தமிழ் வளர்த்த நகரங்கள் 11. – அ. க. நவநீத கிருட்டிணன்:குமரகுருபரர், பரஞ்சோதியார் வளர்த்த தமிழ்
(தமிழ் வளர்த்த நகரங்கள் 10. – அ. க. நவநீத கிருட்டிணன்: மதுரை கடைச்சங்கம்- தொடர்ச்சி) குமரகுருபரர், பரஞ்சோதியார் வளர்த்த தமிழ், நான்காம் தமிழ்ச்சங்கம் திருமலை நாயக்கர் குமரகுருபரரைத் தமது மாளிகையில் சிலநாட்கள் தங்கியருளுமாறு அன்புடன் வேண்டினார். அவரது வேண்டுகோளுக்கு இணங்கிய முனிவர் சின்னாள் மதுரையில் தங்கினார். அரசியல் அலுவல்களில் ஈடுபட்ட நாயக்க மன்னர் நாள் தோறும் காலந்தாழ்த்து உணவு கொள்வதைக் கண்ட குமரகுருபரர், ஒருநாள் அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது,“வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிதொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது”என்ற திருக்குறளை நினைவூட்டினர். ‘அரசே! நீவிர் எத்துணைச்…
தோழர் தியாகு எழுதுகிறார் 246 : கல்வியுரிமைக் கவன ஈர்ப்பு நோக்கி
(தோழர் தியாகு எழுதுகிறார் 245 : பெரியகுளம் மாரிமுத்து-மகாலட்சுமி சாதி ஆணவக் கொலையா? – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! கல்வியுரிமைக் கவன ஈர்ப்பு நோக்கி >>> சென்ற சூலை 26ஆம் நாள் இளைஞர் அரண் சார்பில் குடந்தையில் நடைபெற்ற கல்வியுரிமைப் பேரணி கல்வியுரிமை மாநாட்டில் நாம் எழுப்பிய முழக்கங்களையும் இயற்றிய தீர்மானங்களையும் நினைவிற்கொள்ளுங்கள். நம் கோரிக்கைகள் தெளிவானவை:1) 2004 சூலை 16ஆம் நாள் குடந்தை நகரில் கிருட்டிணா பள்ளியில் பற்றிய கொடுந்தீயில் 94 குழந்தைகள் உயிரோடும் கல்விக் கனவுகளோடும் மாண்டு போன கொடுமைக்கு முழுமையாக…
தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 4. வள்ளலார் திருவுள்ளம்
(தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 3. ஆ. இராமலிங்கர் ஒரு பெரும் புரட்சிக்காரர். – தொடர்ச்சி) (சென்னை சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் 125-ஆவது பிறந்த நாள் விழாவில் ஆற்றிய உரை) சகோதரிகளே! சகோதரர்களே!! யான் “வள்ளலார் திருவுள்ளம்” என்ற ஒரு நூலை எழுதி வெளியிட்டிருப்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. மேலுலக இன்பத்திற்குப் பயன்படுவதா வாழ்க்கை? தற்கால உலகவாழ்க்கைக்குப் பயன்படுவதுதான் உண்மையான வாழ்க்கையாகும். அரிசிப் பஞ்சம் தற்சமயம் தாண்டவமாடுகிறது. ஒரு பணக்காரர் தன் வீட்டில் ஆயிரம் அரிசி மூட்டைகளைப் பதுக்கி…
தோழர் தியாகு எழுதுகிறார் 245 : பெரியகுளம் மாரிமுத்து-மகாலட்சுமி சாதி ஆணவக் கொலையா?
(தோழர் தியாகு எழுதுகிறார் 244 : பொல்லாத பதின்மூன்று தொடர்ச்சி) இனிய அன்பர்களே! பெரியகுளம் மாரிமுத்து-மகாலட்சுமி சாதி ஆணவக் கொலையா? பட்டியல் சாதி பட்டியல் பழங்குடி வன்கொடுமை (தடுப்பு) சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்திடுக! 2023 ஆகட்டு 5 சனிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் இளைஞர் ஒருவரும் இளம்பெண் ஒருவரும் தூக்கில் தொங்கும் காட்சியை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளர்கள். அந்த இளைஞர் மாரிமுத்து, இளம்பெண்…
தோழர் தியாகு எழுதுகிறார் 244 : பொல்லாத பதின்மூன்று
(தோழர் தியாகு எழுதுகிறார் 243 : தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 2/2 தொடர்ச்சி) இனிய அன்பர்களே! போகாத ஊருக்கு வழிகாட்டும் பொல்லாத பதின்மூன்று 13ஆம் திருத்தச் சட்டம் ஈழத் தமிழர்களின் தேசியச் சிக்கலுக்கு அரசியல் தீர்வாக முடியுமா? இலங்கை அரசவையில் 13ஆம் திருத்தச் சட்டம் இயற்றப்பட்டு36ஆண்டுக் காலமாயிற்று. இந்த 36 ஆண்டுகளில் அதனால் விளைந்த பயன் என்ன? அது தீர்வாகவில்லை என்பது மட்டுமன்று, தீர்வை நோக்கிய பயணத்தில் ஓரங்குலம் கூட முன்னேறவில்லை என்னும் போது 13ஆம் திருத்தச் சட்டம் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போய்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 892-903
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 881-891 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 892-903 (கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார்.238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 892. Cricket – துடுப்பு ஆட்டம் 893. Hockey – வளைகழி ஆட்டம் 894. Rugby – பிடி பந்தாட்டம் 895. Basket Bal l- கூடைப் பந்தாட்டம் கேம்சு என்ற பகுதியில் துடுப்பு ஆட்டமும் (Cricket) வளைகழி ஆட்டமும் (Hockey), உதை பந்தாட்டமும் (Foot Ball), பிடி பந்தாட்டமும் (Rugby), சல்லடைப் பந்தாட்டமும் (Tennis), கூடைப் பந்தாட்டமும் (Basket Ball) இவை போல்வன பிறவும் அடங்கும். நூல் …
தோழர் தியாகு எழுதுகிறார் 243 : தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 2/2
(தோழர் தியாகு எழுதுகிறார் 242 : தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 1/2 – தொடர்ச்சி) தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 2/2 இந்துத்துவ ஆற்றல்களோடு கூடிக் குலாவி ஈழத்துக்கு ஏதாவது(?) செய்ய முடியும் என்ற கருத்தைப் பரப்பி வரும் காசி ஆனந்தனைக் காவி ஆனந்தன் என்றே தமிழீழ ஆதரவு முற்போக்காளர்கள் கேலி செய்து வருகின்றனர். அவரும் அது பற்றிக் கவலை இல்லை, நான் அப்படியே இருந்து விட்டுப் போகிறேன் என்று கூறி விட்டார். இந்துத்துவ ஆளும் கும்பலை நயந்து கொள்ளும் பொருட்டு அவரும், அவரைப் போலவே…
தோழர் தியாகு எழுதுகிறார் 242 : தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 1/2
(தோழர் தியாகு எழுதுகிறார் 241 : மோதியும் இரணிலும் பேசியதும் பேசாததும் – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 1 / 2 இராசீவ்-செயவர்த்தனா உடன்படிக்கையும் (1987) அமைதி காக்கும் படை என்ற பெயரில் இந்திய வல்லரசு தமிழீழத்தின் மீது நடத்திய படையெடுப்பும் இந்தியப் படை நடத்திய வன்கொடுமைகளும் தமிழர்கள் மறக்கக் கூடாத வரலாற்று உண்மைகள். ஆனால் இப்போது எழுந்துள்ள புதிய சூழலில் இந்த உண்மைகளை மறப்பதுதான் சரி என்று சிலர் கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளனர். இந்த உண்மைகளை மறைக்கவும் அழிக்கவும் கூட…
ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 19 : 12 – 14 நாடக சம்பந்தமான நூல்கள்
(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 18 : 11. தமிழ் நாடகத்திற்காகத் தான் உழைத்தது-தொடர்ச்சி) 12. நாடக சம்பந்தமான நூல்கள் கீத மஞ்சரி :— நான் எழுதிய நாடகங்களுக்கு நானும் எனது நண்பர்களும் ஆதியில் எழுதிய சில பாட்டுகள் அடங்கியது. இம் முதற் பதிப்பு முற்றிலும் செலவாய் விட்ட போதிலும் இதை இரண்டாவது முறை அச்சிடுவதில்லை என்று தீர்மானித்தேன். இதற்கு முக்கிய காரணம் எனது நாடகங்கள் ஆடும் நடிகர்கள் தாங்கள் ஆடும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மெட்டுகளையுடைய பாட்டுகளை பாட விரும்புவதேயாம். நாடகத்தமிழ் :—…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 57 : அன்பு மயம்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 56 : என்ன புண்ணியம் செய்தேனோ! – தொடர்ச்சி) என் சரித்திரம் என் ஆசிரியர் பாடஞ் சொல்லி வரும்போது அங்கங்கே அமைந்துள்ள இலக்கண விசேடங்களை எடுத்துச் சொல்வது வழக்கம். அரிய பதமாக இருந்தால் வேறு நூலிலிருந்து அதற்கு ஆதாரம் காட்டுவார். செய்யுட்களில் எதுகை, மோனைகள் எப்படி அமைந்திருக்கின்றன என்பதைக் கவனிக்கச் செய்வார். கவிஞராகிய அவர் செய்யுள் செய்யப் பழகுபவருக்கு இன்ன இன்ன முட்டுப்பாடுகள் நேருமென்பதை நன்றாக அறிவார். எங்களுக்கு அத்தகைய இடையூறுகள் நீங்கும் வழியைப் போதிப்பார். செய்யுள் இயற்றும் வழி…
தோழர் தியாகு எழுதுகிறார் 241 : மோதியும் இரணிலும் பேசியதும் பேசாததும்
(தோழர் தியாகு எழுதுகிறார் 240 : கசேந்திரகுமார் பொன்னம்பலம் அறைகூவல்! தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மோதியும் இரணிலும் பேசியதும் பேசாததும் “தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுமாம்!” இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவு குறித்து இப்படி மொழிந்திருப்பவர் இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் திருவாளர் செய்சங்கர். இலங்கைக்கு வந்துள்ள நெருக்கடியிலிருந்து அந்நாட்டை மீட்க இந்தியா எல்லா உதவியும் செய்யும் என்பதைத்தான் செய்சங்கர் இப்படிச் சொன்னார். இது ஒரு புறம் என்றால், இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவின் மோதியரசு அனைத்து வகையிலும் துணைநிற்கும் என்று தமிழ்நாடு பாசக தலைவர்…
தோழர் தியாகு எழுதுகிறார் 240 : கசேந்திரகுமார் பொன்னம்பலம் அறைகூவல்!
(தோழர் தியாகு எழுதுகிறார் 239 : மணிப்பூர்க் கோப்புகள் காதை 14 தொடர்ச்சி) இனிய அன்பர்களே! கசேந்திரகுமார் பொன்னம்பலம் விட்ட அறைகூவல்! தமிழீழ மக்களின் தேசியச் சிக்கலுக்கு அமைதியாகவும் பன்னாட்டுச் சட்டங்களின் படியும் குடியாட்சியத் தீர்வு காண ஒரே வழி பொதுவாக்கெடுப்புதான். ஈழத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள், உலகத் தமிழர்கள் அனைவரும் இந்தக் கோரிக்கையில் ஒரே கருத்துடன் இருக்கிறோம். இனவழிப்புக்கு ஈடுசெய் நீதி என்றாலும், பூசல் நிலையிலிருந்து இணக்க நிலைக்கு நிலைக்குச் செல்வதற்கான நிலைமாற்ற நீதி என்றாலும் அது குற்றவியல் நீதியாக…
