கல்வெட்டுகள் வரலாறு உணர்த்துகின்றன – தி.வை.சதாசிவம்

கல்வெட்டுகள் வரலாறு உணர்த்துகின்றன   கல்வெட்டுகள் என்பன கோயில் சுவர்கள், கற்பாறைகள் மலைக்குகைகள், வெற்றித் தூண்கள், மண்டபங்கள், படிமங்கள், நடுகற்கள் முதலானவற்றில் வரையப் பெற்றிருக்கும் கல்லெழுத்துகளேயாகும். செப்பேடுகளையும் கல்வெட்டுகள் என்ற தலைப்பின்கீழ் அடக்கிக்கொள்வது பொருந்தும். … கல்வெட்டுகளில் காணப்படும் செய்திகள் எல்லாம் கற்பனைச் செய்திகள் அல்ல. அவையனைத்தும் நம் முன்னோர்களுடைய உண்மை வரலாறுகளை யுணர்த்தும் பழைய வெளியீடுகளே. கல்வெட்டறிஞர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார்

நகர்வாழ் மக்களே மொழிக்கலப்பு புரிகின்றனர் – அ.சிதம்பரனார்

நகர்வாழ் மக்களே மொழிக்கலப்பு புரிகின்றனர்   எல்லாத் தேயங்களிலும் பாச் செய்யுட்கள் வாயிலாகவும் நாட்டுப்புறத்தாருடைய பேச்சு வழக்கு வாயிலாகவும் மொழியின் பண்டைய நிலை அறியப்படும். தொலைவில் உள்ள நாட்டுப்புறங்களில் வாழும் தாழ்ந்த வகுப்பு மக்களுடைய தமிழ்ப் பேச்சு, சமற்கிருதத்தினின்று வந்த சொற்களை ஆளாதிருக்கும் வகையில் பழந்தமிழைப் பெரிதும் ஒத்திருக்கின்றது.   இதன் உண்மை கல்லைச் “சிலை’ என்றும், மலையை “அசலம்’ என்றும் மரத்தை “விருட்சம்’ என்றும் பூவை “புட்பம்’ என்றும் வழங்காத நாட்டுப்புறப் பேச்சு வழக்கால் அறியத்தகும்.   பொழுதினைச் “சமயம்’ என்பாரும் பெயரினை”நாமம்’…

தாய்மை மலர்ந்தால் இறைமை கனியும் – திரு.வி.க.

தாய்மை மலர்ந்தால் இறைமை கனியும்   பெண்மணியின் வாழ்விலே மூன்று நிலைகள் முறை முறையே அரும்பி மலர்ந்து கனிதல் வேண்டும். அவை பெண்மை, தாய்மை, இறைமை என்பன. இம்மூன்றினுள் மிகச் சிறந்தது தாய்மை. பெண்மை, தாய்மை மலர்ச்சிக்கென ஏற்பட்டது. தாய்மை மலர்ந்தால் இறைமை தானே கனியும். இறைமை கனிவுக்குத் தாய்மை இன்றியமையாதது. தாய்மை மலராவிடத்தில் இறைமை கனியாது. தாய்மை மலராத பெண்மையும் சிறப்புடையதன்று. ஆதலின் தாய்மை சிறந்ததென்க. தாய்மையாவது அன்பின் நிறைவு!  அன்பின் விளைவு!  அன்பின் வண்ணம்! தமிழ்த்தென்றல் திரு.வி.க.: திருக்குறள் விரிவுரை: அறத்துப்பால்:…

பிறர்க்காக வாழ்வதே வாழ்வாகும் – திரு.வி.க.

பிறர்க்காக வாழ்வதே வாழ்வாகும் – திரு.வி.க.  மனிதன் எத்தகைய வழக்க வொழுக்கமுடையனாயினும் ஆக; எத்தகையத் தொழின் முறையின் ஈடுபட்டவனாயினும் ஆக; அரசனாயிருப்பினும் இருக்க; ஆண்டியாயிருப்பினும் இருக்க; நீதிபதி தொழில் செய்யினுஞ் செய்; வாயில்காப்பு வேலை புரியினும் புரிக; எவரெவர் எந்நிலையில் நிற்பினும் நிற்க; எக்கோலங் கொள்ளினுங் கொள்க. மெய்யறிவு என்னும் ஞானம்பெற எவருங் காட்டுக்குப் போக வேண்டியதில்லை. நடு நாட்டில் மனைவி மக்கள் உற்றார் பெற்றார் உறவினர் இவரோடு வாழ்ந்தும், பலவகைத் தொழில்களைச் செய்தும் ஞானியாகவே இருக்கலாம். வேண்டு ஒன்றே; அது, நாம் பிறர்க்காக…

நாள் கணக்கிடும் முறை – சி.இலக்குவனார்

நாள் கணக்கிடும் முறை   நள்ளிரவு அரைநாள் என்று குறிப்பிடப்படுகின்றது. தமிழர்கள் நண்பகல் தொடங்கி மறுநாள் நண்பகல் வரையில் ஒருநாள் என்று கணக்கிட்டதாக நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். “நள்ளிரவை’ அரைநாள் என்பது அதை வலியுறுத்துகின்றது. நள்ளிரவிலிருந்து மறுநாள் இரவு வரையில் ஒருநாள் என்ற ஆங்கிலேயர் கணக்கிடும் முறையும், ஞாயிற்றுத் தோற்றம் தொடங்கி மறுநாள் ஞாயிற்றுத் தோற்றம் வரையில் கணக்கிடும் இன்றைய முறையும், பண்டைத் தமிழர் முறையுடன் ஒப்பிடுமிடத்து, குறைபாடுடையன என்று தெள்ளிதில் விளங்கும். -செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்: சங்க…

பரிமேலழகரின் சிறப்பான உரையும் நச்சுக்கலப்பும்! – ஞா.தேவநேயன்

பரிமேலழகரின் சிறப்பான உரையும் நச்சுக்கலப்பும்   இதுபோது திருக்குறள் முப்பது மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. அவையுட்பட அந்நூலுரைகள் ஏறத்தாழ நூறுள்ளன. ஆயினும், இன்னும் பரிமேலழக ருரையே தலை சிறந்த தெனவும் எவ்வுரையாலும் வீழ்த்தப்படாததெனவும் பொதுவாகக் கருதப்பட்டு வருகின்றது. அது பெரும்பாலும் ஏனையுரைகளெல்லா வற்றினுஞ் சிறந்ததென்பதும், சில குறள்கட்கு ஏனையுரையாசிரியர் காணமுடியாத உண்மைப் பொருளைப் பரிமேலழகர் நுண்மையாக நோக்கிக் கண்டுள்ளார் என்பதும், உண்மையே. ஆயின், பெறுதற்கரிய அறுசுவையரசவுண்டியில் ஆங்காங்குக் கடுநஞ்சு கலந்து படைத்துள்ள தொப்ப, உண்மைக்கு மாறானதும் தமிழுக்குந் தமிழர்க்குங் கேடு பயப்பதுமான ஆரிய…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.14. சூது விலக்கல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.13. தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 1.14. சூது விலக்கல் சூதுவஞ் சனையதற் கேதுவாங் கருவி. சூதாட்டம் ஏமாற்றுவதற்கு ஏற்ற ஒரு கருவி ஆகும். பந்தயங் குறிக்கும் பலவிளை யாடல். சூதாட்டம் என்பது பந்தயம் வைத்து விளையாடும் பலவகை விளையாட்டுகள் ஆகும். அதுபொரு டருதல்போ லனைத்தையும் போக்கும். சூதாட்டத்தில் ஈடுபடும்போது முதலில் பொருள் வருவது போலத் தோன்றினாலும் அது பின்னர் எல்லாவற்றையும் இழக்கச் செய்யும். உற்றவூ ணுடைமுதல் விற்றிடச் செய்யும். சூதாட்டம், ஒருவன் தனது உணவு, உடை முதலியவற்றைக் கூட விற்கும்படியான…

வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 3/3 – முனைவர். ப. பானுமதி

(வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 2/3 தொடர்ச்சி)   3     சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக இழைக்கப் படும் வரதட்சணைக் கொடுமை, வரதட்சணை கொடுப்பதற்காகவே வேலைக்குப் போகும் பெண்கள் ஆங்காங்கு படுகொலைச் செய்யப்படும் கொடுமை முதலியவற்றைக் கண்டு மனம் கொதிக்கும் இக்கவிஞர் ஆண் என்பதால் கண்ணீர்த் துளிகளுக்கு மாற்றாகக் கவிதைத் துளிகளைச் சிந்தியுள்ளார். அந்தத் துளிகளில், கருவுக்குக் கருவான சமாச்சாரத்தின் கார்காலங்கள் நிசப்தப்பட்டுக் கிடக்கிறது !   பாதம் சுமக்கும் பாதரட்சைகளின் பரதேசி வாழ்வு போல  என்று தீண்டாமை என்று ஒதுக்கப்படும்…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 31: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 30 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 31 1.5 அன்பர் வாழ்த்து கி.ஆ.பெ. விசுவநாதம், கருமுத்து தியாகராசச் செட்டியார், அறிவியல் அறிஞர் கோ.து.நாயுடு, அ.கி. பரந்தாமனார், ஆதிமூலப் பெருமாள் ஆகிய ஐவர் மீதும் வாழ்த்திப் பாடிய வாழ்த்துக் கவிதைகள் இதில் அடங்கும். கி.ஆ.பெ. விசுவநாதம்   ‘வாழ்க பல்லாண்டே’ என்னும் கவிதை இவர் மீது பாடப்பெற்றதாகும். இவருடைய என்பதாவது பிறந்தாளின் போது பாடப்பட்டது. ஒன்பது அடிகளால் அமைந்துள்ளது. இக்கவிதை நிலை மண்டில ஆசிரியப்பா வகையைச்…

பல்துறைப் புலவர் பரிமேலழகரின் ஆரியத் திணிப்புகள் – இரா.நெடுஞ்செழியன்

பல்துறைப் புலவர் பரிமேலழகரின் ஆரியத் திணிப்புகள்   என்றாலும், மதியின் கண் மறு இருப்பது போல, பரிமேலழகரின் வடமொழி நூலாரின் கொள்கைப் பற்றும், வைணவச் சமயம் பற்றும், வருணாச்சிரம சனாதன தருமப் பற்றும் சார்ந்த கருத்துகள், வள்ளுவர் வற்புறுத்திய சான்றோர் மரபுகளுக்கும் பொது அறத்திற்கும் முரண்பாடான முறையில், அவரால், உரையின் சிற்சில பகுதிகளில், வேண்டுமென்றே திணிக்கப்பட்டிருக்கின்ற என்பது மட்டும் உண்மை.   மேற்கண்ட காரணம் பற்றித்தான் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தம்(பிள்ளை) அவர்கள், “வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர‘ வேண்டும் என்று வலியுறுத்தினார்: அவர்…

பரிமேலழகரின் உரைப்பாங்கு தனிச் சிறப்புடையது! – இரா.நெடுஞ்செழியன்

பரிமேலழகரின் உரைப்பாங்கு தனிச் சிறப்புடையது   பரிமேலழகர் தமிழ்மொழியின் இலக்கிய இலக்கண நூல்களையும், வடமொழியின் இலக்கிய இலக்கண நூல்களையும் ஐயந்திரிபு அறமுற்றும் தெளிவுறக் கற்றறிந்தவர் என்பதை, அவரது உரையின் வளத்தால் நன்கு அறிந்து கொள்ளலாம். அவர், தமது உரையில் 230க்கும் மேற்பட்ட இலக்கிய இலக்கணச் செய்யுள்களை மேற்கோள்களாகக் காட்டுகிறார் என்றால், அவரது தமிழ் இலக்கிய இலக்கணப் புலமை, தெளிவாக உணரப்படும். ஒவ்வொரு குறளுரையிலும் அவர், இலக்கண அமைதியைச் செம்மையுக் கூறிச் செல்லும் பாங்கு தனிச் சிறப்புடையதாகும். – நாவலர் இரா.நெடுஞ்செழியன்: திருக்குறள் தெளிவுரை: முன்னுரை

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 12 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 11 தொடர்ச்சி) பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள்: 12   பயனில நீக்கிப் பண்புடன் வாழ்க! “அன்பு சிவம்! உலகத்துயர் யாவையும் அன்பினில் போகும்” (பாரதியார் கவிதைகள் :பக்கம் 26 | பாரதமாதா) என்று புத்தர் மொழியாக அன்பை வற்புறுத்துபவர் பாரதியார். “பொலிவிலா முகத்தினாய் போ போ போ … … … … … … … … … … … … … … சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ ஒளி படைத்த கண்ணினாய்…