சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 02 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா
சிங்கள வதைமுகாம் கமுக்கங்கள் – அம்பலப்படுத்துகிறார் மருத்துவர் து.வரதராசா! 2/6 இர.சிறீகந்தராசா: இந்த இறுதிப் போரிலே எத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டார்கள், காணாமல் போகச் செய்யப்பட்டார்கள் என்கிற சரியான புள்ளிவிவரங்கள் இல்லை. ஆனால், “1,46,000 பேருக்கு என்ன நடந்தது எனத் தெரியாது” என்ற கருத்து மன்னார் மறை மாவட்ட ஆயர் அவர்களால் முன்வைக்கப்பட்டது. அதே நேரத்திலே, ஐக்கிய நாடுகள் அவை 40,000 பேர் இறந்தார்கள், 30,000 பேர் இறந்தார்கள் என்று சில இடங்களிலே கூறியது. நான் சென்ற ஓர் இடத்தில், ஐ.நா.,வின் முன்னாள் அலுவலர்…
பாரெங்கும் தமிழ் – இல. பிரகாசம்
பாரெங்கும் பாரீர்! பாரெங்கும் பாரீர்! தமிழினம் தனித் தன்மையோடு சேருவதைப் பாரீர்! பாரீர்! பாரீர்! பேதமைகளைத் தூக்கியெறிந்து ஒன்றாவதைப் பாரீர்! வையகம் வென்றிட தோழமையோடு நடைபோடும் தோழமைத் தமிழினம் இங்கே பாரீர்! பாரீர்! வையகத் தலைமை கொண்டு வழிநடத்தும் தமிழ் வேந்தர்களைப் பாரெங்கும் பாரீர்! உயிரினும் மேலான அறத்தை நாளும் வையக மெல்லாம் சீராய்ப் பரப்பும் தரணி புகழ் கொண்ட தமிழன் விண்ணுலகைச் சுட்டுவிரல் நுனியில் ஆட்டிவைக்கும் விண்ணறிவு கொண்ட தமிழனைப் பாரீர்! பாரெங்கும் பாரீர் பாரீர்! எந்நாளும் எல்லார்க்கும் எல்லாம் ஈயும் கொடையுள்ளம்…
யாழிசை – நூலறிமுகம், தொரந்தோ
கொழும்பு மகசீன் சிறையில் அரசியல் கைதியாக அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் சிவ. ஆருரன் எழுதிய “யாழிசை” என்ற குமுகாயப் புதினம்(சமூக நாவல்) கனடாவில் ஞாயிற்றுக் கிழமை சித்திரை 11, 2047 / ஏப்பிரல் 24 அன்று வெளியிடப்பட உள்ளது. இனத்தின் வலியைச் சுமந்து சிறையில் துன்புற்று வாழும் இந்த நூலாசிரியரின் சிறைக்குள் இருந்து மலரும் இசையாக இந்த யாழிசை கடல் கடந்தும் உலகத் தமிழ் உறவுகளின் உள்ளங்களைத் தொட வெளிவந்துள்ளது. சிறை வாழ்வில் இனி ஏது வாழ்வு என நொடிந்து துன்புறும் சிறை…
தொல்காப்பியத்தில் தமிழிசை – முனைவர் இராச.கலைவாணி
அனைவருக்கும் வணக்கம். வரும் சித்திரை 11, 2047 / ஏப்பிரல் 24 இரவு 8:30 முதல் 9:30 வரை (கிழக்கு நேரம்) இலக்கியக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும். அதோடு தங்கள் நண்பர்களுக்கும் இந்த நிகழ்வைப் பகிர்ந்து அவர்களும் பங்குபெற்றுப் பயனடையச்செய்யவும். சொற்பொழிவு:- “தொல்காப்பியத்தில் தமிழிசை”. வழங்குபவர்: முனைவர் இராச.கலைவாணி சித்திரை 11, 2047 / ஏப்பிரல் 24-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை Date: Chithirai 11, 2047 April 24, Sunday at 8:30 pm ET நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:30 மணிவரை…
ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் – கனடியத்திரைப்படங்கள் பற்றிய கலந்துரையாடல்
சித்திரை 17, 2047 / ஏப்பிரல் 30, 2016 மாலை 3.00 முதல் 7.00 வரை தொரந்தோ தமிழ்ச்சங்கம்
ஈழத்தமிழர் ஒரு தேசிய இனம் – கனடிய எதிர்க்கட்சி ஏற்றது.
ஈழத்தமிழர் ஒரு தேசிய இனம் – கனடிய எதிர்க்கட்சி ஏற்றது. ஈழத்தமிழர் ஒரு தேசிய இனமென்பதையும்; இடம்பெறும் தமிழர்இனவழிப்பிற்கான அனைத்துலக உசாரணையை கோருமென்றும்கனடாவின் பழமைவாதக் கட்சி அறிவிப்பு: சித்திரை 01, 2047 / 4.14.2016 அன்று நடைபெற்ற உயர் மட்டச் சந்திப்பில் கனடியத் தமிழர் தேசிய அவையும் (சூஊஊகூ) கனடாவில் தமிழர்பகுதிகளைச் சார்புபடுத்தும் மார்க்கம், மிசிசாகா, பிராமிடன், ஆட்டாவாவைச் சேர்ந்த அமைப்புகளும் கனடாவின் பழமைவாதக் கட்சியின் தலைவி (உ)ரோணா அம்புரூசு அம்மையார் அவர்கள் உடனான உயர் மட்டச் சந்திப்பை மேற்கொண்டனர். இச்சந்திப்பில் தமிழர்…
சிங்கள வதைமுகாம் கொடுமைகள் – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா
சிங்கள வதைமுகாம் கமுக்கங்கள் – அம்பலப்படுத்துகிறார் மருத்துவர் து.வரதராசா! 1/6 நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழீழத் தாயகத்தில் மக்களோடு மக்களாக நின்று பெரும் எதிர்வுகளுக்கு(சவால்களுக்கு) மத்தியில் உயர்பெரும் மருத்துவச் சேவை புரிந்தவர் மருத்துவர் து.வரதராசா. தமிழீழத் தாயக மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்கிற உயரிய நோக்கத்திற்காக மருத்துவப் படிப்பை மேற்கொண்ட இவர், மருத்துவரானதும் அதனை நிறைவேற்றும் நோக்கத்துடன் மக்கள் மத்தியில் வாழ்ந்து மருத்துவப் பணி புரிந்தார். போர் வெடித்த பொழுது திருமலை ஈச்சிலம்பற்று முதல் வாகரை வரையான பகுதியில் மக்களின் உயிர் காக்க…
புதுவருட நிகழ்வுகளுக்குத் தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தால் நிதியுதவி
40ஆம் ஆண்டு நிறைவு- புதுவருட நிகழ்வுகளுக்குத் தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தால் நிதியுதவி வவுனியா கோவில்குளம் இறொக்கட்டு விளையாட்டுக் கழகத்தின் 40 ஆம் ஆண்டின் நிறைவு விழாவும், சித்திரைப் புதுவருட விழாவும் எதிர்வரும் 13,14 ஆம்நாள்களில் நடைபெறவுள்ளன. இந் நிகழ்வுகளுக்குத் தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தின் சார்பில் பரிசுப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக ஒருதொகைப்பணம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வு தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான சனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட…
மீள்எழுச்சி பெற்றது வவுனியா மாவட்டக் குடும்பங்களின் சங்கம்
மீள்எழுச்சி பெற்றது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் வவுனியா மாவட்டக் குடும்பங்களின் சங்கம் இலங்கை சிங்களப் படையிடம் / அரசிடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்டச் சங்கத்துக்கு (FSHKFDR – Vavuniya District) புதிய மேலாண்மைக் குழுத் தேர்தல்கள் நடைபெற்று மீளக் கட்டமைக்கப்பட்டுள்ளது. வவுனியா நகர அவை உள்ளக மண்டபத்தில் பங்குனி 27, 2047 / 06.04.2016 அன்று காலை 11:00 மணிக்கு இதற்கான மீள்தகவமைவுக் கலந்துரையாடல் நடைபெற்றது. வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழுவின்…
திருக்குறள் பன்னாட்டு மாநாடு 2016, செருமனி
சித்திரை 24, 2047 / மே 07, 2016 செருமனி – எசன் மாநகரில் இடம்பெறும் . பேராளர் கட்டணம் 100 (இ) யூரோக்கள் .(தங்குமிடம் உணவு உட்பட). . போக்குவரத்து, தங்குமிடத்திலிருந்து மாநாட்டு மண்டபம் வரை கட்டணமில்லை. தொடர்புகளுக்கு : நயினை விசயன் 00492013307524 , 0176 55 77 87 52
“பஞ்சம் பிழைக்க வந்த சீமை” என்ற நூல் வெளியீட்டு விழா
“பஞ்சம் பிழைக்க வந்த சீமை” என்ற நூல் வெளியீட்டு விழா மலையக மூத்த எழுத்தாளர் கலாபூசணம் மு.சிவலிங்கம் எழுதிய “பஞ்சம் பிழைக்க வந்த சீமை” என்ற நூல் வெளியீட்டு விழா பங்குனி 26, 2047 / 10.04.2016 ஞாயிற்றுகிழமை வட்டவளை அகரவத்தை மீனாட்சி தோட்ட எல்லை முனியாண்டி கோயில் முன்றிலில் நடைபெற்றது. மீனாட்சி தோட்டத் தொழிலாளியான திருமதி இராசேசுவரி மகேசுவரன் தலைமையில், மலையக அரசியல் விழிப்புணர்வு கழகமும் மலையகக் கலை, பண்பாட்டு மன்றமும் ஏற்பாடு செய்த இந் நிகழ்வில் …
புதிய வீடமைப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழா
புதிய வீடமைப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழா கந்தப்பளை கோட்லொசு தோட்டத்தில் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்ட தோட்ட மக்களுக்குப் புதிய வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா கல்வி அமைச்சர் வே. இராதாகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய மாகாண அவை உறுப்பினர்களான ஆர். இராசாராம், சோ.,சீதரன், திருமதி சரசுவதி சிவகுரு, அறக்கட்டளை அமைப்பின் தலைவர் புத்திரசிகாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். ஏறத்தாழ தனித்தனியே 12 இலட்சஉரூபாய்ச் செலவில் அமைக்கப்படும் 23 வீடுகள் தோட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இதற்கான நிதி…
