புதுச்செருசியில் தமிழ்விழா 2016

ஆனி 17 – ஆனி 20, 2047 / சூலை 01 –  சூலை 04, 2016 பாவேந்தர் பாரதிதாசன் 125 ஆவது பிறந்தநாள் விழா தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா பேரவைத்தமிழ்விழா 2016 இயல், இசை, நாடகக் கலை நிகழ்ச்சிகள் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நியூசெர்சி தமிழ்ச்சங்கம்    

செயா அம்மையாருக்கு நன்றியும் வினாவும் : சொல்வீர்கள்! செய்வீர்களா? – செந்தமிழினி பிரபாகரன்

செயா அம்மையாருக்கு நன்றியும் வினாவும் சொல்வீர்கள்! செய்வீர்களா? செந்தமிழினி பிரபாகரன் மோடியை சந்தித்த செயா அம்மையார் தமிழ் நாட்டில் அகதிகளாக உள்ள ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தி உள்ளமைக்கு அம்மாவுக்கு ஈழத் தமிழர்களின் மனமார்ந்த நன்றி. அதே போல் ஈழத்தில் அப்பாவி ஈழத் தமிழர்களை படுகொலை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கேட்டமைக்கும் நன்றி. சந்தித்தீர்கள் மோடியை. கோரிக்கைகளை வலியுறுத்தினீர்கள். அதற்கு மேல்?? வழமை போல் எதுவும் நடக்காது என்பது எமக்கு நன்கு தெரியும். உங்களுக்கும் தெரியும் என…

‘ழகரம்’ சிற்றிலக்கியத் தமிழ் இதழ் வெளியீடு

   வணக்கம். ‘ழகரம்’  சிற்றிலக்கியத் தமிழ் இதழ்  ஆனி 05, 2047  / சூன் 19, 2016  ஆம் நாள் மாலை 4 மணிக்கு  மார்க்கம் மக்கள் மையத்தில்  வெளியிடப்படவுள்ளது. உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

இராணுவத்தினரது உணவகங்கள், வணிக நிலையங்களைப் புறக்கணியுங்கள்! – வவுனியா மக்கள் குழு

இராணுவத்தினரது உணவகங்கள், வணிக நிலையங்களைப் புறக்கணியுங்கள்! – வவுனியா  மக்கள் குழு   தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் வணிக நிலையங்களில், பொதுமக்களும் பொருள்களைக் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் அவர்களது  வணிக நடவடிக்கைகள் இலகுபடுத்தப்பட்டு வசதிப்படுத்தப்பட்டுள்ளமையால், பொதுமக்கள் தங்கள் உடலை வருத்தி வியர்வை சிந்தி உழைத்த பணம், தமிழர் தாயகத்தில் பெரும் அச்சுறுத்தலாகவும் – குடைச்சலாகவும் உள்ள இராணுவத்தினரது பயன்பாட்டுக்குச் சென்றடையும் நிலைமைகள் தொடர்பில் ஒவ்வொரு  குடிமகனும் தெளிவுற வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள வவுனியா மாவட்டக்  குடிமக்கள் குழு,  தமிழர் தாயகத்தில்…

போராளி வெற்றிச்செல்வியின் ‘ஆறிப்போன காயங்களின் வலி’ நூல் வெளியீடு!

முன்னாள் பெண் போராளி வெற்றிச்செல்வியின் ‘ஆறிப்போன காயங்களின் வலி’ நூல் வெளியீடு!   முன்னாள் பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாமின் வாழ்வு தொடர்பான வரலாற்றுப் பதிவான ‘ஆறிப்போன காயங்களின் வலி’ என்ற நூல் எதிர்வரும் ஆனி 11, 2047 / சூன் 25, 2016  ஆம் நாள் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் வெளியிடப்படவுள்ளது. உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.  

குறள் சொல்லுங்கள் ! …. பரிசு வெல்லுங்கள் !

குறள் சொல்லுங்கள் !…. பரிசு வெல்லுங்கள்!   வளைகுடா வானம்பாடிக் கவிஞர் சங்கம், குவைத்து வாழ் தமிழ்க் குழந்தைகளுக்கு 2016 ஆம் ஆண்டு கோடை இன்பத்தை குதூகலிப்பாகக் கொண்டாடிட  ஆயத்தமாகிறது. திருக்குறள் ஆர்வலர்  தஞ்சை முருகானந்தம் மேற்பார்வையில் நடக்க இருக்கும் இந்த மாபெரும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பள்ளிக்குழந்தைகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு, உலகப் பொதுமறையாம் நமது திருக்குறளின் பெருமையை மேலும் உலகிற்குப் பறைசாற்றிட, வளரும் தளிர்களான உங்களின் கரமும் சேர்ந்திட, குவைத்து பாலைமண்ணிலிருந்து சோலைவனக் குறளை உலகிற்கு எடுத்துச்சென்றிட, அணி அணியாக வாருங்கள்! …

அ.இ.த.எ.சங்கம் : இலக்கிய உறவுகள் திருவிழா, சென்னை

     மலேசியாவிலிருந்து வருகை புரிந்துள்ள ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றத்தின் தலைவர் திரு. க. அருள் ஆறுமுகம் அவர்களுக்கும் மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு மன்னர் மன்னன் மருதை அவர்களுக்கும் வைகாசி 31, 2047 / 13.06.16 திங்கள் கிழமை மாலை நடைபெற உள்ள பாராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் உங்களை எல்லாம் அன்போடு அழைக்கிறோம்.   ஆதிரை முல்லை

தாய்க்குலத் தாரகை தி.இராமநாயகத்திற்குப் பாராட்டு, சென்னை

  ஆனி 01, 2047 / சூன் 15, 2016  உலகத்தமிழ் ஒப்புரவாளர் பேரவை ஈப்போ ஔவைப் பணிச்செல்வி தி.இராமநாயகத்திற்குப் பாராட்டு  -புலவர் இளஞ்செழியன்  

முன்மொழிவுப் பணத்தை வழங்க அறவழிப் போராட்டம் – பா.திருஞானம்

அறவழிப் போராட்டம்   பெருந்தோட்டத் தொழிற் சங்கப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, வைகாசி 13, 20147 / மே 26, 2016  அன்று கொழும்பு புறக்கோட்டை  தொடரிநிலையத்தின் முன்னால்   அறவழிப்போராட்டம் ஒன்றினை நடாததினர்.  பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வரவு செலவுத் திட்டதில் முன்மொழியப்பட்ட 2500.00  உரூபா வழங்கப்படாமை குறித்துப் பெருந்தோட்ட முதலாளிமார்  பேரவைக்கு அழுத்தம் கொடுப்பதற்கும். சம்பளப்பேச்சினை உடனடியாக  விரிவுபடுத்துமாறு கோரியும்  . அறப்போராட்டம் நடைபெற்றது. இதன் போது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண  அவை உறுப்பினர்கள்  முதலானோர்  கலந்து கொண்டார்கள். (பெரிதாகக்…

தெற்காசிய மண்டல அமைதி, கல்விக்கான ஆய்வரங்கு – பா.திருஞானம்

தெற்காசிய  மண்டல  அமைதி,  கல்விக்கான ஆய்வரங்கு   தெற்காசிய  மண்டலத்தின் தொடர்ச்சியான  அமைதியும் கல்வியும் : இலங்கை அரசும்  பன்னாட்டுச் சிறார் நிதியமும்(யுனிசெப்) இணைந்து நடத்திய ஆய்வு அரங்கு   வைகாசி 14, 2047 / மே 27, 2016 அன்று கொழும்பு இல்டன் உறைவகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராசு காரியவசம்,  மாநிலக் கல்விஅமைச்சர் வே.இராதாகிருட்டிணன்,  மாநிலஅமைச்சர் பௌசி,  ப.சி.நி. (யுனிசெப்) நிறுவனத்தின் உயர் அதிகாரிகள்  முதலான பலரும் பங்தேற்றனர்.  பர்பிங்காம் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த கலாநிதி  இலின்டேவிசு, சசெக்சு பல்கலைக்கழகத்தினைச்…

பிரித்தானியத்தலைமையர்(பிரதமர்) வாயிலில் அணிதிரண்ட தமிழர்கள் !

தொடரும் மனித உரிமை மீறல்களுக்கு விடை என்ன ? பிரித்தானியத்தலைமையர்(பிரதமர்) வாயிலில் அணிதிரண்ட தமிழர்கள் !   நல்லாட்சி என்ற பெயரில் சிறிலங்கா அரசினால் மூடி மறைக்கப்படும், நீடிக்கும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் நோக்கில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இலண்டனில் இடம்பெற்றுள்ளது.   கடந்த ஞாயிறன்று (வைகாசி 09 / 22-05-2016) பிரித்தானியத்தலைமையர்(பிரதமரது) வாயில் தளத்துக்கு முன்னால் இடம்பெற்றிருந்த இக்கவனயீர்ப்புப் போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கு செய்திருந்தது.  வெள்ளையூர்தி கடத்தல்கள், கைதுகள் எனச் சிறிலங்காவில் நீடிக்கும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி இடம்பெற்றிருந்த…

கொழும்பு இரோயல் கல்லூரிக்கு மாநிலக்கல்வி அமைச்சர் அதிரடி வருகை! – பா.திருஞானம்

கொழும்பு இரோயல் கல்லூரிக்கு  மாநிலக்கல்வி அமைச்சர் அதிரடி  வருகை! ஆசிரியர்களுக்கு உடனடி இடமாற்றம்    மாநிலக் கல்விஅமைச்சர் வே. இராதாகிருட்டிணன் கொழும்பு  அரசு(இரோயல்) கல்லூரியின் தமிழ்ப் பிரிவுற்கு வைகாசி 14, 2047 / 27.05.2016  அன்று அதிரடி  வருகை ஒன்றினை மேற்கொண்டார். இதன் போது கல்லூரியின் அதிபர் தமிழ்ப் பிரிவிற்கான  துணை அதிபர்,  தமிழ்மொழி மூலமான ஆசிரியர்களுடன் பாடசாலையின் குறைபாடுகள் குறித்துக் கலந்து உரையாடினார். இதன் போது  மாநிலக்கல்வி  அமைச்சரின் செயலாளர் திசஃகேவாவித்தான, மேலதிகச் செயலாளர் ஃகேவகே,  கல்வி அமைச்சின் தமிழ்க்கல்வி  மேம்பாட்டிற்குப் பொறுப்பான…