அழுகிப்போன இலங்கைக்குப் புனுகுபூசும் இராம்! – புகழேந்தி தங்கராசு
அழுகிப்போன இலங்கைக்குப் புனுகுபூசும் இராம்!/ ‘இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பன்னாட்டுப் பங்களிப்புடன் கூடிய நடுநிலையான உசாவல் நடத்தப்பட வேண்டும்’ – என்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசின் இசைவுடனேயே, ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்றுவரை, அப்படி ஓர் உசாவல் நடக்கக்கூடும் என்பதற்கான அறிகுறி கூட இல்லை. சிங்களப் படையினரின் கொலைவெறியும் காமவெறியும் தொடர்ந்து அம்பலமாகிவந்த நிலையில், பன்னாட்டு அளவில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஏற்பட்ட நெருக்கடியை நீர்த்துப்போக வைப்பதற்காகவே, அந்தத் தீர்மானத்தைத்…
காசி ஆனந்தன் எழுதிய ‘தம்பி செயத்துக்கு…. ( கடிதம் – 2 )’ நூல் வெளியீடு
உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய ‘தம்பி செயத்துக்கு…. ( கடிதம் – 2 )’ நூல் வெளியீடு மார்கழி 20, 2047 புதன்கிழமை 04/01/2017 மாலை 5 மணி சந்திரசேகர் திருமண மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை தலைமை : பழ.நெடுமாறன் ( தலைவர்- தமிழர் தேசிய முன்னணி ) நூல் வெளியீடு : வைகோ ( பொதுச்செயலாளர் – ம.தி.மு.க) நூல் பெறுபவர் : ம.நடராசன் ( ஆசிரியர் – புதிய பார்வை ) நிகழ்வு நெறியாளர்: இலக்கியர் செயபாசுகரன்…
பாரதி பெண்கள் சிறுவர் இல்லச் சிறார்களுக்குக் கற்றல் துணைக்கருவிகள்
பாரதி பெண்கள் சிறுவர் இல்லச் சிறார்களுக்கு உரூ. 20, 000 பெறுமதியான கற்றல் துணைக்கருவிகள் திருநேல்வேலி சேர்ந்த வில்வராசன் சுதாகரனின் முதலாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினரால் கார்த்திகை 24, 2047 / 09.12.2016 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள சிறார்களுக்கு உரூ. 20,000 பெறுமதியான கற்றல் துணைக்கருவிகள் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன. இல்லச் சிறார்களின் கல்வியில் ஆர்வம் கொண்டு கற்றல் துணைக்கருவிகள் அன்பளிப்பாக வழங்கிய வி.சுதாகரனின் குடும்பத்தினருக்கு நன்றிகளைக் கூறிக்கொள்ளும் தருணம் அமரர் சுதாகரனின் …
பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தினருக்குப் புதுத்துணி வழங்கல்
பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 108 சிறார்களுக்குப் புத்தாடைகள் தைப்பதற்காகத் துணிகள் வழங்கல் புலம்பெயர் உறவான இலண்டன் நாட்டை சேர்ந்த பரஞ்சோதி சிறிக்காந்து தனது பிறந்த நாளை முன்னிட்டு முள்ளியவளையில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 108 சிறார்களுக்குப் புத்தாடைகள் தைப்பதற்காகப் துணிகள், காவிக்கண்டு(சொக்லேட்-Kandos) என்பவற்றை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக கார்த்திகை 24, 2047 / 09.12.2016 அன்று வழங்கி வைத்துள்ளார். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
நினைவுகூர் நாள் 2016
நினைவுகூர் நாள் 2016 ஊடகப்பணியாளர்கள் அடக்குமுறைக்குள்ளும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இனத்திற்காகவும் மொழிக்காகவும் தம் ஊடகப் பணிக்காகவும் இன உணர்வோடும் ஒப்படைப்புஉணர்வோடும் செயற்பட்டு உண்மையை வெளிப்படுத்தினர்; இதனால் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழ் ஊடகப்பணியாளர்களை நினைவுகொள்ளும் வகையில் தற்போதும் பல அழுத்தங்களுக்கு மத்தியிலும் மக்களுக்குச் சரியான தகவல்கள் சென்றடைய வேண்டும் என்ற வேணவாவுடன், துணிவோடும் ஒப்படைப்புஉணர்வோடும், தாயகத்திலிருந்து ஊடகப்பணியாற்றிவரும் ஆறு ஊடகப்பணியாளர்களுக்கு அவர்களை மாண்பேற்றும் வகையில் விருதுகள் வழங்கும் நிகழ்வு பிரித்தானியாவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. பன்னாட்டுத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் பர்னட்டு ஓக்கு பகுதியில்(St.Alphage…
இந்து இளைஞர் சங்கம் கம்பளி ஆடைகள் நன்கொடை
இந்து இளைஞர் சங்கம் கம்பளி ஆடைகள் நன்கொடை குளிர் காலத்தை முன்னிட்டு இனிய வாழ்வு இல்லச் சிறார்களுக்குக் கம்பளி ஆடைகள் தந்துதவுமாறு அதன் பொறுப்பாளர்கள் வேண்டினர். வேண்டுகோளுக்கு அமைவாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் உரூ.38300 பெறுமதியான 50 கம்பளி ஆடைகள் கார்த்திகை 18, 2047 / 3.12.2016 சனிக்கிழமை இனிய வாழ்வு இல்லச் சிறார்களிடம் கையளிக்கப்பட்டன. [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] athangav@sympatico.ca
பிரான்சு பாராளுமன்ற ஆய்வுக்குழுவுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கச் சார்பாளர்கள் சந்திப்பு
தமிழர்களுக்கான பிரான்சு பாராளுமன்ற ஆய்வுக்குழுவினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாளர்கள் சந்தித்தனர்! பிரான்சு பாராளுமன்ற உறுப்பினர்களது தமிழர்களுக்கான ஆய்வுக்குழுவினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாளர்கள் குழு சந்தித்துள்ளது. பிரான்சு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற பல்வேறு கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இந்த ஆய்வுக்குழுவின் தலைவி மரி சியார்சு புவே அவர்களுடன் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது. பிரான்சு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்த இச்சந்திப்பில் ஈழத்தமிழர்களின் நீதிக்கும் உரிமைக்குமான போhராட்டத்தின் சமகால நிலைவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழ்மக்களுடைய இனச்சிக்கல் தொடர்பில் நீண்ட காலமாகத், தான் கொண்டுள்ள…
மாவீரர் நாள், வவுனியா : ஒளிப்படங்கள்
தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ இல், விழி ஊறி நதியாகிய வவுனியா உறவுகள்! [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்]
ஈழ இளையோரே நெறி தவறாதீர்!
ஈழ இளையோரே நெறி தவறாதீர்! 2009 மே காலப்பகுதி வரை தமிழ் மக்களின் வாழ்விலும் வளத்திலும் கோலோச்சிய தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம், இலங்கைக்குள் செயல்பாட்டு தளத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின்னரான சூழலில், தமிழ்ப் பண்பாட்டுக் குமுகம் ‘ தன்னொழுக்கம் – தற்கட்டுப்பாட்டை’ இழந்து, தரம் தாழ்ந்துவரும் மோசமான நிலைமைகள் மிகுந்த கவலையையும் – பயத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. ‘2009 மே’க்குப்பின்னர் கடந்த ஏழு வருடங்களாகத் தாராளமாகப் புழக்கத்தில் விடப்பட்டுள்ள போதைப்பொருள்கள் – அருவருக்கத்தக்க(ஆபாசக்) காணுரைகள், மடைதிறந்து விடப்பட்டுள்ள கொலை, கொள்ளை, வழிப்பறி, குடும்ப வன்முறைகள்,…
தமிழ்த்தேசியத் தலைவர் 62 ஆவது பிறந்தநாள் விழா – நாம் தமிழர் கட்சி
தமிழ்த்தேசியத் தலைவர் 62 ஆவது பிறந்தநாள் விழா – நாம் தமிழர் கட்சி தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாளையொட்டி கார்த்திகை 11, 2047 / 26-11-2016 சனிக்கிழமை, மாலை 5 மணியளவில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமைஅலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்சீமான் தலைமையில் தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் முதன்மைப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர். முன்னதாக அனைவருக்கும் இனிப்பும் பொங்கலும் வழங்கப்பட்டன, இவ்விழாவில், குழந்தைகளுக்கு அழகு தமிழில் பெயர் சூட்டுவதற்காக ஆட்சிமொழிப்பாசறைப் புலவர் மறத்தமிழ்வேந்தன் எழுதிய 62000 தமிழ்ப் பெயர்கள் கொண்ட ‘அகரமுதலி’ என்ற புத்தகத்தை சீமான் வெளியிட்டார்; ‘தமிழன்’ தொலைக்காட்சி…
உலகத் தமிழர் பேரவை சார்பில் மாவீரர்களுக்கு வீர வணக்கம்
உலகத் தமிழர் பேரவை சார்பில் மாவீரர்களுக்கு வீர வணக்கம் உலகத் தமிழர் பேரவை சார்பில் தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது! http://worldtamilforum.com/forum/forum_news/maaveerar_naal_27112016/ உலகம் முழுக்க உள்ள தமிழர்கள், தங்கள் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகம் செய்தோரை நினைக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளை கடைப்பிடித்து வருகின்றனர். அவ்வகையில் (கார்த்திகை 12, 2047/27.11016 காலை 11 மணியளவில்,) சென்னையில் அண்ணா சாலையில் உள்ள உலகத் தமிழர் பேரவையின் அலுவலகத்தில் தமிழறிஞர் அரு. கோபாலன் தலைமையில் உறுதி மொழியும், உரையும் நிகழ்த்தப்பட்டன. ஈகை…
இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மாவீரர் வார நிகழ்வு, தி.பி.2047 / கி.பி.2046
இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மாவீரர் வார நிகழ்வு தமிழ் இளையோர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவீரர் வார நிகழ்வுகள் பல நாட்டின் பல்கலைக்கழகங்களில் நடந்தேறிவருகின்றன. அதேபோல இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில்(UCL) புதன்கிழமை மாலை தாயக மண்மீட்புப் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரித்தானிய இளையோர் அமைப்பும் இலண்டன் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து முன்னெடுத்தனர். இந்த நிகழ்வில் ‘ஒருதாள்’ (oru paper.com கோபி, உயிர் பிழைத்தோர் கதைகள் பிரம்மி செகன் , சத்தியசீலன், தமிழ்வாணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மாணவர்கள் எப்படி தொடக்கக்காலத்தில் ஈழப்போரினில்…
