சட்டச் சொற்கள் விளக்கம் 906 – 910 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் : 901-905-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் : 906 – 910 906. assistance,food./Food assistance உணவு உதவி அரசாங்கம், தன் நாட்டு மக்களுக்கான பசியைப் போக்க உதவுதல், நாட்டில் உள்ள சிறாரின் உணவுத்தேவையை நிறைவேற்ற உதவுதல், பள்ளி மாணவர்களின் பசியைப் போக்க உதவுதல், நண்பகல் உணவுத் திட்டம், காலை உணவுத் திட்டம், 60 அகவைக்கு மேற்பட்ட முதியோரின் பசியைப் போக்க உதவுதல், இலவச உணவு அளித்தல், சலுகை விலையில் உணவு அளித்தல்,அரசுடன் இணைந்தோ தனித்தோ தனிப்பட்ட அமைப்புகளோ…
தமிழர் திருநாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா? – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழர் திருநாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா? நலம், வளம், தளர்வின்மை, விடாமுயற்சி, நம்பிக்கை, ஆற்றல், வெற்றி, பெருமை, செல்வம், இன்பம், மகிழ்ச்சி, புகழ், உயர்வு, சிறப்பு, வாணாள், துணிவு, எல்லாமும் பெற்றுத் தமிழுடன் நூறாண்டு வாழ இத்தமிழர் திருநாளில் வாழ்த்துகிறேன். அதே நேரம் தமிழர் திருநாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா என்ற சிந்தனையும் எழுகிறது. தமிழர் திருநாளைத் தமிழர் திருநாள் என்றுகூடச் சொல்ல மனமின்றித் தமிழரே திராவிடர் திருநாள் என்கின்றனரே! தமிழ் நாடாக இருந்தாலும் பிற நாடாக இருந்தாலும் தமிழர் கொண்டாடும்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 117: அத்தியாயம் 79. பாடும் பணி
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 116: அத்தியாயம் 78. குறை நிவர்த்தி-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-79 பாடும் பணி திருவாவடுதுறையில் என் பொழுதுபோக்கு மிக்க இன்பமுடையதாக இருந்தது. பாடம் சொல்வதும், படிப்பதும், படித்தவர்களோடு பழகுவதும் நாள்தோறும் நடைபெற்றன. சுப்பிரமணிய தேசிகருடைய சல்லாபம் எல்லாவற்றிற்கும் மேலான இன்பத்தை அளித்தது. தேசிகர் தினந்தோறும் அன்பர்களுக்குக் கடிதம் எழுதுவார். ஒவ்வொரு நாளும் ஐம்பதுக்குக் குறையாமல் கடிதங்கள் எழுதப் பெறும். ஒவ்வொன்றுக்கும் உரிய விசயத்தை இராயசக்காரர்களிடம் நிதானமாகச் சொல்லுவார்; தாமும் எழுதுவார். இராயசக்காரர்கள் தேசிகர் கருத்தின்படியே எழுதக்கூடிய திறமையுள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம்…
ரு. தமிழ் வளர்ச்சிக்கு அரசு செய்யவேண்டியன-புலவர் வி.பொ.பழனிவேலனார்
(௪. திருத்தமாய்ப் பேசுங்கள்!–வி.பொ.பழனிவேலனார், தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ரு. தமிழ் வளர்ச்சிக்கு அரசு செய்யவேண்டியன இன்றைய தமிழக அரசு தமிழ் வளர்ச்சிக்கென செய்து வரும் பணிகள் பலவாகும். தஞ்சையில் தொடங்கவிருக்கும் தமிழ்ப்பல்கலைக்கழகம் அவற்றிற்கு முத்தாய்ப்பு வைத்தது போன்றதாகும். ஆயினும், நடைமுறையில் சில வழுக்களும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் பல தமிழ்க்கல்லூரிகள் உள்ளன. ஆண்டுதோறும் தமிழ்ப்புலமை பெற்று வெளியேறுகின்றனர். பலர் தமிழாசிரியர் பயிற்சியும் பெறுகின்றனர். தமிழ் பயின்று, தமிழாசிரியர் பயிற்சியும் முடித்த பல்லாயிரவர், பணியின்றி வாடுகின்றனர். ஆனால், அஞ்சல்வழியும், தனியேயும் பலர் படித்துத் தமிழாசிரியராகி விடுகின்றனர். தமிழ்க்…
ஆரியர்க்கு முற்பட்ட வெளிநாட்டு வாணிகம் – புலவர் கா.கோவிந்தன்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ச்சமயம் 2 – புலவர் கா.கோவிந்தன்-தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 13 கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டில் வெளிநாட்டு வாணிகம் வெளிநாட்டு வாணிக வளர்ச்சி சீனர், யவனர் போலும், இந்தியரல்லாத இனத்தவர் பாரதப்போரில், போரிட்ட படைப்பிரிவுகளுக்குக் கொடுத்ததை மகாபாரதம் குறிப்பிடுகிறது. (CINAS fought in the Contingent of Bhagadatra of prajotisa. Magabharata. 5:18; 584:5 18:321) மகாபாரத காலத்தில், வட இந்திய அரசர்களுக்கும் இந்தியாவுக்கு வெளியிலிருந்த அரசர்களுக்குமிடையில், அரசியல் உறவுகள் இருந்தன என்பதைக் குறிப்பாக உணர்த்தும் இந்த அறிவிப்பில் பொருத்தமற்றது…
சட்டச் சொற்கள் விளக்கம் : 901-905
(சட்டச் சொற்கள் விளக்கம் 896-900, தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் : 901-905 901. assistance, employee / employee assistance பணியாளர் உதவிபணியாளர்க்கு உதவுதல் தொழிலாளர்களின் பணிமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காகவும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் முதலாளிகளால் தரப்படும் உதவி. தொழிலாளர்களின் பணித்திறனை மேம்படுத்தவும் தொழிலாளர்களின் சிக்கல்களைத் தீர்க்கவும் தொழிலாளர் ஆணையத்தால் வழங்கப்படும் நிதியுதவி முதலான உதவிகள். தொழிலாளர்களுக்கு ஆற்ற வேண்டிய உதவிகளைச் செய்யாவிட்டால் அதுவும் குற்றமாகும். 902. assistance, Enlist/ Enlist assistance உதவி பெறுஆதரவு பெறு படையில் சேர்த்திடுபடையில் இடம்பெறுபட்டியலில் இணைத்துக்கொள்சேர்இணைவுறுஆள்சேர்படைக்கு வீரர் திரட்டுதுணையாகப்பெறுஎய்தப்பெறுபயன்படுத்துஈடுபடுத்துபுகுந்தீடுபடு பணி வளங்களைப்…
பொங்கல் விடுமுறையில் இரு குறைபாடு – இலக்குவனார் திருவள்ளுவன்
பொங்கல் விடுமுறையில் இரு குறைபாடு போகிக்கு அல்லவா விடுமுறை விட்டிருக்க வேண்டும்? மொழிப்போர் ஈகியர் நாளை வேலைநாள் ஆக்கியிருக்கலாமா? இவ்வாண்டு(தி.ஆ.2056/பொ.ஆ.2025) தமிழர் திருநாளாம் பொங்கற் புதுநாள் சனவரி 14 செவ்வாயன்று வருகிறது. தொடர்ந்து புதனன்று திருவள்ளுவர் திருநாள்/மாட்டுப் பொங்கல்(சன.15), வியாழனன்று உழவர் திருநாள் (சன.16) என முந்நாளும் அரசு விடுமுறையாகும். எனவே வெள்ளியன்று விடுமுறை விட்டால் தொடர்ந்து வரும் சனி, ஞாயிற்றிலும் குடும்பத்தினருடன் இருக்கும் வகையில் நல் வாய்ப்பாக இருக்கும் என ஆசிரியர்களும் அரசூழியர்களும் கருதினர். இதற்கிணங்க எழுந்த முறையீட்டு அடிப்படையில் அரசு வெள்ளியன்றும்…
இலக்குவனார் திருக்குறள் எளிய பொழிப்புரை : சிறப்புகள்: குமரிச்செழியன்
இலக்குவனார் திருக்குறள் எளிய பொழிப்புரை : சிறப்புகள் இலக்கியங்கள் என்பவை மக்களின் வாழ்க்கை இலக்குகளை உரைப்பவை. உலகில் எண்ணற்ற இலக்கியங்கள் பல்வேறு மொழிகளிலும் உள்ளன என்றாலும் உலகத்தொன்மொழியாகிய தமிழ்மொழிக்குத் தனியிடம் உள்ளது. தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களிலும் திருக்குறளுக்குத் தனியிடம் உள்ளது. உலக மக்களின் வாழ்க்கை நெறிகளைப் பகுத்தும் தொகுத்தும் வழங்கும் நூல் திருக்குறள். உலகில் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பெற்ற ஒரே நூல் திருக்குறள். உலக மக்கள் அனைவராலும் போற்றப்பட்டும் உரிமை கொண்டாடப்பட்டும் வருகின்ற ஒப்புயர்வற்ற உயர்ந்த நூல். திருக்குறள் ஒரு தனித்தமிழ்…
உ.வே.சா.வின் என் சரித்திரம் 116: அத்தியாயம் 78. குறை நிவர்த்தி
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 115: அத்தியாயம் 77. தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-78 குறை நிவர்த்தி திருவாவடுதுறையில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தேன். சுப்பிரமணிய தேசிகர் தாம் உத்தேசித்தபடியே திருப்பெருந்துறைக்கு வந்து சேர்ந்தார். சில தினங்களுக்குப் பிறகு தேசிகரிடமிருந்து தந்தையார் முதலியவர்களோடு திருப்பெருந்துறைக்கு வந்து சில காலம் இருக்க வேண்டுமென்று எனக்கு ஓர் உத்தரவு வந்தது. எங்களுக்கு வேண்டிய சௌகரியங்களைப் பண்ணுவித்து அனுப்ப வேண்டுமென்று காறுபாறு கண்ணப்பத் தம்பிரானுக்கும் திருமுகம் வந்தது. நான் என் தாய் தந்தையரை அழைத்துக்கொண்டு திருப்பெருந்துறையை நோக்கிப் புறப்பட்டேன். காறுபாறு தம்பிரான் சௌகரியங்கள்…
௪. திருத்தமாய்ப் பேசுங்கள்!-புலவர் வி.பொ.பழனிவேலனார்
(௩. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்?-புலவர் வி.பொ.பழனிவேலனார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௪. திருத்தமாய்ப் பேசுங்கள்! தமிழ்மொழி தோன்றிய காலம், மொழியறிஞர்களாலும் கணிக்கவியலாத புதிராயுள்ளது. அஃது, உலக மொழிகட்கு முன்னோடியும், முதல் தாய்மொழியுமாகும். இத்தகு தமிழ்மொழி சேர, சோழ, பாண்டிய அரசர்களால் சீராட்டி, பாராட்டி வளர்க்கப் பெற்றதாகும். பாண்டியப் பேரரசு முத்தமிழ்க் கழகங்கள் மூன்று நிறுவிப் பேணியது. மூவேந்தர் காலத்திற்குப் பின்னர் தமிழ் பல இடர்ப்பாடுகட்கு உள்ளாகியது. தமிழ்நாடும் பலரது படையெடுப்புக்கு ஆளாகியது. தமிழ்நாட்டை வென்று ஆண்ட அரசர்கள் தம் மொழி, சமயம், நாகரிகம்,…
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ச்சமயம் 2 – புலவர் கா.கோவிந்தன்
(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ச்சமயம் 1 – புலவர் கா.கோவிந்தன்-தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 12சமயம் 2 மேய்புலமாம் முல்லைநிலக்கடவுள், ஆயர் மகளிர் பாலும், ஆனினங்கள் பாலும் அன்புடையோனாகிய கார்மேனிக் கடவுள் மாயோன். அவன் எப்போதும், குழலில் ஒலி யெழுப்பிக் கொண்டேயிருப்பான். அதன் இசை அனைத்து உயிர்களையும் ஈர்த்து உருகச் செய்யும். இசையில் மட்டுமல்லாமல், ஆடலிலும் மகிழ்வூட்டுவன். ஆய மகளிர் கூட்டம் புடைசூழ, அவன், அல்லது அவன் பக்தன் , இன்றைய ஆயர்களைப் போலவே, எளிதில் பொருள் விளங்காப் பல் வேறு ஆடல்களை மேற்கொள்வர். பால்,…
எத்தனை ஆண்டுகள் பிறந்தால் என்ன? – இலக்குவனார் திருவள்ளுவன்
எத்தனை ஆண்டுகள் பிறந்தால் என்ன? இலக்குவனார் திருவள்ளுவன் எத்தனை ஆண்டுகள் பிறந்தால் என்ன? எள்ளத்தனைத் துயரமும் முடியவில்லை. ஆண்டுகள் முடிந்தாலும் துயரங்களுக்கு முடிவில்லையே! பல நாடுகளில் போர்கள். அதனால் வேறுபல நாடுகளிலும் போர்களால் பாதிப்புகள். உலகெங்கும் போர் அச்சுறுத்தல்கள். “கெட்டபோரிடும் உலகை வேரொடு சாய்ப்போம்” என்னும் பாவேந்தர் பாரதிதாசன் குரல்போல் பலரும் குரல் எழுப்பத்தான் செய்கின்றனர். ஆனால் போர்களுக்கு முடிவில்லையே! அணுக்குண்டுகளின் அழிவுகளைப் பார்த்த பின்னும் அணுக்குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றனவே! போர்களில் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியோர் என எல்லாத் தரப்பு மக்களும் கொல்லப்படுகின்றனரே!…
