ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1241- 1252 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1225 – 1240 இன் தொடர்ச்சி) 1241. பார்ப்பியல் neos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள்கள் இளமை, புதிய. Neossos என்பது இளம்பறவை எனப் பொருள். “மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே” என்னும் தொல்காப்பியப் பொருளதிகார நூற்பா(548) மூலம் தொல்காப்பியர் பறவை களின் இளமைப் பெயராகப் பார்ப்பு எனக் குறிப்பிடுகிறார். எனவே, பார்ப்பியல் எனலாம். Neossology 1242. பார்வல் வானிலையியல்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1225 – 1240 :  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1210 – 1224   இன் தொடர்ச்சி) 1225. பன்னாட்டுப் பொருளியல் International economics 1226. பாசக்கியூ இயல் ஐரோப்பாவிலுள்ள பீரெனே (Pyrenees) மலைத்தொடரின் மேற்குப் பகுதியில் உள்ள பாசக்கியூ(பாசுக்கு) நாட்டில் வாழும்  பாசக்கியூ மக்களால் பேசப்படும் மொழியே பாசக்கியூ மொழி அல்லது ஈசுகரா மொழி(Basque/Euskara) ஆகும். இம்மொழி பேசும் மக்களின் கலை, பண்பாடு முதலிய குறித்து ஆராயும் துறையே பாசக்கியூ இயல். Bascology 1227. பாசி உயிரிய நுட்பியல்            Algae biotechnology 1228. பாசியியல் Phycology/Algalogy/Sphagnology– கடற்பாசி இயல்,…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1210 – 1224 : இலக்குவனார் திருவள்ளுவன்

  (ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1190 – 1209 இன் தொடர்ச்சி) 1210. பறியியல் பறிதல் என்றால் ஒலியுடன் வெளிப்படுதல் எனப் பொருள். பின்வாய் வழியாக வெளியேறும் காற்று பறி எனப்படுகிறது. அதனை நாம் ககர உகரத்திலும் சகரஉகரத்திலும் சேர்த்துக் கூறுவது வழக்கம். இருப்பினும் இச்சொல்லைச் சொன்னாலே கெட்ட நாற்றமே நினைவிற்கு வருவதால், இச்சொல்லைப் பயன்படுத்தப் பலரும் தயங்குவர். எனவே, இது குறித்த ஆராய்வியலைப் பறியியல் எனலாம். Flatology 1211. பற் கட்டுப்பாட்டியல் Contrology 1212. பற்களியல் Odontology 1213. பற்சிதைவியல் Cariology…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1190 – 1209 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1172 – 1189   இன் தொடர்ச்சி) 1190. பருமப் பாய்வியல் Bulk rheology 1191. பரும வளர்ச்சி இயக்க இயல் Bulk growth kinetics 1192. பலியர் இயல் Victim – துன்புறுத்தப்பட்டவர், பலி,பலியாள், பலியுயிர், பாதிக்கப்பட்டவர், பாதிப்பிற்குள்ளானவர், பாதிப்புறுநர் எனப் பொருள்கள். Victimology–பாதிப்புறுநர் தொடர்பான குற்றவியல், பலியாகுனரியல், பலியாள் இயல் எனப்படுகின்றது. இவற்றுள் பலியாகுனரியல் என்பது பலியாகுநரியல் எனக் குறிக்கப் பெற வேண்டும். பலியாகுநர் என்பதன் சுருக்கமாகப் பலியர் எனப்பயன்படுத்திப் பலியரியல் Victimology எனத் தரப்பட்டுள்ளது. Victimology…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1172 – 1189 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1156 -1171 இன் தொடர்ச்சி) 1172. பயிரியல் Phytology 1173. பயிர் இயங்கியல் Crop Physiology 1174. பயிர் உளவியல் Psychobiology 1175. பயிர்  நோய்மி யியல் Phytovirology /  Plant virology 1176. பயிர் நோயியல்         Epiphytology/ Plant Pathology 1177. பயிர் மருந்தியல் Phytopharmacology 1178. பயிர் வடிவியல் Phytomorphology 1179. பயிர்க் கொப்புளஇயல் Cecidiology,Cecidology 1180. பயிர்த் தோற்றவியல் Phytophenology 1181. பயிர் நூற்புழுஇயல் Phytonematology 1182. பயிர்ப் பூச்சியியல் Pestology  1183. பரத்தமைத்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1156 -1171 இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1142-1155 இன் தொடர்ச்சி) 1156. பயன்நெறி மெய்யியல் Philosophy – மெய்யியல். Utilitarian – பயன்நோக்கிய, நலப்பயன்சார், நுகர்பயன்சார், பயண முதற் கொள்கையினர், பயனெறி முறைக் கோட் பாட்டாளர், பயன் முதற் கொள்கையர், பயன்நெறி முறையர், பயன்பாட்டு நோக்கு சார் எனப்படுகின்றது. இங்கே உயர்திணையில் குறிக்கப் பெறவில்லை. எனவே, அஃறிணையில் பயன்நெறி மெய்யியல் Utilitarian Philosophy எனலாம். Utilitarian Philosophy   1157. பயன்படு கணக்கியல் Applicable mathematics 1158. பயன்மை Applied – பயன்பாட்டு, பயன்படு, நடைமுறை,…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1142-1155 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1121 – 1141 இன் தொடர்ச்சி) 1142. பண்டைய மீனியல்  Paleoichthylogy 1143. பண்டைய வானிலையியல் Paleometeorology 1144. பண்டைய விலங்கியல் Palaeozoology/Paleozoology     1145. பண்டைய நோயியல் Paleopathology 1146. பண்பாட்டியல் Culturology 1147. பண்பாட்டு இயங்கியல் Cultural Dynamics 1148. பண்பாட்டு மானிடவியல் Cultural anthropology 1149. பண்பாட்டுக் குமுகவியல் Sociology of culture 1150. பண்பாட்டு வளைசலியல் Cultural ecology 1151. பண்பார் உயிரியல் Ctetology 1152. பதனம்   காண்க: Process Dynamics…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1121 – 1141 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1107-1120 இன் தொடர்ச்சி) 1121. பண்டைய தட்பியல் காண்க : தட்பியல்-Climatology Paleoclimatology 1122. பண்டைய மரவியல் Paleodendrology 1123. பண்டைய இனவியல் Paleethnology / Paleoethnology 1124. பண்டைய உயிரியல் Palaeontology 1125. பண்டைய உயிர்ப் படிமவியல் Phytopaleontology 1126. பண்டைய  நீர் வள இயல் Paleolimnology தொல் ஏரியியல், தொல் நீர்நிலையியல் என இருவகையாகக் குறிக்கப் படுகின்றது. ஏரி என்று குறிப்பதைவிடப் பொதுவாக நீர்நிலை என்பது பொருத்தமாக இருக்கும். Pale   என்பதைத் தொல் என்பதை விடப் பண்டைய…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1107-1120 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1081-1106 இன் தொடர்ச்சி) 1107. படிகவியல்  Crystallography / Crystallology / Crystallogy / Leptology(1)– படிக அமைப்பாய்வியல், படிக அமைப்பியல், படிக இயல், படிகவியல், படிகவுருவியல், பளிங்கியல், பளிங்குவரைபியல், படிக விளக்க ஆராய்ச்சித்துறை எனப் பலவாறாகக் கூறப் படுகின்றன. நாம் சுருக்கமாக உள்ள படிகவியல் – Crystallography / Crystallology /Crystallogy/ Leptology(1) என்பதையே பயன்படுத்துவோம். Crystallography, Crystallology / Leptology(1) )/ Promorphology 1108. படிமலர்ச்சி அறவியல் Evolutionary ethics 1109. படிமலர்ச்சி ஒட்பவியல் Evolutionary…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1081-1106 :  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1062 – 1080 இன் தொடர்ச்சி)   1081. நோய்மியற்ற விலங்கியல் Gnotobiology 1082.நோய்வகை யியல் nósos என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நோய். இங்கே நோய்வகைகைள ஆராய்வதைக் குறிக்கிறது. Nosology 1083 நோவா கதையியல் ஆபிரகாமிய சமயங்களின் (Abrahamic religions) நம்பிக்கையின்படி, நோவா (Noah) என்பவர் ஊழிவெள்ளம் வருவதற்கு முன் இருந்த பத்தாவதும் இறுதிப் பெருந் தந்தையரும் ஆவார். நோவா என்னும் பெயருக்கு எபிரேயத்தில் ‘ஆறுதல்’ என்பது பொருள். (விக்கிபீடியா) நோவாவின் அறுநூறாம் அகவையில், இவ்வுலகம் சீர்கெட்டிருந்ததால்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1062 – 1080:  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1044 – 1061  இன் தொடர்ச்சி) 1062. நேர்நிலை  ஒப்பமைவியல் Simplical homology 1063. நேர்ம இனமேம்பாட்டியல் Positive Eugenics 1064. நொதி நுட்பியல் Enzyme technology /  Fermentation technology 1065. நொதிப் பொறியியல் Enzyme Engineering 1066. நொதிவினையியல் Enzyme kinetics 1067. நொதி யியல் நொதித்தலியல், நொதிப்பியல், நொதிப்பியியல்; நொதியியல், நொதியச் சக்தியியல், நுரைக்கச்செய்தல் சாசுத்திரம், ஊக்கிப்புரதவியல் எனப் பலவாறாகக் கூறப்படுகின்றன. சுருக்கமான நொதியியல் – Zymology / Enzymology என்பது இங்கே ஏற்கப்பட்டுள்ளது….

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1044 – 1061 :  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1040 – 1043 இன் தொடர்ச்சி) 1044. நுண்ணுயிரி நுட்பியல்            Microbial technology 1045. நுண்ணூசி ஈர்ப்பு உயிர்மி யியல் Fine needle aspiration cytology 1046. இயலறிவு உளவியல்  folk  என்றால் நாட்டுப்புறம், நாட்டார், மக்கள், மக்களினம் எனப் பொருள்கள். இங்கே மக்களின் இயல்பான அறிவைக் குறிக்கிறது. எனவேதான் இவ்வியலின் மற்றொரு பெயர் Commonsense Psychology   என்பதாகும். பகுத்தறிவு உளவியல் என்று சிலர் குறிப்பிட்டாலும் பொதுவாக இயலறிவு உளவியல் என்றே குறிப்பது சிறப்பாகும்.   Folk psychology /…