வலசை – migration : இலக்குவனார் திருவள்ளுவன்
வலசை – migration இடம்விட்டு இடம் பெயர்ந்து செல்லும் பறவைகள் புலம் பெயர் பறவைகள்/transit birds எனப்படும். இவற்றை அயல் புலத்திலிருந்து வருவன, அயற்புலத்திற்குச் செல்வன என இருவகையாகப் பிரிப்பர். இடம் பெயராமல் தாய்மண்ணிலேயே தங்கும் பறவைகளும் உள்ளன. மைகிரேசன் (migration) எனில் குடிப்பெயர்ச்சி எனத் தொல்லியல், வங்கியியல், பொருளியல் ஆகியவற்றிலும் புலப்பெயர்ச்சி என வேதியியல், தகவல் நுட்பவியல் ஆகியவற்றிலும் வலசைபோதல் என மீனியல், உயிரியல், காலநடைஅறிவியல் ஆகியவற்றிலும் புலம்பெயர்தல் என மனையியலிலும் சட்டவியலிலும் இடம்பெயர்தல் என அரசியலிலும் குடிபெயர்வு எனச்…
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 25 : புலவர் கா.கோவிந்தன்: காத்தியாயனரும் பதஞ்சலியும்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 24 : புலவர் கா.கோவிந்தன்: சீனா வுடன் கொண்டிருந்த வாணிகம் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 8. வடக்கும் தெற்கும் கி.மு. 500 முதல் கி.மு.1 வரை காத்தியாயனரும் பதஞ்சலியும் பாணினியின் “அட்டாத்தியாயீ’ குறையுடையது எனக் கண்டு, பாணினியின் விதிமுறைகளுக்குத் துணையாக வாத்திகம் அஃதாவது உரைவிளக்கம் எழுதிய காத்தியாயனர், பாணினிக்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பெரும்பாலும் கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தார். தமிழ்ப்பேரகராதி துணை ஆசிரியர் திருவாளர். பி.எசு. சுப்பிரமணிய சாத்திரியார் அவர்கள் தந்த ஒரு குறிப்பின்படி காத்தியாயனார்,…
௩. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்? – புலவர் வி.பொ.பழனிவேலனார்
(உ. உயர்தனிச் செம்மொழி : வி.பொ.பழனிவேலனார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்தமிழ் ௩. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்?முன்னுரை உலக மொழிகளுள் முதன்மையானதும், பண்பட்டதும் தமிழ்மொழி ஒன்றே. எழுத்துகள் செப்பமாயமைந்தது; மென்மை, வன்மை, இடைமை ஒலிகளையுடைய எளிய இனிய மொழி; ஒரு சொற்கு ஒரு பலுக்கல் உடையது; ஒரு சொல்லில் உள்ள எல்லா எழுத்துகளும், ஒலிக்கும் இயல்புடையது. எழுத்து மாற்றம் வீரமாமுனிவரால் செய்யப் பெற்றபின், பெரியார் வழி பற்றி, தற்போது தமிழக அரசு ஓரளவு எழுத்துச் சீர்திருத்தம் செய்துளது. இதற்குமேல் எழுத்துச் சீர்திருத்தம் தேவையில்லை என்றாலும்…
சட்டச் சொற்கள் விளக்கம் 951-955 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 946-950 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 951-955 951. At an early date முன்னதான நாளில் விரைவிலேயே; கூடியவிரைவில் என இப்போது குறிப்பிடுகின்றனர். இவ்வாறு குறிப்பது பொதுவான விரைவைக் குறிக்கும். அஃதாவது எந்த நாளும் குறிப்பிடாத பொழுது விரைவில் முடித்துத் தர வேண்டுவது. ஆனால், At an early date என்றால் முன்னதான நாளில். ஒரு நாள் குறிக்கப்பெற்ற பின்னர் அதற்கு முன்னர் வேண்டுவது. சான்றாக வழக்கு நாள் குறித்த பின்னர் அதற்கும்…
குறள் கடலில் சில துளிகள் 24. கஞ்சத்தனத்தை என்றும் எண்ணாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(கடலில் சில துளிகள் 23. நல்லன செய்யாது செல்வத்தை அழிக்காதே!- தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 24. கஞ்சத்தனத்தை என்றும் எண்ணாதே! பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன்று அன்று. (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், எண்:௪௱௩௰௮ – 438) பொழிப்பு: பற்றுள்ளம் கொண்டு செல்வத்தைச் செலவிடாத இவறன்மை எந்த நன்மையுள்ளும் வைத்து எண்ணப்படுதற்குரிய ஒன்று அல்ல. பதவுரை: பற்று-பிடித்தல்; உள்ளம்-நெஞ்சம்; என்னும்-என்கின்ற; இவறன்மை-கஞ்சத்தனம்; இவறல்+தன்மை; செலவிடப்படத் தக்கனவற்றிற்குச் செலவு செய்யாத பொய்யான சிக்கனத் தன்மை. இது திருவள்ளுவரால் புதிதாக ஆளப்பட்ட…
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 1 : இலக்குவனார் திருவள்ளுவன்
சன. 4, 2011 எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 1 பேரன்புசால்அவையோருக்கு, வணக்கம். பல்வகைப்பட்ட அனைத்துத் துறைகளையும் சார்ந்தவர்கள் இங்கே கூடியுள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் இங்கே நாம் வெறும் பொழுது போக்கிற்காகக் கூடவில்லை; பயன் ஆக்கத்திற்காகக் கூடியுள்ளோம். ‘உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில் அடைகின்ற வெற்றி யாவும் நம் வெற்றி’ என்ற எண்ணத்தில் கூடியுள்ளோம்; இன்றைய கலந்துரையாடல் மூலம் நம்மிடையே எழுச்சி ஏற்படும் என்ற நம்பிக்கையில் கூடியுள்ளோம். தமிழ் தனக்குரிய நிலையை மீளப் பெறுவதற்கு நம் சந்திப்பு ஓர் உந்துதலாய் அமையும்; இலக்கை அடைவதற்குரிய பாதையில் முன்னேறிச் செல்ல உதவும்….
உ.வே.சா.வின் என் சரித்திரம் : 126 : அத்தியாயம்-86 : விடுமுறை நிகழ்ச்சிகள்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 125 : அத்தியாயம்-85 : கோபால ராவின் கருணை-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-86 விடுமுறை நிகழ்ச்சிகள் திருவாவடுதுறையில் நான் இருந்த காலங்களில் அருகிலுள்ள ஊர்களில் இருந்த செல்வர்கள் வீட்டுக் கலியாணங்களுக்கு மடத்தின் பிரதிநிதியாகச் சென்று வருவேன். கலியாண தம்பதி களுக்கு வழங்கும்படி ஆதீன கர்த்தர் ஆடை முதலியன அளிப்பார். நான் அவற்றைப் பெற்றுக் கொண்டு போய்ச் சேர்ப்பித்து விட்டு வருவேன். கல்லூரிக் கோடை விடுமுறைக் காலத்தில் திருவாவடுதுறையில் நான் தங்கியிருந்தபோது இத்தகைய சந்தர்ப்பம் ஒன்று நேர்ந்தது. அந்த வருடம் மே…
நாலடி நல்கும் நன்னெறி 6 – பயன்பாடு இல்லாப் பொருளால் என்ன பயன்? : இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 5 – நிலை புகழ் தரும் செயல் ஆற்றுக – தொடர்ச்சி) நாலடி நல்கும் நன்னெறி 6 பயன்பாடு இல்லாப் பொருளால் என்ன பயன்? உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான் துன்னருங் கேளிர் துயர்களையான் – கொன்னே வழங்கான் பொருள்காத் திரும்பானேல், அ ஆ இழந்தான்என் றெண்ணப் படும். -நாலடியார், செல்வம் நிலையாமை, 9 பொருள்: தான் உண்ணாதவனாக, மதிப்பைக் காக்காதவனாக, புகழ்மிகு செயல் செய்யாதவனாக, உறவினர்களின் துன்பங்களைப் போக்காதவனாக இரப்பவர்க்குக் கொடுக்காதவனாக வீணாகப் பொருளை வைத்திருந்து என்ன பயன்?…
காலிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்
காலிகள் புதிய அறிவியல் – செவ்வாய்க் கிழமை, புரட்டாசி 2, 2043 12:03 இதிநே Tuesday, September 18, 2012 12:03 IST மூன்று கால்கள் கொண்ட இருக்கையை முக்காலி என்றும் நான்கு கால்கள் கொண்ட இருக்கையை நாற்காலி என்றும் நாம் சொல்கிறோம். அதைப்போல் உயிரினங்களையும் கால்களின் எண்ணிக்கை அடிப்படையில் பெயரிட்டு வகைப்படுத்துவது அறிவியல். மிகுதியான எண்ணிக்கையில் கால்கள் கொண்ட பூச்சியை ஆயிரங்கால் பூச்சி என்று சொல்வதுபோல் பின்வரும் பெயர்களின் அடிப்படையில் அவற்றிற்கான விளக்கங்களை நாம் அறிந்து கொள்ளலாம். எடுத்துக் காட்டாகச் சொல்வாதானால்…
சங்கப் புலவர்கள் பொன்னுரை – 8 : பிறர் துன்பம் துடைத்தலே உண்மைச் செல்வம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை 7 – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 8 பிறர் துன்பம் துடைத்தலே உண்மைச் செல்வம்! “நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே” – மிளைகிழான் நல்வேட்டனார் (நற்றிணை 210: 5-6) அரசின் பாராட்டுரையும் ஆடம்பரப் போக்குவரத்து வசதிகளும் செல்வமன்று. இவை நம் செயல்களால் கிடைப்பவை! நெடிய மொழிதல்…
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 24 : புலவர் கா.கோவிந்தன்: சீனா வுடன் கொண்டிருந்த வாணிகம்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 23 : புலவர் கா.கோவிந்தன் – வெளிநாட்டு வாணிகம்-தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு சீனா வுடன் கொண்டிருந்த வாணிகம் (J.R.A.S. 1910 Page: 204). கிறித்து ஆண்டுத் தொடக்கத்திற்குப் பின்னர், இந்தியத் துறைமுகங்களிலிருந்து நேராகவோ, அரேபிய, எகித்திய இடைத் தரகர்கள் வழியாகவோ, உரோமானியர் பெற்றுக் கொண்ட வேறுபிற எண்ணற்ற இந்தியப் பண்டங்கள் பற்றிய ஆவணங்கள் நம்மிடையே உள்ளன. இப்பொருள்களின் வணிகப் போக்குவரத்து, மேலும், பழமைவாய்ந்த காலத்திலிருந்தே வழக்காற்றில் இருந்திருக்க வேண்டும். ஆனால், அக்காலத்தைச் சேர்ந்த அகச்சான்று எதுவும் நம்மிடையே இல்லை….
உ. உயர்தனிச் செம்மொழி : வி.பொ.பழனிவேலனார்
(க. தமிழ் வளர்ப்போம்– வி.பொ.பழனிவேலனார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்தமிழ் உ. உயர்தனிச் செம்மொழி ஒருவர் (எவர் பெயரையும் குறிப்பிட விரும்புகிலேம்) தமிழில் பேச்சுமொழியை ஒழுங்குபடுத்திச் செப்பம் செய்யவேண்டும் என்கின்றார்; வேறொருவர், பிறமொழிச் சொற்களைக் கலந்தால்தாம் தமிழ் வளர்ச்சியடையும் என்கின்றார்; இன்னொருவர், அறிவியல் கருத்துகளைத் தமிழில் எழுத, பேசப் பிறமொழிச் சொற்களை அவ்வாறே எடுத்தாள வேண்டும். அன்றுதான் அறிவியல் தமிழ் வளரும் என்று சொல்கின்றார்; ஆங்கில மொழியைப் பின்பற்றி எழுத வேண்டும் என்கின்றார் மற்றொருவர்; ‘தமிழ்க் கழகங்கள் முத்தமிழ் வளர்த்தன என்பதெல்லாம் கட்டுக்கதை; தமிழ்ச்சங்கங்கள்…
