இலக்குவனார் நினைவேந்தல், 04.09.2022
தமிழ்க்காப்புக் கழகம் கி.இ.க.[ஒய்.எம்.சி.ஏ.] பட்டிமன்றம் இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் நினைவேந்தல் இணைய உரையரங்கம் ஆவணி 19, 2053 / 04.09.2022 ஞாயிறு காலை 10.00 மணி கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: முனைவர் ப.தாமரைக்கண்ணன், செயலர், கி.இ.க.(ஒய்எம்சிஏ) பட்டிமன்றம் ந. காருண்யா, இளங்கலை-தமிழ் மூன்றாம் ஆண்டு, தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி பெரம்பலூர் திரு வ. ஏ. மணிகண்டன், முனைவர் பட்ட ஆய்வாளர், சவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி….
இலக்குவனார் நினைவுநாளில் தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு – சீமான்
இலக்குவனார் நினைவுநாளில் தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு “அன்னைத் தமிழில் அருச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு ஒரு திட்டத்தை அறிவித்தது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துக் கோவில்களிலும் தமிழில் வழிபாடு (அருச்சனை) செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நாம் அறிந்த வரை இந்தத் திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப் பட்டதாகத் தெரியவில்லை. நாடு “தமிழ்”நாடு. ஆனால், தமிழில் வழிபாடு செய்யப் போராட வேண்டிய நிலையில் தான் கடந்த 55-ஆண்டுக் காலத் திராவிட அரசுகள் இயங்கி இருக்கின்றன….
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 5
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 4 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 2 மொழிகளும் மொழிக்குடும்பங்களும் தொடர்ச்சி இத்தாலிய மொழி, மலேயா மொழி, வங்காள மொழி, போர்ச்சுகீச மொழி, அராபி மொழி ஆயவை பேசுவோர் தொகை ஐந்து கோடிக்கும் ஏழு கோடிக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையாகும். இவற்றில் சில உலகின் நிலப்பரப்பில் பெரும் பகுதியைத் தாம் வழங்குமிடமாகக் கொண்டுள்ளன. ஆங்கிலம் ஐந்தில் ஒரு பகுதியையும், உருசியம் ஆறில் ஒரு பகுதியையும் ஆட்சி புரிகின்றன. சப்பான் மொழியும் இத்தாலிய மொழியும் சிறு நிலப்பரப்புள் வழங்குகின்றன. ஆங்கிலமும் பிரெஞ்சும் உலகமெங்கும்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 4 : 2 மொழிகளும் மொழிக்குடும்பங்களும்
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 3 தொடர்ச்சி) 2. மொழிகளும் மொழிக்குடும்பங்களும் உலகில் ஈராயித்து எழுநூற்றுத் தொண்ணூற்றாறு (2796) வேறுபட்ட மொழிகள் உளவாம். இவற்றை எல்லாம் சில குடும்பங்களாகப் பிரித்துள்ளனர். அவை இந்தோ ஐரோப்பியன், செமிதிக்கு, சீனம், மலேயா, பொலீசியன், சிதியன் எனப்படும். சிதியன் குடும்பத்தில் திராவிட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆயினும் திராவிட மொழிகள் என்று கூறப்படுவனவற்றைத் தமிழ்க் குடும்பம் என்று பெயரிட்டுத் தனிக் குடும்பமாகக் கருதுவதே ஏற்புடையதாகும். இந்தோஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் எட்டுக் கிளைகள் உள்ளன; இன்றும் உயிருடன் வாழ்கின்றன. 1.செருமன்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 3
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 2 தொடர்ச்சி) 1. மொழியின் சிறப்பு தொடர்ச்சி ஆங்கிலேயர்களின் முன்னோர்களான ஆங்கில சாக்சானியர்கள் உரூனிக்கு (Runic) என்று அழைக்கப்பட்ட ஒரு எழுத்து முறையைக் கொண்டிருந்தனர். இவ்வெழுத்துகளுக்கு மந்திர ஆற்றல் உண்டு என்று கருதித் தம் போர்க் கருவிமீதும் பிற கருவிகள் மீதும் இவ்வெழுத்துகளைப் பொறித்து வந்தனர். சிகாந்தினேவியர்களும் (Scandinavians) இவ்வெழுத்து முறையையே கொண்டிருந்தனர். ஆங்கில சாக்குசானியர்களும் சிகாந்தினேவியர்களும் கிருத்துவ சமயத்தைத் தழுவிய ஞான்று உரூனிக்கு முறையைக் கைவிட்டு உரோமானிய முறையைக் கொண்டனர். தமிழர்கள் எழுத்துமுறையை என்று அமைத்துக் கொண்டனர்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 2
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 1 தொடர்ச்சி) 1. மொழியின் சிறப்பு தொடர்ச்சி “அம்மா” என்று, மக்களுடன் நெருங்கிப் பழகும் விலங்குகளாம் பசுவும் எருமையும் ஆடும் கூப்பிடக் காண்கின்றோம். தமிழில்தான் அம்மா எனும் சொல் முழு உருவுடன் ஒலிக்கப்படுகின்றது. ஆதலின் தமிழே இயற்கையை ஒட்டி எழுந்த உலக முதன்மொழியென்று கூறுதல் சாலும். கடலிடையிட்டும் காடிடையிட்டும் மலையிடையிட்டும் வாழ நேர்ந்த காரணத்தால் ஒரு கூட்டத்தினர்க்கும் இன்னொரு கூட்டத்தினர்க்கும் தொடர்பின்றி அவரவர் போக்கில் கருத்தை அறிவிக்கும் மொழியாம் கருவியை உருவாக்கிக் கொண்டனர் மக்கள். பேச்சுமொழியை…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ 1
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல், ஆசிரியர் முன்னுரை) இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 1 1. மொழியின் சிறப்பு மக்களினத்தைப் பிற உயிர்களினும் உயர்ந்ததாகச் செய்வனவற்றுள் மொழியே தலைசிறந்ததாகும். மக்களினம் மொழியால் உயருகின்றது. மொழியின்றேல் மக்கள் வாழ்வு மாக்கள் வாழ்வேயாகும். ஆனால், மக்களினம் மொழியின்றி வாழ்ந்த காலமும் உண்டு. மொழியின் துணையின்றித் தமக்குத் தாமே செய்து கொள்ளக்கூடிய செயல்கள் பல உள. பிறர் கூட்டுறவுடன் செய்து கொள்ளக்கூடிய செயல்களும் சில உள. நாம் ஆற்ற வேண்டிய செயலில் சிக்கல் சிறிது இருப்பினும் அதனை நீக்கிக்கொள்ளப் பிறர்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல், ஆசிரியர் முன்னுரை
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 2/2 தொடர்ச்சி) பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் ஆசிரியர் முன்னுரை உலகில் வழங்கும் மொழிகட்கெல்லாம் முற்பட்ட தொன்மை யுடையது நம் செந்தமிழ். ஆகவே அதனைப் பழந்தமிழ் என்று அழைத்துள்ளோம். இன்னும் பல அடைமொழிகளும் தமிழுக்கு உள. அடைமொழிகளைச் சேர்த்தே தமிழை அழைப்பது புலவர்களின் பெருவழக்காகும். பைந்தமிழ், நற்றமிழ், ஒண் தமிழ், வண் தமிழ், தண் தமிழ், இன்றமிழ் என்பனவற்றை நோக்குக. அதன் பண்பும் பயனும் கருதியே இவ்வாறு அழைக்கப்பட்டு வருகின்றது. மொழியே நம் விழி;…
இலக்குவனார் பரப்பிய உள்ளேன் ஐயா. . .! – கே.பி.அம்பிகாபதி, தினமணி கதிர்
பள்ளிகள், கல்லூரிகளில் “எஸ் சார்’ என்று மாணவர்கள் வருகைப் பதிவைத் தெரிவித்த நிலையை மாற்றிய புகழுக்குச் சொந்தக்காரர் சி.இலக்குவனார். இவர் தமிழாசிரியர், பேராசிரியர், தமிழ் ஆய்வாளர், மொழிப் போர் தியாகி என்று பல்வேறு பன்முகங்களைக் கொண்டவர். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள வாய்மேடு கிராமத்தில் 1909-ஆம் ஆண்டு நவ. 17-இல் பிறந்த இவர், 1973-ஆம் ஆண்டு செப். 3-இல் மறைவுற்றார். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஆசிரியர். கவிஞர் இன்குலாப், முனைவர் கே. காளிமுத்து, நா. காமராசன், பா. செயப்பிரகாசம், முனைவர் கி. வேங்கட சுப்பிரமணியன்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 2/2
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 1/2 தொடர்ச்சி) பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் பழந்தமிழ் நூல் பதிப்புரை 2/2 பழந்தமிழ் நிலை என்னும் தலைப்பில் பழந்தமிழ்ச் சொற்களைப்பற்றி விளக்குவதுடன் தற்போது வழக்கு வீழ்ந்துள்ள பழந்தமிழ்ச் சொற்கள் சிலவற்றை அளித்து இவற்றை வழக்கில் கொணர்ந்து தமிழை வளப்படுத்த வேண்டும் என்கிறார். அடுத்த தலைப்பில் பழந்தமிழின் எழுத்துச் சான்றுகளை இந்தியக் கண்டத்தின் பிற மொழி இலக்கியக் காலங்களுடன் ஒப்பிட்டு விளக்கித் தமிழும் இந்திய அரசின் முதன்மைமொழியாக, அலுவல் மொழியாகத், தேசிய மொழியாக ஆக்கப்படல் வேண்டும் என்கிறார். பழந்தமிழ்ச் சொல்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 1/2
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் பழந்தமிழ் நூல் பதிப்புரை 1/2 ஆரா அருந்தமிழ், இசைமலி தமிழ், இன்புறுந் தமிழ், இன்றமிழ், ஈரத்தமிழ், உரையார் தமிழ், உரையுறை தமிழ், ஏரினார் தமிழ், ஏழிசை இன்றமிழ், ஒண்டமிழ், ஒண்தீந் தமிழ், ஒளிர்பூந்தமிழ், கலைமலி தமிழ், கலைவளர் தமிழ், குலமார் தமிழ், குலமுத்தமிழ், குற்றமில் செந்தமிழ், குன்றாத் தமிழ், கொழுந்தமிழ், சங்கத் தமிழ், சங்க முத்தமிழ், சங்கமலி செந்தமிழ், சந்த நிறை தண்டமிழ், சந்தமார் தமிழ், சந்தமார்ந்தழகிய தண்டமிழ், சந்தமாலைத் தமிழ், சந்தமின்றமிழ், சந்துலாந் தமிழ், சீர்மன்னு செந்தமிழ், சீர்மிகுந்த…
மாதிரிப் பள்ளிகள் தமிழ்வழிப் பள்ளிகளாக அமையட்டும்!,இலக்குவனார் திருவள்ளுவன்
சிறப்புக் கட்டுரை: மாதிரிப் பள்ளிகள் தமிழ்வழிப் பள்ளிகளாக அமையட்டும்! மின்னம்பலம் மாதிரிப் பள்ளிகள் அமைக்க இருப்பது குறித்து அண்மையில் தமிழக முதல்வர் மு.க.தாலின் புதுதில்லியில் பேசியுள்ளார். புது தில்லி அரசின் மாதிரிப் பள்ளிகளையும் தமிழக முதல்வர் பார்வையிட்டுள்ளார். மத்திய அரசின் பள்ளிகள்போலும் நவோதயா பள்ளிகள் போலும் மாவட்டந்தோறும் சிறப்பான முன்முறைப்பள்ளிகளை நன்முறையில் அமைக்க வேண்டும் என நாம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம். எனவே, முதல்வரின் இப்பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது. “தமிழ்நாட்டுக் கல்வியகங்களில் இப்போதைய முறையிலான அயல்மொழிக்கல்வி முறை நிறுத்தப்பட வேண்டும். 6 ஆம் வகுப்பிலிருந்து ஆங்கிலம்…
