களப்பிரர் காலத்தில் நுண்கலைகள் – மயிலை சீனி. வேங்கடசாமி
களப்பிரர் காலத்தில் நுண்கலைகள் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் நுண்கலைகள் நன்றாக வளர்ந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், அந்தக் கலைகளைப் பற்றிய விவரமான செய்திகள் கிடைக்க வில்லை. சங்கக் காலத்திலே வளர்ந்திருந்த நுண்கலைகளைப் பற்றிச் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் நூல்களிலிருந்து அறிகிறோம். அதன் பிறகு களப்பிரர் ஆட்சிக் காலத்தில் அந்தக் கலைகள் மேலும் வளர்ந்திருக்க வேண்டும் என்று நம்பலாம். ஆனால். அந்தக் காலத்துக் கலைகளைப் பற்றி அறிவதற்கு ஆதாரமான சான்றுகள் கிடைக்க வில்லை. கிடைத்துள்ள சான்றுகளும் குறைவாகவே கிடைத்துள்ளன. நுண்கலை என்னும்…
களப்பிரர் காலத்தில் கட்டடக்கலை – மயிலை சீனி. வேங்கடசாமி
களப்பிரர் காலத்தில் கட்டடக்கலை – மயிலை சீனி. வேங்கடசாமி சைவம், வைணவம், பௌத்தம், சமணம் ஆகிய நான்கு மதங்களும் இருந்த களப்பிரர் காலத்துத் தமிழகத்தில் கட்டடக்கலை வளர்ந்திருக்க வேண்டும். இந்த மதங்களின் கோயிற் கட்டடங்கள் கட்டாயம் இருந்திருக்க வேண்டும். அந்தக் கட்டடங்கள் செங்கல், சுண்ணாம்பு, மரம், இரும்பு ஆகிய பொருள்களைக் கொண்டு கட்டப் பட்டவையாகையால் அவை இக்காலத்தில் நிலைபெற்றிருக்கவில்லை. கருங்கற்களை ஒன்றின் மேல் அடுக்கிக் கட்டப்படுகிற கற்றளிக் கோயில் கட்டடங்களும் பாறைகளைக் குடைந்து அமைக்கப்படும் குகைக் கோயில்களும் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் மகேந்திரவர்மன்…
தமிழின் தூய்மையையும் தனித் தன்மையையும் கெடுத்து விடவில்லை – மயிலை சீனி. வேங்கடசாமி
தமிழின் தூய்மையையும் தனித் தன்மையையும் கெடுத்து விடவில்லை பழமையான நான்கு வகைப் பாக்களோடு புது வகையான மூன்று பாவினங்களை அமைத்துப் பன்னிருவகையான செய்யுட்களை உண்டாக்கினார்கள். பழைய ஆசிரியப்பாவோடு ஆசிரியத் தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம் என்றும் வெண்பாவோடு வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம் என்றும், கலிப்பாவோடு கலித்தாழிசை, கலித்துறை, கலி விருத்தம் என்றும் வஞ்சிப்பாவோடு வஞ்சித்தாழிசை, வஞ்சித் துறை, வஞ்சி விருத்தம் என்றும் பாவகைகளை வளர்த்தார்கள். பாவினங்களின் அமைப்பு திடீரென்று அமைந்து விடவில்லை. அவை சரியானபடி முழு உருவை அடைவதற்குப் பல ஆண்டுகள், சில…
களப்பிரர் காலத்தில் புது வகைப் பாக்கள் – மயிலை சீனி. வேங்கடசாமி
களப்பிரர் காலத்தில் புது வகைப் பாக்கள் களப்பிரர் காலத்துக்கு முன்பு கடைச்சங்க காலத்தின் இறுதி வரையில் தமிழில் நான்கு வகைப் பாக்களே இருந்தன. அவை வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பவை. ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென நாலியற் றென்ப பாவகை விரியே என்று தொல்காப்பியம் கூறுகிறது (தொல்காப்பியம், செய்யுளியல் 101). கடைச்சங்க இறுதிக்காலம் ஏறத்தாழ கி.பி.250 என்று கொள்ளலாம். அதற்குப் பிறகு களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டது. அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் சைன சமயமும் பௌத்த மதமும் தமிழகத்தில் பரவலாகவும்…
சிவராசனைக் கைது செய்ய நடுவண் புலனாய்வுத்துறை விரும்பவில்லை! – நளினி
சிவராசனைக் கைது செய்ய நடுவண் புலனாய்வுத்துறை விரும்பவில்லை! – நளினி சொல்லும் உண்மை ‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா-நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் நளினி எழுதி, இதழாளர் பா.ஏகலைவன் தொகுத்த நூலின் ஐந்தாம் பகுதி இது. இதில் சிவராசன் பற்றிய பகுதிகள் இடம்பெறுகின்றன: இந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட சிவராசன் உண்மையில் பிடிக்க முடியாத ஆளா அல்லது பிடிபடாத ஆளா என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். எங்களைக் கேட்டால், மிக எளிதாகவே சிவராசனைப் பிடித்திருக்கலாம். வேண்டுமென்றே அவரைப் ‘பிடிக்க முடியாத’…
மறக்க முடியுமா? – மயிலை சீனி. வேங்கடசாமி : எழில்.இளங்கோவன்
மறக்க முடியுமா? – மயிலை சீனி. வேங்கடசாமி சில நாள்களுக்கு முன்னர், மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களைப்பற்றித் தோழர் சுப.வீரபாண்டியன் அவர்கள் தன் ஒரு நிமிடச் செய்தியில் நினைவு கூர்ந்தார். தமிழுலகம் மறக்கக் கூடாத அறிஞர்களுள் மயிலையாரும் ஒருவர். மயிலை சீனிவேங்கடசாமி மார்கழி 02, 1931 / 1900ஆவது ஆண்டு திசம்பர் 16ஆம் நாள் சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். இவரின் கல்வி 10ஆம் வகுப்பு வரைதான். பின்னர் இடைநிலை ஆசிரியராகவே பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. படித்தது பத்தாம் வகுப்பு…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 43(2.13) 43. நெடுநீ ரொழித்தல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 42(2.12) – தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 43. நெடுநீ ரொழித்தல் 421.நெடுநீர் கால நீள விடுதல்; நெடுநீர் என்பது ஒரு செயலைச் செய்வதைத் தாமதித்தல்; ஒருகணச் செயலைமற் றொன்றற் கீதல். மேலும் ஒரு செயலை செய்ய வேண்டிய காலத்துக்கும் அதிகமாகக் காலம் எடுத்துச் செய்தல் ஆகியவை ஆகும். நெடுநீர் குறைபல தருமியல் புடையது. கால தாமதம் நமது செயல்களில் பல குறைகளை ஏற்படுத்தும் இயல்பு உடையது. நெடுநீர் சிறிதுறி னடுமதூஉம் பெருகி. கால தாமதம் நாளடைவில் ஒரு…
திருக்குறள் அறுசொல் உரை: 113. காதல் சிறப்பு உரைத்தல் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 112. நலம் புனைந்து உரைத்தல் – தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் 113. காதல் சிறப்பு உரைத்தல் தகுதலைவனும், தலைவியும், தம்தம் மிகுகாதல் சிறப்பை உரைத்தல். (01-05 தலைவன் சொல்லியவை) பாலொடு தேன்கலந்(து) அற்றே, பணிமொழி வால்எயி(று) ஊறிய நீர். “பணிவு மொழியாளின் வாய்ஊறல், பால்,தேன் கலவைபோல் இனிக்கும்.” உடம்பொ(டு) உயிர்இடை என்ன, மற்(று) அன்ன, மடந்தையொ(டு) எம்இடை நட்பு. “உடம்புக்கும்,…
சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (4) – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (3) – தொடர்ச்சி) சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (4) வடிவச் சுருக்கத்திற்கு வழிகாட்டி பல நேர்வுகளில் கலைச் சொற்கள் சுருக்கமாகவும் செறிவாகவும் இல்லாமல் தொடராக அமைந்து உள்ளன. எனவே, எளிமை கருதிப் பலரும் அயற்சொல் பயன்பாட்டில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். சொல் விளக்கம் என்பது வேறு; கலைச் சொல் என்பது வேறு என்பதைப் புரிந்து கொண்டு கலைச்சொல் காணுநர் சுருங்கிய கலைச் சொல் வடிவங்களைக்காண்பதில் நாட்டம் செலுத்த இவ்வாய்வு உதவும் என்பதில் ஐயமில்லை. தமிழ் நடைக்கு உந்துதல் …
‘அகரமுதல’ இதழின் பொங்கல் வாழ்த்துகள்!-இலக்குவனார் திருவள்ளுவன்
‘அகரமுதல’ இதழின் படைப்பாளர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் படிப்பாளர்களுக்கும் பகிர்வாளர்களுக்கும் கருத்தாளர்களுக்கும் பரப்பாளர்களுக்கும் அல்லன தொலையவும் நல்லன பெருகவும் இன்பமும் மகிழ்ச்சியும் பொங்கிடவும் அன்பு வாழ்த்துகள்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர் ‘அகரமுதல’ < www.akaramuthala >
பொங்கல் விடுமுறைக்குப் பொங்கியோர் போகி விடுமுறைக்கும் பொங்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
பொங்கல் விடுமுறைக்குப் பொங்கியோர் போகி விடுமுறைக்கும் பொங்கட்டும்! சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. (திருவள்ளுவர், திருக்குறள் 1031) மத்திய அரசு பொங்கல் விடுமுறையை நீக்கியது என்று கட்சித்தலைவர்களும் இயக்கத் தலைவர்களும் தமிழக முதல்வரும் பொங்கி எழுந்தனர். பொதுவாக எதற்காவது ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டம் நடத்தினால், எதையாவது குறிப்பிட்டு அதற்குப் போராடாதவர்கள் இதற்குமட்டும் போராடுவது ஏன் என்பர். அவ்வாறில்லாமல், பொங்கல் விடுமுறைக்காகப் பொங்கியோர் போகி விடுமுறை வேண்டியும் பொங்க வேண்டுகிறோம். முன்பு, போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என…
சசிகலாவின் நல்ல தொடக்கம் வெற்றியின் தொடக்கம் – இலக்குவனார் திருவள்ளுவன்
சசிகலாவின் நல்ல தொடக்கம் வெற்றியின் தொடக்கம்! சசிகலா நடராசன் அதிமுக பொதுச்செயலராகப் பதவி ஏற்றதும் முதல்உரையாற்றியுள்ளார். பிறர் எழுதித் தந்ததாக இருந்தாலும் கருத்து அளித்ததும் வடிவமைத்ததும் இவராகத்தான் இருக்கும். அந்த வகையில் சிறப்பான உரை வாசித்துள்ளார். தொண்டர்களின் மனநிலைக்கேற்பவும் பொதுவான நலன் கருதியும் அமைந்த உரை நல்ல உரைகளுள் ஒன்றாக இடம் பெறுகிறது எனலாம் அரசின் சார்பாக உரையாற்றுபவர்கள் பெரும்பாலும் எழுதி வைத்துள்ள உரையைத்தான் வாசிக்கின்றனர். எனவே, முதல் உரை வாசிப்பாக அமைந்ததில் குற்றம் எதுவுமில்லை. எனினும் மெல்ல மெல்ல வாசிப்பைக் கை…
