மறக்க முடியுமா? – ஔவை துரைசாமி – எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? – உரைவேந்தர் ஔவை சு.துரைசாமி   கல்வெட்டுகளைப் படியெடுத்தல், ஏடுபார்த்து எழுதுதல், செப்பேடுகளைத் தேடி ஆய்வு செய்தல் ஆகியனவற்றில் தேர்ந்த இலக்கிய – இலக்கண ஆய்வறிஞர், உரைவேந்தர், நாவலர், பேரவைத் தமிழ்ச்செம்மல், சித்தாந்த கலாநிதி என்று தமிழ் உலகத்தால் போற்றப்பட்டவர் ஔவை சு.துரைசாமி(பிள்ளை) அவர்கள். கவிஞர் சுந்தரம்(பிள்ளை), சந்திரமதி அம்மையாரின் ஐந்தாம் மகனாகப் பிறந்தவர் இவர். பிறந்த ஆண்டு  : ஆவணி 21, 1933 / 1902 செட்டம்பர் 5. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவரின் சொந்த ஊர் ஔவையார் குப்பம்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙீ) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙி) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙீ) பேராசிரியர் இலக்குவனாரின் உழைப்பால் மக்களிடையே ஏற்பட்ட தமிழுணர்வை அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் ஏறிய தி.மு.க. ஆட்சியிலும் இதே அவலம்தான் தொடர்ந்தது. 1968இல் சென்னையில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டிலும், தமிழ்மொழிப்பற்றும் தாங்கிய புலமையும்  இல்லோரெல்லாம் இனிதிடம் பெற்றனர் எம்போன்றோரை எள்ளியே தள்ளினர் எனப் பேராசிரியர் இலக்குவனார் வருந்தும் அளவிற்குத் தமிழ்ப்பகைவர்க்கு முதன்மை அளிக்கப்பட்டது. பகைவரையும் நட்பாக்க வேண்டும் என உணர்ந்தவர்கள் அன்பர்களின் சிறப்பைப் புறக்கணிக்கும் போக்கு இருந்தது. இருப்பினும் கட்டணம் செலுத்திப் பேராளராகப்…

பா.ச.க.வை அசைத்துப்பார்க்கும் வாய்ப்பு அதிமுக மக்கள் சார்பாளர்களுக்கு! – இலக்குவனார் திருவள்ளுவன்

பா.ச.க.வை அசைத்துப்பார்க்கும் வாய்ப்பு அதிமுக மக்கள் சார்பாளர்களுக்கு!     ஆடி 01, 2048 /சூலை 17, 2017  அன்று இந்தியாவின் குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. நாட்டின்போக்கை மாற்றச் செய்வதற்குத் தன்மான உணர்வு உள்ள அதிமுக மக்கள்சார்பாளர்களுக்கு நல்ல வாய்ப்பு!  இந்தியாவின் 14 ஆவது குடியரசுத்தலைவர் பதவிக்கான வேட்பாளர்களாகக் களத்தில் இரு்பபவர்கள், பா.ச.க. அணியின், இராம்நாத்து கோவிந்து(Ramnath Kovind) எதிர்க்கட்சிகள் அணியின்  மீரா குமார்(Meira Kumar) ஆகிய இருவர் மட்டுமே! கட்சி வாக்குகள் அடிப்படையில் பா.ச.க.வின் வெற்றி வாய்ப்பு என்பது எழுதப்பட்டதாகத் தெரிகிறது….

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙி) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙா) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙி)   இவ்வாறு பேராசிரியர் இலக்குவனார் தமிழ்க்கடமையே  கண்ணாகப் பணியாற்றினாலும் பணியிலும் சிக்கல்கள் தவறாமல் தொடர்ந்தன. ஆனால், முதல்வரான பேரறிஞர் அண்ணாவின் கருத்திற்கு இதைக் கொணரப் பேராசிரியர் இலக்குவனார் விழையவில்லை. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆளும்கட்சியாய்த் தி.மு.க.மாறியதுமே “எங்களில் ஒருவர் நீங்கள்” எனக் கூறினார்கள். இவ்வாறு அமைச்சரவையில் பேராசிரியர் சேர வேண்டும் என்பதைப் பேரறிஞர் குறிப்பாக உணர்த்தினார். ஆனால் மூத்த தலைவர்கள் நீங்கள் அமைச்சர்களுக்கெல்லாம் அமைச்சராக விளங்குகிறீர்கள்; உங்களுக்குக் கட்சி அரசியல் ஒத்து…

சங்க இலக்கியம் பாடப்பட்ட காலமும் தொகுக்கப்பட்ட காலமும் வெவ்வேறு! – பேராசிரியர் சி.க. சிற்றம்பலம்

சங்க இலக்கியம் பாடப்பட்ட காலமும் தொகுக்கப்பட்ட காலமும் வெவ்வேறு! – பேராசிரியர் சி.க. சிற்றம்பலம்

சித்தர்கள் கூறும் இரகசியங்கள் – சுந்தர அறிமுகம்

நீதிபதி தி.நெ.வள்ளிநாயகம் மேனாள் நீதியரசர் – உயர்நீதிமன்றம், கருநாடகா & சென்னை, நிறுவனர் – மனித உரிமைகள்  குழு. ‘சீதாநெல்’, எண்.20 /28, கிருட்டிணா தெரு, தியாகராயநகர், சென்னை – 600 017. தொலைபேசி: 044-42606222 ; கைப்பேசி: 98404 99333   சுந்தரஅறிமுகம்                 ஞானத்திலே பல்வகை உண்டு என ஞானிகள் அன்று வகுத்தனர். அதிலே தலை சிறந்த ஞானம் கற்பூர ஞானம். (கற்பூர புத்தி என்று வழக்காடு மொழி வழங்கும்) அத்தகு ஞானம் நிறைந்தவன் பிறந்துவிட்டான் என்று முக்காலம் உணர்ந்த பெற்றோர்கள்…

சித்தர்கள் கூறும் இரகசியங்கள் -அணிந்துரை

டி.வி.வெங்கட்டராமன், இ.ஆ.ப., (ப.நி.), முன்னாள் தலைமைச்செயலாளர், தமிழ்நாடு அரசு. நூலாசிரியர், திருமூலர் அருளிய திருமந்திரம் – அனுபவ உரை.      6, (17), முதல்  நிழற்சாலை, இந்திரா நகர், சென்னை – 600 020. தொலைபேசி: 044-24417705 அணிந்துரை           அருமை நண்பர் இரா.கற்பூரசுந்தரபாண்டியன் அவர்களும் அவருடைய மனைவியார் திருமதி. சாந்தா அவர்களும் ‘சித்தர்கள் கூறும் இரகசியங்கள்’ என்ற தலைப்பில் வழங்கியுள்ள இந்த கட்டுரைத் தொகுப்பினை படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். சித்தர் இலக்கியத்திற்கு இந்தத் தம்பதியர் அளித்துள்ள படைப்பு ஒரு பெரும் பரிசாகும் என்று…