(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.28. தொடர்ச்சி)

தலைப்பு- வ.உ.சி., மெய்யறம் :thalaippu_va.u.chithambaranarinmeyyaram

மெய்யறம்
மாணவரியல்

29.ஊக்க முடைமை

  1. ஊக்க முயர்வுற வுனுமன வெழுச்சி.

உயர்ந்ததை அடைய வேண்டும் என்ற (எண்ணமே) மன உறுதியே ஊக்க முடைமை ஆகும்.

  1. ஊக்க முடைமை யுலகெலாங் கொணரும்.

ஊக்கமுடைமை உலகம் முழுவதையும் ஒருவனிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும் இயல்பு உடையது.

  1. ஊக்க மிலாமை யுடையவும் போக்கும்.

ஊக்கமிலாமை ஒருவனிடத்தில் உள்ளதையும் அவனைவிட்டு போகச்செய்யும் இயல்பு உடையது.

  1. ஊக்க முடையா ருயர்ந்தோ ராவர்.

ஊக்கம் உடையவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர்.

  1. ஊக்க மிலாதா ருயிர்க்கும் பிணங்கள்.

ஊக்கமற்றவர்கள் சுவாசிக்கின்ற உயிரற்ற உடல்கள் ஆவர். அதாவது எதற்கும் பயனற்றவர்கள் ஆவர்.

286.உயர்ந்தவை யெவையோ வவையெலா முள்ளுக.

உயர்ந்தவை அனைத்தையும் அடைய எண்ண வேண்டும்.

  1. அவற்றினு ளொன்றை யடைந்திட விரும்புக.

அவற்றினுள் ஒன்றை அடைய விரும்புதல் வேண்டும்.

  1. அதனை யடையு மாறெலா மெண்ணுக.

அதனை அடையும் வழிகளை எல்லாம் ஆராய வேண்டும்.

  1. ஒவ்வொன் றினுமுறு மூறெலா மெண்ணுக.

ஒவ்வொரு வழியிலும் உள்ள இடையூறுகளை ஆராய்ந்து அறிய வேண்டும்.

290.   ஊறொழித் ததையுறு முபாயமுங் கருதுக.

அத்தகைய இடையூறுகளை நீக்கி நம் குறிக்கோளை அடைய உதவும் வழிகளைக் கண்டறிய வேண்டும்.

 

– வ.உ.சிதம்பரனார்

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum