ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1356 – 1366 :  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1341 – 1355 இன் தொடர்ச்சி) 1356. பேருருவியல்  மடங்களின் பிறழ்வாய் வியல், பிறழ்வியல், விந்தை உயிரிக் கதைகள், விந்தை உரு பிறப்பியல், மாற்றுருவியல், பேருரு அறிவியல், சீர்கேட்டியல், தாவரவிரூபவியல், பூதப்பிறவி யியல் எனப் பலவாறாகக் கூறப்படுகின்றன. இவற்றுள் விரூபவியல் என்பது தமிழல்ல. அச்சப்பேருரு / கோர உரு என்னும் பொருள் கொண்டது. விந்தை உயிரிக் கதைகள் என்பது அறிவியலல்ல. இந்த இயல் தொடர்பான கட்டுக்கதைகள். கோர உரு என்னும் பொருள் கொண்ட téras என்னும் கிரேக்கச்சொல்லில் இருந்து …

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1341 – 1355 :  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1330 – 1340 இன் தொடர்ச்சி) 1341. பெரும்பாய்வியல் Macrorheology 1342. பெரு வாழ்வியல் Macrobiotics 1343. பெருங்கழுத்திஇயல் Nessology 1344. பெருமூளையியல் Cerebrology 1345. பெரும்பரப்புப் புவியியல் Areal Geology 1346. பேச்சிழப்பியல்       aphasie என்னும் பிரெஞ்சுச் சொல்லின் பொருள் பேச்சற்ற. Aphasiology 1347. பேச்சுக்குறையியல் laleein என்னும் பண்டைய கிரேக்கச் சொல்லின் பொருள் பேச்சு. ஆதலின் பேச்சு நோயியல் என்கின்றனர். இத்துறை பேச்சுக் கோளாறுகளையும் குறை பாடுகளையும் ஆராயும் மருத்துவத்துறை. எனவே,  பேச்சுக்குறைஇயல்>பேச்சுக் குறையியல்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1330 – 1340 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1314 – 1329  இன் தொடர்ச்சி) 1330. புற்றுநோயியல்/ பிளவையியல் onco என்னும் புது இலத்தீன் சொல்லின் பொருள் கட்டி. Oncology/ Cancerology 1331. பூச்சி பொட்டு இயல் Acarology– சிறு பூச்சியியல், பூச்சி பொட்டு இயல், மென்னுண்ணியியல், பேன் உண்ணி இயல்  என நால்வகையாகச் சொல்லப்படுகின்றது. Acaro என்பதன் கிரேக்கச் சொல்லிற்கு உண்ணி எனப் பொருள். இருப்பினும் பூச்சி பொட்டு இயல் என்பதே மிகப் பொருத்தமாக இருக்கும். எனவே பூச்சி பொட்டு இயல் –  Acarology என…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1314 – 1329 :  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1301 – 1313  இன் தொடர்ச்சி) 1314. புவியக இயங்கியல் Geodynamics 1315. புவியியல் Geology 1316. புவிவள  நுட்பியல் Earth resources technology 1317. புள்ளிகணத் திணைஇயல் Point set topology 1318. புள்ளியிய உளவியல் Statistical Psychology 1319. புள்ளியிய வயணஇயல் Statistical Methodology 1320. புள்ளியியல் புள்ளி இயல், புள்ளி விவரங்கள் இயல், புள்ளித் தொகுப்பியல், புள்ளிவிவர வியல், புள்ளிவிவரம், புள்ளி விளக்கம், புள்ளிவிவர அறிவியல் எனப்படுகின்றது. தமிழில் புள்ளிவிவரம் / புள்ளி விளக்கம்,…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1301 – 1313 :  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1285 – 1300 இன் தொடர்ச்சி) 1301. புவி வளைசலியல் Geoecology 1302. புவி நுட்பியல் Geotechnology 1303. புவிப் பொறியியல் Geology Engineering 1304. புவி வடிவளவியல் Geodesy 1305. புவி வடிவியல் Geomorphology  என்பதற்குப் புவிப்புற இயல்,  புவிப் புறவியல், புவி வடிவியல், நிலக்கூறியல், நிலவடிவ அமைப்பியல், நில வடிவியல், திணையியல், நில வடிவத்  தோற்றவியல், புவியுருவ வியல், நில உருவாக்க இயல், புவிசார்வியல், புவியமைப்பியல், புவியியல், புவிப்புறவடிவியல், புவி உருவியல், புவிப்புறத் தோற்ற வியல்,…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1285 – 1300:இலக்குவனார் திருவள்ளுவன் 

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1270 – 1284 இன் தொடர்ச்சி) 1285. புத்தியற்பியல் New physics 1286. புத்தினத் தோற்றவியல் Neoendemics 1287. புயலியல் Cyclonology 1288. புயனிலை யியல் புயல்கணிப்பு வானியல் என்றும் சமநேர வானிலை ஆய்வியல், சமநேர வானிலையியல், தொகுப்பு வானிலையியல் என்றும் குறிப்பிடுகின்றனர்.  Synoptic என்றால் இலத்தீனிலும் கிரேக்கத்திலும்  ஒருங்கே பார்த்தல் எனப் பொருள். வானிலையை ஒருங்கே பார்த்துப் புயல் நிலையைக் கணிப்பதால் புயல்கணிப்பு வானியல் என்கின்றனர். புயல்கணிப்பியல் / புயல் வானிலையியல்  > புயல் + நிலையியல்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1270 – 1284: இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1253 – 1269 இன் தொடர்ச்சி) 1270. பிறழ்வு உளவியல்   Abnormal Psychology– பிறழ்நிலை உளவியல், பிறழ்வு உளவியல், அசாதாரண உளவியல் எனப்படுகின்றது. இவற்றுள் சுருக்கமான தமிழ்ச்சொல்லான பிறழ்வு உளவியல் ஏற்கப் பெற்றுள்ளது. Abnormal psychology 1271. புகைக்கொடி யியல் Cometology 1272. புண்ணியல் Helco என்பது கிரேக்க மொழியில் புண் எனப்படும். Helcology 1273. புதிய பொருளியல் New economics 1274. புதிரியல் enigma என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் புதிர். Metagrobo என்பது புதிர்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1253 – 1269 :  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1241- 1252 இன் தொடர்ச்சி) 1253. பாறை இயற்பியல் Petrophysics 1254. பாறை நகர்வியல் Petrotectonics 1255. பாறை விசையியல்  Rock mechanics 1256. பாறைக் காந்தவியல் Palaeo என்பதற்குப் பண்டைய என்பதுதான் பொருள். எனினும் இங்கே பண்டைய தோற்றமான பாறையைக் குறிப்பிடுகிறது. எனவே  பாறைக் காந்த வியல் எனப்படுகிறது. Palaeo Magnetism 1257. பாறையியல் Litho என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பாறை/கல். Petra என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் பாறை. Lithology / Lithoidology/ Petrology…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1241- 1252 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1225 – 1240 இன் தொடர்ச்சி) 1241. பார்ப்பியல் neos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள்கள் இளமை, புதிய. Neossos என்பது இளம்பறவை எனப் பொருள். “மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே” என்னும் தொல்காப்பியப் பொருளதிகார நூற்பா(548) மூலம் தொல்காப்பியர் பறவை களின் இளமைப் பெயராகப் பார்ப்பு எனக் குறிப்பிடுகிறார். எனவே, பார்ப்பியல் எனலாம். Neossology 1242. பார்வல் வானிலையியல்…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1225 – 1240 :  இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1210 – 1224   இன் தொடர்ச்சி) 1225. பன்னாட்டுப் பொருளியல் International economics 1226. பாசக்கியூ இயல் ஐரோப்பாவிலுள்ள பீரெனே (Pyrenees) மலைத்தொடரின் மேற்குப் பகுதியில் உள்ள பாசக்கியூ(பாசுக்கு) நாட்டில் வாழும்  பாசக்கியூ மக்களால் பேசப்படும் மொழியே பாசக்கியூ மொழி அல்லது ஈசுகரா மொழி(Basque/Euskara) ஆகும். இம்மொழி பேசும் மக்களின் கலை, பண்பாடு முதலிய குறித்து ஆராயும் துறையே பாசக்கியூ இயல். Bascology 1227. பாசி உயிரிய நுட்பியல்            Algae biotechnology 1228. பாசியியல் Phycology/Algalogy/Sphagnology– கடற்பாசி இயல்,…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1210 – 1224 : இலக்குவனார் திருவள்ளுவன்

  (ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1190 – 1209 இன் தொடர்ச்சி) 1210. பறியியல் பறிதல் என்றால் ஒலியுடன் வெளிப்படுதல் எனப் பொருள். பின்வாய் வழியாக வெளியேறும் காற்று பறி எனப்படுகிறது. அதனை நாம் ககர உகரத்திலும் சகரஉகரத்திலும் சேர்த்துக் கூறுவது வழக்கம். இருப்பினும் இச்சொல்லைச் சொன்னாலே கெட்ட நாற்றமே நினைவிற்கு வருவதால், இச்சொல்லைப் பயன்படுத்தப் பலரும் தயங்குவர். எனவே, இது குறித்த ஆராய்வியலைப் பறியியல் எனலாம். Flatology 1211. பற் கட்டுப்பாட்டியல் Contrology 1212. பற்களியல் Odontology 1213. பற்சிதைவியல் Cariology…

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1190 – 1209 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1172 – 1189   இன் தொடர்ச்சி) 1190. பருமப் பாய்வியல் Bulk rheology 1191. பரும வளர்ச்சி இயக்க இயல் Bulk growth kinetics 1192. பலியர் இயல் Victim – துன்புறுத்தப்பட்டவர், பலி,பலியாள், பலியுயிர், பாதிக்கப்பட்டவர், பாதிப்பிற்குள்ளானவர், பாதிப்புறுநர் எனப் பொருள்கள். Victimology–பாதிப்புறுநர் தொடர்பான குற்றவியல், பலியாகுனரியல், பலியாள் இயல் எனப்படுகின்றது. இவற்றுள் பலியாகுனரியல் என்பது பலியாகுநரியல் எனக் குறிக்கப் பெற வேண்டும். பலியாகுநர் என்பதன் சுருக்கமாகப் பலியர் எனப்பயன்படுத்திப் பலியரியல் Victimology எனத் தரப்பட்டுள்ளது. Victimology…