துலுக்கப்பயலே! – 1: வைகை அனிசு

  பள்ளிப்பருவத்தில் தொடங்கிக் கல்லூரிப்பருவம் வரை என் ஆழ்மனத்தில் தீண்டத்தகாத சொல்லாக இருந்த சொல் ‘துலுக்கப்பயல்’ என்பது. இப்பொழுது நான் பத்திரிக்கைத்துறையில் பணிபுரிந்தாலும் பணித்தோழர்களும் உற்ற நண்பர்களும் நான் இல்லாத இடத்தில் “அந்தத் துலுக்கனை இன்னும் காணோம்” என்று அடையாளப்படுத்தி வருவதை இன்றளவும் கண்டுவருகிறேன். சிறு பருவத்திலேயே இதற்கு விடைகாணும் பொருட்டாக என்னுடைய பாட்டனாரிடம் “முசுலிம்களை ஏன் துலுக்கன் என அழைக்கிறார்கள்” என அடிக்கடிக் கேள்வி கேட்பேன். அவர், விடுதலைப் போராட்ட ஈகையாளி(தியாகி) என்ற முறையில் ஊர், ஊராகச் சென்றவர் என்பதால் துலுக்கக் கவுண்டர்,…

தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி)      சங்கப்புலவர்கள் மரபில் அகவற்பாக்கள் பலவற்றை எழுதியுள்ள பேராசிரியர்  இலக்குவனார் அவர்கள், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய பாவகைகளிலும் பாக்கள் யாத்துச் செந்தமிழ்வளர்ச்சிக்குத் தம் பங்களிப்பை அளித்துள்ளார். விருத்தம், கண்ணி, கீர்த்தனை வடிவங்களில் இசைப்பாடல்களையும் எழுதித் தமிழிசை இயக்கத்திற்கு எழுச்சியும் ஏற்படுத்தியுள்ளார். தமிழர் தலைவர்கள் பற்றியும், தமிழறிஞர்கள் பற்றியும் பாடல்கள் எழுதியுள்ளதுடன், வாழ்த்துப் பாடல்கள், இரங்கற்பாக்கள், பொங்கல் வாழ்த்துக் கவிதைகள், திருமணநாள் வாழ்த்துகள், படையல் கவிதைகள் எனப் பல்வேறு தலைப்புகளில் பேராசிரியர் சி….

மனங்கவர்ந்த செந்தமிழ் மாமணி சி.இலக்குவனார் – பட்டுக்கோட்டை குமாரவேல்

மனங்கவர்ந்த செந்தமிழ் மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார்                 என் மனம் கவர்ந்த ஆன்றோர்களில் முதன்மையானவர் செந்தமிழ்மாமணி பேராசிரியர் சி.இலக்குவனார் ஆவார். அவரை நான் முதலில் சந்தித்த பொழுதே அவரது உருவம் என் உள்ளத்தில் நன்கு பதிந்து விட்டது. அவரது கருத்துகளும் செயல்களும் எனக்கு உந்து சக்தியாய் விளங்கி என் முயற்சிகளில் நான் வெற்றி பெறச் செய்து விட்டது. என் முன்னோடி அறிஞர் ஆன்றோர் முனைவர் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களைப் பற்றிய எண்ணத்தைப் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.                 இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 036. மெய் உணர்தல்

(அதிகாரம் 035. துறவு தொடர்ச்சி) 01.அறத்துப் பால்  03.துறவற இயல் அதிகாரம்  036. மெய் உணர்தல்   எப்பொருள் ஆயினும், அப்பொருளின் உண்மையை ஆராய்ந்தும் அறிதல்.   பொருள்அல்ல வற்றைப், பொருள்என்(று) உணரும்,      மருளான்ஆம், மாணாப் பிறப்பு.         பொய்ப்பொருள்களை, மெய்ப்பொருள்கள் என்று        உணர்தல், சிறப்[பு]இல்லாப் பிறப்பு. இருள்நீங்கி, இன்பம் பயக்கும், மருள்நீங்கி,      மா(சு)அறு காட்சி யவர்க்கு.         மயக்கத்தை நீக்கிய ஞானியார்க்கே,        தூயநல் பேர்இன்பம் தோன்றும். ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு, வையத்தின்      வானம், நணிய(து) உடைத்து….

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 035. துறவு

(அதிகாரம் 034. நிலையாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 035. துறவு  ஆசைகளை எல்லாம் அகற்றிவிட்டு வாழும், தூயநல் அறவாழ்வு.   யாதனின், யாதனின், நீங்கியான் நோதல்,    அதனின், அதனின், இலன்.   எவ்எவற்றின் பற்றுகளை விடுகிறாரோ,          அவ்அவற்றால் துன்பங்கள் இல்லை.   வேண்டின்உண் டாகத் துறக்க; துறந்தபின்,    ஈண்(டு)இயற் பால பல.     உயர்மதிப்பு வேண்டித் துறப்பார்க்குச்,        சமுதாயக் கடைமைகள் பற்பல.   அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை; விடல்வேண்டும்,    வேண்டிய எல்லாம் ஒருங்கு….

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 034. நிலையாமை

(அதிகாரம் 033. கொல்லாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 02.துறவற இயல் அதிகாரம் 034. நிலையாமை   ‘வாழ்வும், செல்வமும், நிரந்தரம் அல்ல’என ஆராய்ந்தும் உணர்தல்.   நில்லாத வற்றை, “நிலையின” என்(று),உணரும்      புல்அறி(வு) ஆண்மை கடை.                                  நிலைக்காத அவற்றை, ”நிலைக்கும்”என        உணரும் அறிவு, கீழ்அறிவு.   கூத்தாட்(டு) அவைக்குழாத்(து) அற்றே, பெரும்செல்வம்    போக்கும், அதுவிளிந்(து) அற்று.          நாடகத்தைப் பார்க்க வருவார்,        போவார்போல், செல்வமும் வரும்;போம்.   அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 033. கொல்லாமை

(அதிகாரம் 032. இன்னா செய்யாமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 033. கொல்லாமை எவ்உயிரையும் கொல்லாது, எல்லா உயிர்களையும் காப்பாற்றும் கொள்கை   அறவினை யா(து)?எனின், கொல்லாமை; கோறல்,      பிறவினை எல்லாம் தரும்.   கொல்லாமையே அறச்செயல்; கொல்லுதல்,        எல்லாத் தீமைகளையும் நல்கும்.   பகுத்(து)உண்டு, பல்உயிர் ஓம்புதல், நூலோர்    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.          பகுத்[து]உண்டு, பல்உயிர்களைக் காத்தல்,        அறங்களுள் தலைமை அறம்.   ஒன்(று)ஆக நல்லது, கொல்லாமை; மற்(று),அதன்…

தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி)   3 ஙா.) குழுக்கள்: குழுக்களில் தமிழறிஞர்களுக்கு இடமில்லை அல்லது மிகச் சிறுபான்மையராக உள்ளனர். பன்னிருவர் உறுப்பினராக உள்ள பொதுக்குழுவிலும் ஒன்பதின்மர் உறுப்பினராக உள்ள இயக்குநர் குழுமக்குழுவிலும் பதவி வழி உறுப்பினர்கள்தாம் உள்ளனர். தமிழறிஞர்கள் இல்லை. பதினொருவர் உறுப்பினராக உள்ள கல்விப் பேரவைக் குழுவில் இருவர் மட்டுமே தமிழறிஞர்கள். ஒன்பதின்மர் உறுப்பினராக உள்ள கைப்பேசி வல்லுநர் குழுவில் ஒருவர்கூடத் தமிழறிஞர் இல்லை. பத்தொன்பதின்மர் உறுப்பினராக உள்ள அறிவுரை(ஆலோசனை) நிலைக் குழுவிலும் தொடக்கத்தில் தமிழறிஞர் இல்லை….

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 032. இன்னா செய்யாமை

(அதிகாரம் 031. வெகுளாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல்   அதிகாரம் 032. இன்னா செய்யாமை   என்றும் எதற்காகவும் எங்கும் எவர்க்கும் எத்துயரும் செய்யாமை.   சிறப்(பு)ஈனும், செல்வம் பெறினும், பிறர்க்(கு)இன்னா      செய்யாமை, மா(சு)அற்றார் கோள்.          சிறப்பு தருசெல்வம் பெறுவதற்காக,          எவர்க்கும் எத்தீமையும் செய்யாதே.   கறுத்(து),இன்னா செய்தவக் கண்ணும், மறுத்(து),இன்னா      செய்யாமை, மா(சு)அற்றார் கோள்.           துன்பத்தைத் தந்தார்க்கும் துன்பத்தைத்        தராமையே தூயார்தம் கொள்கை.   செய்யாமல், செற்றார்க்கும், இன்னாத…

இளம்பெண்களைச் சிதைக்கும் ‘சுமங்கலித் திட்டம்’

  பேராசைப் பசிக்கு இரையாகும் இளம்பெண்கள்   தமிழக அரசு தொழிலாளர் நலத்துறையின் அறிக்கைப்படி 38,000 இளம் பெண்கள், தொழிற்சங்கச் சார்பாளர்கள், தொண்டு நிறுவனங்களின் கணக்குப்படி 4 நூறாயிரம் இளம் பெண்கள், ‘சுமங்கலித் திட்டம்’ என்கின்ற பெயரில் அதிக வேலைக்குக் குறைவான சம்பளம், கூடுதல் நேர வேலைக்குக் கூடுதல் சம்பளமின்மை, கட்டயாப்படுத்தி வேலை, தொழிற்சங்க உரிமை மறுப்பு, குறைவான தூக்கம், உடல் சோர்வு, பாலியல் தொந்தரவு போன்ற வன்கொடுமைகளில் வதைக்கப்படுகின்றனர்.  இன்றைய சூழலில் வேளாண் கூலிகளை விடவும் பஞ்சாலைக் கூலிகள்தான் அதிகளவில் உள்ளனர் என்பது…

இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 5 : இலக்குவனார் திருவள்ளுவன்

(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி) 5   & 8.] யாப்பருங்கலம் & யாப்பருங்கலக்காரிகை இவற்றுள், பொருளடக்கம் பகுதி மேற்பகுதியில் தேடுதல் தலைப்பின் கீழ்ப், பக்கம் தேடல் பாடல் தேடல் சொல் தேடல் உள்ளன(பட உரு 29). இருப்பினும் உள் பக்கங்களில் ‘சொல் தேடல்’ தலைப்பு இல்லை. பக்க எண் தேடல் மட்டுமே உள்ளது(பட உரு 30). யாப்பருங்கலத்தில். பொருட்குறிப்பகராதி அரும்பதம் முதலியவற்றின் அகராதி சூத்திர முதற்குறிப்பு அகராதி இலக்கண மேற்கோள் முதற்குறிப்பு அகராதி இலக்கிய மேற்கோள் முதற்குறிப்பு அகராதி…

உலக மொழிகளிலும் இந்திய மொழிகளிலும் தமிழ்ச் சொற்கள் ஏராளமாகக் கலந்திருக்கின்றன

    ஒரு காலத்தில் தமிழ்ப் பெயர்களை வடமொழிப் பெயராக ஆக்கும் இயக்கம் மும்முரமாக நடைபெற்றிருக்கிறது என்பது தெரியவருகிறது.   சைவ வைணவ ஆசிரியர்கள் காலத்தில் நமது திருக்கோயில்கள் தமிழ்ப் பெயராலேயே அழைக்கப்பட்டன. அவை வடமொழிப் பெயர்களாக மாற்றப்பட்டன. திருமரைக்காடு – வேதாரண்யம் என்றும் திருவெண்காடு, ‘சுவேதாரண்யம்’ எனவும் திருவையாறு ‘பஞ்சநதித் தலமாகவும்’ மாறியது.   சில மொழி பெயர்ப்புகள் மூலம் வடமொழியினரின் அறியாமையையும் நாம் தெரிந்து கொள்ளலாம். ‘அஞ்சல் நாயகி’ என்னும் அம்பாளுக்கு ‘அபயாம்பிகை’ என்ற பெயர் வடமொழியில் ஏற்பட்டுள்ளது. அஞ்சல் நாயகி…