தமிழ்நாடும் மொழியும் 33: மக்களாட்சிக் காலம் – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி

(தமிழ்நாடும்மொழியும் 32: பிறநாட்டார்ஆட்சிக்காலம் – தொடர்ச்சி) 9. மக்களாட்சிக் காலம் ஆங்கிலேய ஆட்சியினால் பல நன்மைகள் நாம் அடைந்தோம் என முன்னர் நாம் கண்டோம். ஆனால் நமது செல்வம், தொழில் திறன், வாணிகக் களம் ஆகியவற்றை நன்கு பயன்படுத்திய பிரிட்டன் உலக வாணிகப் பேரரசாக விளங்கலாயிற்று. இதன் காரணமாய் நாம் நமது தொழில் மரபு, வாணிக மரபு இவற்றை இழந்தோம். மேலும் கடல் வாணிகம், கடற்படை, நிலப்படை, ஆயுதம் ஆகியவற்றின் உரிமைகளையும் நம் நாடு இழந்தது. வெற்றி வீரர்களாய் விளங்கிய நம் மக்கள் வீரமிழந்து…

ஆட்சியாளர்கள் பின்பற்றத் தவறும் திருக்குறள்கள்: 1.மொழி, இன , நாட்டுப் பற்றில்லாதவரைத் தேர்ந்தெடுக்காதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆட்சியாளர்கள் பின்பற்றத் தவறும் திருக்குறள்கள் எக்காலத்திற்கும் எல்லாவர்க்கும் ஏற்ற வாழ்வியல் நூல் திருக்குறள். திருவள்ளுவர் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நேர்மறையாகவும் அறிவுரை வழங்கி யுள்ளார். எப்படி இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி எதிர்மறையாகவும் அறிவுரை வழங்கி உள்ளார்.  எப்படி நாம் நடந்து கொள்ளக் கூடாது என்பது, நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறியுரையே ஆகும். இந்நெறியுரை ஆட்சியாளருக்கு, அமைப்பின் தலைவருக்கு, என வெவ்வேறு நிலையில் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் உள்ளவர்க்கு, வழிகாட்டியாக இவை உள்ளன. எனவே, அனைவரும் இவற்றைப் பின்பற்ற வேண்டும்….

தோழர் தியாகு எழுதுகிறார்  61

(தோழர் தியாகு எழுதுகிறார் 60 தொடர்ச்சி) சமந்தா எழுதுகிறார் பொருளியல்: 1.   தொழிலாளர் உரிமைக் குரல் Ø   இருபது நாடுகள் குழு(G-20) கூட்டமைப்பின் தொழிலாளர் தொடர்பான சிக்கல்களை விவாதிக்கும் அமைப்பாக த20(L 20) உள்ளது. கடும் கண்டனத்துக்குரிய வகையில் தேசியத் தொண்டர் அணி (ஆர்.எசு.எசு.), ஆதரவு இந்தியத் தொழிலாளர்கள் ஒன்றியத்தை  (Bharatiya Mazdoor / Sangh BMS) த -20இன் தலைவராக நியமித்துள்ளது பாசக அரசு. இ.தொ.ச.மையம்(சி.ஐ.டி.யு.), இ.தொ.ச.பே.(ஐஎன்டியுசி), இ.தொ.அ.(HMS) முதலான  10 மத்தியத் தொழிற்சங்கங்கள் ஈகியர் நாளான  சனவரி 30ஆம் நாள் தில்லியில் கூடி,…

சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 1/5 – முனைவர் சி.பாலசுப்பிரமணியன்

(புதுவை தந்த புரட்சிக் கவிஞர் 3/3 தொடர்ச்சி) 9. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை 1/5 தோற்றுவாய் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றித் தமிழ் வளர்த்த பெரியார்களுள் ஒருவர்; திரு. வி. க. மறைமலையடிகள் போன்றோரின் சமகாலத்தவர்; ‘செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை’ என்று சுத்தானந்த பாரதியாரால் போற்றப்பட்டவர்; ‘சொல்லின் செல்வர்’ என்று சீராட்டப் பெற்றவர்; தமிழ் இலக்கிய அரங்கில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்; உரைநடை உலகில் எழுச்சியையும் மறுமலர்ச்சியையும் உண்டாக்கியவர்; பழமையான கவிதைக்கும், புதுமையான உரைநடைக்கும் இடையே சேதுவாகத் திகழ்ந்தவர்; தமிழ் ஆர்வத்துடன் தமிழ் ஆராய்ச்சித் திறனையும் பரப்பியவர்;…

தோழர் தியாகு எழுதுகிறார்  60

(தோழர் தியாகு எழுதுகிறார் 59 தொடர்ச்சி) அன்பர் டி. சீனிவாசன் எழுதுகிறார்: தாழி மடலுக்கு மிக்க நன்றி ஐயா. அவற்றை ஒரு வலைப்பதிவில் பதிவு செய்து வருமாறு வேண்டுகிறேன். பெரும் பெட்டகமாக இருக்கும். நுட்ப உதவிகள் வேண்டுமெனில் செய்து தர இயலும். உங்கள் படைப்புகளை யாவரும் பகிரும் வகையில் படைப்புப் பொது உரிமையில் (கிரியேட்டிவ் காமன்சு உரிமையில்) பகிர்ந்தமைக்கு பல்லாயிரம் நன்றிகள். +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ பெயரிலேயே அன்பு வைத்துள்ள அன்பர் அன்பரசு மாரி எழுதுகிறார்: தங்களது தாழி மடல் கிடைக்கப்பெற்றேன்… மிக்க மகிழ்ச்சி! தங்களது பணி தொடர…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 671- 676

( தமிழ்ச்சொல்லாக்கம் 663- 670 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 671 – 676 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 671.  பூவராகம் (பிள்ளை) – நிலப்பன்றி (1930) 1929-ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருப்பெற்றது. அக்கழகத்தின் புலவர் பயிற்சிக் கல்லூரியும் புகுமுக வகுப்பும் தில்லையில் இருந்தன. 1930ஆம் ஆண்டில் பூவராகனார், இக்கல்லூரிகளின் ஆசிரியராக அமர்ந்து திறமையாகப் போதனை புரிந்தார். பிறகு 1938ஆம் ஆண்டில் புலவர் வகுப்புகட்கு ஆசிரியரானார். பூவராகனார் சிறந்த அறிவாளியாக விளங்கினாலும் பெருமிதத்தை மேற்கொண்டவரல்லர். அடக்கத்தையும் அமைதியையும் அணிகலனாகக் கொண்டிருந்தார். எப்பொழுதும் நூல்களைப் படிப்பதே இவருக்கு…

தோழர் தியாகு எழுதுகிறார்  59

(தோழர் தியாகு எழுதுகிறார் 58 தொடர்ச்சி) தருக்க முறையும் கொள்கை அறிவிப்பும் அன்பர் சிபி பெரியார்-பிரபாகரன் தொடர்பாக அன்பர் சத்தியசீலன் தொடங்கி வைத்த உரையாடலைத் தொடரும் வகையில் பின்னவரின் மடலிலிருந்து ஒரு சொல்லியத்தைத் திரையடி எடுத்து அனுப்பியுள்ளார். இதுதான் அது:   ___புலிகள் எவ்விடத்திலும் திராவிட இயக்கத்தைச் சாடியதாக நான் குறிப்பிடவில்லை – மாறாக அவர்களின் புகழ் பாடிக் கொண்டே அவர்கள் செய்யாத செயலை இவர்கள் ஏன் செய்ய வேண்டும்?___ “இனவாதிகள்” பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் சாடுவதாகச் சொல்லி, அதற்கான பழியைப் புலிகள் மீதும்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 30

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 29 தொடர்ச்சி) என் சரித்திரம் தொடர்ச்சி அத்தியாயம் 17 தருமத்தை இவ்வாறு வளர்த்து வந்த கிராமங்களுள் குன்னம் ஒன்று. அங்கே அடிக்கடி புலவர்களும் கவிராயர்களும் பாகவதர்களும் இவர்களைப் போன்றவர்களும் வந்து சில தினம் இருந்து தங்கள் தங்கள் ஆற்றலைக் காட்டிப் பரிசு பெற்றுச் செல்வார்கள். புலவர் வருகை திருநெல்வேலியைச் சார்ந்த புளியங்குடி முதலிய இடங்களிலிருந்தும் கோயம்புத்தூர், சேலம் முதலிய இடங்களிலிருந்தும் கூட்டம் கூட்டமாகவும் இருவர் மூவராகவும் தனியாகவும் புலவர்கள் வருவார்கள். எல்லாரும் இலக்கண இலக்கியப் பயிற்சி நிரம்ப உடையவர்க ளென்று சொல்ல…

தோழர் தியாகு எழுதுகிறார்  58: தோழர் தியாகுவை விடாது உழைக்க விடுவோம்! – நலங்கிள்ளி

(தோழர் தியாகு எழுதுகிறார் 57 தொடர்ச்சி) நலங்கிள்ளி எழுதுகிறார்: தோழர் தியாகுவை விடாது உழைக்க விடுவோம்! தோழர் தியாகு “தாழி மடல்” என்னும் இதழை மின்ம அஞ்சல் வழி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடத்தி வருகிறார். தியாகு எழுதுவது அனைத்தும் அறிவுச் சுரங்கத்தைச் சளைக்காமல் தேடும் பணியே! அதனைத் “தாழி மடல்” மீண்டும் மெய்ப்பித்துள்ளது. தாழி மடல் வாசகர்கள் தோழர் தியாகுவிடம் அவர் எழுதும் எழுத்துகள் குறித்து வினாத் தொடுக்கலாம். வினாக்களுக்கு அடுத்தடுத்த இதழ்களில் விடையிறுக்கப்படும். தாழி மடலைத் தொடர்ந்து படித்து வரும் எனக்கு…

தயிருக்குப் பொங்கிய முதல்வர் எல்லாவற்றிற்கும் பொங்க வேண்டும்!: தமிழுக்குச்செய்ய வேண்டிய ஆயிரம் 24 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஒன்றிய அதிகாரிகளுக்குள்ள மொழி உணர்வு தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கும் வேண்டும்! தொடர்ச்சி) தயிருக்குப் பொங்கிய முதல்வர் எல்லாவற்றிற்கும் பொங்க வேண்டும்! – தமிழுக்குச்செய்ய வேண்டிய ஆயிரம் 24 ஆவின் தயிர் உறைகளில் தஃகி என இந்தியில் குறிக்க வேண்டும் எனச் சில நாள் முன்னர்  ஒன்றிய உணவுப் பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) அறிவித்தது. முதல்வர் மு.க.தாலின் உடனடியாக எதிர்வினையாற்றித்  “தொலைந்துவிடுவீர்கள்” என எச்சரிக்கை விட்டுள்ளார். (வழக்கம்போல் முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர் மரு.இராமதாசுதான்.) முதல்வர் கண்டனம் தெரிவித்து இந்தித்திணிப்பு முயற்சிக்குத் தயிர் உறைகளில் முற்றுப்புள்ளி…

தோழர் தியாகு எழுதுகிறார்  57; வட்டியை உயர்த்தி வறியோரை வாட்டி – சமந்தா

(தோழர் தியாகு எழுதுகிறார் 56 தொடர்ச்சி) சமந்தா எழுதுகிறார்: பொருளியல்: வட்டியை உயர்த்தி வறியோரை வாட்டி… பசித்தவர் புசிக்க உணவு தர வேண்டும்.. உணவா?… தவித்த வாய்க்குத் தண்ணீர் கூடத் தராமல் காயப் போடுவதுதான் இந்தியா உட்பட அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளின் வாடிக்கையான நடைமுறையாக உள்ளது. அதன் படி, இந்தியச் சேம( ரிசர்வு) வங்கியின் ஆறு உறுப்பினர் கொண்ட பணவியல் கொள்கைக் குழு, திசம்பர் 5 முதல் 7 வரையிலான தனது இருமாதக் கொள்கைக் கூட்டத்தில் வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய காலக் கடனுக்கான வட்டி விகிதமான மறு கொள்முதல் ஒப்பந்தம்(‘ரெபோ’) விகிதத்தை 0.35% உயர்த்தியுள்ளது.  ம.கொ.ஒ.(ரெபோ)விகிதம் 5.9%இலிருந்து 6.25%ஆக உயர்ந்துள்ளது. இதனால் கல்வி, வாகனம், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் உயரும். சேம…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):28

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 27. தொடர்ச்சி)   ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):28   4. குலமும் கோவும் தொடர்ச்சி சனநாத சோழன்     இராசராசனுக்கு அமைந்த விருதுப் பெயர்களில் ஒன்றாகிய சனநாதன் என்பது அவனது அரசியற் கொள்கையைக் காட்டுகின்றது.        “குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்        அடிதழீஇ நிற்கும் உலகு” என்னும் திருவள்ளுவர் கருத்துப்படி சனநாயகத்தின் உரிமையையும் பெருமையையும் இராசராசன் நன்றாக உணர்ந்திருந்தான் என்பது இவ்விருதுப் பெயரால் விளங்குவதாகும். தென்னார்க்காட்டிலுள்ள அகரம் என்னும் ஊர் சனநாத சதுர்வேதிமங்கலம் எனச் சாசனத்திற்…