நான் சாப்பிடும் உணவில் நச்சு மாத்திரை கலக்கப்பட்டது! – நளினியின் சிறைச் சித்திரவதைகள்!
4 நான் சாப்பிடும் உணவில் நச்சு மாத்திரை கலக்கப்பட்டது! – நளினியின் சிறைச் சித்திரவதைகள்! ‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்’ என்ற தலைப்பில் இராசீவு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நளினி எழுதியிருக்கும் நூலின் நான்காவது பகுதி இது. நான் சொன்னதை மிக அமைதியாக, அதே கூர்மையான பார்வையோடு கவனித்தபடியே இருந்தார் பிரியங்கா. தேவை என்றால் மட்டுமே கேள்வி கேட்டார். அப்பொழுதுதான் எனக்கொரு மன உறுத்தல் ஏற்பட்டது. என்னைப்பற்றியும் என் கணவரைப் பற்றியும் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறேனே, என்…
கிரண்(பேடி) – மாநிலக் காவலரா? மத்திய ஏவலரா? – இலக்குவனார் திருவள்ளுவன்
கிரண்(பேடி) – மாநிலக் காவலரா? மத்திய ஏவலரா? துணைக்கண்டமாகத் திகழும் இந்தியா என்பது அரசியல் யாப்பின்படி இந்திய ஒன்றியம் என்றுதான் அழைக்கப்பெற வேண்டும். பல்வேறு அரசுகளையும் தேசிய இனங்களையும் சேர்த்து உருவாக்கப்பட்ட அரசியல் நிலப்பகுதி என்பதால் இந்திய ஒன்றியம் எனப் பொருத்தமாக அமைத்து அழைத்துள்ளனர். மத்திய ஆட்சியில் உள்ளவர்களின் அதிகாரப் பசியாலும் தேசிய இனங்களைப் புறக்கணித்து ஒற்றை இனமாகக் காட்ட முயலும் போக்காலும், இந்தியா நடைமுறையில் ஒன்றிய அரசாகச் செயல்படவில்லை. இது குறித்துத் தேசிய இனங்களும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியா…
மகிழ்ச்சி வினையின் முடிவு அல்ல! புதிய வினைக்கு அழைப்பு! – அண்ணா
மகிழ்ச்சி வினையின் முடிவு அல்ல! புதிய வினைக்கு அழைப்பு! மகிழ்ச்சியே மயக்கம்; மன்னுயிரைத்தான் மாய்க்கும் என்று கூறினோர் அல்லர் நம் தமிழர்! எனினும், மகிழ்ச்சியே வினை; வேறு செயல் வேண்டா என்று இருத்தல் நன்றன்று. வினை, வித்து! மகிழ்ச்சி விளைவு! அந்த விளைவு அவ்வளவும் தின்று தீர்த்திட்டால் பின் வினைக்கு வித்து ஏது? எனவே, விளைவு அளிக்கும் சுவையினை உண்டு மகிழ்ந்திருப்பதுடன் இருந்திடாது வித்து எடுத்து வைத்து, மீண்டும் வினை மேற்கொள்ளல் வேண்டும். அங்ஙனம், முறை வகுத்துக் கொண்டால்தான், வாழ்வில் வளம் காண…
உழைத்தால் பெற்றிடலாம் பெருமகிழ்வு – அண்ணா
உழைத்தால் பெற்றிடலாம் பெருமகிழ்வு! அறுவடை விழா தரும் அறுசுவை உண்டியும், அழகுத் துணியும், தூய ஆடையும் அவைதரும் அகமகிழ்வால் வளரும் அன்பும் அருளும் ஆர்வமும் இன்பமும் ஈகையும் உவகையும் ஊக்கமும் போற்றி வரவேற்கத்தக்கதே. பொன்னும் மணியும் கொழிக்கும் நன்னாட்டிலே பிறந்தோம். வாழ்வின் பயனை நுகர்ந்தோம் என்று களி கொள்ளத்தான் வேண்டும். எரிமலையும் சுடுமணலும், நெடுங்காடும் பெருவெள்ளமும், வறண்ட நிலமும் வளமற்ற நீர்நிலையமும் படைத்த இடமாக இன்றி, நஞ்சையும் புஞ்சையும் நடு நடுவே நறுமணப் பூங்காவும் பழமுதிர்ச் சோலையும் பாங்குடன் விளங்கும் குன்றும், மலையும்…
பண்டைத்தமிழர்களின் வாழ்வியல் அடையாளம் ஏறுதழுவல் – ஈழத்து நிலவன்
பண்டைத்தமிழர்களின் வாழ்வியலோடு பெரிதும் தொடர்புடைய அடையாளமாக இன்று நம் மத்தியில் எஞ்சி இருப்பது, ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு. பல நூற்றாண்டுகளைத் தாண்டி நிற்கும் எமது இனத்தின் அடையாளமான ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு என்பது தமிழர்களில் தொன்மைக் குடிகளான ஆயர்களின் (இடையர், கோனார்) மரபுவழி குல விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதுதான் விளையாட்டு. சல்லிக்கட்டு தற்போதய தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையாக நடைபெறுகிறது. மதுரை…
திருக்குறள் அறுசொல் உரை: 112. நலம் புனைந்து உரைத்தல் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை: 111. புணர்ச்சி மகிழ்தல்: வெ. அரங்கராசன் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 03. காமத்துப் பால் 14. களவு இயல் 112.நலம் புனைந்து உரைத்தல் தலைவியின் நலம்மிகு அழகைத், தலைவன் மகிழ்ந்து பாராட்டியது. (01-10 தலைவன் சொல்லியவை) “நல்நீரை வாழி, அனிச்சமே! நின்னினும், மெல்நீரள் யாம்வீழ் பவள்”. “மெல்லிய அனிச்சப்பூவே! என்னவள் மெல்லியவள், உன்னைக் காட்டிலும்”. மலர்காணின் மையாத்தி நெஞ்சே! இவள்கண், பலர்காணும் பூஒக்கும் என்று. “மனமே! இவள்கண், பலர்காணும்…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 6/7: இலக்குவனார் திருவள்ளுவன்
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 5/7 : தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 6/7 “பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ்ப்பணி” குறித்து முனைவர் சி.சுந்தரேசன் போற்றியுள்ளார்; பேராசிரியராக, நூலாசிரியராக, இதழாசிரியராக, மரபுக்கவிஞராக, களப்போராளியாக எனப் பலவகையிலும் செம்மாந்து வாழ்ந்து தொண்டாற்றியமையைச் சான்றுகளுடன் விரிவாக விளக்கியுள்ளார்; கவிதைகளில் சமூக அங்கதம் காணப்படுவது, மணமானவர்தான் குடும்ப விளக்கு பாடம் நடத்த வேண்டும் என்ற பாவேந்தர் பாரதிதாசனை உடன் மறுத்த…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 42(2.12).வெண்மை யொழித்தல்
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 41(2.11) – தொடர்ச்சி) மெய்யறம் இல்வாழ்வியல் 42(2.12).வெண்மை யொழித்தல் வெண்மை யறிவினை விடுத்த தன்மை; வெண்மை என்பது அறிவினை விடுத்த தன்மை; ஒண்மை யுடையமென் றுளத்தொடு செருக்கல்; மேலும் ஒருவன் தான் அறிவுடையவன் என்று கர்வத்தோடு எண்ணுதல்; ஈயவேண் டியவிடத் தீயா திவறல்; மேலும் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டிய சமயத்தில் கொடுக்காமல் கருமியாக இருத்தல்; குற்றம் பலவுஞ் சுற்றமாக் கொள்ளல்; மேலும் தவறு செய்பவர்களை நெருங்கிய உறவினராகக் கொள்ளுதல்; கற்றில கற்றவாக் காட்டி நடித்தல்; மேலும் தாம் படிக்காத நூல்களைப்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙௌ] – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙோ] தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙௌ] 3. தமிழ்நலப் போராளி (தொடர்ச்சி) அரசர் கல்லூரியில் 1933-34 ஆம் ஆண்டு வித்துவான் இறுதி வகுப்பு பயின்றவரான முனைவர் கு.தாமோதரன் பேராசிரியர் பாடம் நடத்தும் முறை குறித்தும் கொள்கை உறுதி குறித்தும் பின்வருமாறு கூறுகிறார் (வீ.முத்துச்சாமி: இலக்குவனார் ஆய்வுப்பண்பு): “மிக்க முயற்சி எடுத்துக் கொண்டு மாணவர் புலமைக்கும் ஊக்கத்திற்கும் ஆக்கம் தரும் வகையில் பாடம் பயிற்றிய நல்லாசிரியர். எத்தனை ஐயக் கேள்விகட்கும் விடை தருவார். மாணவர் நலங்கருதும் மாண்பினர்; ஆசிரியர்…
திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் : அணிந்துரை: கு.மோகனராசு
திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் அணிந்துரை அன்று திருக்குறள் முனுசாமி அவர்கள், தம் நகைச்சுவைப் பேச்சால் கேட்பவர் மனம் மகிழப் பட்டி தொட்டிகள், நகரங்கள் எனத் தமிழகத்தின் பெரும்பகுதிகளிலும் திருக்குறளைப் பரப்பினார். திருக்குறள் எழுச்சியை உருவாக்கினார். இன்று இணைய வலைத் தளங்களின் துணையையும் ஏற்றுத் தம் நகைச்சுவைத் திறத்தால், திருக்குறளுக்கு ஏற்றம் தந்து வருபவர் திருக்குறள் தேனீ பேராசிரியர் வெ. அரங்கராசன் அவர்கள். அந்த வரிசையில் வந்ததுதான் திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் என்னும் இந்த நூல். இந்த நூலில்…
சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (3) – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (2) – தொடர்ச்சி) சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (3) அகச்சிக்கல்களும் புறச்சிக்கல்களும் மொழி பெயர்ப்பில் நாட்டம் உடையோர் குறைவாகவும் சொல்லாக்கத்தில் ஈடுபாடு காட்டுநர்கள் அவர்களில் குறைவாகவும் உள்ளனர். அயலெழுத்தும் அயற்சொல்லும் இன்றி எழுத வேண்டும் என்னும் உணர்வும் தமிழ்வேட்பும் அற்ற தமிழ் முனைவர்களைத்தான் இக்காலக்கல்வி முறை உருவாக்கி உள்ளது. பிழையின்றி எழுதுநரையும் காண இயலவில்லை. எனவே, ஆய்வுத் துணைவரை நாடுவதில் பெரும் சிக்கல் எழுந்தது; சிலரைக்கருதிப்பார்த்து, எண்ணஓட்டமும் கருத்தோட்டமும் ஆய்வுநோக்கிற்கு ஒத்து வராமையால் கூடியவரை உடனிருந்து ஒத்துழைப்பவரையே நாடும்…
இராசீவு காந்தியை நோக்கித் தணுவைத் தள்ளிவிட்டது யார்? – பிரியங்காவிடம் நளினி சொன்ன கமுக்கச் செய்தி
3 இராசீவு காந்தியை நோக்கித் தணுவைத் தள்ளிவிட்டது யார்? – பிரியங்காவிடம் நளினி சொன்ன கமுக்கச் செய்தி ‘இராசீவு கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா – நளினி சந்திப்பும்’ என்கிற தலைப்பில் நளினி எழுதியிருக்கும் நூலின் மூன்றாம் பகுதி இது! 19-03-2008 திங்கட்கிழமை. என்னைக் கண்காணிப்பாளர் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அவருக்குப் பக்கத்தில் பெண் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அந்தப் பெண் என்னை உற்றுப் பார்த்தார். அவர் யார் என்று எனக்குத் தெரிந்ததும் எனது நாடி நரம்புகள் தளர்ந்து விட்டன. “நான் பிரியங்கா…
