ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 9: படிப்புதவித்தொகை
(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 8 தொடர்ச்சி) ‘என் சுயசரிதை’ 9: படிப்புதவித்தொகை ஒரு சிறு வேடிக்கையான விசயத்தை இங்கு எழுதுகிறேன். மேற்கண்ட கணிதப் புத்தகங்களுடன் நான் படித்துப் போராடும் போது பன்முறை இப்பரிட்சையில் நான் தேறினால் அப்புத்தகங்களை யெல்லாம் ஒரு கட்டாகக்கட்டி சமுத்திரத்தில் எறிந்துவிடவேண்டுமென்று தீர்மானித்தேன். பிறகு தேறினவுடன் அப்புத்தகங்களின்மீது பச்சாதாபப்பட்டு எங்கள் கல்லூரியில் படித்துவந்த ஒரு ஏழைப் பிள்ளைக்குக் கொடுத்து விட்டேன். எப். ஏ. பரிட்சையில் திரு. நாராயணாச்சாரி, சகதீச ஐயர், வே. பா. இராமேசம், சிங்காரவேலு, நான் ஆகிய ஐந்து…
முதல்வர் தாலின் அவர்களே! ஆங்கிலக் காதலைக் கைவிடுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(இந்தி எதிர்ப்பு நாடகத்தை நிறுத்துங்கள் – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 26 தொடர்ச்சி) முதல்வர் தாலின் அவர்களே! ஆங்கிலக் காதலைக் கைவிடுங்கள்! : தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 27 மாண்புமிகு முதல்வர் அவர்களே! நீங்கள், தமிழ், தமிழர் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பொழுது “இது தமிழை, தமிழினத்தைக் காக்கும் ஆட்சி” என்று பேசுகிறீர்கள். மகிழ்ச்சியாக உள்ளது. சான்றாக, வடஅமெரிக்கத் தமிழர்கள் மாநாட்டில் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு உரையாற்றியபொழுது (சூலை 2022) “தமிழ் மொழிக்கு முதன்மைத்துவம் தருவதோடு, தமிழினத்தைக் காக்கும் ஆட்சியாகவும் நடந்து…
தோழர் தியாகு எழுதுகிறார் 171 : பார்ப்பனப் பெருவாழ்வு! 7/8
(தோழர் தியாகு எழுதுகிறார் 170 : பார்ப்பனப் பெருவாழ்வு! 6/8 தொடர்ச்சி) பொருளியல் நலிவு என்ற பெயரில் பார்ப்பனப் பெருவாழ்வு! 7/8 நமக்கு இப்போது ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது என்ன வழி தெரியுமா? தமிழ்நாட்டின் இட ஒதுக்கீட்டைத் தமிழ்நாடே முடிவு செய்து கொள்ளும் என்கிற கோரிக்கைக்காகப் போராடி வெற்றி பெறுவது ஒன்றுதான் இதற்கு வழி. ஏனென்றால் தமிழ்நாட்டில் எவனும் எதிர்க்க மாட்டான்! வெளியில் வந்து பேச மாட்டான். மண்டல்குழு வந்த போது பாச கவே எதிர்க்கவில்லை. 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை செயலலிதா பாதுகாத்ததற்காக சமூக…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 47 : மாயூரப் பிரயாணம் 1/2
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 46 : பெரும்புலியூர் தொடர்ச்சி) என் சரித்திரம் – பாகம் 2 26. மாயூரப் பிரயாணம் 1/2 செங்கணத்தில் நாங்கள் பிரமோதூத வருlம் மார்கழி மாதமுதல் பங்குனி வரையில் (1870 திசம்பர் முதல் 1871 மார்ச்சு வரையில்) இருந்தோம். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் நாகப்பட்டின புராணம் அரங்கேற்றிப் பூர்த்தி செய்துகொண்டு நாகபட்டினத்திலிருந்து மீண்டும் மாயூரத்திற்கே வந்துவிட்டார்களென்று அங்கே கேள்வியுற்றோம். அப்புலவர்பிரானிடம் படிக்கப் போகிறோமென்ற எண்ணம் என் மனத்தில் ஒரு புதிய கிளர்ச்சியை உண்டாக்கியது. அவர்களைப் பற்றி நான் கேள்வியுற்றிருந்த செய்திகளெல்லாம்…
தோழர் தியாகு எழுதுகிறார் 170 : பார்ப்பனப் பெருவாழ்வு! 6/8
(தோழர் தியாகு எழுதுகிறார் 169 : பார்ப்பனப் பெருவாழ்வு! 5/8 தொடர்ச்சி) பொருளியல் நலிவு என்ற பெயரில் பார்ப்பனப் பெருவாழ்வு! 6/8 இந்திய அரசு வங்கியில் தேர்வு வைத்து எடுக்கிறார்கள். தேர்வில் வெற்றி பெற்றாலும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கொடுக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் எசுசி எசுடி பிசிக்கு எல்லாம் 80 மதிப்பெண் 90 மதிப்பெண் வந்தால் இந்த பொ.ந.பி (E.W.S.) யில் பார்ப்பனர்களுக்கு 28 மதிப்பெண் வருகிறது ஒரே ஒரு கேள்விதான் நண்பர்களே இந்த இட ஒதுக்கீடு என்கிற பேச்சு எழுந்தாலே பார்ப்பனர்கள் அவர்களுடைய அறிவாளர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? தகுதி…
ஊரும் பேரும் 43 : இரா.பி.சேது(ப்பிள்ளை): அட்டானமும் அம்பலமும்
(ஊரும் பேரும் 42 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி) தென்னார்க்காட்டுக் கடலூர் வட்டத்தில் திருத்தளூர் என வழங்கும் திருத்துறையூரில் உள்ள சிவாலயத்தின் பெயர் தவநெறி என்பது சாசனத்தால் அறியப்படுகின்றது.30 ஊரும் பேரும் 43 அட்டானமும் அம்பலமும் துறையும் நெறியும் கோயிற் பெயர்களாக அமைந்தவாறே அட்டானம், அம்பலம் என்னும் ஆலயப் பெயர்களும் உண்டு. வீரட்டானம் தமிழ் நாட்டில் வீரட்டானம் என்று விதந்துரைக்கப்படும் சிவப் பதிகள் எட்டு என்பர். “அட்டானம் என்றோதிய நாலிரண்டும்” என்று திருஞான சம்பந்தர் அவற்றைக் குறித்துப் போந்தார். கெடில…
தோழர் தியாகு எழுதுகிறார் 169 : பார்ப்பனப் பெருவாழ்வு! 5/8
(தோழர் தியாகு எழுதுகிறார் 168 : பார்ப்பனப் பெருவாழ்வு! 4/8 தொடர்ச்சி) பொருளியல் நலிவு என்ற பெயரில் பார்ப்பனப் பெருவாழ்வு! 5/8 ஆனால் விபிசிங்கு அவர்கள் பதவி போனால் போகட்டும் என்று இதைச் செயல்படுத்துவதில் உறுதியாக இருந்தார். அப்படி அவர் உறுதியாக இருந்ததால் மண்டல்குழு பரிந்துரை செயலுக்கு வந்தது. நீதிமன்றத்தில் போய் வழக்குப் போட்டார்கள். அதுதான் இந்திரா சாகுனி வழக்கு. அதில் பெரும்பான்மை நீதிபதிகள் செல்லும் என்றார்கள். ஒரு சிறுபான்மையினர் செல்லாது என்றார்கள். விபிசிங்கு அரசைக் கவிழ்த்து விட்டு நரசிம்மராவு வந்தார். ஆந்திரத்தின் சூழ்ச்சிமிக்க…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 48 : பழந்தமிழும் தமிழரும் 8
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 47 : பழந்தமிழும் தமிழரும் 7 – தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 8 சிறந்தோரைப் பாராட்டிப் புகழ வேண்டா என்று கூறவில்லை. வியத்தல் வேண்டா என்றுதான் கூறுகின்றார். வியத்தல் என்றால் அளவுக்கு மீறி இல்லாத சீர்மைகளை இருப்பதாகப் புகன்று உயர்த்துதல். அதுதான் வேண்டா என்கிறார். அதனினும் ஒருவரைப் பதவியில் புகழில் பொருளில் சிறியவரென்று இகழ்தல் மிகக் கொடியது. ஆகவே இகழ்தலும் வேண்டா என்கிறார். வியந்து போற்றினாலும் போற்று; ஆனால் இகழ்ந்து விடாதே என்பதுதான் அவர் அறிவுரை. தம் இயல்பு கூறுவார்…
தோழர் தியாகு எழுதுகிறார் 168 : பார்ப்பனப் பெருவாழ்வு! 4/8
(தோழர் தியாகு எழுதுகிறார் 167 : பார்ப்பனப் பெருவாழ்வு! 3/8 தொடர்ச்சி) பொருளியல் நலிவு என்ற பெயரில் பார்ப்பனப் பெருவாழ்வு! 4/8 சரி, இந்தச் சமூக மற்றும் கல்வி வழியில் பிற்படுத்தப்பட்டவர்கள் யார் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? எந்த ஊரில் அளவுகோல் வைத்திருக்கிறார்கள்? அப்போதுதான் அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் பின்தங்கிய வகுப்புகள் – இதுதான் அம்பேத்துகர் பயன்படுத்திய வார்த்தை – சமூக வழியில் கல்வி வழியில் பிற்பட்ட வகுப்புகள் என்றனர். ‘கிளாசு’ என்றால் என்ன? அந்த ‘கிளாசு’க்குள் மறைந்திருப்பது ‘காசுட்டு’. நீங்கள் ‘பிசி’ என்பதை எப்படிக்…
தோழர் தியாகு எழுதுகிறார் 167 : பார்ப்பனப் பெருவாழ்வு! 3/8
(தோழர் தியாகு எழுதுகிறார் 166 : பார்ப்பனப் பெருவாழ்வு! 2/8 தொடர்ச்சி) பொருளியல் நலிவு என்ற பெயரில் பார்ப்பனப் பெருவாழ்வு! 3/8 உயர்நீதிமன்றத்தில் யார் உட்கார்ந்திருந்தார்கள்? வெள்ளைக்காரர்கள் ஆட்சி நடத்துகிற வரை வெள்ளைக்காரர் நீதிபதியாக இருந்தார்கள். வெள்ளைக்காரர்களுக்கு உதவியாக இன்னொருவர் நீதிபதியாக இருந்தார்கள். அவர்கள் பார்ப்பனர்கள். பெரும்பாலும் பார்ப்பனர்கள்தான். வேறு யாரவது ஒரிருவர் இருந்திருக்கலாம். இந்த இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து அந்த கம்யூனல் அரசாணையோ செல்லாது என்று சொல்லி விட்டார்கள். திரும்பவும் உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்தார்கள்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 776 – 786
(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 770- 775 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 776 – 786 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 776. சப்தாலங்காரம் – சொல்லணி 777. அர்த்தாலங்காரம் – பொருளணி 778. உபமாலங்காரம் – …
தோழர் தியாகு எழுதுகிறார் 166 : பார்ப்பனப் பெருவாழ்வு! 2/8
(தோழர் தியாகு எழுதுகிறார் 165: பொருளியல் நலிவு என்ற பெயரில் பார்ப்பனப் பெருவாழ்வு! 1/8 தொடர்ச்சி) பொருளியல் நலிவு என்ற பெயரில் பார்ப்பனப் பெருவாழ்வு! 2/8 இப்போது இந்தக் கூட்டத்தைக் கேட்டுக் கொண்டு தெருவில் நின்று கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் ஒரு கணக்கெடுத்துப் பார்ப்போம் எவருக்காவது 8 இலட்சம் உரூபாய் வருமானம் இருக்கிறதா? இல்லை, 8 இலட்சத்திற்குக் கீழே இருந்தால் நீங்கள் எல்லாம் ஏழைகளாம்! எட்டு இலட்சம் வந்தால்தான் நீங்கள் ஏழை இல்லை. அதற்கு மேலே போக வேண்டும். நம்முடைய முதலமைச்சர் மாண்புமிகு தாலின் அவர்கள் இந்த நவம்பர் 12ஆம் நாள் கோட்டையில் அனைத்துக்…
