வெருளி நோய்கள் 16-20: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 11 – 15 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 16-20 16. ‘ எஃப் / F’ எழுத்து வெருளி – Foxtophobia ‘ எஃப் / F’ எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘ எஃப் / F’ எழுத்து வெருளி. 00 17. ‘எக்குசு’ /’ X’ எழுத்து வெருளி – xinoaphobia ‘எக்குசு’ /’ X’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘எக்குசு’ /’ X’ எழுத்து வெருளி. 00 18. ‘எசு’ /’ S’ எழுத்து…

? 93. காயத்திரி மந்திரத்தைப் பிராமணரல்லாத பிறர் சொன்னால் என்ன ஆகும்?  – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 92 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 93 புத்தி விழிப்படைய காயத்திரி மந்திர வழிபாடு முதலியவற்றைச் செய்யுமாறு கடஉபநிடதம் கூறுகிறது. காயத்திரி மந்திரத்தைப் பிராமணர்கள்தான் சொல்ல வேண்டும் என்கிறது வேதம்.  இல்லை இல்லை. ஒழுக்கமானவர்கள் யாரும் காயத்திரி மந்திரம் கூறலாம் என இக்கால நஞ்சு நெஞ்சுடையோர் விளக்கம் தருவர். ஆனால் வேதத்தில் அவ்வாறு இல்லை. நம்மை ஏமாற்றுதற்காக இவர்கள் தரும் தவறான விளக்கம் இதுவே. பிராமணர்கள்தான் காயத்திரி மந்திரம் சொல்ல முடியும் என்றால் அவர்கள் மட்டும்தான் அறிவுக்கூர்மை…

வெருளி நோய்கள் 11 – 15 : இலக்குவனார் திருவள்ளுவன்

11.‘இழி மகள்’ / ‘slut’ சொல் வெருளி – Suophobia ‘இழி மகள்’ / ‘slut’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘இழி மகள்’ / ‘slut’  சொல் வெருளி. 00 12.‘இன்மை’ / ‘no’ சொல் – Ohiphobia ‘இன்மை’ / ‘no’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம்’ ‘இன்மை’ / ‘no’ வெருளி. 00 13.‘ஈ’ / ‘E’ எழுத்து வெருளி – Epsilonphobia ‘ஈ’ / ‘E’ எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘ஈ / ‘E’ எழுத்து வெருளி….

92 ?. ஒருவேளை முன்பு சனாதனத்தில் பாகுபாடு இருந்திருக்கலாம். இப்பொழுது இல்லை என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 89-91 தொடர்ச்சி) “எதிரிகளுக்குச் சுரத்தைக் கொடு” என்பது வேதம். “நாத்திகனுக்கு மருத்துவம் பார்க்கக் கூடாது” என்றவர் சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி (தெய்வத்தின் குரல், தொகுதி 3, பக்கம் 148). “தூயவன் ஒருவன் விருந்தினனாக வரும்போது நெருப்பு போலவே நுழைகிறான்”  என்பது ஒரு மொழி பெயர்ப்பு வரி.  ஆனால், மூலநூலாகிய சமற்கிருதத்தில் தூயவன் என்று இல்லை. பிராமணன் என்றுதான் குறிக்கப்பெற்றுள்ளது. ஆங்கில மொழி பெயர்ப்பிலும் அவ்வாறுதான் உள்ளது.  இதன் மற்றொரு பாடல் “யாருடைய வீட்டில் தூயவன் ஒருவன் உணவின்றி இருக்க நேர்கிறதோ, அற்பப் புத்தி உடையவனான…

வெருளி நோய்கள் 6 – 10 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் தொடர்ச்சி) வெருளி நோய்கள் (Phobia) 6 – 10 6. ‘ஆண் குறி ‘/’penis’ சொல் வெருளி – Yinjingphobia ‘ஆண் குறி’ /’penis’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஆண் குறி /’penis’  சொல் வெருளி. மறைவுறுப்புப் பெயர்களைப் பொதுவிடங்களில் சொல்லுதல், அவற்றைப் படித்தல், பிறர் சொல்லக் கேட்டல் முதலியவற்றால்  அருவருப்பு அடைவோர் இவ்வெருளிக்கு ஆளாகின்றனர். ஆண் குறி தொடர்பாகக் கெட்ட வார்த்தைகள் எனச் சொல்லப்படுவன வழக்கத்தில் உள்ளன. அவற்றை அறிந்தவர்கள் அவற்றில் பொருத்தமான ஒன்றை இங்கே கருதிப்பார்த்துக் கொள்க….

89. மனுவில் மொழி பெயர்ப்பாளர்கள் செய்த சதியா? 90. உதயநிதி சொன்னது கடுந்தண்டனைக்குரிய குற்றமா? 91 சனாதனவாதிகள் உதயநிதியின் தலைக்கு விலை பேசுவது ஏன்?- இலக்குவனார் திருவள்ளுவன்

((சனாதனம் – பொய்யும் மெய்யும் 87-88 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 89-91 மனு நூலை முதலில் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியர் சர்.வில்லியம் சோன்சு என்பார் 1794இல் சமசுகிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தமிழில் திருலோக சீதாராம் மொழி பெயர்த்துள்ளார். திருலோக சீதாராம் என்றால் திருவையாறு (உ)லோகநாதய்யர் சீதாராமன். இவர் எழுத்தாளர், இதழாளர், மொழி பெயர்ப்பாளர், பன்முக ஆளுமை மிக்கவர். பிராமணரான இவர் எப்படித் தம் வருணத்தாருக்கு எதிராகத் தவறாக மொழி பெயர்ப்பார்? எனவே, மனுவில் உள்ள அறமற்ற செய்திகளை…

87 & 88 சனாதனத்தை எதிர்ப்பவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 86 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 87 & 88 சனாதனத்தை இறை ஏற்பாளர்களும் எதிர்க்கிறார்கள். இறை மறுப்பாளர்களும் எதிர்க்கிறார்கள். எனவே,  கடவுள் மறுப்பாளர்கள் மட்டுமே சனாதனத்தை எதிர்க்கிறார்கள் என்பது உண்மையல்ல. பொதுவாகக் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் பகுத்தறிவுவாதிகளாக இருக்கிறார்கள்; தன்மதிப்பும் தன்மானஉணர்வும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே, அவர்கள் சனாதனத்தை எதிர்ப்பது இயற்கை. அதற்காக இறை மறுப்பாளர்கள் மட்டுமே சனாதனத்தை எதிர்ப்பதாகக் கருதுவது தவறே. இறையன்பர்கள் பலரும்  தாங்கள் இல்லாத மேற்சாதியால் ஒடுக்கப்படுவதாகவும் இழிவுபடுத்தப் படுவதாகவும் உணர்ந்து எதிர்க்கிறார்கள். எனவே இறையன்பர்கள்…

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 18 (பனி நீர்க் கலனும் வெந்நீர்க் கலனும்) – இலக்குவனார்திருவள்ளுவன்

(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 17 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 18 (பனி நீர்க் கலனும் வெந்நீர்க் கலனும்) பழந்தமிழகத்தின் கட்டடக்கலை குறித்த பல்வகை இலக்கியக் குறிப்புகளையும் நெடுநல்வாடை என்னும் இலக்கியம் ஒன்றிலேயே மிகுதியான குறிப்புகள் உள்ளமையையும் கண்டோம். நெடுநல்வாடையிலேயே மேலும் பல குறிப்புகள் உள்ளன. மலைகளைப் போன்று அகலமும் உயரமும் உடைய கட்டடம் என்பதைவரைகண்டன்ன தோன்றல் (நெடுநல்வாடை 108) என்கிறார் ஆசிரியர் நக்கீரர்.வானளாவிய கட்டடங்களில் வானுலகைத் தீண்டும் வண்ணம் மிக உயர்வாக அமைந்த மேல்நிலை மாடம் குறித்துவான் உற நிவந்த மேல் நிலை…

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 17: பிறருக்கு உறவாகவும் ஊக்கமாகவும் இருப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை –16 தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 17 பிறருக்கு உறவாகவும் ஊக்கமாகவும் இருப்போம்! உள் இலோர்க்கு வலியாகுவன்கேள் இலோர்க்குக் கேளாகுவன்                புறநானூறு 396 : 10-11 பாடியவர்: மாங்குடி கிழார்.பாடப்பட்டோன்: வாட்டாற்று எழினியாதன்.திணை: பாடாண்.துறை: கடைநிலை. மன்னன் எழினியின் மகன் ஆதன் எழினியாதன் எனப்படுகிறான். உள் = மனவெழுச்சி (ஊக்கம்). வலி = பற்றுக்கோடு (ஆதரவு), வலிமை. கேள் = உறவு. வாட்டாறு என்னும் பெயருடைய ஓர் ஊர்…

86. சனாதனத்தை எதிர்ப்பவர்கள் இந்துமதப் பகைவர்கள் என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 85 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 86 அதே நேரம் இந்து மதம் என்பது குறித்த சிக்கலையும் பார்க்க வேண்டும். தமிழர்கள் இந்துக்கள் அல்லர். வடக்கே இருந்த ஆரியச் சமயத்தில் ஆட்கொள்ளப்பட்டார்கள். எனவே வடக்கே இருந்த இந்து சமயமாகத் திரிக்கப்பட்ட  ஆரிய/இந்து சமயத் தவறான கோட்பாடுகள், பழக்க வழக்கங்கள் முதலியவை இவர்கள் மீதும் ஏற்றப் பெற்றன. எனவே, இவர்களைத் தமிழர் சமயத்தவர் என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் இந்து வேறு தமிழர் சமயம் வேறு என்று…

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ-17 (மழைமானி) : அன்றே சொன்னார்கள் 55 : இலக்குவனார்திருவள்ளுவன்

(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ-16 தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ-17 (மழைமானி) கட்டடச் சிறப்பு குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். கட்டடக்கலையுடன் பிற அறிவியல் துறைகளின் சிறப்பும் இணைந்து விளங்குவதையும் காண்கிறோம். அத்தகைய அறிவியல் செய்தியில் ஒன்று, உயர்ந்த கட்டடங்களில் மழை அளவை அறிவதற்காக மழைமானியைப் பொருத்தி இருந்துள்ளனர் என்பதாகும்.கிரேக்கத்தில் கி.மு.5 ஆம் நூற்றாண்டில் மழைஅளவைப் பதிந்து வைத்ததாகக் குறிப்புகள் கிடைத்துள்ளன.  அதற்குப் பின்னர் கி.பி.நூற்றாண்டுகளில், கொரியா அல்லது சீனாவில் மழையை அளப்பதற்கான அளவி ஒன்றை (rain gauge) உருவாக்கியதாகவும் கூறுவர். தொடர்ந்து…

85. ஆளுநர் இரா.ந. இரவி 100 பட்டியலினத்தவருக்குப் பூணூல் அணிவித்ததைப் புரட்சியாகக் கூறுகிறாரே!

(சனாதனம் – பொய்யும் மெய்யும்  83. 84 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 85 பழைய நிகழ்வுகள் இரண்டைக் குறிப்பிட விரும்புகிறேன். பாரதியார் தனது சீடராகக் கருதிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரா. கனகலிங்கம் என்பவருக்கு 1913 இல் பூணூல் அணிவித்திருக்கிறார். இதன் மூலம் அனைவரையும் சமமாக ஆக்கிவிட்டதாகவும் கனகலிங்கம் உயர்ந்து விட்டதாகவும் கருதினார். இதேபோல் புதுவை உப்பளம் சேரியில் உள்ள தேசமுத்துமாரி கோவில் அருச்சகரான சி. நாகலிங்கப் பண்டாரம் என்ற பட்டியலின இளைஞருக்கும் பாரதி பூணூல் போட்டு காயத்திரி மந்திரத்தைக் கூறியுள்ளார்….