திருப்புமுனைத் தேர்தலில் தி.து.வி.தினகரனுக்கு வாழ்த்து! – இலக்குவனார் திருவள்ளுவன்

திருப்புமுனைத் தேர்தலில் தி.து.வி.தினகரனுக்கு வாழ்த்து!     சென்னை, இராதா கிருட்டிணன் நகர் இடைத்தேர்தல், போட்டியிடும் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிற்கும் மத்திய ஆளுமைக்கும் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடியது.   தேர்தல் என்றாலே ஒவ்வொருவரின் வெற்றி, தோல்வியை முடிவு கட்டுவதாக அமையும். ஆனால், இந்த இடைத்தேர்தல் போட்டியிடும் சில கட்சிகளின் வாழ்வா தாழ்வா என்பதையும் முடிவுகட்டக்கூடியதாக உள்ளது. எனவே, தமிழ்நாட்டு அரசியலில் தடம் பதிக்கத் துடிக்கும், முறைமுக ஆட்சியையாவது திணிக்க நினைக்கும் பா.ச.க.விற்கும் இதன்முடிவு இன்றியமையாததாகிறது.    இத்தொகுதியில் அதிமுக பல முறை வென்றிருந்தாலும் அக்கட்சிக்கான தொகுதியாகக் கூற…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙௌ) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙோ) தொடர்ச்சி]   தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙௌ)   இந்தச் சூழலில் பேராசிரியர் இலக்குவனாருக்கு நாகர்கோயிலில் உள்ள தென்திருவிதாங்கூர்  இந்துக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர் பணி கிடைத்ததால் அங்கே சென்று தம் தொண்டுகளைத் தொடர்ந்தார். முதலில் தமிழ் முதுகலை தொடங்குவதற்குரிய ஏற்பிசைவைப் பெற்றுத் தொடங்கச் செய்தார். முதல்வராக இருந்த முனைவர் பா.நடராசன் மத்திய அரசின் பொருளியல் வல்லுநராகச் சென்றமையால் முதல்வர் பணியிடம் ஒழிவிடமாயிற்று. மூத்த பேராசிரியரான பேராசிரியர் இலக்குவனாருக்கு வரவேண்டிய முதல்வர் பதவியை வேறு சாதியினர் என்பதால் வழங்க மனமின்றி…

தமிழ் மக்களை விடுதலைப் பெருவழியில் அழைத்துச் சென்ற தந்தை செல்வநாயகம்!

தமிழ்த் தேசியத்துக்கு நீர் வார்த்து, உரம் போட்டுத் தமிழ் மக்களை விடுதலைப் பெருவழியில் அழைத்துச் சென்றவர் தந்தை செல்வநாயகம்! (ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்களது 119-ஆம் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை)  தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. இருபத்தேழு ஆண்டுகள் (1956 – 1983) அறப் போராட்டம், மேலும் 26 ஆண்டுகள் (1983 – 2009) ஆயுதப் போராட்டம், இப்பொழுது கடந்த 8 ஆண்டுகளாக அறப் போராட்டம். மீண்டும் தொடக்கப் புள்ளியில் வந்து நிற்கிறோம்.   அறப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கியவர்…

நூல்கள் வாங்குவதைக் காலமுறைப்படி ஒழுங்குபடுத்த வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

நூல்கள் வாங்குவதைக் காலமுறைப்படி ஒழுங்குபடுத்த வேண்டும்!       தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்     கற்றனைத் தூறும் அறிவு.(திருவள்ளுவர், திருக்குறள் 396)   நமது அறிவுக்கண்களைத் திறக்க உதவுவன புத்தகங்களே! அத்தகைய புத்தகங்களை நல்கும்  நூலகங்களே நமக்கு வழிகாட்டிகள். ஒவ்வொருவர் வீட்டிலும் நூலகம் இருக்க வேண்டும் என்பர் அறிஞர்கள். அவ்வாறாயின் ஒவ்வோர் ஊரிலும் நூலகம் இருக்க வேண்டுமல்லவா? தமிழ்நாட்டில் 4028  பொது நூலகங்கள்தாம் உள்ளன. இவைதவிர, கன்னிமாரா பொதுநூலகம்,  அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் என நூலகங்கள் உள்ளன. இருக்கின்ற நூலகங்களே  வளர்ச்சிநோக்கில் …

நீலிக்கண்ணீரை நிறுத்தட்டும் நடிப்புத் திலகம் இரசனிகாந்து! – இலக்குவனார் திருவள்ளுவன்

நீலிக்கண்ணீரை நிறுத்தட்டும் நடிப்புத் திலகம் இரசனிகாந்து!   நடிப்பையும் தோரணையையும் பொருத்தவரை பெரும்பாலான நேயர்களின் உள்ளத்தைக் கவர்ந்துள்ளார் இரசனிகாந்து என்பதில் ஐயமில்லை. ஆனால், அதனாலேயே அவரது சொல்லுக்குக் கட்டுப்படும் மக்கள் பெரும்பான்மையர் இருப்பதாக எண்ணினால் தவறு. மக்கள் திலகம் ம..கோ.இரா.வின் (எம்ஞ்சியாரின்) கொடை உள்ளத்துடனும் தமிழ் உணர்வுடனும் ஒப்பிடக்கூட இயலாதவர்தான் இரசனிகாந்து என்பதில் ஐயமில்லை.   பணத்துக்கு விலை போவோரால் எழுதப்பட்ட  தமிழ்உணர்வு வரிகளுக்கு இரசனிகாந்து வாயசைத்துள்ளார். ஆனால்,  சொந்தக்கருத்தாக எப்பொழுதும் தன்னை வாழ  வைக்கும் தமிழ்நாட்டு நலன் சார்ந்தகருத்துகளைத் தெரிவித்தவர் அல்லர்.  மனித…

சுந்தரச் சிலேடைகள் 6 : பைந்தமிழும் தாய்மையும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 6 பைந்தமிழும் தாய்மையும் சொல்ல இனிமைதரும் சோதிக்கக் கன்னலதாம் வல்ல ஒலியெழுப்ப வாய்திறக்கும்-பொல்லாங் கொழிக்கும், பொதுமையாய் ஓங்கித் திளைக்கும் எழிற்றமிழைத் தாய்மையெனச் சாற்று. பொருள் : 1)தாயைப் பற்றியும் தமிழ்மொழியைப் பற்றியும் சொல்லும்போதே இனிமையாக இருக்கும் . 2)தாயின் தாலாட்டுப் பொருள் வலிமையானதாக இருக்கும், அதுபோலத் தமிழ்ச் சொற்களும் ஆக்கமுடையதாக இருக்கும். 3)வருந்துயரமெல்லாம் தாய் தாங்கிப் பிள்ளைகளை மகிழ்வுடன் வளர்ப்பதுபோல், தமிழ்மொழியும் தன்னைப் பிழையறக் கற்றவருக்குப் பெருமையைத் தருகிறாள். தடுமாற்றத் துயரைப் போக்குகிறாள். 4) எத்தனை குழந்தைகள் பெற்றாலும்…

தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2 – இரா.பி.சேது(ப்பிள்ளை)

தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2   இவ்வுலகில்     முன்னணியில்  நிற்கும்  நன்னாடுகளெல்லாம் தமது தாய்மொழியைத்   தலைக்கொண்டு  போற்றுகின்றன. தமிழ்நாட்டில்  சில காலத்திற்கு  முன்னர்   அந்நிய   மொழிகளில்  பேசுவதும் எழுதுவதும் அறிவுடைமைக்கு    அழகென்றும்,    தாய்மொழியைப்   புறக்கணிப்பது தவறன்றென்றும்  அறிவாளர்  கருதுவாராயினார். ஆயினும், இப்பொழுது அத்தகைய    கொள்கைகள்    அகன்று   ஒழிய,  ஆர்வம்   நிறைந்த தமிழ்மக்கள் தமிழ்த்தாயை ஆதரிக்க தலைப்பட்டுள்ளனர். தமிழ்மொழியின்      நயமறிந்த  கவிஞரும் அறிஞரும் அம் மொழி பயிலும்  தமிழகத்தை  அன்பு  ததும்பும்  இன்ப மொழிகளாற் போற்றும் அழகு  எல்லை   யற்ற   இன்பம்  தருவதாகும். …

தமிழின்பம் தனி இன்பம் 2/3 – கவியரசர் முடியரசன்

(தமிழின்பம் தனி இன்பம் 1/3 – முடியரசன் தொடர்ச்சி)  தமிழின்பம் தனி இன்பம் 2/3     நாலடியாரும் இவ்வின்பத்துக்கு நல்லதொரு சான்று நவில் கின்றது. மேலுலக இன்பம் சிறந்ததா? தமிழின்பம் சிறந்ததா? என்றால் தமிழின்பம்தான் சிறந்தது என்று அறுதியிட்டுக் கூறுகின்றது. உலக மக்களெல்லாம் மேலுலக இன்பந்தான் சிறந்தது என்பரே என்றால், தமிழின்பத்தினும் அது இனியது என்றால் மேலுலக இன்பத்தைப் பின்னர்ப் பார்க்கலாம் என்று விடை தருகிறது நாலடி. குற்றமற்ற நூற்கேள்வி உடையவரும் தம்முடை பகை யில்லாத வரும் கூர்த்த மதியினரும் ஆகிய தமிழ்ச்…

இலங்கையை ‘இலங்கை’ என்றே தமிழில் குறிப்பிடுங்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கையை ‘இலங்கை’ என்றே தமிழில் குறிப்பிடுங்கள்!   இலங்கையைத் தமிழில் குறிப்பிடும் நம்நாட்டுத்தமிழர்களும் இலங்கைத்தமிழர்களும் ஈழத்தமிழர்களும் உலகத்தமிழர்களும் அரசுமுறைப் பெயரைச் சரியாகக் குறிப்பிடுவதாக எண்ணிச் சிரீ இலங்கா என்றே குறிப்பிடுகின்றனர்.   ஈழம், இலங்கை என்பன தொடர்புடைய பெயர்களே! ஈழத்துப் பூதன்தேவனா் என்னும் புலவர் சங்கக்காலத்தில் வாழ்ந்துள்ளார். ஈழத்து உணவு என்பதைப் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. சங்க இலக்கியத்தில் இலங்கை என்றும் சொல்லாட்சி உள்ளது. ‘தொன்மாவிலங்கை எனச் சிறுபாணாற்றுப்படை குறிக்கிறது. ‘இலங்கை கிழவோன்’ எனப் புறநானூறு(379) குறிப்பிடுகிறது.   ஈழம் என்றால் பொன் எனப் பொருள்….

‘கலாச்சாரம்’ தேவையா? – இலக்குவனார் திருவள்ளுவன்

‘கலாச்சாரம்’  தேவையா? – இலக்குவனார் திருவள்ளுவன்   ‘கலையும் கலாச்சாரமும்’, ‘கலாச்சாரமும் பண்பாடும்’, ‘கலையும் கலாச்சாரமும் பண்பாடும்’ என்றெல்லாம் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். கலாச்சாரம் என்பதைப் பண்பாடு என்னும் பொருளில்தான் பெரும்பாலும் கையாள்கின்றனர். சில இடங்களில் கலை என எண்ணிக் கையாள்கின்றனர். கலை – பண்பாட்டுத்துறை என்பதைக் கலை – கலாச்சாரத்துறை என்றே குறிப்பிடுகின்றனர். எனவே, கலையும் கலாச்சாரமும் என்றால்  கலையும் பண்பாடும் என்று கருதுவதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், கலாச்சாரமும் பண்பாடும் என்றால் என்ன பொருள்? நாகரிகமும் பண்பாடும் என்று பொருள்  கொள்ள இயலவில்லை,…

தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்கச் செய்ய வேண்டுவன – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்கச் செய்ய வேண்டுவன   தமிழ்ப்பயிற்றுமொழியை வலியுறுத்தும் கட்சியினரும் அமைப்பினரும் தலைவர்களும் ஆர்வலர்களும் தங்கள் குடும்பத்தினரைத் தமிழ்வழிக் கல்விக்கூடங்களிலேயே சேர்க்க வேண்டும். தரமான தமிழ்வழிப்பள்ளிக்கூடம் இன்மையால் தமிழ்வழிக்கல்வி அளிக்க இயலவில்லை என்னும் குறைபாட்டைப் போக்கவேண்டும். எனவே, ஊராட்சி தோறும் தமிழ்வழிக்கல்விக்கூடங்களைத்தொடங்க வேண்டும். அரசு மூடிவரும் உள்ளாட்சி அமைப்புகளின் தமிழ்வழிக்கல்விக்கூடங்களை எடுத்துச் சிறப்பாக நடத்த வேண்டும். தமிழ்வழிப்பள்ளிகளைத் தத்து எடுத்துத் தரம் உயர்ந்தனவாக மாற்ற வேண்டும். தாங்கள் நடத்தும் ஆங்கிலக் கல்வி நிலையங்களைத் தமிழ்வழிக்கல்விக்கூடங்களாக மாற்ற வேண்டும். தமிழ்வழிக்கல்விக்கு எதிரானவர்களைப் பொறுப்புகளிலிருந்து நீக்க…

தேர்தல் ஆணையத்தின் வன்முறை : இன்றைக்குப் பலி அதிமுக! நாளைய பலி திமுக? – இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தல் ஆணையத்தின் வன்முறை : இன்றைக்குப் பலி அதிமுக! நாளைய பலி திமுக?  ஓர்ந்துகண்  ணோடாது  இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. (திருவள்ளுவர், திருக்குறள் 541)  வழக்காயினும், சிக்கலாயினும் வேறு தீர்விற்கு உரியதாயினும் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு பாராதே! எப்பக்கமும் சாயாமல் நடுவுநிலையோடு அணுகுக! வழங்கவேண்டிய தீர்ப்பை ஆராய்க! அதனைச் செயல்படுத்துக! அதுவே உண்மையான நீதியாகும் எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறுகிறார்.   சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பது நமது நாட்டில் சொல்லப்பட்டாலும் நடைமுறையில் சாதிக்கேற்ற நீதி! இருப்பவனுக்கு ஒரு…