வெருளி நோய்கள் 614-618: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 609-613: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 614-618 614. கடை நிலை வெருளி – Omegaphobia வரிசையில் கடைசியில் இருப்பது குறித்த அளவுகடந்த பேரச்சம் கடை நிலை வெருளி. கடையில் பொருள் வாங்க அல்லது பயணச்சீட்டு வாங்க அல்லது திரைப்படச் சீட்டு வாங்க அல்லது இதுபோன்ற சூழலில் வரிசையின் கடைசியில் இருப்பதால் தனக்குக் கிடைக்க வேண்டிய பொருள் தீர்ந்து கிடைக்காமல் போய்விடும்,  தனக்கு உரிய வாய்ப்பு வராமல் போய்விடும் என்பன போன்ற கவலைகளுக்கு ஆட்பட்டு அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர். Omega என்பது கிரேக்க…

வெருளி நோய்கள் 609-613: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 604-608: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 609-613 609. கடிகார வெருளி-Chronomentrophobia/ Roloiphobia/ Soloiphobia சிலருக்குக் கடிகாரம் அல்லது கைக்கடிகாரம் மீது தேவையற்ற அச்சம் ஏற்படும். இதுவே கடிகாரவெருளி. கடிகாரம் காலம் காட்டும் கருவி. குறித்த நேரத்தில் வேலையைச் செய்ய வேண்டும், செய்து முடிக்க  வேண்டும் என்பதை நேரம்காட்டி உணர்த்துவது கடிகாரம். அவ்வாறு செய்யாமல் காலம் தாழ்த்தும் பொழுதும் உரிய காலத்தில் செய்யத் தவறியதைச் சுட்டிக்காட்டுவதும் கடிகாரம்தான். இதனால் சிலர் கடிகாரம் காலமுடிவை – இறப்பை உணர்த்துவதாக எண்ணி அஞ்சுவதும் உண்டு. chrono…

வெருளி நோய்கள் 604-608: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 599-603: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 604-608 604. கடற்கன்னி வெருளி –  Serenephobia கடற்கன்னிபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கடற்கன்னி வெருளி. serene என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கடற்கன்னி 00 605. கடற்குதிரை வெருளி – Odovainophobia கடற்குதிரை அல்லது பனிக்கடல் யானை(walrus) என அழைக்கப்பெறும் கடல் வாழ் உயிரி மீதான அளவு கடந்த பேரச்சம் கடற்குதிரை வெருளி. இதனைக் கடல் சிங்கம் என்றும் கூறுகின்றனர். 00 606. கடற்கோழி வெருளி-Pigkouinophobia கடற்கோழி(penguin) மீதான அளவு கடந்த பேரச்சம் கடற்கோழி வெருளி….

வெருளி நோய்கள் 599-603: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 594-598) வெருளி நோய்கள் 599-603 599. கடல்கோள் வெருளி – Tsunamiphobia  கடல்கோள்(Tsunami) பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கடல்கோள் வெருளி. நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், பனிப்பாறைகள், விண் பொருள்கள் மோதல் முதலான காரணங்களால் பெருமளவு நீர் இடப்பெயர்ச்சி ஏற்படுவதே கடல்கோளாகும். சுனாமி என்றே இதனைக் குறிப்பிடுகின்றனர். இது சப்பானியச் சொல். ‘சு’ என்றால் துறைமுகம். ‘நாமி’ என்றால் அலை, எனவே சுனாமி என்றால் துறைமுக அலை எனப் பொருள். தமிழில் இப்பொழுது இதை ஆழிப்பேரலை என்கின்றனர். ஆனால், இஃது அலையல்ல….

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 24: வருந்தி வருவோரிடம் அருள் உள்ளத்துடன் நடந்துகொள்க!  – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 23: சான்றோர் பக்கமே சான்றோர்சேருவர்! – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 24 வருந்தி வருவோரிடம் அருள் உள்ளத்துடன் நடந்துகொள்க! “வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி, அருள வல்லை ஆகுமதி”               புறநானூறு – 27 : 15 – 17 பாடியவர் :  உறையூர் முதுகண்ணன் சாத்தனார். பாடப்பட்டோன் :  சோழன் நலங்கிள்ளி. திணை :   பொதுவியல். துறை :   முதுமொழிக் காஞ்சி. வல்லவர் ஆயினும், வல்லவர் அல்லர் ஆயினும்…

சட்டச் சொற்கள் விளக்கம் 1016-1020 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 1011-1015 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 1016-1020 1016. Autrefois acquit முன்னரே விடுவிக்கப்பட்டடவர். முன்பே குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பெற்றவர். autrefois என்பது “முன்னர்” அல்லது “மற்றொரு நேரத்தில்” என்று பொருள்படும் ஒரு பிரெஞ்சுச் சொல்லாகும். autre = மற்றொரு +‎ fois = நேரம் எதிர்வாதி முன்னரே விடுவிக்கப்பட்ட அதே குற்றத்திற்காக மீண்டும் உசாவப்படுவதிலிருந்தோ குற்றம் சாட்டப்படுவதிலிருந்தோ தடுப்பதற்கு உதவும் நிலை. முன்விடுதலை (Pre release) என்றால் ஒரு குற்றத்திற்காகத் தண்டிக்கப்பெற்று அத்  தண்டனைக் காலத்திற்கு…

வெருளி நோய்கள் 594-598: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 589-593: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 594-598 594. கடமான் வெருளி-Alkiphobia கடமான் (moose) பற்றிய பேரச்சம் கடமான் வெருளி. அல்செசு(Alces) என்பது காட்டுமானின் அறிவியல் பெயராகும். ஐரோப்பாவில் இலத்தீன் மூலச் சொல்லான எல்கு(elk) என அழைக்கப்பெறுகிறது. எல்கு என்பது அல்கி என மருவியிருக்கிறது. 00 595. கடமை வெருளி-Paralipophobia கடமை ஆற்றாமல் அஞ்சி விலக்கி வைத்துக் கடமை தவறுவது, கடமை (வெருளி. தனக்குரிய கடமையை ஆற்ற முடியாது என்று சோர்ந்து இருப்பதும் மிகுதியாக உள்ளது எப்படிச் செயலாற்ற முடியும் என்று கலங்கி…

வெருளி நோய்கள் 589-593: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 584-588: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 589-593 589. ஓவிய வெருளி –  Pictophobia ஓவியம் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஓவிய வெருளி. சிலர் எந்தவகை ஓவியமாக இருந்தாலும் பேரச்சம் கொள்வர்.சிலர், வரலாற்று ஓவியம், காதல் ஓவியம், சுற்றுலா இட ஓவியம், மக்கள் ஓவியம், விலங்கினங்கள் ஓவியம், பறவைகள் ஓவியம், தொன்மக்கதை ஓவியம், அச்சுறுத்தும் உருவ ஓவியம் எனக் குறிப்பிட்ட சிலவகை ஓவியங்கள் மீது மட்டும் பேரச்சம் கொள்பவர்களாக இருப்பர். 00  590. கசப்பு வெருளி – Acrisophobia    கசப்புச் சுவை…

சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 3: இலக்குவனார் திருவள்ளுவன்

(சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!?- 2: தொடர்ச்சி) சமற்கிருதத்திற்கு கூடுதல்  நிதி- சரிதானே!? உரையின் எழுத்து வடிவம் 3 மனுநூல் ,அருத்த சாத்திரம், சுக்கிர நீதி போன்ற நூல்கள் எல்லாம் மக்களைப் பாகுபாடுப்படுத்தக் கூடியவை. வருண வேறுபாடுகளைப் புகுத்துபவை ஆக உள்ள இந்த இலக்கியங்களுக்குப் பணம் கொடுக்கிறவன்தான் வருண வேறுபாட்டுக்கு உயிர் ஊட்டுகிறவன்.” பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று திருவள்ளுவத்தைப் போற்றுகிற நாம் இந்த இரண்டு இலக்கியங்களுக்கு – இலக்கியங்கள் என்று சொல்லக்கூடாது இழிகாம நூல்களுக்கு – அஃதாவது ஆபாச நூல்களுக்கு –  நாம்…

வெருளி நோய்கள் 584-588: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 579-583: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 584-588  585. ஓநாயன் வெருளி – Lupophobia / lycophobia/ Lukophobia ஓநாய்/ஓநாய்மனிதன்/ஓநாயன் (werewolf)பற்றிய பெருங் கவலையும் பேரச்சமும் ஓநாயன் வெருளி. ஓநாய் குறித்த பேரச்சத்தையும் இவ்வகையில்தான் சேர்த்துள்ளனர். ஓநாய்போன்ற மனிதன் எனவே, ஓநாயன் எனப்படுகிறான். lupus என்னும் இலத்தீன் சொல்லின் பொருளும் lykos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருளும் ஓநாய். 00 586. ஓமர் வெருளி – Homerphobia புனைவுரு  ஓமர் (Homer Simpson) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஓமர் வெருளி. அமெரிக்க அசைவூட்டத்…

தொல்காப்பியமும் பாணினியமும் – 8 : தொல்காப்பியர் காலத்தில் சமற்கிருதத்தில் இலக்கணநூல் உருவாகவே வாய்ப்பில்லை-இலக்குவனார் திருவள்ளுவன்

(தொல்காப்பியமும் பாணினியமும் – 7 : தொல்காப்பியர் குறிப்பிடும் சொற்கள் யாவும் தமிழே-தொடர்ச்சி) தொல்காப்பியமும் பாணினியமும் 8 பழந்தமிழர் நாகரிகத்தைப் பேசும் நூல் பழந்தமிழர் நாகரிகத்தைப்பற்றிப் பரக்கப் பேசும் நூல் தொல்காப்பியம். மக்கள் வையத்து வாழ வழிவகுத்துக் காட்டும் இலக்கிய நெறியினை எடுத்து இனிதியம்பும் ஒப்பற்ற தனிப் பெரும் நூல் இது. தமிழினத்தின் பரந்துபட்ட பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் தொல்பெரு நூலாகத் தொல்காப்பியத்தைச் கருதுவதில் யாதொரு தடையும் இல்லை. இந்நூலைத் தம் விழுமிய சொத்தாக எண்ணித் தமிழர்கள் பாதுகாக்க வேண்டும்.(புலவர் தி.வே. விசயலட்சுமி,தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு…

கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே!  – திருத்துறைக்கிழார்

(கக. வழக்கில் வழுக்கள் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே! இலங்கையில் ஈழத்தமிழர்களைச் சிங்களவர் 1983 – ஆம் ஆண்டு செய்த படுகொலையைப் பார்த்தும் இலங்கை அரசுடன் உடன்படிக்கை செய்து கொண்டு அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பி தமிழ்மக்களைக் கொடுமைப்படுத்தியது முறையா? தமிழ்நாட்டு மீனவர்கட்குப் பயன்பட்ட கச்சத்தீவை இலங்கையரசுக்குக் கொடுத்துத் தமிழக மீனவர்கட்கு இடையூறு செய்தது சரியா? ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் அடைக்கலம் அடைந்தனர். அவர்களை நன்முறையில் நடத்தாமல் அவர்கள் தமிழ்நாட்டில் அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடபடுவதாகக் குற்றம்…