சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (2) – இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல 127, பங்குனி 21, 2047 / ஏப்பிரல் 03, 2015 தொடர்ச்சி சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் 2 நோக்கம் இன்றைய அறிவியல் சொற்கள் யாவும் சங்க இலக்கியங்களில் உள்ளன என நான் உரைக்கவில்லை. பின்வரும் அடிப்படையில் சங்கச் சொற்களைப் பயன்பாடுள்ளனவாக ஆக்க வேண்டும் என்பதே நோக்கம். இன்றைக்குக் கையாளும் அதே பொருள் உள்ள சங்கச் சொற்களை நாம் அவ்வாறே பயன்படுத்த வேண்டும். சான்றாகப் பூக்காத தாவரம் என நாம் சொல்கிறோம். அதே பொருளில் கோளி என்னும் சொல் சங்க இலக்கியங்களில்…
புறநானூற்று அறிவியல் வளம் (2)– இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல 127, பங்குனி 21, 2047 / ஏப்பிரல் 03, 2015 தொடர்ச்சி புறநானூற்று அறிவியல் வளம் 2 காற்றறிவியல் பஞ்ச பாண்டவர்களில் பீமன் குந்திக்கும் வாயுக்கும் பிறந்தவன் என்பதும் வாயுக்கும் அஞ்சலைக்கும் பிறந்தவன் அனுமான் என்பதும் ஆரியப் புராணம். ஆரியர்கள் வாயு எனப்படும் காற்றை, இயற்கையாக எண்ணாமல் அறிவியல் உணராதவர்களாகவே இருந்துள்ளனர். கிரேக்கர்கள் ஆதித்தெய்வங்களுள் ஒன்று காற்று எனக் கருதினர். அவர்களின் தொன்மைக் கதைகளின்படி, இருளுக்கும் (Erebus) இரவுக்கும்(Night) பிறந்த மகன் காற்று; இவன் பகலின் (Hemera) உடன்பிறப்பு என்றும்…
தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் துயரச்சூழலில் உள்ளனவோ! – இலக்குவனார் திருவள்ளுவன்
தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் துயரச்சூழலில் உள்ளனவோ! பொதுவாக நாம் ஒருவரை எப்பொழுது நேரில் சென்று ஆறுதல் சொல்வோம்? அவர் தோல்வியைச் சந்தித்தால், அவர் வருத்தத்தில் இருந்தால், அவர் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர் நேர்ச்சியில்(விபத்தில்) சிக்கியிருந்தால், தொழிலில் எதிர்பாராச் சரிவைக் கண்டிருந்தால், இத்தகைய துன்பத்துயரத்தில் மூழ்கியிருந்தால், அவருக்கு ஆறுதல் தரவும் நம்பிக்கை தரவும், உங்கள் பக்கம் இருக்கிறோம், கவலற்க எனச் சொல்வதற்காக நேரில் சென்று தேறுதல் சொல்வதுதானே வழக்கம். ஒருவருக்கு ஒருவர் மற்றொருவருக்குப் பணஉதவி போன்ற ஏதேனும் உதவி செய்தால், உதவி பெறுபவர்தானே உதவி வழங்குநரை…
தமிழ்பற்றிய ஒற்றைவரி உண்மைகள் அனுப்புக – பொள்ளாச்சி நசன்
தமிழ்பற்றிய ஒற்றைவரி உண்மைகள் அனுப்புக – பொள்ளாச்சி நசன் தமிழையும், தமிழர்களையும், அடையாளம் காட்டுகிற, உயர்த்திப்பிடிக்கிற,வரலாறு காட்டுகிற, வழி அமைக்கிற — ஒற்றை வரிகளாக – எழுதி, உரியவரிடம் படம் வரைய வைத்து, ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு வரி என்று அச்சாக்கி, அதனை ஆங்கில மொழியிலும் மொழி பெயர்த்து, நூலாக்கிப் பரவலாக்கினால், நம் தமிழ் மொழியை உலகோர் உணர்ந்து உயர்த்திப் பிடிப்பர். அதற்கான தளம் அமைப்போம். முதற்கட்டமாக அனைத்துச் சிறப்புகளையும் உள்ளடக்கிய ஒற்றை வரிகளை எழுதுவோம். தனி ஒரு மனிதரது…
சொற்குற்றம் வராமல் காத்திடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
சொற்குற்றம் வராமல் காத்திடுக! அரசியலில் இந்நாள் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், தலைவர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள், பெண்கள், தொண்டர்கள் என்ற வேறுபாடின்றித் தரங்குறைந்து பேசுவதும் அதற்கெனவே கேட்கும் கூட்டம் ஒன்று இருப்பதும் தரக்குறைவாகப் பேசுவதற்கென்றே சிறப்புப் பேச்சாளர்களை வைத்திருப்பதும் இயல்பான ஒன்றாகப் போய்விட்டது. ம.தி.மு.க.தலைவர் வைகோ கடந்தவாரம் (24.03.2047 / 06.04.2016) செய்தியாளர் கூட்டம் ஒன்றில் சந்திரகுமார் என்பவர் தே.தி.மு.க.விற்கு இழைக்கும் வஞ்சகம் குறித்தும் துணைநிற்போர் குறித்தும் கூறும் பொழுது ‘இதற்கு அதைச்செய்யலாம் என்பதுபோல்’ தவறாகப் பேசிவிட்டார். இதற்கு அவர் வருந்தி மன்னிப்பு…
மீள்எழுச்சி பெற்றது வவுனியா மாவட்டக் குடும்பங்களின் சங்கம்
மீள்எழுச்சி பெற்றது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் வவுனியா மாவட்டக் குடும்பங்களின் சங்கம் இலங்கை சிங்களப் படையிடம் / அரசிடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்டச் சங்கத்துக்கு (FSHKFDR – Vavuniya District) புதிய மேலாண்மைக் குழுத் தேர்தல்கள் நடைபெற்று மீளக் கட்டமைக்கப்பட்டுள்ளது. வவுனியா நகர அவை உள்ளக மண்டபத்தில் பங்குனி 27, 2047 / 06.04.2016 அன்று காலை 11:00 மணிக்கு இதற்கான மீள்தகவமைவுக் கலந்துரையாடல் நடைபெற்றது. வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழுவின்…
நட்சத்திர மட்டையாட்ட அணிப்பெயர்களைத் தமிழில் சூட்டுக! – தமிழ்க்காப்புக்கழகம்
நட்சத்திர மட்டையாட்ட அணிப்பெயர்களைத் தமிழில் சூட்டுக! தென்னிந்தி நடிகர் சங்கம் சார்பில் கட்டட நிதிக்காக நட்சத்திர மட்டையாட்டம் வரும் சித்திரை 04, 2017 / ஏப்பிரல் 17, 2016 அன்று நடைபெற உள்ளது. நட்சத்திர மட்டையாட்டத்தில் 8 அணிகள் மோதுகின்றன. 8 அணிகளின் பெயர்கள் மாவட்டங்களின் பெயர்களில் ஆனால், ஆங்கிலச் சொல் இணைந்தே உள்ளன. சென்னை சிங்கம்சு’ ‘மதுரை காளைசு’, ‘கோவை கிங்சு’, ‘நெல்லை டிராகன்சு’, ‘ராம்நாட் ரைனோசு’, “தஞ்சை வாரியர்சு”, ‘சேலம் சீட்டாசு’, “திருச்சி டைகர்சு” என்பனவே…
நட்சத்திர மட்டையாட்டம் நடக்கட்டும்! ஆனால்……. – இலக்குவனார் திருவள்ளுவன்
நட்சத்திர மட்டையாட்டம் நடக்கட்டும்! ஆனால்……. பொதுமக்களின் சிக்கல்கள், துயரங்கள் களைய நடிகர் சங்கம் குரல் கொடுக்காது என்று அறிவித்த நடிகர் சங்கம், இன்று தன் வளர்ச்சிக்காகப் பொதுமக்களிடம் கையேந்தியுள்ளது. வரும் சித்திரை 04, 2017 / ஏப்பிரல் 17, 2016 அன்று சென்னையில் சேப்பாக்க விளையாட்டரங்கத்தில் நடிகர் சங்க வளரச்சிக்காக நட்சத்திர மட்டைப்பந்தாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார்கள். பங்கேற்கும் திரைக்கலைஞர்கள் யாரும் மிகப்பெரிய ஆட்டக்காரர்கள் என்று சொல்ல முடியாது. ஆட்டத்தைத் தெரிந்தவர்கள் என்ற நிலையில் ஒரு பகுதியினரும் பெயரளவிற்கு ஆடுவோர் என ஒரு…
தொல்லைக்காட்சிகள் வேண்டா! – மறைமலை இலக்குவனார்
தொல்லைக்காட்சிகள் வேண்டா! ஊடகம் என்பது மிகவும் ஆற்றல் வாய்ந்தது. மனித மனங்களை ஊடுருவித் தாக்கும் மின்சாரம் போன்றது. தனி மனித மனங்களை மட்டுமன்று ஒரு சமுதாயத்தின் போக்கையே மாற்றிக் காட்டும் பேராற்றல் வாய்ந்தது என்பதனை வியத்துநாம் போர் முதல் சிரியாத்து தாக்குதல் வரை நிகழ்ந்த நிகழ்வுகள் மெய்ப்பித்துள்ளன. இதனால் ஊடகங்கள் பெரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டியுள்ளது.பெரும்பான்மையும் அத்தகைய பொறுப்புணர்வை நம் நாட்டு ஊடகங்களிடம் நன்கு காணமுடிகிறது. சில சமயங்களில் பரபரப்புக்காக சிறிய செய்திகள்தானே என்று ஒளி/ஒலிபரப்பிவிட்டால் அவற்றின் தாக்கம் பேரளவில்…
“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” 1/3 – கி. வெங்கட்ராமன்
“மதச்சார்பற்ற இந்தியத்தேசியம் இருக்கிறதா?” 1/3 “தேசியம் குறித்த தருக்கத்தைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லுங்கள்” என்று பாரதிய சனதாக் கட்சியின் அனைத்திந்தியத் தலைவர் அமித்சா தங்கள் கட்சியினருக்கு அழைப்பு விடுக்கிறார். அக்கட்சியின் அனைத்திந்தியச் செயற்குழுக் கூட்டம் கடந்த 2016 மார்ச்சு 20 – 21 நாட்களில் நடந்தபோது, முதன்மைத் தீர்மானமாகவும் இதுவே சொல்லப்பட்டது. “தேசியம் குறித்த தருக்கத்தில் நாம் முதல் சுற்று வெற்றியடைந்திருக்கிறோம்’’ என இந்திய நிதியமைச்சர் அருண் செட்லி மகிழ்ச்சிக் கூத்தாடுகிறார். கூர்ந்து கவனித்தால் இஃது உண்மையென்பதும் புலப்படும். அதைவிட இந்துத்துவம் என்பது வன்மையான இந்தியம் என்றும், இந்தியம் என்பது மென்மையான…
தமிழ் அறியாதவர்களே காதலைப் பழிப்பார்கள்! அன்றே சொன்னது பரிபாடல்!
: தமிழ் அறியாதவர்களே காதலைப் பழிப்பார்கள்! அன்றே சொன்னது பரிபாடல்! தள்ளாப் பொருளியல்பில் தண்டமிழாய் வந்திலார் கொள்ளாரிக் குன்று பயன் (பரிபாடல்: 9) “தள்ள வாராக் காதல் பொருளின் இலக்கணம் கூறும் தமிழை ஆராயாதவரே, மலையிடத்து நிகழும் களவொழுக்கத்தை ஓர் ஒழுக்கமென ஏற்றுக்கொள்ளார்” என்று குன்றம் பூதனார் காரணம் கூறிக் கழறுவர். பிற மொழிகள் எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் உடையனவேயன்றி, மக்களின் வாழ்வை ஆராய்ந்த பொருளிலக்கணம் கண்டவையல்ல. தமிழ் மொழியோ எனின், முவ்விலக்கணமும் நிறைந்தது. தமிழின் பொருளிலக்கணத்தைக் கல்லாத…
நாடாளும் முத்தம்மா – நா.வானமாமலை
நாடாளும் முத்தம்மா முத்தாரம்மன் தென்பாண்டி நாட்டில் உழவர் பெருமக்களால் வணங்கப்படும் தெய்வம். சில சிற்றூர்களில் இவளுக்குப் பெரிய கோவிலும் தேரும் திருவிழாவும் உண்டு. இவள் பிறப்பு, முத்தாரம்மன் வில்லுப்பாட்டில் சொல்லப்படுகிறது. ஏழ்கடலுக்கும் அப்பாலுள்ள, மணிநாகப் புற்றிலுள்ள நாகம் மூன்று முட்டைகளிட்டது. பார்வதியின் அருளால் முட்டைகளிலிருந்து பெண்கள் மூவர் தோன்றினர். அவர்கள் பிரம்மராக்கு சக்தி, சின்னமுத்தார், பெரிய முத்தார் என்பவர்கள். அவர்கள் மூவரும் தவம் செய்து சக்தி முனியின் அருளால் குழந்தையைப் பெற்றார்கள். அனைவரையும் அழைத்துக் கொண்டு போய்க் கயிலையில் சிவபெருமானை வணங்கினர். நாட்டிலுள்ள…
