வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.22. தொழில் அறிதல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.21 தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 22. தொழில் அறிதல் மெய்யுறுப் புக்கொடு செய்வது தொழிலே. தொழில் என்பது உடலால் உழைப்பது ஆகும். தொழிலா லுலகந் தோன்றிநிற் கின்றது. உழைப்பினால் உலகம் அழியாமல் இருக்கின்றது. தொழிலிலை யெனிலுல கழிவது திண்ணம். தொழில் இல்லை எனில் உலகம் அழிந்து போவது உறுதி ஆகும். தொழிலிலார் வறுமையுற் றிழிவெலா மடைவர். தொழில் செய்யாதவர்கள் வறுமை நிலை அடைந்து அவமானப்படுவர். அரியநற் றொழில்சில வறிதல்யார்க் குங்கடன். உயர்ந்த, சிறந்த தொழில் சிலவற்றைக் கற்றுக்கொள்ளுதல் அனைவரின் கடமை…

விதைக்க மறந்த மனித நேயம் – கு. நா. கவின்முருகு

விதைக்க மறந்த மனித நேயம் எந்தேசம் எங்கேபோ கிறது சொல்லு இழிநோக்கி நகரத்தான் மனிதம் என்றா சந்தையெனக் கல்வியாகித் திருட்டுக் கொள்ளை சாதிமதச் சண்டைகளும் மனிதம் கொல்ல எந்தத்திசை போகிறது மக்கள் கூட்டம் ஏனிந்த மிருகத்தோல் மனிதன் போட்டான் வந்துதிக்கும் சூரியனும் மதங்கள் சாதி மனிதனிலே பார்த்துத்தானோ இனியும் தோன்றும்? உடன்பிறந்து வாழ்ந்துவரும் உனது இரத்தம் ஊன்தின்னி யென்றான வேங்கை யர்கள் தடம்பதிக்க அறிவுகொள்ள கல்வி உண்டு சாக்கடையில் கரைத்துவிட்டான் கற்ற யெல்லாம் வடம்பிடித்து இழுப்பாரோ இனியும் நாட்டை வளங்காண மனிதநேயம் பெருகி யோட…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 39: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 38 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 39 ஏனைய பாடல்கள்   தனித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட மறைமலையடிகள், திரு.வி.கலியாணசுந்தரர்,  செந்தீயில் மூழ்கிய தீந்தமிழ் மறவன் சின்னசாமி, ‘கருமவீரர் காமராசர்’ நூலில் இடம் பெற்றுள்ள ‘சங்கநிதி பதுமநிதி’, ‘கருமவீரர் காமராசர்’, வள்ளல் ‘அழகப்பச் செட்டியார்’ ‘குறள் வெண்பா’ ஆகிய ஏழு கவிதைகள் இதில் இடம் பெறுகின்றன.   இருபதாம் நூற்றாண்டில் முதன் முதலாக, தனித்தமிழில் பேச வேண்டும். தனித்தமிழில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தவர்…

தமிழை அழிக்கும் பகைக் கூட்டம் – புத்தனேரி இரா.சுப்பிரமணியம்

தமிழை அழிக்கும் பகைக் கூட்டம் பொல்லாப் பகைக் கூட்டம்                 புகழ்பெற்ற செந்தமிழின் செல்வத்தைக் கொள்ளையிடும்                 திட்டத்தால் ஏடுகளைக் கடத்திமறைப்பார்கள்;                 கருத்தைச் சிதைப்பார்கள் கடலில் எறிவார்கள்;                 கனலில் எரிப்பார்கள் கவிஞர் புத்தனேரி இரா.சுப்பிரமணியம்: தமிழில் நாட்டிய நாடகங்கள்: தமிழகக் கலைச் செல்வங்கள் பக்கம்.205

தானே அருள்வாள் தமிழன்னை! – தாமோதரன் கபாலி

தானே அருள்வாள் தமிழன்னை! தமிழன் னையைக் கைவிடாதே தாங்கி உயிரை அணைப்பவளாம்! அமிழ்தக் கலசம் கையேந்தி அன்பு கலந்து கொடுப்பவளாம்! குமிழைப் போன்ற வாழ்க்கையிலே குன்றா விளக்காய் ஒளிதருவாள்! தமிழில் பாடி மனமுருக தானே அருள்வாள் தமிழன்னை! தாமோதரன் கபாலி

யாரெல்லாம் தமிழரையா? – தாமோதரன் கபாலி

யாரெல்லாம் தமிழரையா? யாரெல்லாம் தமிழரையா? அகமறியச் சொல்வீர்! ஐயமின்றிச் சுவைத்துணர்வார் ஆரமுதாம் தமிழை! ஊரெல்லாம் உண்டிடவே உளம்நிறைந்து அழைப்பார்! ஒண்டமிழில் ஓங்கிடவே ஒருமையிலே திளைப்பார்! பேரெல்லாம் நற்றமிழில் பெருகிடவே உரைப்பார்! பிறந்திட்டத் தவப்பயனைப் பெருமையென மகிழ்வார்! பாரெல்லாம் செந்தமிழைப் பரப்பிடவே திகழ்வார்! பண்புடனே நம்மையெல்லாம் பார்த்திடவே அருள்வார்!   தாமோதரன் கபாலி

இறப்பின்றி வாழலாம் வா! – புதுவைத் தமிழ்நெஞ்சன்

இறப்பின்றி வாழலாம் வா! பட்டுப்போன பனை மரமும் கிளிகளுக்கும் ஆந்தை மரங்கொத்திக்கும் வாழப் பொந்தாகிறது ஏ….மாந்தனே! உயிர்விட்டுப் போனபின் மண்ணோடு மண்ணாகிறாய் இல்லெனில் நெருப்பில் சாம்பலாகிறாய் நீ நினைத்தால் கண்ணற்றவர்களுக்குக் கண்ணாகலாம் மீண்டும் இவ்வுலகை நீ பார்க்கலாம் இருக்கும் போது குருதிக் கொடை இறந்த பின்னர் உறுப்புக் கொடை வள்ளல் ஆகலாம் வா! புதுவைத் தமிழ்நெஞ்சன்

திருக்குறள் அறுசொல் உரை – 97.மானம்: வெ. அரங்கராசன்

(திருக்குறள் அறுசொல் உரை – 96. குடிமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 13. குடி இயல் 97. மானம் வாழ்விலும், தாழ்விலும், தம்மதிப்பை, மானத்தைத் தாழவிடாது காத்தல்     இன்றி யமையாச் சிறப்பின ஆயினும்,     குன்ற வருப விடல்.         தேவையானவை என்றாலும், மானம்         கெடவரின், ஏற்காது கைவிடு.   சீரினும், சீர்அல்ல செய்யாரே, சீரொடு      பேர்ஆண்மை வேண்டு பவர்.         ஆளுமையை வேண்டுவார், புகழுக்காக         மானக்கேட்டை என்றும் செய்யார்.   பெருக்கத்து வேண்டும்,…

எத்தனை எத்தனை அறமற்ற செயல்கள்! – இராமலிங்க வள்ளலார்

எத்தனை எத்தனை  அறமற்ற செயல்கள்! (மனுநீதிச்சோழன் தெரிவிப்பதாக வள்ளலார் கூறும் அறமற்ற செயல்கள்) நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ! மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ! குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ! ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ! தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ! மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ! உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ! களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ! பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ! ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 38: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 37 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 38 இசைப்பாடல்   இசைப்பாடல் என்ற பிரிவில் திருவள்ளுவர் இயற்றிய கல்வி அதிகாரத்தின் சிறப்பை விளக்கும் வகையில் ‘கல்வியைப் போல் செல்வம் காணக்கிடையாது’ என்னும் பாடலை கவிஞர் யாத்துள்ளார். இப்பாடலுக்கு ‘இசைமணி சங்கரனார்’ என்பவர் இசையமைத்துள்ளார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்த இசைவாணர் ஆவர்.  வித்துவான் ந. சேதுரகுநாதன் அவர்கள், வீ. முத்துச்சாமியின் ‘இலக்குவனார் ஆய்வுப் பண்பு’ என்னும் ஆய்வேட்டிற்கு அளித்த பே ட்டியில்,  ‘இசைப்பாடல் யாக்கும் திறமும்…

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.21 எண்ணெழுத் தறிதல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 1.20 தொடர்ச்சி)   மெய்யறம் மாணவரியல் 21. எண்ணெழுத் தறிதல் 201.எண்ணெனப் படுவ தெண்ணுநற் கணிதம். எண் என்பது கணிதம் ஆகும். 202.எழுத்தெனப் படுவ திலக்கிய மிலக்கணம். எழுத்து என்பது இலக்கியமும் இலக்கணமும் ஆகும். 203.எண்ணு மெழுத்துங் கண்ணென மொழுப. எண்ணும் எழுத்தும் நம் இரு கண்கள் போன்று மிக இன்றியமையாதது என்று கூறலாம். 204.எண்ணறி யார்பொரு ளெய்துத லரிது. எண் அறியாதவர்கள் பொருள் ஈட்டுவது அரிதான செயல் ஆகும். 205.எழுத்தறி யார்பிற வெய்துத லரிது. எழுத்து அறியாதவர்கள் மற்றவற்றை…

ஒரு சவ்வூடு பரவல் – உருத்ரா இ பரமசிவன்

ஒரு சவ்வூடு பரவல் உன் இதயம் இங்கே வந்து விட்டது. உன் சிரிப்புக்கொத்தைக்கூட‌ உருவிக் கோர்த்து கழுத்தில் மாட்டியிருக்கிறேன். சுண்டியிழுக்கும் உன் கண் தூண்டில்கள் கூட‌ என் உள்ளங்கைக்கடலில் என் கண்ணாடி மீன்களைத்தான் சுழற்றிக்கொண்டிருக்கின்றன. உன் இனிய சொற்கூட்டம் எல்லாம் என்னை மொய்த்த‌ தேன்சிட்டுகளின் ஒலிப்புகளாய் என் கண் மூக்கு காது வாய் தொண்டை என்று இன்பக் க‌மறல்களில் என்னை திணறடித்துக்கொண்டிருக்கிறது. எந்தக் கணவாய் வழியாய் இங்கே ஆக்கிரமிப்பு செய்தாய்? தெரியவில்லை. அங்கே இருந்து இங்கே ஊடுருவி வர‌ என்ன “சவ்வூடு பரவல் முறையை”…