மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  47

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  46 தொடர்ச்சி) “நீ உடனிருந்து செய்யாவிட்டால் என்ன? உன்னுடைய சொற்பொழிவுதானே இந்தப் பொதுப்பணிக்கு இவ்வளவு பணம் வசூல் செய்து கொடுத்தது” என்று அவளுக்குச் சமாதானம் சொன்னான் அரவிந்தன். பூரணி, வசந்தா, சமையற்கார அம்மாள் மூவரையும் ஏற்றிக் கொண்டு கார் கொடைக்கானலுக்குப் புறப்பட்டது. அவர்களைக் கொடைக்கானலில் கொண்டுபோய் விட்டுத் திரும்பி வருமாறு சொல்லித் தன் காரை டிரைவருடன் அனுப்பியிருந்தாள் மங்களேசுவரி அம்மாள். அம்மையநாயக்கனூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு என்று மதுரைச் சீமையில் அழகிய ஊர்களையெல்லாம் ஊடுருவிக் கொண்டு கார் விரைந்தது. சாலை, மலைப்பகுதியில்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 73

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 72 தொடர்ச்சி) அத்தியாயம் 27 தொடர்ச்சி அந்த மோசக்காரி ஓ என்று கூச்சலிட்டாள். வந்தவர்கள் என் முதுகைப் பழுக்கப் பார்த்தார்கள். தாம்புக் கயிறு கொண்டு அடித்தார்கள். வீட்டுக்குத் திரும்பியபோது முதுகில் கறை இருந்ததை எப்படியோ மனைவி பார்த்து விட்டாள். என்னிடம் வாய் திறந்து கேட்கத் தைரியம் இல்லை. அழுதுகொண்டு போய் என் அத்தையிடம் சொல்லியிருக்கிறாள். அத்தை அப்போது இருந்தார். நான் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது அத்தை என் முதுகுப்பக்கம் வந்து உட்கார்ந்து பார்த்து வருத்தப்பட்டிருக்கிறார். நான் விழித்தபோது வாசற்படிக்கு…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.16-20

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.11-15 தொடர்ச்சி) 16. முல்லை யேமுத லாகிய நல்லி யல்புறு நானிலத் தெல்லை மேவிய யாவரும் இல்லை வேறிவ ரின்றியே. 17. முல்லை யாயர் குறிஞ்சியின் எல்லை காணி னிறவுளர் செல்லி னெய்தல் தமிலரே ஒல்லி வாழி அழவரே. வேறு 18. தூ யகைத் தொழிலி னோடேர்த் தொழிலொடு வணிகந் துன் னி ஆயமுத் தொழிலி னோடாங் கமைகுடித் தொழில்க உ ளெல்லாம் ஏயவ ருயர்வு தாழ்வ தின்றியே புரிந்து நாளும் தாயவுத் தொழிலுக் கேற்பத் தனித்தனிப் பெயர்பெற்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  46

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  45 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்  17 தொடர்ச்சி “அதெல்லாம் கெடுதலாக ஒன்றும் இருக்காது. சீக்கிரம் அக்கா திரும்பி வந்துவிடுவாள்” என்று ஓதுவார்க்கிழவர் அவர்களைத் தைரியம் சொல்லிச் சமாதானப் படுத்தினார். அச்சகத்திலிருந்து திருநாவுக்கரசு டாக்டர் வீட்டுக்கு ஓடி வந்திருந்தான். அந்தச் சில மணி நேரத்தில் தன் மேல் அன்பு கொண்டிருந்த எல்லாரையும் கதிகலங்கிப் பரபரப்படையச் செய்துவிட்டாள் பூரணி. டாக்டர், அரவிந்தனிடம் வந்து கூறினார். “பயப்படுகிறார்போல் இப்போது ஒன்றுமில்லை. ஆனால் இப்படியே தொடர்ந்து நாள் தவறாமல் இரண்டு மூன்று பிரசங்கங்கள் வீதம் தொண்டையைக்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 72

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 71. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 தொடர்ச்சி “ஊரில் எல்லாரும் எப்படி இருக்கிறார்கள்? நீ ஒன்றுமே சொல்லலையே?” என்றான். “நீ ஒன்றும் கேட்கவில்லையே. எதைப் பேசினாலும் உடனே விம்மி விம்மி அழுகிறாய். அதனால் உடம்பும் கெட்டுப்போகிறது” என்றேன். “அழுவது ஒன்றுதான் இப்போது என் மனத்துக்கு மருந்தாக இருக்கிறது. உண்மையாய்ச் சொல்கிறேன் வேலு அழுத பிறகுதான் மனம் அமைதியாக இருக்கிறது. அழுவது நல்லது, மிக மிக நல்லது வேலு” என்றான். “ஊரில் எல்லாரும் நல்லபடி இருக்கிறார்கள். அப்பா இருக்கிறார்….

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.11-15

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.6-10 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 3. மக்கட் படலம் 11. உழுந்தொ ழிற்குரித் தாகவே ஒழிந்த யாவு முஞற்றலான் பழந்த மிழ்வகுப் பாரெலாம் உழுந்தொ ழிற்கொ ளுழவரே. 12. தாளி னாற்பொருள் தருவதை வேளெ னப்பொருள் விள்ளுவர் நாளு மேதொழில் நன்குசெய் தாளு வோர்கள்வே ளாளரே. 13. இத்தொ ழிலிவர்க் கின்றெனா எத்தொ ழிலுமெ வாருஞ்செய் தத்தொ ழிற்குரி யார்களாய் ஒத்து வாழ்ந்த ரொருங்கரோ. 14. மன்ன ராகலாம் பின்னரும் மன்னர் பின்னரின் வாழலாம்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  45

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  44 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 17 “எங்கோ இருந்தென்னை அழைக்கிறாய்,எங்கோ இருந்ததனைக் கேட்கின்றேன்.எங்கோ இருந்தென்னை நினைக்கின்றாய்!எங்கோ இருந்துன்னை நினைக்கின்றேன்!”+ பூரணிக்குக் கண்கள் இருண்டு கொண்டு வந்தது. உணர்வு நழுவிற்று. அடிவயிற்றில் இருந்து மேலே நெஞ்சுக்குழி வரையில் பழுக்கக் காய்ச்சிய இரும்புக்கோலை நுழைத்துக் குடைவது போல் ஒரு வலி ஏற்பட்டது. ‘அம்மா’ என்று ஈனக்குரலில் மெல்ல முனகியபடி மேடையில் நின்று பேசிக் கொண்டிருந்த இடத்துக்குப் பின்னால் போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலியில் போய்ச் சாய்ந்தாள். பூத்து இரண்டு நாட்களான பின் ஒவ்வொன்றாகக் காற்றில்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 71

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 70. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 தொடர்ச்சி “நீ ஒன்றும் சொல்லாமலாவது இரு; சொல்லிவிட்டு இப்படித் துன்பப்படாதே” என்றேன். “எப்படி இருப்பேன் வேலு! எப்படி இருப்பேன்? நான் பேசாமல் இருந்தாலும் என் மனம் சும்மா இல்லையே. அது உள்ளே இருந்து வாட்டி வதைக்குதே. உன்னிடம் சொன்ன பிறகுதான் அது அடங்குது. நான் எப்படிச் சொல்லாமல் இருப்பேன்? அதோ நினைவு வருகிறதே! ஓர் ஏழைப் பெண், என்னால் சீரழிந்த பெண், என்னைப் போல் நோயாளி ஆய்விட்டாளே! அவளுக்கும் தொழுநோய்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  44

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  43 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்  16 தொடர்ச்சி “நீ வந்திருக்கிறாயா அம்மா? பெரிய வால் ஆச்சே நீ” என்று செல்லமாகச் சொல்லிக்கொண்டே அவளுக்கும் பூ வைத்து விட்டாள் பாட்டி. அப்போது அந்தக் கூடத்தில் குழுமியிருந்த சிறியவர்களும், பெரியவர்களுமான எல்லாப் பெண்களைக் காட்டிலும் பூரணி அதிக ஞானமுள்ளவள், அதிகப் புகழுள்ளவள், அதிகத் துணிவும் தூய்மையும் உள்ளவள். ஆனாலும் அங்கே நிற்கக் கூசிற்று அவளுக்கு. அவளுடைய கூச்சத்துக்கேற்றாற் போல் அவளை அதற்கு முன்னால் பார்த்திராத வெளியூர் பாட்டி ஒருத்தி அத்தனை பேருக்கு நடுவில்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 70

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 69. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 தொடர்ச்சி வேலையாளைப் பார்த்து, நீ போ. இதோடு எட்டு மணிக்குச் சாப்பாடு எடுத்து வந்தால் போதும். இரண்டு பேர்க்குச் சாப்பாடு கொண்டு வா. இனிமேல் நான் மறுபடியும் சொல்லும் வரையில், எது கொண்டு வந்தாலும் இரண்டு பேர்க்கு என்று நினைவு வைத்துக்கொள்” என்றேன். உடனே, அன்று மாலையில் பச்சைமலையாரின் வீட்டுக்கு வருவதாகச் சொல்லி விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. “அப்படியே பச்சை மலையாரின் வீட்டுக்குப் போய் ஐயா இன்று வரமாட்டாராம்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  43

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  42 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்  16 தொடர்ச்சி அவள் அண்மையிலுள்ள வெளியூர்களுக்குச் சொற்பொழுவுகளுக்குப் போக நேரும் போதெல்லாம் மீனாட்சிசுந்தரமும் மங்களேசுவரி அம்மாளும் கார் கொடுத்து உதவினார்கள். முருகானந்தம் – வேறு ஓர் உதவியைச் செய்தான். உழைக்கும் மக்கள் நிறைந்த தனது பகுதியில் அடிக்கடி அவளுடைய தமிழ்ச் சொற்பொழிவுகள் நடைபெற ஏற்பாடு செய்து ஆயிரக்கணக்கான ஏழை மக்களைத் தமிழ்ச் செல்வியாகிய அவள் மேல் ஈடில்லா அன்பு கொள்ள வைத்தான். வாழ்க்கையில் மிக உயர்ந்ததொரு திருப்பத்தை நோக்கித் தான் விரைவாக வளர்ந்து கொண்டிருப்பதை…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 69

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 68. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 27 தொடர்ச்சி மூர்ச்சையாய் விழுந்து கிடப்பதை உணர்ந்தேன். முகமெல்லாம் வீக்கமும் தடிப்புமாக இருந்தன. “அய்யோ! சந்திரா!” என்று அழைத்து வருந்தினேன். வேலையாள் என் முகத்தைப் பார்த்துத் திகைத்து நின்றான். காப்பி வாங்கி வருமாறு சொல்லியனுப்பினேன். வழியில் சென்ற ஒரு டாக்சியைக் கூப்பிட்டு நிறுத்தினேன். மக்கள் மேலும் சிலர் கூடுவதைக் கண்டு, விரைந்து வீட்டுக்குப் போவதே நல்லது என்று உணர்ந்தேன். காப்பி வந்ததும், சந்திரனைத் திருப்பி அவன் வாயில் சிறிது விடச் செய்தேன்….