்தூட்டும் பக்தனவன் தத்துவம் சொன்னநல் முக்தனவன்-துயர் தாங்கும் மனவலி உற்றவனே. (பாடு) விடுதலைப் போர்தனில் சிங்கமவன்-மக்கள் வீறு கொளக்கவி பாடியவன் கொடுமை யழிப்பதில் தீயனையான்-உயர் குன்றென வேபுகழ் கொண்டவனே. (பாடு) சாதி மதங்களைச்…

தூண்டில் திருவிழா

தூண்டில் திருவிழா  பள்ளி விடுமுறை நாட்களில் தூண்டிலோடுதான் சுற்றுவோம். கண்மாய், ஊருணி, ஏரி, குளம், குட்டை, ஏந்தல், தாங்கல் எனப் பல்வேறு நீர்நிலை அமைப்புகள் வருடம் முழுதும் தண்ணீர் நிரம்பி இருந்த பொற்காலம் அது. பசுமைச் சூழலில் மரமேறுதலும் கவட்டையும் நம் மரபு விளையாட்டாக இருக்கும் வரை பறவைகள் பற்றிய தொடக்கநிலை அறிவு நம்மிடம் இருந்தது. பின் வேளாண்மை, மேய்ச்சல், மீன்பிடி போன்ற பாரம்பரிய தொழில்களில் ஈடுபடுகிற போது இயற்கை பற்றிய அறிவு விரிவடையும். இயற்கையோடு இயைந்து வாழும் சமூகத்தின் மரபு அறிவியல் வளர்ச்சியின் இயல்பு…

செந்தோழர் நல்லகண்ணு வாழ்க! – புதுவைத் தமிழ்நெஞ்சன்

தோழர் நல்லகண்ணு(மார்கழி 12, 1956 / திசம்பர் 26, 1925) செந்தோழர் நல்லகண்ணு நீடுவாழ்க! செங்கொடித் தோழர் நல்ல கண்ணு சிந்தனை ஆற்றல் உள்ளவராம் – அவர் செங்களம் ஆடிடச் சிறிதும் தயங்கார் செழுமை நெஞ்ச நல்லவராம். உழைக்கும் மக்கள் உள்ளம் எல்லாம் உணர்வில் கலந்த உழைப்பாளி – அவர் அழைத்தால் எதற்கும் அணிய மாவார் அவரே ஏழைப் பங்காளி. அரசியல் என்பதை ஆக்க முள்ள அறிவு வழிக்குச் சென்றவராம் – போர் முரசம் போல மூச்சும் பேச்சும் முயன்றே இங்கே அடிப்பவராம். நெடிய…

தொழுமின்! செழுமின்! – சந்திரசேகரன் சுப்பிரமணியம்

செம்மொழி படித்துச் செல்வத்தில் செழுமின்! விழுமின், உன்னை ஈன்றவர் அடி விழுமின்! தொழுமின், உன்னை மீண்டவர் அடி தொழுமின்! அழுமின், உனக்காக மாண்டவர் நினைந்து அழுமின்! விழுமின், விழாமல் பதவிவர மக்கள் அடி விழுமின! செழுமின், செம்மொழி படித்துச் செல்வத்தில் செழுமின்! குழுமின், கூசாமல் பிறமொழி தவிர்த்துக் குழுமின்! இழுமின், இனிக்கும் தமிழ்மொழி உனக்கே என இழுமின்! உழுமின், கழனியில் பணியில் நீர் உழைத்துச் செழுமின்!   -சந்திரசேகரன் சுப்பிரமணியம்

நான் கடலுக்கே போகிறேன்! – மாவீரன் மணிகண்டன்

‪ அழைத்ததால் வந்தேன்! வழியடைத்துத் துரத்துகிறாயே! நெஞ்சுருகிக் குமுறியதால்தானே வந்தேன்! பஞ்சம் என்று கதறியதால்தானே வந்தேன்! கெஞ்சி வேண்டியதாலே இரங்கினேன், உனக்காகக் கீழ் இறங்கினேன்! கொஞ்சமும் நினைவு இல்லையா? வஞ்சனை செய்கிறாயே… என்னை அழைத்து விட்டு…! வறண்ட என் நிலக் காதலி நான் முத்தமிட ஈர்த்திருப்பாள்…. சுரண்டி அவள் மேனியெல்லாம் பைஞ்சுதையாலே(சிமெண்டாலே) போர்த்தி வைத்தாய்! நனைத்து அணைப்பதாலே உடல் குளிர நலம் கொள்வாள்! அனைத்தும்  மறுதலித்து, கடல் சேரவே வழி செய்தாய்! குளம் குட்டை ஏரியென அங்கங்கே தங்கியிருந்தேன்! வளம் கொழித்த அத்தனைக்கும் பங்கம்…

1 9 10 11 14