புரட்சியில் பூத்த மலர் இலக்குவனார் – க.இந்திரசித்து
புரட்சியில் பூத்த மலர் – க.இந்திரசித்து பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ் மொழியின் எழுச்சிக்கும், ஏற்றத்திற்கும் போராடிய போர்ப்படை மறவர்களின் வரிசையில் முன்னணியில் நின்றவர். கார்ல்மார்க்சு, இலெனின், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோருடைய வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போதெல்லாம் ஏற்படும் உணர்ச்சியும், உந்துதலும், வேகமும், வீரமும், கிளர்ச்சியும், கிளர்ந்து எழுவதைப் போன்றே இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போதும் தோன்றுகின்றன. என்னடா! இப்படியும் ஒரு மனிதன் வாழ்ந்து மறைந்திருக்கிறாரே – அவரை நாம் மறந்திருக்கிறோமே’ என்னும் வியப்பும், வேதனையும் ஒருங்கே எழுகின்றன. காவிய தலைவனாகவே காட்சியளிக்கும்…
ஆரா: பருமாவில் பரிதாப நிலையில் தமிழ்- இலக்குவனார் திருவள்ளுவன் ஆதங்கம்: ‘தமிழக அரசியல்’
பர்மாவில் பரிதாப நிலையில் தமிழ் – பயணம் செய்த தமிழறிஞரின் ஆதங்கம் பருமாவில் தமிழ்க்கல்வி வளர்ச்சி மையமும் சந்திரசேகரரின் நந்தவனம் நிறுவனமும் இணைந்து கடந்த மாதம் இலக்கியப் பெருவிழாவை நடத்தின. அதில் சிறப்புரையாற்றச் சென்று சென்னை திரும்பியிருக்கிறார் தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவன். அவரிடம் பருமாவில் தமிழன், தமிழின் நிலை என்ன என்று கேட்டோம். நம்மிடம் பருமா பற்றி விரிவான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் இலக்குவனார் திருவள்ளுவன். பர்மா( பருமா) என்று அழைக்கப்பட்ட நாட்டின் இப்போதைய பெயர்…
பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 3/3 – கவிமாமணி வித்தியாசாகர்
(பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 2/3 தொடர்ச்சி) பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 3/3 – கவிமாமணி வித்தியாசாகர் செவ்வி கண்டவர் : இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன் ? உங்கள் படைப்புகளுக்காக உலக அளவில் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளீர்கள். அதுகுறித்த உங்கள் கருத்து? இலண்டன் தமிழ் வானொலி, ஆத்திரேலிய தமிழ் வானொலி, குளோபல் தமிழ்த் தொலைக்காட்சி மையம், இலங்கை தீபம் தொலைக் காட்சி போன்ற ஊடகத்தினர் எனது படைப்புகள் குறித்து அறிமுகம் தந்தும் விருதுகள்பற்றிப் பேசியும் நேர்க்காணல் கண்டும்…
மறக்க முடியுமா? – தமிழவேள் உமாமகேசுவரனார் : எழில்.இளங்கோவன்
மறக்க முடியுமா? கரந்தைத் தமிழவேள் உமாமகேசுவரனார் காலங்களில் முரண்பாடுகள், தமிழ்ச் சங்கங்கள் இருந்தனவா இல்லையா என்பதில் முரண்பாடுகள், அப்படியே இருந்தாலும் எத்தனைச் சங்கங்கள் அல்லது சங்கம் இருந்தது என்பதிலும் கருத்து மாறுபாடுகள் இருந்தன, -இருக்கின்றன அறிஞர்களிடையே ஆனாலும், முதல்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கங்களை வைத்துத் தமிழ் வளர்த்தார்கள் பாண்டியர்கள் என்பது வரலாறு. நான்காவது ‘தமிழ்ச்சங்கத்தை’ மதுரையில் நிறுவினார் பாண்டித்துரையார். உ.வே.சாமிநாதரின் தமிழ் ஆய்வும், தமிழின் முதல் கலைக்களஞ்சியமான ஆ.சிங்காரவேலு அவர்களின் ‘அபிதான சிந்தாமணி’ அச்சாகி வெளிவரவும் காரணமாக இருந்தது மதுரைத் தமிழ்ச்சங்கம். தமிழுலகின் இறுதித் தமிழ்ச்சங்கமாகவும், ஐந்தாவது தமிழ்ச்சங்கமாகவும் உருவானதுதான் ‘கரந்தைத் தமிழ்ச்சங்கம்‘. இச்சங்கம் உருவாகக் காரணமாக…
மறக்க முடியுமா? – கவிஞர் குயிலன் : எழில்.இளங்கோவன்
மறக்க முடியுமா? – கவிஞர் குயிலன் அறிஞர்களுள் பன்மொழிப் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். கவிஞர்களுள் அப்படி இருந்திருக்கிறார்களா? கவிஞர் குயிலனைத் தவிர, வேறுயாரும் பன்மொழிப் புலமைக் கவிஞர்களாக இருந்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமற்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற கவிஞர் குயிலன் படித்தது, ஆறாம் வகுப்பு மட்டுமே. இராமநாதபுரம் மாவட்டம் பூசேரி என்ற சிற்றூரில் குருமூர்த்தி (பிள்ளை)-வெயில் உவந்தம்மாள் இணையரின் மகனாகப் பிறந்த கு.இராமலிங்கம்தான் பின்னாளில் கவிஞர் குயிலனாக மாறுகிறார். 1939இல் பருமாவில் பணியாற்றிக் கொண்டு இருக்கும்…
பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 2/3 – கவிமாமணி வித்தியாசாகர்
(பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 1/3 தொடர்ச்சி) பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 2/3 – கவிமாமணி வித்தியாசாகர் செவ்வி கண்டவர் : இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன் ?. குவைத்தில் அமர்ந்துகொண்டு இந்தியச் சூழலில் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை எழுதுவது எப்படிச் சாத்தியமாகிறது? இரத்தம் குழையும் உடம்பிற்குள் பாய்வது எனது தாயகத்திலுள்ள உறவுகளின் வலியும் மகிழ்ச்சியும்தானே? உலகின் எம்மூலையில் இருந்தாலும் வாழ்வின் அருத்தத்தை ஊருக்குள்தானே வைத்திருக்கிறோம்? நான் வெற்றி கண்டால் பேசவும், துவண்டு விழுகையில் சொல்லினால் அணைத்துக்கொள்ளவும் எனது…
பெண்களே கண்கள்! – தி.வே. விசயலட்சுமி
பெண்களே கண்கள்! – தி.வே. விசயலட்சுமி அரசியல், நீதி, மருத்துவம், காவல், ஆசிரியர், விளையாட்டு என்று பல்வேறு துறைகளிலும், அறிவியல் நுட்பத்திலும் தம் தடம்பதித்து நாளுக்கு நாள் மகளிர் பெருமை வானளாவ ஓங்கி நிற்கிறது. ஆனால் பெண்ணினத்தை இழிவு செய்யும் மடமை முற்றிலும் அழிந்தபாடில்லை. இரண்டு பெண் குழந்தைகட்கு மேல் மூன்றாவது பெண்ணாகப் பிறந்து விட்டால் அதை நஞ்சூட்டிக் கொன்று விடும் நச்சுமனிதர்களை நாளும் ஊடகங்கள் இதழ்கள் வாயிலாக அறிந்து மனம்பதைக்கிறோம். தமிழக அரசு, தொட்டில் குழந்தைத் திட்டம் போன்ற பல சீரிய…
பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 1/3 – வித்தியாசாகர்
பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை – கவிமாமணி வித்தியாசாகர் செவ்வி கண்டவர் : இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன் 1/3 இணையத்திலும், இலக்கிய உலகிலும் பல்வேறு அன்பர்களைத் தன் சுவைஞர்களாகக் கொண்டு, தமிழ் மண்ணை விட்டுக் குவைத்தில் பணிசெய்யும் பொழுதும், தமிழிலக்கிய வானில் நட்சத்திரமாய் மின்னும் எழுத்தாளர், கவிஞர் திரு வித்யாசாகர் அவர்களுடன் இலக்கியவேல் ஆசிரியர் சந்தர் சுப்பிரமணியன் மேற்கொண்ட செவ்வி. ?. வணக்கம். குவைத்தில் இருந்து பணியாற்றும் நீங்கள், தமிழ்மொழியின் மீது அளவற்ற காதல் கொண்டுள்ளதற்கான பின்புலம் என்ன? …
சிங்கள, புத்தமயமாக்கலைக் கண்டித்து ‘எழுக தமிழ்’ போராட்டம்!
சிங்கள, புத்தமயமாக்கலைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் ‘எழுக தமிழ்’ போராட்டம்! தமிழர் பகுதிகளில் சிங்கள, புத்தமயமாக்கல் நடவடிக்கைகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, ‘எழுக தமிழ்’ என்ற பெயரில், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே காலை பேரணி தொடங்கியது. வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்கினேசுவரன் அவர்கள் பேரணிக்குத் தலைமை தாங்கினார். ‘தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியிருப்புகளை அமைப்பது, புத்தக் கோயில்கள் கட்டுவது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசு உடனடியாக…
‘எழுக தமிழ்’ முதல் வெற்றியை ஆணித்தரமாகப் பதித்திருக்கின்றது! – புருசோத்தமன் தங்கமயில்
‘எழுக தமிழ்’ முதல் வெற்றியை ஆணித்தரமாகப் பதித்திருக்கின்றது! ‘எழுக தமிழ்’ எதிர்பார்க்கப்பட்ட அளவினையும் மீறிய மக்கள் பங்களிப்போடு தன்னுடைய முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது. முதல் வெற்றி என்பதன் பொருள், ‘கடந்த ஏழு ஆண்டுகளில் பேரணி அல்லது போராட்டமொன்றுக்காக மிகையளவான தமிழ் மக்கள் ஓரிடத்தில் ஒன்றித்த முதலாவது சூழல் இதுவாகும்’ என்பது. ஆட்சி மாற்றமொன்றின் பின்னரான சிறிய மக்களாட்சி இடைவெளியைத் தமிழ்த் தேசிய அரசியல் தளம் ஆக்கவழியிலான பக்கங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்புகளின் போக்கிலும், மிகையான உணர்ச்சியூட்டல்கள்…
எழுந்து நிற்கிறது எழுக தமிழ்! – முருகவேல் சண்முகன்
எழுந்து நிற்கிறது எழுக தமிழ்! தமிழரின் தாகம் தணிவதில்லை. அடி மனத்தின் கோடியில் அது குடிகொண்டிருக்கிறது. தேவையேற்படும் சூழ்நிலைகளில் அது தீயாக எழும் என்பதற்குச் சான்றாகக் கடந்த புரட்டாசி 08, 2047 / 24.9.2016 அன்று நடைபெற்ற ‘எழுக தமிழ்’ப் பேரணி அமைந்திருந்தது. தற்காப்பு முறையில், உறங்குநிலையில் இருந்த தமிழர்களின் அறப் போராட்டக் குணத்தைத் தூண்டி விட்டிருக்கிறது இப்பேரணி. அதுவும், இப்பொழுதைய கால ஓட்டத்தை உள்வாங்கி, அதற்கேற்ற வகையில் தமிழர்களை ஆயத்தப்படுத்துவதற்கான தொடக்கக் கட்டமைப்பையும் இது ஏற்படுத்தியிருக்கிறது. தான் தொடங்கப்பட்ட…
‘எழுக தமிழ்!’ எழுச்சிப் பேரணியும் அரசியல் தீர்வுக்கான தேவையும்!
‘எழுக தமிழ்!’ எழுச்சிப் பேரணியும் அரசியல் தீர்வுக்கான தேவையும்! வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் விருப்பங்களை நிறைவேற்றக் கோரியும், தீவிரச் சிக்கல்களுக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தியும் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து ‘எழுக தமிழ்’ எனும் எழுச்சிப் பேரணியை யாழ்ப்பாணத்தில் நடத்தியுள்ளனர். ‘தமிழ் மக்கள் பேரவை’யின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்ட மக்கள், வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தின் பூரணத் தன்னாட்சியையும், தன்னுரிமையையும் ஏற்கும் நிகராட்சி (சம ஆட்சி) முறையான தீர்வு வேண்டுமென்றும், தமிழ்த்…
