தோழர் தியாகு எழுதுகிறார் 56 : சிறையச்சம் வெல்வோம்!
(தோழர் தியாகு எழுதுகிறார் 55 தொடர்ச்சி) சிறையச்சம் வெல்வோம்! புயல் மழைச் சேதம் பற்றிய என் வினவலுக்கு விடையாகத் தாழி அன்பர் பொன்முருகு கவின்முருகு எழுதுகிறார்: எனது மகன் கவின்அமுதன் சென்னையில் பாதுகாப்பாக இருக்கிறார். உசாவிக் கேட்டறிந்தேன். இம்மடலில் தாழி என்பதை முடக்கப்பட்ட இடம் என்ற பொருளில் தாழியில் பாதுகாப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ‘தாழி’ வீட்டுச்சிறை என்ற பொருளையும் தருகிறது.நல்லது அன்பரே! தாழி, சிறை என்றும் பொருள் தருமானால் மகிழ்ச்சி. அது என் தாய்வீடு. அங்குதான் நான் நானாகப் பிறந்தேன். சிறை என்பது மதில்சூழ்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 32
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 31 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 32 சொல் ஒன்று தன்னை உணர்த்தாது தன்னோடு தொடர்புடையதனை உணர்த்தும். இதனை ஆகுபெயர் என்பர். தாமரை போன்ற முகம் என்பதில் தாமரை இலை, கொடி முதலியவற்றை உணர்த்தாது அதன் பூவை உணர்த்தி நிற்கின்றது. இவ்வாறு வரும் ஆகுபெயர் வகைகளை, முதலிற் கூறும் சினையறி கிளவியும் சினையிற் கூறும் முதலறி கிளவியும் பிறந்தவழிக் கூறும் பண்புகொள் பெயரும் இயன்றது மொழிதலும் இருபெயர் ஒட்டும் வினைமுதல் உரைக்கும் கிளவியொடு தொகைஇ …
இராமதாசின் ஆங்கிலப்பெயர்களை அழிக்கும் நல்ல முயற்சியும் வணிகர் சங்கத்தின் பொல்லா அறிவிப்பும் – இலக்குவனார் திருவள்ளுவன்
இராமதாசின் ஆங்கிலப்பெயர்களை அழிக்கும் நல்ல முயற்சியும் வணிகர் சங்கத்தின் பொல்லா அறிவிப்பும் . “ஒரு மாதத்துக்குள் கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை வைக்கவேண்டும். இல்லையெனில், கருப்பு மை வாளியோடும், ஏணியோடும் நாங்கள் வருவோம்” என வணிகர்களுக்குப் பாமக நிறுவனர் மரு.இராமதாசு சில நாள் முன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாராட்ட வேண்டிய முயற்சி! இதற்கு எதிர்வினையாக வணிகர் சங்கத்தலைவர் விக்கிரமராசா, தமிழில் பெயர்ப் பலகை இல்லாத கடைகளில் மையிட்டு அழிப்போம் என்ற நிலைப்பாட்டை தவிர்க்க வேண்டும் எனவும், இவ்விவகாரத்திற்கு ஒரு மாத அவகாசம் என்பது போதாது…
தோழர் தியாகு எழுதுகிறார் 55: இரோசிமா-நாகசாகி
(தோழர் தியாகு எழுதுகிறார் 54 தொடர்ச்சி) இரோசிமா- நாகசாகி:மாந்தக் குலம் மறக்கலாகாத பேரழிவுப் பெருஞ்சான்றுகள் ஒரு கற்பனை! கற்பனைதான்! உக்குரைன் போரில் வல்லரசியக் கனவுகள் கலைந்து போன நிலையில் உருசிய அதிபர் புதின் தன் அச்சுறுத்தலைச் செயலாக்கினால்… எண்ணிப் பார்க்க முடியாத பேரழிவு நேரிடும் என்பதில் ஐயமில்லை. உருசிய உக்குரைன் போரை நாம் எதிர்க்க ஒரு முகன்மையான காரணம் அது அணுவாய்தப் போராக முற்றும் ஆபத்து உள்ளது என்பதாகும். உருசியா உக்குரைன் மீது அணுவாய்தப் போர் தொடுத்தால், எவ்வளவு சிறிய அளவில் தொடுத்தாலும், எந்தச்…
தமிழ்நாடும் மொழியும் 32: பிறநாட்டார் ஆட்சிக் காலம் – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி
(தமிழ்நாடும் மொழியும் 31: பிறநாட்டார் ஆட்சிக் காலம் தொடர்ச்சி) 8. பிறநாட்டார் ஆட்சிக் காலம் தொடர்ச்சி மைசூர் மன்னர்கள் மைசூர் மன்னர்கள் ஆதிக்கம் தமிழ்நாட்டில் கி. பி. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஏறத் தாழ 180 ஆண்டுகளில் மெல்ல மெல்லப் பரவிற்று. திருமலை நாயக்கர், சொக்கநாத நாயக்கர் என்பவர்கள் ஆட்கிக் காலத்தில் மைசூர் மன்னன் காந்திர அரசனது படை கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களில் பல இடங்களை வென்று, திண்டுக்கல்வரை வந்து வாகை சூடிச் சென்றது. இவனுக்குப்பின் பட்டமேறிய தொட்டதேவன் காலத்தில் சேலம், தாராபுரம் முதலிய…
தோழர் தியாகு எழுதுகிறார் 54 : சொல்லாத கருத்து, பேசாத வார்த்தை!
(தோழர் தியாகு எழுதுகிறார் 53 தொடர்ச்சி) சொல்லாத கருத்து, பேசாத வார்த்தை! தாழி அன்பர் சிபி எழுதியதை சென்ற மடலில் கண்டோம்.“நீங்கள் அவ்வாறு கூறவில்லை, சத்தியசீலன் அவ்வாறு கூறியுள்ளார்” என்கிறார் சிபி. அவ்வாறு என்றால் எவ்வாறு?“ஈழத்தில் பிரபாகரன் ஈவெராவையோ திராவிடத்தையோ குற்றாய்வு செய்யவில்லை என்பதால் இங்கு யாரும் அதனைச் செய்யக் கூடாது என்பது ஏற்புடையதல்ல.” (தாழி மடல் 33.)ஏற்புடையதல்லாத இந்தக் கூற்று என்னுடையதன்று என்பதை சிபி ஏற்றுக் கொள்கிறார். நல்லது, நான் விடுவிக்கப்பட்ட வரை மகிழ்ச்சி. நான் தவறாகப் புரிந்து கொண்டிருந்தாலும் வருந்துகிறேன்.அப்படியானால் சத்தியசீலன்…
தோழர் தியாகு எழுதுகிறார் 53: 2022ஆம் ஆண்டிற்கான துய்ச்சர் நினைவுப் பரிசு
(தோழர் தியாகு எழுதுகிறார் 52 தொடர்ச்சி) தோழர் சமந்தா எழுதுகிறார்:2022ஆம் ஆண்டிற்கான துய்ச்சர் நினைவுப் பரிசு • ஒவ்வோராண்டும், மிகச் சிறந்த, புதுமையான மார்க்குசிய நூலுக்குத் துய்ச்சர் நினைவுப் பரிசு வழங்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டுக்கான துய்ச்சர் நினைவுப் பரிசு கேபிரியல் வினண்டு எழுதிய “அடுத்த மாற்றம்: துருவேறிய அமெரிக்கப் புறநகரில் தொழிற்சாலையின் வீழ்ச்சியும், சுகாதாரப் பராமரிப்பின் எழுச்சியும்” (The Fall of Industry and the Rise of Health Care in Rust Belt America) என்ற நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. கேப்ரியல் வினன்ட்…
8. புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 3/3 – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்
(புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 2/3 தொடர்ச்சி) 8. புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 3/3 ‘கலப்பு மணம் ஒன்றே நல்வழிக்குக் கைகாட்டி’ என்று கலப்பு மணத்தை ஆதரிக்கும் கவிஞர், விதவைத் திருமணத்தையும் முதன் முதலில் பெரிதும் வற்புறுத்திக் கவிதைப் புரட்சி செய்தவர் ஆகிறார். “வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோபாடாத தேனீக்கள் உலவாத் தென்றல்பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?”– பாரதிதாசன் கவிதைகள் : முதல் தொகுதி, என்ற வினாவினைச் சமுதாயத்தினை நோக்கி எழுப்புகின்றார். ‘ஒரு கட்டழகன் திருத்தோளினைச் சார்ந்திடச் சாத்திரம்…
சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 663 -670
( தமிழ்ச்சொல்லாக்கம் 654-662 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 663- 670 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 663. பிரதமை திதி – முதல்நாள் 664. துவிதியை திதி – இரண்டாம் நாள் 665. திரிதியை திதி – மூன்றாம் நாள் 666. சதுர்த்திய திதி – நான்காம் நாள் 667. பஞ்சமி திதி – ஐந்தாம் நாள் 668. சசுட்டி திதி – ஆறாம் நாள் முருகன் வரத்தில் அசுரர்கள் பிறந்து தேவர்களுக்கிடுக்கண் செய்வதையொழிக்க சிவன் தனது மனையாளிடம் மோகிக்குங்கால் அவர் கண் வழியாக ஐப்பசி மாத…
தோழர் தியாகு எழுதுகிறார் 52 : சொல்லடிப்போம் வாங்க! (7)
(தோழர் தியாகு எழுதுகிறார் 51 தொடர்ச்சி) சொல்லடிப்போம் வாங்க! (7) அன்பர் சிபி எழுதுகின்றார்:ஆழ-கடல் என்பதில் உயிரொலி மெய்யொலியோடு புணர அகரம் கெடும். இவ்விதி தாரள-இயம் என நிலைமொழியிலும் வருமொழியிலும் உயிரொலி நிற்கும் நிலைக்குப் பொருந்தா என எண்ணுகிறேன். சிபி சுட்டும் இலக்கணம் சரி என்று இலக்குவனார் திருவள்ளுவன் சொல்லி விட்டார். இந்தப் புதிய மடல் குறித்தும் அவர் கருத்தறிவோம்! சொல்லாய்வறிஞர் அருளியாரிடமும் பேசுகிறேன். அது வரை முடிவெடுப்பதைத் தள்ளி வைத்து விட்டு மற்ற சொல்லாக்கங்களில் கவனம் செலுத்துவோம்.Imperiaslism = ஏகாதிபத்தியமா? வல்லரசியமா? அல்லது…
தோழர் தியாகு எழுதுகிறார் 51:நகர்ப்புறக் குடியிருப்பு-நிலவுரிமைக் கூட்டமைப்பின் அறைகூவல்
(தோழர் தியாகு எழுதுகிறார் 50 தொடர்ச்சி) நிலவுரிமைக்காக போராடுவோம்! சென்னை பூர்வகுடி-உழைக்கும் மக்களின் நிலத்தின் மீதான உரிமை மெல்லமெல்லப் பறிக்கப்பட்டு அவர்கள் ஏதுமற்றவர்களாக மாற்றப்பட்டு வருகிறார்கள். நகரமயமாதல், ஊர்ப்புறங்களில் வேலையின்மை போன்ற காரணங்களால் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு மக்கள் இடம்பெயரத் தள்ளப்படுகின்றனர். பல்வேறு தரப்பட்ட மக்களின் வருகை தமிழ் மக்களின் ஓர்மை உணர்வையும் மண்ணின் மைந்தர்கள் என்ற ஒற்றுமை உணர்வையும் இழக்கச் செய்கிறது. தனியார்மயம் நிலத்தை வணிகப் பொருளாக்கி அதனைப் பெருமுதலாளர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வகை செய்கிறது. புதுத்தாராளியக் கொள்கை நகரங்களை முழுவதுமாக முதலாளர்களிடம்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 29
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 28 தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 17தருமம் வளர்த்த குன்னம் உத்தமதானபுரத்தில் நாங்கள் சில காலம் இருந்த போது என் தந்தையார் பாபநாசம் முதலிய இடங்களில் உள்ள செல்வர்களிடம் சென்று வருவார். ஒருமுறை பாபநாசத்திற் சில பிரபுக்களுடைய வேண்டுகோளின்படி சில தினங்கள் நந்தனார் சரித்திரக் கீர்த்தனங்களை அவர் பாடிப் பொருள் கூறி வந்தார். சரித்திரம் நிறைவேறியவுடன் அப்பிரபுக்கள் 70 உரூபாய் (20 வராகன்) சேர்த்துச் சம்மானம் செய்தார்கள். என் தந்தையாருடைய கதாப்பிரசங்கத்தின் முடிவில் இருபது வராகன் சம்மானம் அளிப்பதென்பது ஒரு பழக்கமாகி…
