தோழர் தியாகு எழுதுகிறார் 104: நலக்கேடு நல்காப் போக்கி
(தோழர் தியாகு எழுதுகிறார் 103 : இரவியா? மு.க. தாலினா?தொடர்ச்சி) நலக்கேடு நல்காப் போக்கி இனிய அன்பர்களே! பொங்கலுக்கு முன்வரும் போகிப் பண்டிகை. அழுக்கையும் குப்பைகளையும் போக்கும் போக்கி நாள் என விளக்குவர் பெரியோர். ஆனால் குப்பைகளைத் தெருவில் போட்டு எரித்தல் என்பதுதான் போகிப் பண்டிகையின் அடையாளம் என்றாகி விட்டது. குழந்தைகள் தப்படித்து ஓசை எழுப்புவது மற்றோர் அடையாளம் எனலாம். காலையில் நடக்கப் போனால் தெருவெல்லாம் குப்பை எரிந்து புகையும் துர்நாற்றமும் காற்றில் கலந்து மூச்சுத் திணறுகிறது. நகரமெங்கும் புகைமூட்டம். கிராமப் புறங்களில் இஃது…
தோழர் தியாகு எழுதுகிறார் 103: ஆளுநர் இரவியா? மு.க. தாலினா?
(தோழர் தியாகு எழுதுகிறார் 102 : தமிழ்நாடா? தமிழகமா? தொடர்ச்சி) ஆளுநர் இரவியா? மு.க. தாலினா? இனிய அன்பர்களே! ஆர்.என். இரவியா, மு.க. தாலினா என்ற கேள்வி எழுமானால் நாம் மு.க. தாலின் பக்கம்தான்! பா.ச.க.வா, தி.மு.க.வா என்ற கேள்வி எழுமானால் நாம் திமுக பக்கம்தான்! மு.க. தாலின் மீதும் தி.மு.க. மீதுமான நம் குற்றாய்வுகள் ஆர்.என். இரவியையோ பா.ச.க.வையோ ஞாயப்படுத்தும், அல்லது இரு தரப்புகளையும் நிகர்ப்படுத்தும் நிலைக்கு நம்மைத் தள்ளி விடலாகாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதே போது சிக்கல் முழுவதையும் ஆர்.என்….
சான்றோர் பெருந்தகை மு.வ. – 2/3 – முனைவர் சி.பாலசுப்பிரமணியன் 
(சான்றோர் பெருந்தகை மு.வ. – 1/3 – தொடர்ச்சி) 10. சான்றோர் பெருந்தகை மு.வ. 2/3 நூற்பணி : புதினங்கள்எழுபது நூல்களுக்கு மேல் எழுதி இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் தமக்கெனத் தனியிடம் பெற்றுள்ள முனைவர் அவர்கள் முதன் முதலில் ‘பாவை’, ‘செந்தாமரை’ முதலிய நூல்களை 1943-44ஆம் ஆண்டுகளில் எழுதினார். இவர்களுடைய ‘கள்ளோ? காவியமோ?’ என்னும் புதினம் பலர் வாழ நல்வழி காட்டியது. ‘அல்லி’ ஆணுலகிற்கு எச்சரிக்கை தருவது. ‘அகல் விளக்கு’ எனும் புதினமும் இத்தகையதேயாகும். இந்நூல் 1962ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி (Sahitya…
தோழர் தியாகு எழுதுகிறார் 102 : தமிழ்நாடா? தமிழகமா?
(தோழர் தியாகு எழுதுகிறார் 101 : பதிவுகள் தளத்தில் செவ்வி 7 தொடர்ச்சி) தமிழ்நாடா? தமிழகமா? அன்பர் இரவி (பரிவாதினி நூலகம்) கேட்கிறார்: தமிழ்நாடா? தமிழகமா? +++ இரண்டும்தான்! இலக்கியத்தில் இரு பெயர்களும் ஆளப்படுகின்றன. இது வரை கிடைத்துள்ள சான்றுகளின் படி சிலப்பதிகாரம்தான் முதன் முதலாகத் தமிழ்நாடு என்ற பெயரைக் குறிப்பதாக அறிஞர் பெருமக்கள் குறிப்பிடுகின்றார்கள். “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை யாயின்…” சிலப்பதிகாரம் வஞ்சிக் காதையில் அமைச்சர் வில்லவன் கோதையின் கூற்றாக இது இடம் பெறுகிறது. கடல்சூழ்ந்த இந்நாட்டினை நீ தமிழ்நாடாக்க விரும்பினால் எதிர்ப்பவர்கள்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 704-708
(தமிழ்ச்சொல்லாக்கம் 699 -703 தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 704-708 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 704. Picture Gallery – ஓவியக்கூடம் பேர் பெற்ற பெரியாரால் தீட்டப்பட்ட ஓரழகிய ஓவியம் இருந்தது. ஒரு கோடீசுவரன், கலைகளின் அருமை சிறிது மறியாதவன், புகழ் கருதி அதை வாங்கித் தன் ஓவியக் கூடத்தில் (Picture Gallery)…
தோழர் தியாகு எழுதுகிறார் 101 : பதிவுகள் தளத்தில் செவ்வி 8
(தோழர் தியாகு எழுதுகிறார் 100 : பதிவுகள் தளத்தில் செவ்வி 7 தொடர்ச்சி) பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 8 யமுனா ராசேந்திரன் அன்பர் விசுவுடன் என்னை நேர்கண்டு எடுத்த செவ்வியின் மூன்றாம் இறுதிப் பகுதி இதோ: யமுனா: தமிழ்த் தேசியப் இனப் போராட்டத்தினூடே தென்னிந்தியத் தேசிய இனங்கள் தொடர்பாகத் தமிழ்த் தேசிய அரசியல் என்ன நிலைபாடு எடுக்கும்? தியாகு: தேசிய இனங்களில் இரண்டு விதமான போக்குகள் இருக்கின்றன. கேரளாவை எடுத்துக் கொள்ளுங்கள். மலையாளத் தேசியம் என்று ஒன்று இருக்கிறது. ஆனால் அது இந்திய…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 36: களத்தூரின் அமைப்பு
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 35 தொடர்ச்சி) அத்தியாயம் 20 தொடர்ச்சி களத்தூரின் அமைப்பு களத்தூர் சீவநதியாகிய வடவெள்ளாற்றின் கரையிலுள்ளது. பலவகை சாதியினரும் நிரம்பப் பெற்றது. முகம்மதியர்கள் கொடிக்கால் வைத்துக்கொண்டு சுகமாக வாழ்ந்து வந்தனர். அவர்களிற் சிலர் தமிழ்நூற் பயிற்சியுடையவர்களாக இருந்தனர். அவ்வூரில் ஓர் அக்கிரகாரம் உண்டு. அதில் சிரீ வைணவர்கள், மாத்துவர்கள், தெலுங்கர்கள், மார்த்தர்கள் என்னும் வகையினர் வாழ்ந்து வந்தனர். சிவ விட்ணு ஆலயங்களில் விட்ணு ஆலயம் பிரபலமானது. துருக்கை முதலிய தெய்வங்களின் ஆலயங்களும் உண்டு. பல இடங்களில் நந்தவனங்களும் தோட்டங்களும் இருந்தன. களத்தூரைச்…
தோழர் தியாகு எழுதுகிறார் 100 : பதிவுகள் தளத்தில் செவ்வி 7
(தோழர் தியாகு எழுதுகிறார் 99: பதிவுகள் தளத்தில் செவ்வி 6 – தொடர்ச்சி) பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 7 இதற்குப் பிற்பாடு தலைமை தொடர்பான கேள்வி வருகிறது. குமுகிய(சோசலிச)ப் புரட்சிக்குப் பாட்டாளி வருக்கம் தலைமை தாங்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு கருத்தியல் தலைமையாவது வேண்டும். ஆனால் இதற்கு அப்படிக் கிடையாது. இது ஒரு புரட்சிகரச் சனநாயகக் கட்டம் என்பதால் ஒரு பொதுவான புரட்சிகரத் தலைமை வேண்டும். எல்லாச் சக்திகளையும் இணக்கப்படுத்துவதற்குப் புரட்சிகரமான முறையில் ஒன்றுபடுத்துவதற்கு – பொது எதிரிக்கெதிராக இந்த அணிவகுப்பை…
கலைச்சொல்லும் குறளும்: பாராட்டிற்குரிய தலைமைச் செயலரின் அறிவுறுத்தலும் மலரும் பணி நினைவும்- இலக்குவனார் திருவள்ளுவன்
கலைச்சொல்லும் குறளும்: பாராட்டிற்குரிய தலைமைச் செயலரின் அறிவுறுத்தலும் மலரும் பணி நினைவும் தலைமைச்செயலர் முனைவர் வெ.இறையன்பு, முந்நாள் முன்னர் அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தம் வழங்கியுள்ளார். பொதுவான பணி குறித்த அறிவுரையோ கட்டளையோ அல்ல இது. தமிழ் வளர்ச்சிக்கு உதவக் கூடிய, தமிழ் உணர்வைப் பரப்பக்கூடிய நல்லுரை. அவர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அன்றாடம் பொருளுடன் கூடிய ஒரு திருக்குறளைக் கட்டாயம் கரும்பலகையில் எழுதிவைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் ஆட்சி சொல்லகராதியில் உள்ள சொற்களில் நாள்தோறும் ஓர் ஆங்கில சொல்லையும் அதற்குரிய…
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 34: புலவரும் ஊர்ப்பெயரும்
( ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 33 தொடர்ச்சி) புலவரும் ஊர்ப்பெயரும் புலவரும் ஊர்ப்பெயரும் சங்க இலக்கியம் என்று சொல்லப்படுகின்ற எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் நூல்களில் பல புலவர்கள் இயற்றிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அன்னவருள் ஊர்ப் பெயராற் குறிக்கப் பெற்றவர் சிலர். ஊர்ப் பெயரோடு தொடர்ந்த இயற் பெயர்களாற் குறிக்கப் பெற்றவர் சிலர். அப் பெயர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறந்த இடம் பெறுவனவாகும். பொதும்பிற் புலவர் பொதும்பில் கிழார் என்பது ஒரு பழம் புலவர் பெயர். அவரும், அவர் மைந்தராகிய…
தோழர் தியாகு எழுதுகிறார் 99 : பதிவுகள் தளத்தில் செவ்வி 6
(தோழர் தியாகு எழுதுகிறார் 98: பதிவுகள் தளத்தில் செவ்வி 5 – தொடர்ச்சி) பதிவுகள் தளத்தில் தோழர் தியாகு செவ்வி 6 யமுனா : பொதுவாக மார்க்குசியத்தின் தேசியம் தொடர்பான அணுகுமுறையை இடித்தாய்வு செய்யும்(விமர்சிக்கும்) போது மார்க்குசியம் இரண்டு விசயங்கள் தொடர்பாக வரலாற்று முறையிலான – அடம்பிடித்த படியிலான தவற்றைச் செய்திருக்கிறது என உரொனாலுடு மங்கு(Ronald Mang) தனது நூலில் குறிப்பிடுகிறார். பெண்கள் தொடர்பான சிக்கலையும் தேசியம் தொடர்பான சிக்கலையும் அணுகிய விதம் அதனது புரட்சிகரத் தன்மைக்கே அவையிரண்டும் சவாலாக உருவாக வேண்டிய சூழலை உருவாக்கி…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 38: பழந்தமிழ்ச் சொல் அமைப்பு தொடர்ச்சி
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 37: பழந்தமிழ்ச் சொல் அமைப்பு- தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 38 9. பழந்தமிழ்ச் சொல் அமைப்பு- தொடர்ச்சி இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கு ஏற்றம் தரும் நோக்கோடு உட்பிணைப்பு மொழியே உயர் நாகரிகத்தைக் காட்டும் என்று கூறியதை அறிஞர் உலகம் ஏற்காது. தமிழ்மொழி ஒட்டுநிலைக்குரியதாகக் காணப்படுவதால் தமிழர் நாகரிகத்தால் தாழ்ந்தவர் என்று கூறிவிடுதல் பொருந்தாது. தமிழில் ஒட்டுநிலையும் உள்ளது; உட்பிணைப்பு நிலையும் உள்ளது. தெளிவான முறையில் பொருளை விளக்கவும் சொற்களை உருவாக்கவும் துணைபுரிவது ஒட்டுநிலையேயாகும். தெளிவுக்கும் எளிமைக்கும் இனிமைக்கும்…
