தொடக்கப்பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டி, துபாய்

   துபாயில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான + அனைத்துலகப் பேச்சுப் போட்டி 2016 தொடக்கப் பள்ளி மாணவர்களின் நாவன்மைக்கு நல்லதொரு களமாக மலர்ந்து வரும் ‘மாணவர் முழக்கம்’ எனும் அனைத்துலகத் தமிழ்ப் பேச்சுப் போட்டியின் மாபெரும் இறுதிச்சுற்று இம்முறை எழில்மிகு துபாயில் இடம் பெறுகிறது. மலேசியாவின் ஆத்திரோ தொலைக்காட்சியும் ‘வணக்கம் மலேசியா’ இணையச் செய்தித் தளமும் இணைந்து, தமிழகம் வேலம்மாள்  உலகப்பள்ளி நிறுவனத்தாரின் ஆதரவுடன் நடத்துகின்றன. எதிர்வரும்  கார்த்திகை18, 2047 / திசம்பர் 3ஆம் தேதி சனிக்கிழமை துபாயின் அல் சபாவில்  சே.எசு.எசு. (JSS Private…

துபாயில் நடைபெற்ற நடன அரங்கேற்ற நிகழ்ச்சி

துபாயில் நடைபெற்ற செல்வி சிரத்தாவின் நடன அரங்கேற்ற நிகழ்ச்சி    துபாய் : ஐப்பசி 26, 2047 / நவம்பர் 11, 2016 வெள்ளிக்கிழமை அன்று செல்வி சிரத்தா  சிரீராம(ஐய)ரின்  பரதநாட்டியம்  அரங்கேற்றம் மரு. இராசசிரீ(வாரியர்) தலைமையில் வெல்லிங்டன் அரங்கத்தில் வெகுசிறப்பாக  நடைபெற்றது.   குரு திருமதி மதுராமீனாட்சி சினீவாசு பாட்டும், நட்டுவாங்கமும் திரு  சிரீனி கண்ணூர் மிருதங்கம் , திரு சுரேசு நம்பூதிரிவில்யாழ்(வயலின்) , திரு பிரியேசு  புல்லாங்குழல் அனைத்தும் வெகு இனிமையாக  இருந்தன.  மலர் வணக்கம், அலாரிப்பில்  தொடங்கிக் கௌத்துவம், வண்ணம், பதம்,…

திருவள்ளுவரின் உயிரியல் பார்வைத் திறன்-குறளேந்தி ந.சேகர்

திருவள்ளுவரின் உயிரியல் பார்வைத் திறன்   தமிழ் மொழியில் தோன்றிய இலக்கியச் செல்வங்களுள் தலை சிறந்தது திருக்குறள். தமிழரே அல்லாமல் அயலவரும் உரிமை பாராட்டிப் பயன் எய்துதற்கு மிக்க துணையாவது இந்நூல். தான் தோன்றிய நாள் முதல் தலைமுறை தலைமுறையாக எத்தனையோ நாட்டவரும், மரபினரும், மொழியினரும், சமயத்தினரும் நுகர்ந்து பயன் பெறுமாறு செய்தும் அழியாச் செல்வமாகத் திகழ்வது திருக்குறள் ஒன்றே ஆகும்.   இது சான்றாண்மை நிறைந்த அரும் பெரும் புலவர் பெருமானார் என உலகில் உள்ள எல்லா மொழிப் புலவர்களாலும் சிறப்பித்துப் பாராட்டப்பெறும்…

அறம் செய விரும்பு! – ஞா.மணிமேகலை

அறம் செய விரும்பு! வாகை சூடி வரவேற்று, வந்த விருந்தினர் மகிழ வகை செய்து பணிவுடன் அன்பும் காட்டுந் திறம் பருமிய நாட்டுப் பண்பாட்(டு) அறம்! ஒப்பிலா ஒண்தமிழ் ஓதுதல் அறம் ஒரு நிலையில்லா மனத்தை ஆளுதல் அறம் கொல்லா நெறியும் வாய்மையும் அறம் கோபம் வென்ற சாந்தம் அறம்! தன்னல மில்லாத் தியாகம் அறம் தாய், தந்தையரைப் பேணுதல் அறம் பிறன் மனை நோக்காப் பேராண்மை அறம். பேதம் இல்லா சமுதாயமே அறம்! அறத்தின் பயனே அட்சயப் பாத்திரம் அறத்தின் சிறப்பே அன்ன…

ஊக்கமது கைவிடேல்! – பா.உலோகநாதன்

ஊக்கமது கைவிடேல்! எல்லைகள் வேண்டா! உன்மன வெளியில் நிற்பாய் நடப்பாய் சிறகுகள் விரிப்பாய்! ஊக்கமது கைவிடேல்       இளைஞனே! எதுவரை முடியும் அதுவரை ஓடு அதையும் கடந்து சில அடி தாண்டு! ஊக்கமது கைவிடேல்       இளைஞனே! இலக்குகள் நிருணயி பாதைகள் வடிவமை தடைகளைத் தகர்த்தெறி பயணங்கள் தொடங்கு! ஊக்கமது கைவிடேல்       இளைஞனே! காரிருள் என்பது கருக்கல் வரைக்கும் விடியலில் ஒளியின் கதவுகள் திறக்கும் ஊக்கமது கைவிடேல்       இளைஞனே! காலங்கள் மாறும் வருடங்கள் ஓடும் – உன் கனவுகள் ஒருநாள் நிச்சயம் நிறைவேறும்! ஊக்கமது கைவிடேல்       இளைஞனே!…

இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மாவீரர் வார நிகழ்வு, தி.பி.2047 / கி.பி.2046

இலண்டன்  பல்கலைக்கழகக் கல்லூரியில் மாவீரர் வார நிகழ்வு தமிழ் இளையோர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவீரர் வார நிகழ்வுகள் பல நாட்டின் பல்கலைக்கழகங்களில் நடந்தேறிவருகின்றன. அதேபோல இலண்டன்  பல்கலைக்கழகக் கல்லூரியில்(UCL)  புதன்கிழமை மாலை தாயக மண்மீட்புப் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரித்தானிய இளையோர் அமைப்பும் இலண்டன் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து முன்னெடுத்தனர்.  இந்த நிகழ்வில் ‘ஒருதாள்’ (oru paper.com கோபி, உயிர் பிழைத்தோர் கதைகள் பிரம்மி  செகன் , சத்தியசீலன், தமிழ்வாணி  ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மாணவர்கள் எப்படி  தொடக்கக்காலத்தில் ஈழப்போரினில்…

உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!

உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!   இந்திய நாட்டின் விடுதலைப் போரில் தீவிரமாகப் பங்கேற்று, வெள்ளையனுக்கு எதிராகக் கப்பல் ஓட்டி, வெள்ளையனின் பொருளாதார அடி மடியை அசைத்த தமிழன் செக்கிழுத்த செம்மல் நமது பெரும் பாட்டன் வ.உ.சிதம்பரம்(பிள்ளை). அவரின் நினைவு நாளை உலகத் தமிழர் பேரவை தமிழகத்தின் நான்குமுதன்மை நகரங்களிலும், ஈழத்தின் முல்லைத் தீவிலும் கடந்த கார்த்திகை 03, 2047 /  18-11-2016 வெள்ளி அன்று  வெகு சிறப்பாகநடத்தியது. கோவை :  கோவை மத்திய சிறைச்சாலை…

புரட்சித்திலகம் காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார் – இலக்குவனார் திருவள்ளுவன்

புரட்சித்திலகம் காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார்!     விடுதலைப் போராளி,  உலகை ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவையே ஆட்டிப்படைத்த மாவீரன், 638 தடவை  அமெரிக்க எமனிடமிருந்து மீண்டவன், ஒடுக்கப்பட்டவர்களின் குரலோன், நாட்டில் கல்லாமையை ஒழித்த செயற்பாட்டாளன்,  பரப்பளவில் சிறியதான கியூபாக் குடியரசு அல்லது கூபாக்குடியரசு நாட்டைப் பெரிய நாடுகளுக்கு இணையாக மாற்றிய தலைவன், இவ்வாறான பல அடைமொழிகளுக்குச் சொந்தக்காரர் புரட்சித்திலகம் பிடல் காசுட்டிரோ (Fidel Alejandro Castro Ruz  :  ஆடி 28,  தி.பி. 1957 / ஆகத்து 13, 1926 – கார்த்திகை…

போற்றியே தொழுகின்றோம்! -ஈழத்து நிலவன்

  விழிகளை மூடிக் குழிகளில் உறங்கும் வீரக் குழந்தைகளே! – நாங்கள் விடுதலை வென்றிடக் குழிகளை விட்டு வெளியினில் வாருங்கள்! – நீங்கள் வெளியினில் வாருங்கள்! (விழிகளை மூடிக்…) உயிரினைக் கொடுத்து உறவினைக் காத்த உங்களை மறப்போமா? உறங்கியே வாழும் உங்களை மறந்த மனிதராய் இருப்போமா? (விழிகளை மூடிக்…) மானம் அழிவின்றி வாழவே உயிரைத் தானம் செய்தீரே! – இந்த வானமே போற்றும் வையகம் வாழ்த்தும் என்று நீ வாழ்வீரே! (விழிகளை மூடிக்…) நள்ளிரா வேளையில் கல்லறை தேடியே நாம் உமை வணங்குகின்றோம்! –…

கல்லறைகள் கண்ணீர் விடுவதற்கல்ல ! – ஈழத்து நிலவன்

இனம் வாழ இவர் செய்தார் தியாகம்! இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்! இன்னும் எத்தனைக் காலம்தான் கண்ணீர் விடப் போகின்றீர்கள் இழந்தவற்றை எண்ணி? இன்னும் எவ்வளவு நேரம்தான் கண்ணீர் சிந்தப் போகின்றீர்கள் உங்கள் தனியரின் கல்லறையின் முன்னால் கல்லறைகள் கண்ணீர் விடுவதற்கல்ல கருத்தரிப்பதற்கே! ஓர் இருளின் உகத்தை எரிப்பதற்காகத் தான் அவன் சூரியனாகிப் போனான் போராளி நடந்த சுவடுகளைத் தொட்டுப் பாருங்கள் சுள்ளென்று சுடும் அவன் விடுதலையின் தாகங்கள் ! அவன் உயிரின் ஆன்மா எதை நினைத்து உறங்கிப் போயிருக்கும் தனது…

தமிழருக்(கு) அரணாய் நின்றான் வாழியவே!

  ஈழப் புலிமகன் வீரத் தலைமகன் எறிகணை தொடுத்தான்! ஆழிப்பேரலை போலச் சினமுடன் அடியாய் அடியடித்தான்!   அடிமை இல்லாத தமிழீழம் படைக்க நினைத்தான்! அனைவரும் சமமாய் வாழ்ந்திட ஒன்றாய் இணைத்தான்! தரைப்படை கடற்படை வான்படை கட்டி அமைத்தான்! மில்லர் தற்கொடைப் படையால் எதிரிகள் முற்றுகை தகர்த்தான்!   அறநெறியோடு போர்முறை காத்து வென்றான் – வைய அரங்கில் இவனே தமிழருக்(கு) அரணாய் நின்றான்! தமிழாய் நெருப்பாய்த் தலைவன் பிறந்தே வந்தான் – புதுத் தமிழீழ அரசு ஒன்றைப் பொதுவாய்த் தந்தான்!   அடுப்பில் கிடந்த பெண்ணைப் புலியாய்ப் படைத்தான் – பெண் அடிமை…

தன்னைத் தமிழர் வாழ்வாய் ஆக்கிய தலைவா நீ வாழ்க!

  கங்கை கடாரம் காழகம் ஈழம் கண்டு வென்றவனே! எங்கள் மண்ணில் கரிகால்வளவனாய் இன்று பிறந்தவனே! தங்கத்தமிழர் விடுதலைக்காகத் தன்னைத் தந்தவனே! சிங்களப் படையைப் பொடிப் பொடியாக்கிய செம்மலே நீ வாழ்க! வாழ்க! வாழ்க! வாழ்க! – நீ வாழ்க! வாழ்க! வாழ்க!   மண்ணும் மொழியும் இனமும் காக்கும் மறவன் நீ அன்றோ! விண்ணும் மழையைத் தூவி உன்னை வாழ்த்தும் நாள் இன்றோ! எண்ணும் செயலை முடிக்கும் அறிவின் ஏற்றம் நீயன்றோ! வண்ணத் தமிழர் வாழ்வின் சுடரே! வாழ்க நீ நன்றே! (கங்கை…