மலேசிய மாநாடு: அரசின் நிலைப்பாடு சரியே! – இலக்குவனார் திருவள்ளுவன்
மலேசிய மாநாடு: அரசின் நிலைப்பாடு சரியே! தனிநாயகம் அடிகளாரால் தோற்றுவிக்கப்பட்ட உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்பில் 11 ஆவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு சென்னையில் இத்திங்கள் 7,8,9ஆம் நாள்கள் நடைபெற்றதை அனைவரும் அறிவோம். அதற்கடுத்த இரு வாரத்தில் மலேசியாவிலும் சட்டமுறைப்படி இல்லா அமைப்பால் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அதையும் 11ஆவது மாநாடு என்றே அறிவித்துக் கொண்டனர். இம்மாநாடு குறித்துச் சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பாசக ஆதரவாளரான தலைவர் ஒருவரால் நாளிதழ் ஒன்றில் கட்டுரை ஒன்று வந்துள்ளது. துடிப்புடன் செயலாற்றும் மேனாள் அமைச்சர் ஒருவரும் இந்த…
தோழர் தியாகு எழுதுகிறார் 165: பொருளியல் நலிவு என்ற பெயரில் பார்ப்பனப் பெருவாழ்வு! 1/8
(தோழர் தியாகு எழுதுகிறார் 164 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 4. தொடர்ச்சி) பொருளியல் நலிவு என்ற பெயரில் பார்ப்பனப் பெருவாழ்வு! 1/8 இது போன்ற ஒரு தெருமுனைக் கூட்டத்தை இப்போது நடத்த வேண்டிய தேவை என்ன? இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் அரசியல் இலாவணிகளுக்கு நடுவே, யார் பெரியவர்? யார் உயர்ந்தவர்? என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு நடுவே, கொள்கை சார்ந்த இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தெருமுனைக் கூட்டத்தை நாங்கள் நடத்துகிறோம். ஒன்று, இந்தித் திணிப்பை எதிர்ப்போம், தமிழ் மொழி காப்போம்! இரண்டு, பணக்காரர்களுக்கும் பார்ப்பனர்களுக்குமான…
தோழர் தியாகு எழுதுகிறார் 164 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 4.
(தோழர் தியாகு எழுதுகிறார் 163 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர்3 தொடர்ச்சி) ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 4/4 மரணத் தண்டனைக் கைதியாக இருந்த போதும் சரி, அத்தண்டனை ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்ட பிறகும் சரி, புலவரைத் தொடர்ந்து தனிக் கொட்டடியிலேயே அடைத்து வைத்தனர். 12 ஆண்டுக்கு மேல் பல்வேறு சிறைகளில் போராட்டமும் அடக்குமுறையுமாகக் கழிந்தபின் பத்திரிகையாளர் கன்சியாம் பருதேசு எடுத்துக் கொண்ட முயற்சியால் புலவர் பிணையில் விடுதலை ஆனார். சற்று முன்பின்னாக அவ்வழக்கில் மற்றவர்களும் விடுதலையானார்கள். சிறையில் புலவரை நான் கடைசியாகப் பார்த்தது 1974 கடைசியில்தான். 1977இல் தொடங்கி…
ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 8
(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 7 தொடர்ச்சி) இங்கு என் பாக்கிய வசத்தால் எனக்கு கிடைத்த சிநேகிதர்களுள் இராமராய நிம்கார், பார்த்தசாரதி இராயநிம்கார் என்னும் இரண்டு சகோதரர்கள். இருவரும் தெலுங்கு பாசையில் மிகுந்த நிபுணர்கள். இவர்கள் காளஅசுத்தி சமசுதானத்தைச் சேர்ந்தவர்கள், பிற்காலத்தில் மூத்தவராகிய இராமராய நிம்கார் பானகல் இராச பட்டம் பெற்றார். இவர் என்னை விட சுமார் 10 வருடம் மூத்தவர். இவர் காலமாகி விட்டார். பார்த்தசாரதி இராய நிம்கார் தற்காலம் பானகல் இராசாவாகி சீவிய திசையில் இருக்கிறார். மற்றெருவர் வே. பா. இராமேசம்….
நூலாய்வு : சமற்கிருதம் செம்மொழியல்ல
நூலாய்வு:சமற்கிருதம் செம்மொழியல்ல வடமொழி ஒரு செம்மொழி அல்ல என்பது தொடர்பாக முனைவர் மருதநாயகம் எழுதிய ஆராய்ச்சி நூலின் ஆய்வுரையாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. வேதங்கள், உபநிடதங்கள், வால்மீகிராமாயணம், மகாபாரதம் மற்றும் பல்வேறு வடமொழி நூல்கள், நாடகங்கள், காப்பியங்கள், மனுநீதி, பதஞ்சலி யோக சாத்திரம் ஆகியவை எந்த வகையிலும் இலக்கியத் தரமற்றவை என்பது விளக்கப்பட்டுள்ளது தமிழ் மற்றும் பிற இந்திய மொழி நூல்களில் இருந்து நல்ல இலக்கியப் பகுதிகளை இடைச்செருகல்களாகப் பயன்படுத்தி இருப்தையும் எடுத்துக் கூறி, சமற்கிருதம் செம்மொழி அல்ல என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.–…
தோழர் தியாகு எழுதுகிறார் 163 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 3.
(தோழர் தியாகு எழுதுகிறார் 162 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 2 தொடர்ச்சி) ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 3. 1971இல் ஐயம்பெருமாள் கொலை வழக்கில் புலவர் மீது பொய்க் குற்றம் சுமத்தப்பட்ட போது, அனந்தநாயகியும் அவ்வழக்கில் சேர்க்கப்பட்டார். புலவரின் இரு மகன்களை மட்டுமல்லாமல், தம்பி மாசிலாமணி, பங்காளிகள் இராசமாணிக்கம், ஆறுமுகம் ஆகியோரையும் கூட வழக்கில் சேர்த்தனர். அரசும் காவல் துறையும் தெரிந்தே தொடுத்த பொய் வழக்கு இது. புலவருக்கும் வள்ளுவனுக்கும் தூக்குத் தண்டனை, மற்றவர்களுக்கெல்லாம் ஆயுள் சிறைத்தண்டனை. உயர் நீதிமன்றம் வள்ளுவனுக்கு மட்டும் தூக்குத்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 46 : பெரும்புலியூர்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 45 – (அத்தியாயம் 25) : விருத்தாசல (ரெட்டியா)ர் தொடர்ச்சி) பெரும்புலியூர் பெரும்புலியூருக்கு இருவரும் சென்றோம். அந்த (இ)ராயரைப் பார்த்தோம். அவர் எங்களைக் கண்டு மிகவும் சந்தோசமடைந்தார். (இ)ரெட்டியாரைப் பற்றி அவர் முன்பே கேள்வியுற்றிருந்தவராதலால் அவர் தம் வீட்டுக்கு வலிய வந்ததை ஒரு பெரிய பாக்கியமாக எண்ணி உபசரித்தார். தமிழானது எங்கள் மூவரிடையுமுள்ள வேறுபாடுகளை மறக்கச் செய்து ஒன்றுபடுத்தியது. நெடுநேரம் தமிழ் சம்பந்தமான விசயங்களையே பேசிக் கொண்டிருந்தோம். “நீங்கள் நல்ல காரியம் செய்கிறீர்கள். இந்தப் பிள்ளைக்குப் பாடம் சொல்லி வருவது…
ஊரும் பேரும் 42 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி
(ஊரும் பேரும் 41 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி) ஊரும் பேரும் 42 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி கடம்பந்துறை சைவ உலகத்தில் ஆன்ற பெருமை யுடையது ஆவடுதுறை. தேவாரப் பாமாலை பெற்றதோடு திருமந்திரம் திருஆவடுதுறை அருளிய திருமூலர் வாழ்ந்ததும் அப்பதியே இன்னும், திருவிசைப்பா பாடிய திருமாளிகைத் தேவர் சிவகதியடைந்ததும் அப்பதியே. இத்தகைய ஆவடு துறை, பேராவூர் நாட்டைச் சேர்ந்தது என்று சாசனம் கூறுகின்றது. பசுவளம் பெற்ற நாட்டில் விளங்கிய அப்பதியினை “ஆவின் அருங் கன்றுறையும் ஆவடுதண்துறை” என்று போற்றினாா் சேக்கிழாா்….
தோழர் தியாகு எழுதுகிறார் 162 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 2
(தோழர் தியாகு எழுதுகிறார் 161 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 1. தொடர்ச்சி) ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 2 ஆனால் அப்போது என் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. ஊர்ப்புறத்தில் தங்கி மக்களோடு வாழ்ந்து மக்களோடு உழைக்க வேண்டும் என்ற தலைமையின் கட்டளையை ஏற்று அப்போதுதான் சில நாளாய்க் கூலிக்குக் கரும்பு வெட்டப் போய்க் கொண்டிருந்தேன். வெட்டத் தெரியாமல் வெட்டிக் கரும்புத் தோகைகள் உடலெங்கும் கோடு கிழித்திருந்தன. கடின உழைப்புக்குப் புதியவன் என்பதால் உடம்பு கொதித்து வயிற்றுப் போக்கு வேறு வாட்டிக்…
தோழர் தியாகு எழுதுகிறார் 161 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 1.
(தோழர் தியாகு எழுதுகிறார் 160 : சித்த மருத்துவப் பேரியக்கம் வேண்டுகோள்-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! இயக்குநர் வெற்றிமாறனின் கலைப் படைப்பாக வெளிவந்துள்ள விடுதலை திரைப்படம் தமிழ்ப் பரப்பில் பல உரையாடல்களைக் கிளறி விட்டுள்ளது. படத்தின் கதையும் கதைமாந்தர்களும் கற்பனையே என்று தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், சில கதைமாந்தர்களுக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்கள் மெய்யாகவே வாழ்ந்து மறைந்த சிலரை நினைவூட்டுகின்றன. சில நிகழ்வுகளும் அப்படியே! குறிப்பாகவும் சிறப்பாகவும் பெருமாள் வாத்தியார் என்ற பெயர் தோழர் கலியபெருமாளை மனத்திற்கொண்டே சூட்டப்பட்டது என்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டுள்ளது. வெற்றிமாறனும் இதை…
உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சிறப்புற்றோங்குக! – இலக்குவனார் திருவள்ளுவன்
உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சிறப்புற்றோங்குக! நடந்து முடிந்த 11ஆவது உலகத்தமிழ் மாநாட்டின்பொழுது புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். பொறி.அரசர் அருளாளரையும் பேரா.முனைவர் ப.மருதநாயகத்தையும் முறையே தலைவராகவும் செயலராகவும் கொண்ட புதிய அமைப்பிற்கு வாழ்த்துகள். இம்மன்றம் தொய்வின்றிச் சிறப்பாகச் செயற்படவேண்டும். அதற்கு முதலில் இதன் உரிய பெயரிலேயே சங்கச் சட்டங்களின் கீழ்ப் பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும். 7.1.1964 இல் தொடங்கப்பெற்ற இம்மன்றம் ஈராண்டுக்கொரு முறை மாநாடு நடத்துவதை இலக்காகக் கொண்டது. அப்படியானால் இதுவரை முப்பது மாநாடுகளேனும் நடந்திருக்க வேண்டும்.ஆனால் 11 மாநாடுதான் நடந்துள்ளது. இதுவே இம்மன்றத்தின் தக்கச்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 47 : பழந்தமிழும் தமிழரும் 7
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 46 : பழந்தமிழும் தமிழரும் தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 7 ஆனால், இன்றைய நிலைமை என்ன? பிசிராந்தையார் கூற்றுக்கு மாறுபட்டன்றோ இருக்கின்றது. இளமையிலேயே நரைபெற்று முதுமையடைந்து விடுகின்றோம். ஏன்? யாண்டு பலவின்றியும் நரையுள வாகுதல் யாங்கா கியர் என வினவுதி ராயின்? ஆண்டநம் மக்கள் அடிமைக ளாயினர்; பூண்டநம் பண்பு போலிய தாகின்று நற்றமிழ் மறந்தனர்; நானில மதனில் பிறமொழிப் பற்றில் பெரியோ ராயினர்; தமிழகத் தெருவில் தமிழ்தான் இல்லை; ஊரும் பேரும் உயர்மொழி வழக்கும் அயல்மொழி தன்னில்…
