தமிழ்ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் நீடு வாழ்க!

நலமும் வளமும் நிறைந்துஉரிமை ஈழத்தை உயர்த்திநூறாண்டு கடந்தும் வாழியவே! தமிழ்ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் பொன்மொழிகள் ஐந்துநாம் உணர்ந்து பின்பற்ற வெளியிடப்படுகிறது: 1. பாதையைத் தேடாதே! அதை உருவாக்கு! 2. நான் பேச்சுக்குத் தருவதுகுறைந்தளவு முக்கியத்துவமே.செயலால் வளர்ந்த பின்புதான்நாம் பேசத் தொடங்க வேண்டும்! 3. ஒருவர் சத்தியத்திற்காக இறக்க வேண்டும்என்பதில் உறுதியாக இருந்தால்,ஒரு சாதாரண மனிதனால் கூடவரலாற்றை உருவாக்க முடியும். 4. ஓடாத மானும், போராடாத இனமும் மீண்டதாகச் சரித்திரம் இல்லை. 5. ஓர் உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன்.ஆனால்,…

ஈழத்துப் புதின இலக்கியம் – மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 8   அத்தியாயம்  4. புதினம்    பத்தொம்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையிலும் இந்தியாவிலும் நிலவுடைமைச் சமூக அமைப்பில் ஏற்ப்பட்ட சீர்குலைவும், முதலாளித்துவ சமூக அமைப்பின் தோற்றம், பிரித்தானியர் அறிமுகப்படுத்திய ஆங்கிலக் கல்வி, மேலைநாட்டு இலக்கியப் பரிச்சயம் முதலியவையும் தமிழ் இலக்கியப் போக்கில் பாரிய மாற்றங்கள் ஏற்படக் காரணிகளாயின. புதினம்(நாவல்), சிறுகதை முதலிய நவீன இலக்கிய வடிவங்களின் தோற்றம் இவற்றுளொன்றாகும். பத்தொன்பதால் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோற்றம் பெற்ற புதின இலக்கியம் இன்று பல்வேறு வளர்ச்சிப் போக்குகளையும்…

ஈழத்துக் கவிதை முயற்சிகள், இதழ்கள், நூல்கள் -சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 7   அத்தியாயம்  3. கவிதை தொடர்ச்சி   2 இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை பற்றிப் பேசுகையில் மொழிபெயர்ப்பு முயற்சிகளைத் தனியாகக் குறிப்பிடுவது பொருத்தமாகும். பல்வேறு மொழிகளில் இருந்து ஏராளமான கவிதைகள் இக்காலப் பகுதியில் இலங்கைக் கவிஞர்களால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. கலைநோக்கில் இருந்து சமூகநோக்குவரை ஈழத்துத் தமிழ்க்கவிதை பரிணமித்ததை மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் நாம் காணலாம். 1940 ஆம் 50 ஆம் ஆண்டுகளில் குறிப்பிட்ட சமூக நோக்குபற்றிய பிரக்ஞையின்றி இலக்கியச் சுவையின் அடிப்படையில் பிறமொழிக் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டன….

இலங்கைத் தமிழ்க் கவிதையில் தோன்றிய புதிய அலை -சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 6 அத்தியாயம்  3. கவிதை தொடர்ச்சி 1960 ஆம் ஆண்டுகள் இலங்கைத் தமிழ்க் கவிதையைப் பொறுத்தவரை பிறிதொரு வகையில் முதன்மையான காலப் பிரிவாகும், சமூக விழிப்புணர்வும் முற்போக்குச் சிந்தனையும் தமிழ்க்கவிதையின் தலைமைப் போக்காக மாறிய காலப்பிரிவும் இதுவே. 50 ஆம் ஆண்டுகளில் குறிப்பாக 1956 ஆம் ஆண்டின் அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து புதினம், சிறுகதை, திறனாய்வுத்துறைகளில் முற்போக்குச் சிந்தனை முதன்மை இடம் பெறத் தொடங்கியது. ஆனால் கவிதையைப் பொறுத்தவரை 60 ஆம் ஆண்டுகள், அதிலும் குறிப்பாக…

இருபதாம் நூற்றாண்டு இலங்கைத் தமிழ்க்கவிதை – சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 5   அத்தியாயம்  3. கவிதை இருபதாம் நூற்றாண்டு இலங்கைத் தமிழ்க்கவிதை என்று பேசும்போது நவீனத் தமிழ்க் கவிதையையே நாம் முதன்மையாகக் கருதுகின்றோம். ‘நவீன தமிழ்க்கவிதை அல்லது ‘தற்காலத் தமிழ்க்கவிதை’ என்ற ஒரு தொடரை இப்போதெல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்துகின்றோம். பழைய, பண்டித மரபு வழிப்பட்ட நிலப்பிரபுத்துவ வாழ்க்கை அம்சங்களை உள்ளடக்கமாகக் கொண்ட பிரபந்த இலக்கிய வகைகளிலிருந்து மாறுபட்டு,நிகழ்கால வாழ்க்கை நிலைமைகளையும், அதன் அடிப்பிறந்த வாழ்க்கை நோக்குகளையும் கருத்தோட்டங்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட கவிதைகளையே நவீனக் கவிதை…

ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கெனத் தனிப்பட்ட வரலாறு உண்டு

(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 4சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான் (4) ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கெனத் தனிப்பட்ட வரலாறு உண்டென்பதும் அது தனியே ஆராயப்படவேண்டியதென்பதும் இந்நூற்றாண்டின் பிற்பாதியிலேயே அழுத்தம் பெற்றது. தமிழ் இலக்கியம் தமிழ் நாட்டு இலக்கியமாகவே நோக்கப்பட்டு வந்த நிலை மாறி தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஈழத்தின் பங்கும் வற்புறுத்தப்பட்டது இதன் பின்னரேயாகும். எனினும் ஈழத்தவர், ஈழத்து இலக்கியம் என்ற பற்றுணர்வு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே ஆரம்பித்துவிட்டது எனலாம். ஈழத்துத் தமிழரின் சமய பண்பாட்டுத்…

அரசியல் புதிய நிலைமைகள் தாக்கம் இலக்கியத்திலும் எதிரொலித்தது

(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 4சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான் அத்தியாயம் 3 ஈழத்துத் தமிழிலக்கியத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு தனித்து ஆராயப்பெறும் தகுதிகள் கொண்டது. வரலாற்றைப் பொறுத்தவரையிலும் பல முதன்மையான நிகழ்ச்சிகள் இந்நூற்றாண்டில் நடைபெற்றன. 1802ஆம் ஆண்டு இலங்கை பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்றநாடானமை, 1831ஆம் ஆண்டு இலங்கைக்கு முதலாவது அரசியற் சீர்திருத்தம் வழங்கப்பட்டமை, சுதேசிகள் இலங்கையரசியலிற் பங்குபற்றும் நிலையேற்பட்டமை, ஆங்கிலக் கல்வி நாடு முழுவதும் பரவலாக்கப்பட்டமை, பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டமை, நாட்டின் பல்வேறுபகுதிகளையும் இணைக்கும் வண்ணம்…

ஈழ இலக்கியத்தில் ஐரோப்பியர் ஆதிக்கம்

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 3சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான் (முன்னிதழ்த் தொடர்ச்சி) அத்தியாயம் 2 யாழ்ப்பாண வரலாற்றில் ஐரோப்பிய இனத்தவரின் தலையீடு ஏற்படத்தொடங்கியதுடன் தமிழிலக்கியத்திலும் புதிய பண்பு ஒன்று தலைதூக்கியது. கிறித்த சமயப் பாதிப்பு வௌித்தெரியும் இலக்கியங்கள் எழத்தொடங்கியமையே இப்புதிய பண்பாகும். இதனால் இத்தகைய பாதிப்பு வௌித்தெரியும் 17ஆம் 18ஆம் நூற்றாண்டுகளைத் தனித்த ஒரு பிரிவாகக் கொண்டு அக்கால இலக்கியங்களை ஆராய்தல் பொருத்தமுடைத்து. இவ்விரு நூற்றாண்டுகளிலும் போத்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரின் ஆதிக்கம் இலங்கையின் மத்திய மலைநாட்டைத் தவிர்ந்த…

ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு ஓர் அறிமுகம் : சி. மௌனகுரு, மௌ.சித்திரலேகா, எம். ஏ. நுஃமான்

(முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 2. ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு: ஓர் அறிமுகம்   ஈழத்துத் தமிழிலக்கியப்பரப்பு ஐந்துநூற்றாண்டு காலத் தொடர்ச்சியான பாரம்பரியத்தையுடையது. இவ்விலக்கியப் பாரம்பரியத்தினையும் அதனூடு காணப்படும் பல்வேறு போக்குகளையும் வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் நோக்குதல் அவைபற்றிய தௌிந்த விளக்கத்துக்கு உதவும். இக்காலத்தில் இலங்கையில் குறிப்பாகத் தமிழ்ப் பகுதிகளில் நிலவிய சமூக சமய  பண்பாட்டு நிலைமைகள், அவற்றை ஊக்குவித்த அரசியல் பொருளாதாரக் காரணிகள் ஆகியவற்றின் விளக்கமும் இவ்விலக்கிய வரலாற்று விளக்கத்துக்கு உதவி புரிவதாகும். எனினும் 17-ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் தமிழ்ப்பகுதிகளின்…

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் – சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 1. முன்னுரை இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின், இன்று வரையுள்ள பொதுவான வளர்ச்சிப் போக்குகளைத் திரட்டிக் கூறுவதே இந்நூலின் நோக்கமாகும். பல்கலைக் கழகத் தேர்வுகளுக்குத் தமிழை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும் ஈழத்து இலக்கியத்தில் அக்கறையுள்ள பொது வாசகர்களுக்கும், ஈழத்து நவீனத் தமிழ் இலக்கியம் பற்றி அறியும் ஆர்வம் உடைய ஈழத்தவர் அல்லாத தமிழ் வாசகர்களுக்கும் பயன்படத்தக்க வகையில் இந்நூல் அமைந்துள்ளது. ‘ஈழத்தில் தமிழ் இலக்கியம் ஆரோக்கியமான திசையில் வளர்ச்சியடைந்துள்ளது‘ என்ற ஒரு பொதுவான கருத்து இன்று…

புலமைப்பித்தன் மீளாத் துயில் கொண்டார் – இலக்குவனார் திருவள்ளுவன்

புலமைப்பித்தன் மீளாத் துயில் கொண்டார் தமிழ்த்தேசிய உணர்வாளரும் தமிழீழச் செயற்பாட்டாளரும் திரைப்படப்பாடலாசிரியருமான புலவர் புலமைப்பித்தன் (புரட்டாசி 20, 1966 /06.10.1935 – ஆவணி 23, 2052 / 08.09.2021)இன்று மீளாத்துயில் கொண்டார். கோவை மாவட்டம், பள்ளப்பாளையத்தில் உயர்மிகு கருப்பண்ணன் – தெய்வானையம்மாள் இணையருக்குப் பிறந்தவர்  இராமசாமி. ஒருமுறை இந்தி ஆசிரியர் ஒருவர், இவரைப் பைத்தியக்காரன் என விளையாட்டாகக் கூற, “ஆம்.நான் பைத்தியக்காரன்தான். தமிழ்மீது பைத்தியம் கொண்டவன்” எனச்சொல்லித் தன் பெயரைப் புலமைப்பித்தன் என மாற்றிக்கொண்டவர். பள்ளி இறுதி வகுப்பு முடித்த பின்னர் கோவை, சூலூரில்…