இலக்கியம் கூறும் தமிழர் இல்லறம் (சங்கக் காலம்) – சி.இலக்குவனார்

(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  14–  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  15 7. இல்லறம்   ‘இல்லறம்’ என்பது வீட்டிலிருந்து வாழும் அறநெறி என்னும் பொருளதாகும்.  இல்லற வாழ்வே மக்களை மாக்களினின்றும் வேறு பிரித்து உயர்த்துவதாகும்.  மக்களும் மாக்கள்போல் பசித்தபோது கிடைத்தனவற்றை உண்டு, உறக்கம் வந்தபோது உறங்கி, அவ்வப்போது பொருந்தியோருடன் விரும்பியஞான்று மணந்து, வேண்டாதஞான்று தணந்து நாளைக் கழித்த காலம் உண்டு.  மரங்களிலும் மலைப்புழைகளிலும் விலங்குகளோடு விலங்குகளாய் வாழ்ந்த காலம் அது.  நாளாக நாளாக அறிவு…

இலக்கியம் கூறும் தமிழர் கல்வி (சங்கக் காலம்) – சி.இலக்குவனார்

 (இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  13 –  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  14 6. கல்வி பழந்தமிழ் நாட்டில் கல்வியின் சிறப்பை யாவரும் உணர்ந்திருந்தனர்.  கல்வியற்ற மக்களை விலங்குகளோ டொப்பவே கருதினர் என்பது, “விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்  கற்றாரோடு ஏனை யவர் ”        ( குறள்-410) என்னும் வள்ளுவர் வாய்மொழியால் அறியலாகும்.  அரசரும் இவ் வுண்மை தெளிந்து தம் கடனாற்றினார் என்பது பின்வரும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூற்றால் தெளியலாகும். “ உற்றுழி உதவியும்…

இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 13 – சி.இலக்குவனார்

 (இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  12–  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  13 5.அரசு (தொடர்ச்சி) அரசாள்வோன் மகன் அரசனாக அமரும் வழிமுறைக் கொள்கை பிற்காலத்தே நிலைத்துவிட்ட போதிலும் பண்டைத் தமிழகத்தில் அரசமரபு என ஒரு மரபு இருந்திலது. அரசாள்வோர் அரசர் எனப்பட்டனரே யன்றி அரசாளும் மரபிற் பிறந்தோர்க்குத்தான் அரசு உரியது எனக் கருதினாரிலர். வடநாட்டில் இராசனுக்குரியது இராச்சியம் எனக் கருதப்பட்டதேயன்றி ‘இராச்சியம்’ புரிவோன் ‘இராசன்’ என்று கொள்ளப்பட்டிலது.  அங்கு அரசாளுவதற் குரிய மரபு எனச் சத்திரியர்…