சட்டச் சொற்கள் விளக்கம் 821-830 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 811-820 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) 821. Adopted Child மகற்கோடல்  குழந்தை   மகற்கோடல்  என்பது உணர்ச்சி சார்ந்த மன்பதை, சட்டபூர்வச் செயல்முறையாகும்.   இதன் மூலம், பெற்றெடுத்த பெற்றோரால் வளர்க்கப்படாத குழந்தைகள் மற்றொரு குடும்பத்தின் முழுமையான நிலையான சட்ட உறுப்பினர்களாக மாறுகிறார்கள். அஃதாவது மகற்கோடல்  குழந்தையின் அனைத்து உரிமைகளும் பொறுப்புகளும் மகற்கோடல்  பெற்றோருக்கு நிலையாக மாறும். மகற் கோடல் என்பது மகவைக் கொண்ட என்றும் மகவாகக் கொள்ளப்பட்ட என்றும் இரு பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. காண்க: Adoption…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 107 – இராவுபகதூர் திரு. பட்டாபிராம பிள்ளை

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 106 – திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை-தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம் – 69 இராவுபகதூர் திரு. பட்டாபிராம பிள்ளை திருச்சிராப்பள்ளியில் என் ஆசிரியருக்கு மிகவும் பழக்கமான இராவுபகதூர் திரு. பட்டாபிராம பிள்ளையென்னும் கனவான் ஒருவர் இருந்தார். அவருடைய சொந்த ஊர் திருவேட்டீசுவரன் பேட்டை. அவர் தமது கல்வித் திறமையாலும் இடைவிடா முயற்சியாலும் நல்ல ஒழுக்கத்தாலும் சிறிய உத்தியோகத்திலிருந்து படிப் படியாக அக்காலத்தில் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்பெற்ற டிப்டி கலெக்டர் என்னும் பெரிய உத்தியோகத்தை அடைந்து புகழ் பெற்றார். அவருடைய மேலதிகாரிகளுக்கு அவரிடத்தில்…

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன்,  5. ஈ. இன்பம்

(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 4 இ. விளைவு-தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம்ஈ. இன்பம் மனத்தின் இயக்க விளைவுதான் உணர்ச்சி.“மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி” (453) என்றார் திருவள்ளுவர். உணர்ச்சி உடம்பில்-மெய்யில் வெளிப்படுவதை (மெய்யில் படுவதை) ‘மெய்ப்பாடு’ என்றனர் தமிழ்ச் சான்றோர்.உணர்ச்சி வெளிப்பாடாம் ‘மெய்ப்பாடுகள்’ எட்டு.“நகையே அழுகை இளிவரல் (இழிவு) மருட்கை (வியப்பு)அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்றுஅப்பால் எட்டாம் மெய்ப்பாடு என்பு“[26]என்றார் தொல்காப்பியர். எட்டுள் இறுதியாகச் சொல்லப் பட்ட உவகைதான் ‘இன்பம்’ எனப்படுவது.எனவே, இன்பம் என்பது உள்ள நிகழ்ச்சி. இவ்வின்பம் உள்ளத்தில் எழுந்து உடலிலும் உணரப்படும்.“ஊடுதல்…

காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¾ – முனைவர் சான் சாமுவேல்

(காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் 2/4 –தொடர்ச்சி) காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¾                                                                                                                                                  மேற்கூறிய பிற உலகமொழிகளோடு தமிழை ஒப்பிட்டு ஒப்புமைக் கூறுகளைக் காலுடுவெல் வெளிப்படுத்தியதன் விளைவாகத் தமிழ்மொழி குறித்து 19-ஆம் நூற்றாண்டு வரை நிலவிய குறுகலான எண்ணங்கள் தூள்தூளாகச் சிதைந்தன. தமிழக மண்ணின் அடிவரை ஆணிவேரை மிக ஆழமாகச் செலுத்தி உலகெங்கிலும் விழுதுகளைப் பரப்பி, விழுதுகள் தாங்கிப் பிடிக்கும் நிலையில் உலகெங்கும் கிளை பரப்பிய மிகப் பிரமாண்ட ஆலமரமாக காலுடுவெல்லின் ஆய்வால் தமிழ்மொழி காட்சிதரத் தொடங்கியது. சமற்கிருதத்தின் திரிந்த வடிவமாக 18-ஆம் நூற்றாண்டுவரை…

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார்,23, குறிப்பு

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார்,22,பொதுவறு சிறப்பின் புகார் பிற்பகுதி தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி குறிப்பு இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் வரலாற்றில் தனக்கென ஒரு சிறப்பிடத்தைப் பெறத்தக்க வகையில் நல்ல தமிழ் அறிஞராக, வரலாற்றுத் திறனாய்வாளராக, செந்தமிழ்ப் பேச்சாளராக இலக்கியப் படைப்பாளராக, பாதை மாறாத பகுத்தறிவுவாதியாக, அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக, தமிழ்நாடு சட்டமன்றம் பேரவைத் தலைவராக, எனப் பல்திறன் படைத்த நற்றமிழ்ப் புலவராக விளங்கியவர், புலவர். கா. கோவிந்தனார் அவர்கள், “தமிழுக்கும், தமிழ்ப் புலவர்கட்கும், தமிழ் நாட்டுக்கும் தொண்டாற்றத் தன்னையே அருப்பணித்தவர்” என்று பேரறிஞர்…

சட்டச் சொற்கள் விளக்கம் 811-820 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 801-810 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 811-820 811. Admiralty Jurisdiction    கடலாண்மைப் பணி வரம்பு.   கடல்சார் உரிமை கோரல்கள் தொடர்பான பணியாட்சி வரம்பு தொடர்புடைய நீதிமன்றங்களுக்கு இருக்கும்.  கடலாண்மைப் பணிவரம்பு என்பது கடல்நீர் எல்லை வரை இருக்கும். 812. Admissibility ஏற்புடைமை   ஏற்புத்தன்மை   ஏற்கத்தக்கத்தன்மை;   ஒன்றை – குறிப்பாகச் சான்றினை – நீதிமன்றத்தால் அல்லது உரிய அலுவலரால் ஏற்றுக் கொள்ளக்கூடிய தன்மை. 813. Admissibility Of…

சட்டச் சொற்கள் விளக்கம் 801-810 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 791-800 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 801-810 801. Administrative Machinery               பணியாண்மை இயங்கமைவு   Machinery என்றால் இயந்திரம் என நேர் பொருளில் சொல்வதை விட இயந்திரத்தின் இயக்கம் போன்று இயங்கு நிலையைக் குறிப்பதால் இயங்கமைவு எனலாம்.   பணியாண்மைக்கான செயற்தொகுதியைக் குறிப்பதே பணியாண்மை இயங்கமைவு ஆகும். 802. Administrative Office   பணியாண்மை அலுவலகம்   ஒரு துறை அல்லது ஓர் இயக்ககம் அல்லது…

சுதா சேசையன் நியமனத்தை வரவேற்கலாமே(!)- இலக்குவனார் திருவள்ளுவன்

சுதா சேசையன் நியமனத்தை வரவேற்கலாமே(!) மரு.சுதா சேசையனைச் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக அமர்த்திய பொழுது செய்தி ஆசிரியர் ஒருவர் இத்தகவலைத் தெரிவித்தார். தெரிவித்தவர், “தமிழறிஞர் அல்லாத ஒருவரை எப்படி நியமிக்க முடியும்? கண்டித்து அறிக்கை வெளியிடுங்கள். வெளியிடுகிறோம்” என்றார். நான் அதற்குத், “தமிழ் தொடர்பான துறை என்றால் தமிழறிஞரல்லாதவர் அல்லது தமிழறியாதவர் அல்லது தமிழரல்லாதவரை அமர்த்துவதுதான் மரபு. இம்மரபைப் பின்பற்றி யுள்ளனர். இதில் கண்டிப்பதற்கு என்ன இருக்கிறது” என்றேன். மேலும் “இஃது ஓர் அதிகாரமில்லாத பதவி. இதை அறியாமல் அவர் வந்திருக்கலாம். இவர்…

சட்டச் சொற்கள் விளக்கம் 791-800 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 781-790 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 791-800 791. Administration Bond பணியாட்சிப் பத்திரம் பிணை முறி விண்ணப்பத்தில் வழங்கப்பட்ட அல்லது நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட சொத்துரிமை விண்ணப்பத்தில் நீதிபதியால் கோரப்பட்ட பிணையர்கள் உறுதிமொழி. உடைமையின் பணியாட்சியரால்,  விருப்புறுதி/இறுதி முறிக்கேற்பச் செயற்படுவதற்கான உறுதி மொழி அளிக்கும் பத்திரம். – இந்திய மரபுரியமையர் சட்டம் 1925(Indian Succession Act, 1925) 792. Administration Of Justice     நீதிப் பணியாண்மை   நீதிப் பணியாண்மை என்பது அரசின் முதன்மைச் செயல்பாடாகும்….

உ.வே.சா.வின் என் சரித்திரம் 106 – திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 105 – சந்திரசேகர கவிராச பண்டிதர்- தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்பூ68 திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை நானும் சண்பகக் குற்றாலக் கவிராயரும் சில தம்பிரான்களும் கம்பராமாயணத்தை ஆராய்ந்து படித்து வந்தபோது இடையிடையே சந்தேகங்கள் எழுந்தன. அவற்றைத் தெளிந்துகொள்ள வழியில்லாமல் மயங்கினோம். அக்காலத்தில் திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை என்னும் வித்துவான் கம்பராமாயண பாடம் சொல்வதில் சிறந்தவரென்று நாங்கள் கேள்வியுற்றோம். வித்துவத்துசன சேகரர்(’‘வித்வத்சன சேகரர்“) அவர் கம்பராமாயணம் முழுவதையும் அச்சிட்டவர்; சுந்தர காண்டத்தைத் தாம் எழுதிய உரையுடன் வெளிப்படுத்தியவர்; ‘வித்வத்ஜன சேகரர்’ என்னும்…

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 4 இ. விளைவு

(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 3. ஆ. செல்வம்-தொடர்ச்சி) அறிவியல் திருவள்ளுவம் இ. விளைவு ‘விளைவு’ என்பதற்குப் ‘பயன்படுவதற்கு உண்டாதல்’ என்று பொருள். விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்’ {177) என்று திருவள்ளுவர் விளைவைப் பயனாகக் குறித்தார். “விளைவின் கண் வீயா விழுமம் தரும்” (284) என்றதிலும் விளைவு கெடாத பயனைக் குறிக்கும். பயன்பட உண்டாகும் பொருள் கண்ணாற் காணப்படும் பருப் பொருளாகவும் இருக்கலாம்; நுண்பொருளாகவும் இருக்க லாம்; கருத்துப் பொருளாகவும் இருக்கலாம். ‘வயல் விளைவு நன்றாக இருந்தது’-இதில் விளைவு பருப்பொருளாகிய நெல்லைக் குறிக்கும்….

காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் 2/4 – முனைவர் சான் சாமுவேல்

(காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¼ –தொடர்ச்சி) காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் 2/4 1856-இல் தென்னிந்தியாவில் பேசப்படும் ஒன்பது மொழிகளைத் திராவிட மொழிக்குடும்பமாக இனங்கண்ட காலுடுவெல் தமது இரண்டாவது பதிப்பில், அஃதாவது 1875-இல், மேலும் மூன்று மொழிகளையும் இணைத்து 12 மொழிகளைத் திராவிட மொழிகளாக இனங்கண்டு காட்டினார். இன்று திராவிட மொழிகளின் எண்ணிக்கை         35-ஐத் தொட்டுள்ளது. வட இந்தியாவில் பேசப்படும் பிராகுயி போன்ற சில மொழிகள் திராவிட மொழிகளின் பட்டியலில் இணையவே தென்னிந்திய மொழிகளாகத் திராவிட மொழிகளை நோக்கிய பழைய குறுகிய பார்வை பரந்து விரிந்து…