தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 2/3 – க.வி.விக்கினேசுவரன்
(தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 தொடர்ச்சி) தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 2/3 கேரத்தீவில் உப்பளம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அது பற்றி எமக்கு எதுவுமே தெரியாது. பாதிக்கப்படும் எமது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எம்மைப் புறக்கணித்து மத்திய அரசு எமது வட மாகாணத்தில் இப்பேர்ப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குவதன் உட்பொருள் என்ன? போர் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆன பின்னரும் (சிங்களப்) படையினர் பல காணி (ஏக்கர்) நிலங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, அவற்றில் பயிர் செய்து…
எப்படி வளரும் தமிழ்? 3/3 : கவிஞர் முடியரசன்
(எப்படி வளரும் தமிழ்? 2/3 தொடர்ச்சி) எப்படி வளரும் தமிழ்? 3/3 இம்மட்டோ? பிறநாட்டுத் தலைவர்கள், புரட்சியாளர், சிந்தனையாளர் ஆகியோர்பாற் கொண்ட பற்றாலும் அவர்தம் கொள்கையிற் கொண்ட காதலாலும் இலிங்கன், இலெனின், ஃச்டாலின், காரல்மார்க்சு, சாக்ரடீசு என்றெல்லாம் பெயர் வைத்துக் கொள்கின்றனர். எவ்வெவ் வகையால் ஒதுக்க இயலுமோ அவ்வவ் வகையாலெல்லாம் தமிழை ஒதுக்கிவருகின்றனர். ஆனால், இன்று இளைஞரிடையே அவ்வுணர்வு அஃதாவது மொழியுணர்வு ஓரளவு அரும்பி வருவது ஆறுதல் தருகிறது. இந்து மதத்தவர் முருகவேள், இளங்கோவன், பிறைநுதற் செல்வி, தென்றல் என்று…
ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 3/9 : பெங்களூரு முத்துச்செல்வன்
(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 2/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 3/9 இந்தியாவில் உள்ள மொழிகள் தமிழாயினும் வங்காளமாயினும் மராத்தியாயினும் பஞ்சாபியாயினும் அனைத்துமே இந்திய நாட்டு மொழிகள்தாம். இம்மொழிகள் அனைத்துமே ஒரு செடியில் பூத்த பல மலர்களே. இவை அனைத்தும் மொழிகளின் அரசியும் கடவுள்களின் மொழியுமாகிய சமற்கிருதத்திலிருந்து பிறந்தவையே! வளமையையும் தூயத் தன்மையையும் கொண்ட அது இந்த நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு வழிவகுக்கவல்ல பொது ஊடகமாகும். சமற்கிருதத்தைக் கற்பது கடினமன்று. இன்றைய நிலையில் சமற்கிருதம் இந்திய…
திருக்குறள் அறுசொல் உரை 105. நல்குரவு : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 104 உழவு தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 105. நல்குரவு உணவு,உடை, உறைவிடம் போன்றவை எதுவும் இல்லாத ஏழ்மைநிலை. இன்மையின் இன்னாத(து) யா(து)….?எனின், இன்மையின் இன்மையே, இன்னா தது. ஏழ்மையைவிடக், கொடிது யாது….? ஏழ்மையே எழ்மையினும் கொடிது. இன்மை எனஒரு பாவி, மறுமையும், இன்மையும் இன்றி வரும். வறுமைக் கொடும்பாவி, எப்பிறப்பிலும் தொடரும்; தொடர்ந்து வருத்தும். தொல்வரவும், தோலும் கெடுக்கும், தொகைஆக, …
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙி] – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙா] 1.முன்னுரை – பிற்பகுதி தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙி] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடக்கம் பேராசிரியர் தந்தை மு.சிங்காரவேலர் பத்து மா நிலங்களும் கறவை மாடுகளும் உழவு மாடுகளும் மளிகைக்கடையும் உடைய செல்வத்தில் திளைத்தவரே. தாய் அ.இரத்தினம்மாள் நாட்டாண்மைப் பெருமை பெற்றிருந்த குடும்பத்தைச் சேர்ந்தவரே. இரு வாசல் இருப்பின் செல்வச் செழிப்பின் அடையாளமாகக் கருதப்பட்ட அக்காலத்தில் அத்தகைய இரு வாசல் உடைய மிகச் சில வீடுகளில் இவர்களின் வீடும் ஒன்று. என்ன இருந்து…
வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.29. ஊக்க முடைமை
(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.28. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 29.ஊக்க முடைமை ஊக்க முயர்வுற வுனுமன வெழுச்சி. உயர்ந்ததை அடைய வேண்டும் என்ற (எண்ணமே) மன உறுதியே ஊக்க முடைமை ஆகும். ஊக்க முடைமை யுலகெலாங் கொணரும். ஊக்கமுடைமை உலகம் முழுவதையும் ஒருவனிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும் இயல்பு உடையது. ஊக்க மிலாமை யுடையவும் போக்கும். ஊக்கமிலாமை ஒருவனிடத்தில் உள்ளதையும் அவனைவிட்டு போகச்செய்யும் இயல்பு உடையது. ஊக்க முடையா ருயர்ந்தோ ராவர். ஊக்கம் உடையவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர். ஊக்க மிலாதா ருயிர்க்கும் பிணங்கள். ஊக்கமற்றவர்கள் சுவாசிக்கின்ற…
எப்படி வளரும் தமிழ்? 2/3 : கவிஞர் முடியரசன்
(எப்படி வளரும் தமிழ்? 1/3 தொடர்ச்சி) எப்படி வளரும் தமிழ்? 2/3 கல்வித் துறையில் இயல்பாகவும் எளிமையாகவும் அறிவு வளர்ச்சி பெறத் தாய்மொழி வாயிலாகவே கற்பிப்பதுதான் சிறந்த நெறி என்பதை உணர்ந்த ஒவ்வொரு நாடும் கல்விக் கூடங்களில் அதனதன் தாய்மொழியையே பயன்படுத்தி, அறிவுத் துறையில் முன்னேறி வருவதைக் காண்கிறோம். ஆனால், விடுதலை பெற்ற பின்னரும் தமிழ்நாடுதான் இயல்புக்கு மாறாகச் சென்று, அறிவுத் துறையில் முழுமை பெறாது திண்டாடிக்கொண்டிருக்கிறது. பாலகர் பள்ளிமுதல் பல்கலைக்கழகம்வரை பயிற்று மொழி வேறாக இருக்கிறது. ஆங்கிலம், இந்தி என்ற மொழிகள்தாம்…
இந்தியாவில்தான் இருக்கிறோமா…! – அன்வர் பாலசிங்கம்
இந்தியாவில்தான் இருக்கிறோமா…! – அன்வர் பாலசிங்கம் காவிரி நீர்ச் சிக்கல் தீவிரமெடுத்ததிலிருந்து தமிழகப் பதிவெண் கொண்ட ஊர்திகள் கருநாடக மண்ணில் எங்கு பார்த்தாலும் தாக்கப்படுவதும்…எரிக்கப்படுவதும்…வண்டிஓட்டுநர்கள் அம்மணமாக்கப்படுவதும்…நாம் இந்தியாவில்தான் வாழ்கிறோமா என்ற பேரச்சத்தை எனக்குள் எழுப்பியுள்ளது. 2011-இல் முல்லைப்பெரியாற்றுச்சிக்கல் தீவிரமெடுத்ததிலிருந்து தொடர்புடைய இடுக்கிமாவட்டத்தில் மட்டுமல்ல, கேரளத்தின் எந்த மாவட்டத்திற்கும் நீங்கள் தமிழக பதிவெண்கொண்ட ஊர்தியில் போனாலும், அலட்சியப் பார்வையை மலையாளிகள் உங்கள் மீது வீசுவதை தவிர்க்க முடியாது. கேரளத்தில் உள் பகுதிகளான கண்ணூர், மலப்புரம், கோழிக்கோடு, பகுதிகளில் தமிழகப் பதிவெண் கொண்ட ஊர்திகளில் …
இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 01- 10 : இலக்குவனார் திருவள்ளுவன்
1-10 இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி ‘இந்தியத்தால் இழந்த காவிரி’ என்னும் கட்டுரை மூலம் முன்னரே, நமக்கே உள்ள காவிரியை நாம் இழந்து விட்டதைக் குறித்து உள்ளோம். நமக்கே உரிமையான காவிரி குறித்து இற்றைநாள் தமிழ் இலக்கியங்கள் வரை ஆயிரக்கணக்கான குறிப்புகளை நாம் காணலாம். எனினும் பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள நூற்றுக்கணக்கான குறிப்புகளை நாம் இத் தொடரில் பார்க்கலாம். இவற்றை காவிரி தொடர்பான முறையீட்டுத்தளங்களில் நாம்அளிக்கலாம். கன்னடத்தில் மொழி பெயர்த்துக் கன்னட மக்கள் அறியச்செய்யலாம். என்ன தெரிவித்தாலும் கண்மூடித்தனமாகவும் வெறித்தனமாகவும் உள்ள…
தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 – க.வி.விக்கினேசுவரன்
தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 ஆசானே தெய்வம்! எனதருமைத் தமிழ் பேசும் உடன்பிறப்புகளே! ‘எழுக தமிழ்’ப் பேரணியில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு தமிழ் மக்களின் ஒருமித்த குரலாக எமது உரிமைக் கோரிக்கைகளை வெளிப்படுத்தவும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக எமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும் எமது அரசியல் சார்ந்த எதிர்பார்ப்புகளை உலகறிய விளம்புவதற்கும் இங்கே கூடியிருக்கின்ற எனதருமை மக்களே! இந்தப் பேரணி வரலாறு காணாத பேரணி! ஆட்சியில் அல்லது செல்வாக்கில் உள்ள எவரையும் எதிர்த்து நடாத்தப்படும் பேரணி இல்லை இது. நாம் எமது…
முதல்வர் நலம் பெறட்டும்! புரளிகளுக்கு முற்றுப்புள்ளி இடட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
முதல்வர் நலம் பெறட்டும்! புரளிகளுக்கு முற்றுப்புள்ளி இடட்டும்! தமிழக முதல்வர் செயலலிதா உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த புரட்டாசி 06, 2047 / 22.09.16 அன்று சேர்க்கப்பட்டார். காய்ச்சலும் நீர்ச்சத்து குறைபாடுமே நலக்கேட்டிற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனையில் சேர்ந்த பின்னர், சருக்கரை மிகுதி, நுரையீரல் பாதிப்பு, அவ்வப்பொழுது மூச்சிரைப்பு போன்ற காரணங்களும் சொல்லப்படுகின்றன. தன் கட்சித்தொண்டர்களால் ‘அம்மா’ எனப் பாசத்துடன் அழைக்கப்படும் அவர், அன்பர்களின் வேண்டுதலால் விரைவில் நலம் பெறுவார் என எதிர்பார்க்கிறோம். தமிழ் மருத்துவத்தையும் கடைப்பிடித்தார்கள்…
ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 2/9 : பெங்களூரு முத்துச்செல்வன்
(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 1/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 2/9 தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ள ‘பிராமணீய நாயக’த்தின் பயன்கள் தேவைப்படாத பெரியாரியலார், இந்துத்துவத்தை நிலைநாட்டத் துடிக்கும் பிராமணச் சூழ்ச்சிகளை உடனுக்குடன் தயக்கமும் மயக்கமும் இன்றித் தோலுரித்துக் காட்ட முற்படுகின்றனர். இன்றைக்கும் திராவிடர் கழகத்தின் தேவையை உணர்த்துவதாக அவ்வரிகள் அமைந்துள்ளன. இந்துத் தேசியத்தின் ஒரு கூறாகிய சமற்கிருதத் திணிப்புக் குறித்துத் தந்தை பெரியாரின் கருத்துகளைப் பார்ப்போம். “இந்த நாட்டில் பலகாலமாகச் ‘சமற்கிருதம்’…
