என்றும் இணைந்து வாழ்வோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

என்றும் இணைந்து வாழ்வோம்!  (“அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்” என்னும் திரைப்பட மெட்டில் இதனைப் பாடலாம்.)  உலகெனும் வீட்டில் அனைவரும் உறவினர் என்று சேர்ந்து வாழ்வோம் – நாம் என்றும் சேர்ந்து வாழ்வோம் – இந்த வீடும், நாடும் கடந்த உலகம் ஒன்று என்று வாழ்வோம் – நாம் ஒன்று பட்டு வாழ்வோம்! நிறமென்ன உருவென்ன பிறப்பென்ன தொழிலென்ன எல்லாம் ஒன்று என்போம் எல்லாம் ஒன்று என்போம்! பகையில்லை போரில்லை இழிவில்லை தாழ்வில்லை என்று இணைந்து வாழ்வோம் – இனி என்றும் இணைந்து…

வெருளி நோய்கள் 336 – 340 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 331 – 335 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 336 – 340 336. இருகாட்சி வெருளி – Diplophobia காண்பது இரட்டையாகத் தெரிவது குறித்த பேரச்சம் இருகாட்சி வெருளி. பெரியவர்கள் தங்களுக்கு இரண்டு இரண்டு உருவமாகத் தெரிவதாகக் கூறும் பொழுது அதைக்கேட்கும் சிறுவர்கள் தங்களுக்கும் அவ்வாறு தெரிவதாகக் கருதிப் பேரச்சத்தை வளர்த்துக் கொள்வர். நாளடைவில் இப்பேரச்சம் வளர்ந்து வெருளியாக மாறும். diplos என்றால் இரட்டை எனப் பொருள். 00 337. இருபடிச் சமன்பாட்டு வெருளி-Quadrataphobia இருபடிச்சமன்பாடு குறித்த அளவுகடந்த பேரச்சம் இருபடிச்சமன்பாட்டு…

வெருளி நோய்கள் 331 – 335 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 326 – 330 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 331 – 335 331. இருக்கை வார் வெருளி – Zoniasfaleiaphobia இருக்கை வார்(Seat belt) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இருக்கை வார் வெருளி. Zonia sfaleia என்பது பாதுகாப்புப் பகுதி என்னும் பொருள் கொண்ட கிரேக்கச்சொல். பாதுகாப்பிற்காக அணியப்பெறும் இருக்கை வாரை இந்த இடத்தில் குறிக்கிறது. 00 332. இருட் சுவர் வெருளி – Dr🛵kronphobia இருண்ட சுவர் குறித்த வரம்பற்ற பேரச்சம் இருட் சுவர் வெருளி. இருட்டு வெருளி, இரவு…

எண்ணமும் எழுத்தும் பேச்சும் படிப்பும் தமிழே! – இலக்குவனார் திருவள்ளுவன்

எண்ணமும் எழுத்தும் பேச்சும் படிப்பும் தமிழே! அனைவருக்கும் பிடித்த பாடல், (1857 இல் எழுதப்பெற்ற) “Jingle Bells” என்பதாகும். இந்த மெட்டிலான பின்வரும் பாடலைப் பிள்ளைகளுக்குச் சொல்லித்; தாருங்கள்; தமிழ்ப் பாலையும் கலந்து ஊட்டுவதாக அமையும்.   எண்ணுக எண்ணுக தமிழில் என்றுமே!                         எழுதுக எழுதுக தமிழில் எதையுமே!                         பேசுக பேசுக நல்ல தமிழிலே!                         பயிலுக பயிலுக நமது தமிழிலே!                         மொழியை மறந்தாலோ                               வாழ்வை இழப்போமே!                         வாழ்வை இழந்தாலோ                         நாமும் இல்லையே!                         நம்…

வெருளி நோய்கள் 326 – 330 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 321 – 325 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 326 – 330 புனைவுரு இராட்டென்(Rotten) குறித்த வரம்பற்ற பேரச்சம் இராட்டென் வெருளி.இரக்கமற்ற, பேராசை கொண்ட, சோம்பேறித்தனமான, முட்டாள்தனமான, கிறுக்குத் தனமான வஞ்சகனான அசைவூட்டப் பாத்திரம்.இத்தகைய இயல்பு உள்ளவர்கள் மீது எரிச்சலும் சினமும் வெறுப்பும் கொள்பவர்களுக்கு இராட்டென் மீது வெருளி வருவது இயற்கைதானே.00 புனைவுரு இரால்பி தென்னெலி (Ralphie Tennelli) குறித்த வரம்பற்ற பேரச்சம் இரால்பி வெருளி.இவர் முழுப் பெயர் இரால்பு அலெக்குசாண்டிரோ கியூசெப்பு தென்னெலி(Ralph Alessandro Giuseppe Tennelli) என்பதாகும். தென்னெலி…

தொல்காப்பியமும் பாணினியமும் – பொருளடக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – முன்னுரை: தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் நூற்குறிப்பு     2 பொருளடக்கம் 5 நூற்பகுப்பு 7 எழுத்ததிகார இயல்கள்   7 சொல்லதிகார இயல்கள்  7 பொருளதிகார இயல்கள்  7 நூற்பாக்களின் எண்ணிக்கை   8 பாணினியின் அ(சு)ட்டாத்தியாயி பிரிவுகள் 9 அட்டாத்தியாயி சூத்திர எண்ணிக்கை      9 பெயர்க்காரணம்     10 நூற்சிறப்பு      10 தொல்காப்பியம் சிறப்பிக்கும் மரபு   11 முதனூல் 12 தொல்காப்பியத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லாயிரம் தமிழ் நூல்கள் இருந்தன     13 மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம்    13 தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள்…

தமிழை வாழ்த்துவோம்! –  இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழை வாழ்த்துவோம்! “Yellow Ribbons” என்னும் பாடல் மெட்டில் பின்வரும் பாடலைச் சொல்லித் தாருங்கள். கடமைகளை அறிவதுடன் கன்னித்தமிழ் மீதான பற்றினையும் பெறுவார்கள்.      காலை எழுந்ததும் பாடம் படிப்போம்                         மாலை முழுவதும் ஆடிக் களிப்போம்                                                                         விளையாடிக் களிப்போம்                         பாரதி அன்று சொன்னதைக் கேட்டு நடப்போம்!                         பாடிஆடி மகிழ்ந்து நாம் கலையை வளர்ப்போம்-தமிழ்க்                                                                         கலையை வளர்ப்போம்!                         கூடுவோம் ஒன்றாய்க் கூடுவோம்!                         பாரதி அன்று சொன்னபடிக் கூடி ஆடுவோம்! – ஒன்றாய்க்                                                                              கூடி…

வெருளி நோய்கள் 321 – 325 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 316 – 320 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 321 – 325 இரத்தக்காட்டேரி குறித்த அளவுகடந்த பேரச்சம் இரத்தக் காட்டேரி வெருளி.இரத்தக்காட்டேரிகள் குறித்துத் திகில் படங்களில் பார்ப்பவர்கள், இரத்தக்காட்டேரி குறித்த படம், காட்சி, செய்தி முதலியவைபற்றிப் பேரளவு அச்சம் கொள்கின்றனர். தமிழ் நாட்டவர் அணங்கு வெருளி என்றும் சொல்லலாம். அணங்கு தெய்வப் பெண்ணாகவும் கொலை செய்பவளாகவும் இரு வகைகளில் குறிக்கப் படுகின்றது. எனவே, அணங்கு குறித்தும் காரணமற்ற பேரச்சம் உள்ளது.00 புனைவுரு இரத்துபரன்(Ratburn) குறித்த வரம்பற்ற பேரச்சம் இரத்துபரன் வெருளி.ஆர்தர் அசைவூடடப்…

கைகள் இரண்டு ஊருக்குதவ  – இலக்குவனார் திருவள்ளுவன்

கைகள் இரண்டு ஊருக்குதவ குழந்தைகளுக்குக் கண், காது முதலிய புலனுறுப்புகளைச் சொல்லித் தர உதவும் பாடல். “Ten little fingers” என்னும் பாடல் முறையில் அமைந்தது. பாடிப் பாருங்கள். குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். கைகள் இரண்டு ஊருக்குதவ                         கால்கள் இரண்டு நல்வழி நடக்க                         கண்கள் இரண்டு கனிவாய்க் காண                         செவிகள் இரண்டு கருத்தாய்க் கேட்க                         நிறைவாய்க் கேட்டுக் குறைவாய்ப் பேச                         வாயோ நமக்கு ஒன்றே ஒன்று!                         வாயோ நமக்கு ஒன்றே ஒன்று! குழந்தைகளுக்கு நாம் கடமைகளைச்…

வெருளி நோய்கள் 316 – 320 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 311 – 315 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 316 – 320 புனைவுரு இயேன் இரீடு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இயேன் இரீடு வெருளி.ஆர்தர் என்பது மார்க்கு பிரவுன்(Marc Brown), கேத்தி வா(Kathy Waugh) ஆகியோரால் உருவாக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடர்.இதில் வரும் இயேன் இரீடு மீதான பேரச்சத்தையும் அதனால் வரும் வெருளியையுமே குறிப்பது இது.00 புனைவுரு இரஃபேல்(Raphael) குறித்த வரம்பற்ற பேரச்சம் இரஃபேல் வெருளி.பதினகவை சடுதிமாற்ற நிஞ்சா கடலாமைகள்(Teenage Mutant Ninja Turtles) உலகில், இரபேல் பெரும்பாலும் பூச்சிகள் மீது கடுமையான வெறுப்பைக்…

மழை வீழட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

மழை வீழட்டும்! 1744 இல் எழுதப்பெற்ற “London Bridge Is Falling Down” என்றொரு மழலைப் பாடலை அனைவரும் அறிவர். “வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்” என்னும் கலைஞரின் கருத்தை இப்பாடல் முறையில் பொருத்திப் பாருங்கள். பின்வரும் இனிய பாடல் கிடைக்கும். வேண்டிய மட்டும் வீழட்டும்! – மழை வீழட்டும் வீழட்டும் – பாரில் வேண்டிய மட்டும் வீழட்டும்!              மழை                                                 எங்கெங்கும் வீழட்டும்!                         நீயும் நானும் வீழ்ந்தாலும் – தமிழ்                         வாழட்டும்! வாழட்டும்! – பாரில்                         நீயும்…

தொல்காப்பியமும் பாணினியமும் – முன்னுரை: இலக்குவனார் திருவள்ளுவன்

தொல்காப்பியமும் பாணினியமும் முன்னுரை கனடாவில்  முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (2024-09-20, 2024-09-21, 2024-09-22) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் சிறப்பாக நடைபெற்றது. கனடாத் தொல்காப்பிய மன்றமும் (தமிழ்நாட்டின்) இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து இதனை நடத்தின. அதன் கருத்தரங்கத்தில் வாசிக்க நான் ‘தொல்காப்பியமும் பாணினியமும்’ என்னும் கட்டுரையை அனுப்பியிருந்தேன். நான் பொதுவாகக் கருத்தரங்கங்களில் பங்கேற்கும்போது விரிவான கட்டுரையை  அனுப்பிவிட்டு அதன் பின்னரே சுருக்கத்தை எழுதியனுப்புவது வழக்கம். ஏனெனில்…