பாடம் கற்கும் முறை – பவணந்தி முனிவர், நன்னூல்

பாடம் கற்கும் முறை   நூல் பயில் இயல்பே நுவலின், வழக்கு அறிதல் பாடம் போற்றல்; கேட்டவை நினைத்தல், ஆசாற் சார்ந்து அவை அமைவரக் கேட்டல், அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல், வினாதல், வினாயவை விடுத்தல், என்றுஇவை கடனாக் கொளினே மடம்நனி இகக்கும் நன்னூல் 41   நூல் பயில் இயல்பு நுவலின் – நூலைக் கற்றலின் இயல்பைச் சொல்லின், வழக்கு அறிதல் – உலக வழக்கும் செய்யுள் வழக்கும் ஆகிய இருவகை நடையையும் ஆராய்ந்து அறிதலும், பாடம் போற்றல் – மூலபாடங்களை மறவாது…

மாணவத் தோழர்களே! இளம் போத்துகளே! – வே.ஆனைமுத்து

மாணவத் தோழர்களே! இளம் போத்துகளே! தமிழைக் காப்போம் வாருங்கள்! தமிழால் வாழ்வோம் வாருங்கள்! அன்பார்ந்த மாணவத் தோழர்களே! கட்டிளங் காளைகளே! இளம்போத்துகளே! 18 அகவைக்கு மேல் 35 அகவை வரை உள்ள ஆடவரும் மகளிருமே மக்கள் தொகையில் அதிகம் பேர், எப்போதும் இந்த விழுக்காடு அதிகம் மாறுவது இல்லை. தமிழ்நாட்டு மக்கள் தொகை 7.5 கோடி. இவர்களில் தமிழ் பேசுபவர்களே அதிகம் பேர். தெலுங்கையும், மலையாளத்தையும். உருதுவையும், இந்தி, மார்வாரியையும் பேசுவோர் எல்லோரும் 7, 8 விழுக்காட்டினர் இருக்கக்கூடும். தமிழ்மொழியில் கடலளவு பழந்தமிழ் இலக்கியங்கள் உண்டு. அவை பெரிதும் பாடல்கள்….

புறநானூற்று அறிவியல் வளம் -இலக்குவனார் திருவள்ளுவன்

புறநானூற்று அறிவியல் வளம்     அண்மை நூற்றாண்டுகளில் கண்டறியப்பட்ட அறிவியல் உண்மைகள் பலவும் சங்க இலக்கியங்களில் உள்ளன.  சங்கக் காலத்தில் பிற நாட்டினர் அறியாத அறிவியல் உண்மைகள் பலவற்றையும் பழந்தமிழறிஞர்கள் அறிந்திருந்தனர். ஆனால், நமக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த (ஏன், பின்னரும் இருந்த) அறிவியல் நூல்கள் கிட்டில. ஆனால், இலக்கியங்களில் ஆங்காங்கே அறிவியல் உண்மைகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. உண்மைகளை உவமைகளாகவும் எளிய எடுத்துக்காட்டுகளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள இலக்கியச் செய்திகள், அறிவியல் உண்மைகளைத் தமிழ் மக்களும் நன்கு அறிந்திருந்தனர் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியெனப் புரிய…

சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் – இலக்குவனார் திருவள்ளுவன்

சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் 1   அறிவியல்துறைகளில் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் வளர்ந்து வருகிறது;  எனினும் தக்கத் தமிழ்க்கலைச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற முனைப்பின்றி ஒலி பெயர்ப்புச் சொற்களையும் பிற மொழிச் சொற்களையுமே மிகுதியும் பயன்படுத்துகின்றனர். அதே நேரம், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், தனிப்பட்ட அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள், இணையத்தளத்தினர், வலைப்பதிவர்கள் எனப் பல்வகையினரும் கலைச்சொற்கள் வெளியீட்டிலும் கலைச்சொல் ஆக்கத்திலும் ஈடுபட்டுவருவதும் வளர்ந்து வருகிறது. இருப்பினும் துறைதோறுமான கலைச்சொற்களஞ்சியங்கள் பெருக வேண்டி உள்ளன. கருத்துச் செறிவு மிக்க, சுருங்கிய வடிவிலான கலைச்சொற்களை ஆயிரக்கணக்கில் உருவாக்க…

நூலில் வரக்கூடாக் குற்றங்கள் பத்து – பவணந்தி முனிவர், நன்னூல்

நூலில் வரக்கூடாக் குற்றங்கள் பத்து குன்றக் கூறல், மிகைபடக் கூறல், கூறியது கூறல், மாறுகொளக் கூறல், வழூஉச் சொல் புணர்த்தல், மயங்க வைத்தல், வெற்று எனத் தொடுத்தல், மற்று ஒன்று விரித்தல், சென்று தேய்ந்து இறுதல், நின்று பயன்இன்மை, எவை இவை ஈர் ஐங் குற்றம் நூற்கே   குன்றக் கூறல் – குறித்த பொருளை விளக்குதற்கு வேண்டுஞ் சொற்களில் குறைவுபடச் சொல்லுதலும் , மிகைபடக் கூறல் – குறித்த பொருளை விளக்குதற்கு வேண்டும் சொற்களினும் அதிகப்படச் சொல்லுதலும் , கூறியது கூறல் –…

திராவிடத்தைப் பழிப்போர் தம்மையே பழிப்போராவர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

  திராவிடத்தைப் பழிப்போர் தம்மையே பழிப்போராவர்!  “தமிழர்களின் தேசியமொழி தமிழ்தான். தமிழ்நாட்டில் தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் அளித்தல் வேண்டும்.”  தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனாரால் முன்னெடுக்கப்பட்ட இக்கருத்திற்கு மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. அதே நேரம்,  தமிழ்த்தேசியம் பேசுவதாக எண்ணும் சிலர், தமிழை உயர்த்துவதாக எண்ணிக்கொண்டு திராவிடத்தைப்பற்றி இழிவாகச்சொல்வது நம்மை நாமே தாழ்த்துவதாகும்.   திராவிடம் என்பது தமிழின் பெயரன்று. ஆனால் தமிழ்க்குடும்ப மொழிகளைக் குறிப்பிடுவதற்கு அடையாளமாக வந்த பெயர்.  ஆரியம் வந்த பொழுது அதற்கு  எதிராகத் தனிமையில் தமிழ் மட்டுமல்லாமல்,  அதன் மொழிக்குடும்பமே இணைந்திருக்க…

அரசியல் ஆத்திசூடி அல்லது தேர்தல் ஆத்திசூடி – இலக்குவனார் திருவள்ளுவன்

அரசியல் ஆத்திசூடி அல்லது தேர்தல் ஆத்திசூடி அறநெறி தவறுவோர்க்கு வாக்கு அளிக்காதீர்! ஆருயிர்த் தமிழைப் போற்றாதவர்க்கு வாக்களிக்காதீர்! இனப் பகைவருக்கு வாக்களிக்காதீர். ஈழத் தமிழர்களை அழித்தவர்க்கு வாக்களிக்காதீர்! உண்மை பேசாதவர்க்கு வாக்களிக்காதீர் ஊழலில் வாழ்பவர்க்கு வாக்களிக்காதீர்! எளிமையை மறந்தவர்க்கு வாக்களிக்காதீர் ஏய்த்துப் பிழைப்பவர்க்கு வாக்களிக்காதீர்! ஐயததிற்கு இடம் ஆனவர்களுக்கு வாக்களிக்காதீர்! ஒழுக்கக் கேடர்களுக்கு வாக்களிக்காதீர்! 11.ஓய்விலே சுவை காண்பவருக்கு வாக்களிக்காதீர்! ஔவியம் (அழுக்காறு) உடையவர்க்கு வாக்களிக்காதீர்! அஃகம் (முறைமை ) தவறுபவர்க்கு வாக்களிக்காதீர்! கயவருக்கு வாக்களிக்காதீர்! காலம் அறிந்து உதவாதவர்க்கு வாக்களிக்காதீர்! கிடைத்ததை எல்லாம்…

மதுவிலக்கு பரப்புரையாளர்கள்மீதான அடக்குமுறையா? ஆளுங்கட்சிக்குத் தண்டனையா?

மதுவிலக்கு பரப்புரையாளர்கள்மீதான அடக்குமுறையா? ஆளுங்கட்சிக்குத் தண்டனையா? செய்தியும் சிந்தனையும் [செய்தி : கடந்த மாசி 02, 2047 / பிப்பிரவரி மாதம் 14 அன்று  திருச்சிராப்பள்ளியில் மது ஒழிப்பு மாநாடு நடந்தது. அங்கு மதுஒழிப்பை வலியுறுத்திப்பேசிய,  மாநாட்டினை நடத்திய மக்கள் அதிகாரம்  இயக்கத்தின் மாநில அமைப்பாளர் சி. இராசு, செயற்குழு குழு உறுப்பினர் காளியப்பன்,  தாவீது இராசு, சென்னை ஆனந்தியம்மாள், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்புக் குழு வழக்கறிஞர் வாஞ்சிநாதன், தமிழ்நாடு  அரசின் சாராயக்கடை( தாசுமாக்கு) பணியாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர்…

இல்லறப் பண்புகள் – சேக்கிழார்

இல்லறப் பண்புகள் காவளர்த்தும் குளந்தொட்டும் கடப்பாடு வழுவாமல் மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்தளித்தும் விருந்தளித்தும் நாவலர்க்கு வளம்பெருக நல்கியும் நானிலத்துள்ளோர் யாவருக்கும் தவிராத ஈகைவினைத் துறைநின்றார் – தெய்வச் சேக்கிழார்

பொருளை உணரவும் உணர்த்தவும் பல்துறை அறிவு தேவை! – வ.சுப.

பொருளை உணரவும் உணர்த்தவும் பல்துறை அறிவு தேவை!  ஒரு நூலின் கருத்தையோ பாட்டின் பொருளையோ காண்பதற்குப் பல அறிவுக் கூறுகள் வேண்டும்.  இது இன்ன காலத்துத் தோன்றிய நூல் என்ற கால அறிவும், இக்காலத்து இச்சொல்லுக்கு இப்பொருள் என்ற சொல்லறிவும், இன்ன காலத்து இருந்த பழக்க வழக்கங்கள் இவை என்ற சமுதாய அறிவும், இத்தொடர் ஓடிக்கிடக்கும் முறை இது என்ற நடையறிவும், இன்ன பிறவும் இருந்தால்தான் பொருளை முரணின்றிக் காண முடியும். முனைவர் வ.சு.ப.மாணிக்கம்: சிந்தனைக் களங்கள்: பக்கம். 213

உரைதொடர்ந்து பரவிய விதம்! – இறையனார்

உரைதொடர்ந்து பரவிய விதம்   மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் தம் மகனார் கீரங் கொற்றனார்க்கு உரைத்தார்; அவர் தேனூர் கிழார்க்கு உரைத்தார்; அவர் பாடியங் கொற்றனார்க்கு உரைத்தார்; அவர் மணலூர் ஆசிரியர் புளியங்காய்ப் பெருஞ்சேத்தனார்க்கு உரைத்தார்; அவர் செல்லூர் ஆசிரியர் ஆண்டைப் பெருங்குமாரனார்க்கு உரைத்தார்; அவர் திருக்குன்றத்து ஆசிரியர்க்கு உரைத்தார்; அவர் மாதவனார் இள நாகனார்க்கு உரைத்தார்; அவர் முசிறி ஆசிரியர் நீலகண்டனார்க்கு உரைத்தார். இறையனார் களவியல் உரை

ஆர்வத்துடன் கற்க! – பவணந்தி முனிவர்

ஆர்வத்துடன் கற்க! கோடல் மரபே கூறும் காலை பொழுதொடு சென்று வழிபடல் முனியான் குணத்தொடு பழகி அவர் குறிப்பிற் சார்ந்து இருஎன இருந்து சொல்எனச் சொல்லி பருகுவன் அன்ன ஆர்வத்தனாகிச் சித்திரப் பாவையின் அத்தக அடங்கிச் செவிவாயாக நெஞ்சு களனாக கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப் போவெனப் போத லென்மனார் புலவர் பவணந்தி முனிவர் : நன்னூல்: 40 காண்டிகையுரை   கோடல் மரபு கூறுங்காலை – பாடங் கேட்டலினது வரலாற்றைச் சொல்லும் பொழுது , பொழுதொடு சென்று – தகும் காலத்திலே போய்…