பிறர் துன்பத்தையும் தம் துன்பம்போல் கருதுவதே அறம்! : சங்கப்புலவர்கள் பொன்னுரை– 6 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப்புலவர்கள் பொன்னுரை – 5 : தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 6 : பிறர் துன்பத்தையும் தம் துன்பம்போல் கருதுவதே அறம்!- கலித்தொகை “என்றும்பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி, அறன் அறிதல்சான்றவர்க்கு எல்லாம் கடன்” நல்லந்துவனார், கலித்தொகை 139, 1-3 நோ என்றால் துன்பம் எனப் பொருள். நோ என்பதிலிருந்து பிறந்ததே நோய். பிணியாளர்களுக்குத் துன்பம் தருவதால் பிணியும் நோய் எனப்படுகிறது. இங்கே நோய் என்பது துன்பத்தையே குறிக்கிறது….
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 22 – சாதகக் கட்டுக்கதைகளும் தென்இந்தியாவும் – புலவர் கா.கோவிந்தன்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 21 : வருணங்கள் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு சாதகக் கட்டுக்கதைகளும் தென் இந்தியாவும் பிற்காலத்தில் கெளதம புத்திரராக உயர்ந்துவிட்ட போதிசத்தரின் எண்ணற்ற பிறப்புகள் குறித்த கட்டுக்கதைகளின் தொகுப்பாகிய சாதகக் கட்டுக்கதைகள் என்ற நூல் வட இந்தியரிடையே, ஐந்தாம் நூற்றாண்டிலும் அதற்கு முந்திய நூற்றாண்டுகளிலும் வழக்கில் இருந்த, தருமவிரோத பௌத்த வழிபாட்டு நெறியின் நாட்டுப்புறக் கட்டுக்கதைகளின் ஆவணம் ஆகும். இக்கதைகள், கி.மு. நான்காம் நூற்றாண்டு அளவில் எழுதப்பட்டன. ஆனால், அவை புத்தர் காலத்திற்கு நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே, நாட்டுப்புறக் கட்டுக்கதைகளாக…
நாலடி நல்கும் நன்னெறி 3 – பிறருக்குக் கொடுத்து உதவுங்கள்!: இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 2.: இறப்பவரைப் பார்த்து இருப்பவர் உணர்க!-தொடர்ச்சி) பிறருக்குக் கொடுத்து உதவுங்கள்! இழைத்தநாள் எல்லை இகவா ; பிழைத்தொரீஇக் கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; ஆற்றப் பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின் ; நாளைத் தழீஇம் தழீஇம் தண்ணம் படும். -நாலடியார், செல்வம் நிலையாமை , 6 பொருள்: வாழ்வதற்கு வரையறுக்கப்பட்ட கால அளவைக் கடந்து எமனிடமிருந்து தப்பிக் குதித்து ஓடிப் பிழைத்தவர் இல்லை! நாளைக்கே (விரைவில்) உங்களது பிணப்பறை ‘தழீம் தழீம்’ என்னும் ஓசையுடன் எழும். எனவே, பெரும் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவர்களே!…
நாலடி நல்கும் நன்னெறி 2.: இறப்பவரைப் பார்த்து இருப்பவர் உணர்க!-இலக்குவனார் திருவள்ளுவன்
(நிலையாமை உணர்ந்து நல்லறம் புரிக!-தொடர்ச்சி) இறப்பவரைப் பார்த்து இருப்பவர் உணர்க! சென்றே யெறிப வொருகால் சிறுவரை நின்றே யெறிப பறையினை – நன்றேகாண் முக்காலைக் கொட்டினுண் மூடித்தீக் கொண்டெழுவர் செத்தாரைச் சாவார் சுமந்து. (நாலடியார் பாடல் 24) பொருள்: (பறை அடிப்போர்) இறந்தவர் வீட்டிற்குச் சென்று ஒரு முறை பிணப்பறையை அடிப்பர்; சற்று நேரம் சென்றதும் மீண்டும் ஒரு முறை அடிப்பர்; மூன்றாவது முறை பறை அடிக்கும் பொழுது இனி இறக்கப் போகிறவர்கள், பாடையில் இறந்தவர்களைத் துணியால் மூடி மறைத்துத் தூக்கிக் கொண்டு, நெருப்புச்…
சங்கப்புலவர்கள் பொன்னுரை – 5: உன்னுடைய இன்பத்திற்காகப் பிறருக்குத் துன்பம் செய்யாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 4: தொடர்ச்சி) சங்கப்புலவர்கள் பொன்னுரை – 5: உன்னுடைய இன்பத்திற்காகப் பிறருக்குத் துன்பம் செய்யாதே! “தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னாசெய்வது நன்று ஆகுமோ…” கபிலர், கலித்தொகை 62: 7, 8 – வெண்கலிப்பா – கலித்தொகை – 62, குறிஞ்சிக் கலி – 26 – தலைவன் கூற்று– பாடியவர்: கபிலர்– திணை: குறிஞ்சிகி.மு. காலத்துப் பாடல் தமக்கு இனிதாய் இருக்கின்றது என்று கருதிப்…
நிற வகைகள்-இலக்குவனார் திருவள்ளுவன்
நிற வகைகள் புதிய அறிவியல் – செவ்வாய்க் கிழமை, புரட்டாசி 2, 2043 12:03 இதிநேTuesday, September 18, 2012 12:03 IST பால் போல் வெண்ணிறம் கொண்டவனைப் பால்வண்ணன் என்றும் முத்துபோல் வெண்ணிறம் கொண்டவனை முத்து வண்ணன் என்றும் சொல்வது பழந்தமிழர் வழக்கம். மலர்களின், விலங்குகளின் வண்ண அடிப்படையிலும் நிறங்களைக் குறிப்பிட்டுள்ளனர். இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இந்நிறங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது. நிறங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை…
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 21 : வருணங்கள்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 20 – பண்டைய பிராமணர்கள் இறைச்சி உண்ணல்- தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடுவருணங்கள் தென்னிந்தியச் சூத்திரகாரர்கள் வகுத்த வாழ்க்கைச் சட்டங்களெல்லாம், முக்கியமாக, அக்கால அளவில், தமிழ்நாட்டில் மிகச் சிலராகவும், கோதாவரியப் பள்ளத் தாக்கின் தலைப்பில், மிகப் பலராகவும் வாழ்ந்திருந்த பிராமணர்களைக் குறித்தனவே, அச்சூத்திரங்கள், நான்கு பெருஞ்சாதிகளையும், எண்ணற்ற கலப்புச் சாதிகளையும் குறித்துப் பேசுகின்றன என்றாலும், அவை கூறும் சட்டங்களில், ஏனையோரிலும், பிராமணர் குறித்தே , அவை தாமும் அக்கறை கொண்டுள்ளன ஆதலின் அவை கூறும் அச்சாதிக் கூறுபாடுகள், வெறும் தத்துவ…
நாலடி நல்கும் நன்னெறி : நிலையாமை உணர்ந்து நல்லறம் புரிக!-இலக்குவனார் திருவள்ளுவன்
நிலையாமை உணர்ந்து நல்லறம் புரிக! நாலடியார் துறவறவியலில் தொடங்கி முதலில் செல்வ நிலையாமை, இளமை நிலையாமை குறித்துக் கூறுகிறது. மூன்றாவதாக யாக்கை நிலையாமையை உரைக்கிறது. யாக்கை என்பது உடலைக் குறிக்கிறது. யாத்தல் என்றால் கட்டல் என்று பொருள். இதிலிருந்து யாக்கை வந்தது. எலும்பு, தசை, தசை நார், இழைகள், உள்ளுறுப்புகள் முதலியவற்றைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதால் யாக்கை எனப் பெயர் பெற்றது. மூன்று அதிகாரத் தலைப்பு கூறும் நிலையாமை குறித்து மணிமேகலை முன்னரே இளமையும் நில்லா; யாக்கையும் நில்லா; வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா; (சிறைசெய்…
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 20: புலவர் கா.கோவிந்தன் – பண்டையபிராமணர்கள்இறைச்சிஉண்ணல்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 19 : வட இந்தியாவும்தென் இந்தியாவும் – தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு ‘’பௌதாயன தரும சூத்திரங்கள் (Sacred Text Book of the East. : பகுதி 14) என்ற தம்முடைய மொழி பெயர்ப்பு நூலில், திருவாளர் பூலர் (Buhler) அவர்கள், அண்ணன் மகனுக்கும், தங்கை மகளுக்கும் போலும் உடன் பிறந்தார் இருவரின் மக்களுக்கு இடையிலான திருமணமாக, ‘’மாவல பித்(து)ர்ஃச் வரர் துஃகித், கமனம்” என்ற திருமணத்தைத் தவறான நிலையில் பொருள் கொண்டுள்ளார். இவைபோலும் திருமணங்கள், தென்னிந்தியாவில் முறையானவையே ஆகும்….
ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் புகழ் வணக்க நாள்
ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் புகழ் வணக்க நாள் “தமிழினத்தின் தேசிய அடையாளத்தை நிலை நிறுத்தி முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரையும் உறுதி குலையாது, படைநடத்தி, தான் வரித்துக் கொண்ட உயரிய லட்சியத்தையும் தனது வழிநடத்தலையும் உளமார ஏற்று உயிர்களை விதையாக்கிய மாவீரர்களின் தியாகங்களையும் இலட்சியக் கனவுகளையும் நெஞ்சிருத்தி, எதிரிப்படையோ இறுதிக் கணம் வரை துணிவோடு களமாடி பிரபாகரன், 2009-ம் ஆண்டு மே மாதம் 18-ஆம் நாள், வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை தமிழீழ மாவீரர் பணிமனை அறியத் தருகிறது. பிரபாகரன், வீரச்சாவினை உறுதிப்படுத்தி நெஞ்சைப்…
நிலையில்லாத உலகில் நிலைத்தப் புகழைப் பெற…! மன்னனுக்கு அறிவுறுத்திய புலவர்: இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 2 : தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 3 நிலையில்லாத உலகில் நிலைத்தப் புகழைப் பெற…! மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே! – புறநானூறு 165– திணை : பாடாண் திணை– துறை : பரிசில் விடை– பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.– பாடப்பட்டோன் : குமணன். 15 அடிகள் கொண்ட புறநானூறு 165 ஆம் பாடலின் முதலிரு அடிகளே இவை. இவ்வுலகம் நிலையில்லாதது. நிலையில்லா உலகில் நிலைபெற வேண்டின் புகழை நிலைநிறுத்த…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 123 : இரண்டாவது பாடம்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 122: கல்லூரி நுழைவு – தொடர்ச்சி) என் சரித்திரம் இரண்டாவது பாடம் மணி அடித்தவுடன் நான் முன்னே வேறு வகுப்பிற்குச் சென்றேன். செட்டியார் பிள்ளைகளைத் தனியே அழைத்து, நான் பாடம் சொன்னதைப் பற்றி அவர்களுடைய அபிப்பிராயத்தைக் கேட்டார். பிள்ளைகள் தங்களுக்கு மிக்க திருப்தியாக உள்ளது என்று தெரிவித்தார்கள். “நான் மிகவும் கடினப்பட்டு இவரை அழைத்து வந்திருக்கிறேன். இவரிடத்தில் மரியாதையாக இருங்கள். என்னிடம் இருப்பது போலவே இவரிடமும் இருக்க வேண்டும்” என்று செட்டியார் அவர்களை நோக்கிச் சொல்லி விட்டுச் சிலரை இன்னார்…
