உ.வே.சா.வின் என் சரித்திரம் 117: அத்தியாயம் 79. பாடும் பணி

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 116: அத்தியாயம் 78. குறை நிவர்த்தி-தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-79 பாடும் பணி திருவாவடுதுறையில் என் பொழுதுபோக்கு மிக்க இன்பமுடையதாக இருந்தது. பாடம் சொல்வதும், படிப்பதும், படித்தவர்களோடு பழகுவதும் நாள்தோறும் நடைபெற்றன. சுப்பிரமணிய தேசிகருடைய சல்லாபம் எல்லாவற்றிற்கும் மேலான இன்பத்தை அளித்தது. தேசிகர் தினந்தோறும் அன்பர்களுக்குக் கடிதம் எழுதுவார். ஒவ்வொரு நாளும் ஐம்பதுக்குக் குறையாமல் கடிதங்கள் எழுதப் பெறும். ஒவ்வொன்றுக்கும் உரிய விசயத்தை இராயசக்காரர்களிடம் நிதானமாகச் சொல்லுவார்; தாமும் எழுதுவார். இராயசக்காரர்கள் தேசிகர் கருத்தின்படியே எழுதக்கூடிய திறமையுள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம்…

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 1-இலக்குவனார் திருவள்ளுவன்

விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 1 விருது பெறுபவரை விருதாளர் என்பர். இவரோ தான் நிறைய விருதுகளைப் பெற வேண்டும் என்பதற்காகத் தன் பெயரையே விருதாளர் என மாற்றிக் கொண்டவர். தான் சூட்டிய பெயருக்கேற்ப சிறுகதைகளுக்காகவும் புதினங்களுக்காகவும் நிறைய விருதுகள் பெற்றுப் பாராட்டு பெறுபவர். அண்மையில் இவர் எழுதிய ‘வேர்களை மறக்கா விழுதுகள்’ என்னும் புதினம் சிறந்த புதினத்திற்காக அனைத்து இந்திய விருதினைப் பெற்றது. இதற்காகப் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் புகழ்பெற்ற ‘வி’ தொலைக்காட்சி நிறுவனத்தினர் இவரைப் பாராட்ட இவர் வீட்டிற்கு…

ரு. தமிழ் வளர்ச்சிக்கு அரசு செய்யவேண்டியன-புலவர் வி.பொ.பழனிவேலனார்

(௪.  திருத்தமாய்ப் பேசுங்கள்!–வி.பொ.பழனிவேலனார், தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ரு. தமிழ் வளர்ச்சிக்கு அரசு செய்யவேண்டியன இன்றைய தமிழக அரசு தமிழ் வளர்ச்சிக்கென செய்து வரும் பணிகள் பலவாகும்.  தஞ்சையில் தொடங்கவிருக்கும் தமிழ்ப்பல்கலைக்கழகம் அவற்றிற்கு முத்தாய்ப்பு வைத்தது போன்றதாகும்.  ஆயினும், நடைமுறையில் சில வழுக்களும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் பல தமிழ்க்கல்லூரிகள் உள்ளன.  ஆண்டுதோறும் தமிழ்ப்புலமை பெற்று வெளியேறுகின்றனர்.  பலர் தமிழாசிரியர் பயிற்சியும் பெறுகின்றனர்.  தமிழ் பயின்று, தமிழாசிரியர் பயிற்சியும் முடித்த பல்லாயிரவர், பணியின்றி வாடுகின்றனர்.  ஆனால், அஞ்சல்வழியும், தனியேயும் பலர் படித்துத் தமிழாசிரியராகி விடுகின்றனர். தமிழ்க்…

ஆரியர்க்கு முற்பட்ட வெளிநாட்டு வாணிகம் – புலவர் கா.கோவிந்தன்

(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ச்சமயம் 2 – புலவர் கா.கோவிந்தன்-தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 13 கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டில் வெளிநாட்டு வாணிகம் வெளிநாட்டு வாணிக வளர்ச்சி சீனர், யவனர் போலும், இந்தியரல்லாத இனத்தவர் பாரதப்போரில், போரிட்ட படைப்பிரிவுகளுக்குக் கொடுத்ததை மகாபாரதம் குறிப்பிடுகிறது. (CINAS fought in the Contingent of Bhagadatra of prajotisa. Magabharata. 5:18; 584:5 18:321) மகாபாரத காலத்தில், வட இந்திய அரசர்களுக்கும் இந்தியாவுக்கு வெளியிலிருந்த அரசர்களுக்குமிடையில், அரசியல் உறவுகள் இருந்தன என்பதைக் குறிப்பாக உணர்த்தும் இந்த அறிவிப்பில் பொருத்தமற்றது…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 81 : தமிழைப் பழிக்க விடுவதோ!

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 80 : 17. எழிலிபாற் பயின்ற காதை – தொடர்ச்சி) பூங்கொடி எழிலிபாற் பயின்ற காதை தமிழைப் பழிக்க விடுவதோ!           இவர்தம் பாடல் எழிலுற அச்சுச்            சுவடி வடிவில் சுற்றுதல் கண்டோம்;    65           விடுத்தஇச் சுவடிகள் அடுத்திவண் வருமவர் படித்தவர் விழியிற் படுமேல் நம்மைப் பழிப்பவர் ஆவர்; பைந்தமிழ் வளர்ச்சி இழித்துரை கூறுமா றிருந்ததே என்பர்;                  செழித்துயர் தமிழைப் பழித்திட நாமே        70 விடுத்திடல் நன்றோ? விளம்புதி மகளே! நிலைத்திடுங் கவிதை தொடுத்திடுங்…

சட்டச் சொற்கள் விளக்கம் : 901-905

(சட்டச் சொற்கள் விளக்கம் 896-900, தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் : 901-905 901. assistance, employee   / employee assistance பணியாளர் உதவிபணியாளர்க்கு உதவுதல் தொழிலாளர்களின் பணிமுறைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காகவும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் முதலாளிகளால் தரப்படும் உதவி. தொழிலாளர்களின் பணித்திறனை மேம்படுத்தவும் தொழிலாளர்களின் சிக்கல்களைத் தீர்க்கவும் தொழிலாளர் ஆணையத்தால் வழங்கப்படும் நிதியுதவி முதலான உதவிகள். தொழிலாளர்களுக்கு ஆற்ற வேண்டிய உதவிகளைச் செய்யாவிட்டால் அதுவும் குற்றமாகும். 902. assistance, Enlist/ Enlist  assistance உதவி பெறுஆதரவு பெறு படையில் சேர்த்திடுபடையில் இடம்பெறுபட்டியலில் இணைத்துக்கொள்சேர்இணைவுறுஆள்சேர்படைக்கு வீரர் திரட்டுதுணையாகப்பெறுஎய்தப்பெறுபயன்படுத்துஈடுபடுத்துபுகுந்தீடுபடு பணி வளங்களைப்…

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 65-67

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 62-64-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 65. அமைச்சர் பதவி தன் உடன் பிறந்தவனுக்கு மந்திரி பதவி கொடுக்கும் படி அரசனை வற்புறுத்திக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. அரசனும், அரண்மனையில் இருந்தபடியே தன் மைத்துனரை வரச்சொல்லி உரையாடிக்கொண்டிருந்தான். அப்போது வீதியில் ஏதோ வண்டிச் சத்தம் கேட்கவே, அரசன் ஏதோ யோசனை செய்து, உடனே தன் மைத்துனனிடம், ‘அது என்ன வண்டி? விசாரித்துவா’ என்று சொல்லி அனுப்பினான். மைத்துனனும் ஒடிப்போய் விசாரித்து வந்து, அரசனிடம் ‘நெல் வண்டி’ என்று கூறினான். அரசன்…

பொங்கல் விடுமுறையில் இரு குறைபாடு – இலக்குவனார் திருவள்ளுவன்

பொங்கல் விடுமுறையில் இரு குறைபாடு போகிக்கு அல்லவா விடுமுறை விட்டிருக்க வேண்டும்? மொழிப்போர் ஈகியர் நாளை வேலைநாள் ஆக்கியிருக்கலாமா? இவ்வாண்டு(தி.ஆ.2056/பொ.ஆ.2025) தமிழர் திருநாளாம் பொங்கற் புதுநாள் சனவரி 14 செவ்வாயன்று வருகிறது. தொடர்ந்து புதனன்று திருவள்ளுவர்  திருநாள்/மாட்டுப் பொங்கல்(சன.15), வியாழனன்று உழவர் திருநாள் (சன.16) என முந்நாளும் அரசு விடுமுறையாகும். எனவே வெள்ளியன்று விடுமுறை விட்டால் தொடர்ந்து வரும் சனி, ஞாயிற்றிலும் குடும்பத்தினருடன் இருக்கும் வகையில் நல் வாய்ப்பாக இருக்கும் என ஆசிரியர்களும் அரசூழியர்களும் கருதினர். இதற்கிணங்க எழுந்த முறையீட்டு அடிப்படையில் அரசு வெள்ளியன்றும்…

இலக்குவனார் திருக்குறள் எளிய பொழிப்புரை  : சிறப்புகள்: குமரிச்செழியன்

இலக்குவனார் திருக்குறள் எளிய பொழிப்புரை  : சிறப்புகள் இலக்கியங்கள் என்பவை மக்களின் வாழ்க்கை இலக்குகளை உரைப்பவை. உலகில் எண்ணற்ற இலக்கியங்கள் பல்வேறு மொழிகளிலும் உள்ளன என்றாலும் உலகத்தொன்மொழியாகிய தமிழ்மொழிக்குத் தனியிடம் உள்ளது. தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களிலும் திருக்குறளுக்குத் தனியிடம் உள்ளது. உலக மக்களின் வாழ்க்கை நெறிகளைப் பகுத்தும் தொகுத்தும் வழங்கும் நூல் திருக்குறள். உலகில் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பெற்ற ஒரே நூல் திருக்குறள். உலக மக்கள் அனைவராலும் போற்றப்பட்டும் உரிமை கொண்டாடப்பட்டும் வருகின்ற ஒப்புயர்வற்ற உயர்ந்த நூல். திருக்குறள் ஒரு தனித்தமிழ்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 116: அத்தியாயம் 78. குறை நிவர்த்தி

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 115: அத்தியாயம் 77. தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம்-78 குறை நிவர்த்தி திருவாவடுதுறையில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தேன். சுப்பிரமணிய தேசிகர் தாம் உத்தேசித்தபடியே திருப்பெருந்துறைக்கு வந்து சேர்ந்தார். சில தினங்களுக்குப் பிறகு தேசிகரிடமிருந்து தந்தையார் முதலியவர்களோடு திருப்பெருந்துறைக்கு வந்து சில காலம் இருக்க வேண்டுமென்று எனக்கு ஓர் உத்தரவு வந்தது. எங்களுக்கு வேண்டிய சௌகரியங்களைப் பண்ணுவித்து அனுப்ப வேண்டுமென்று காறுபாறு கண்ணப்பத் தம்பிரானுக்கும் திருமுகம் வந்தது. நான் என் தாய் தந்தையரை அழைத்துக்கொண்டு திருப்பெருந்துறையை நோக்கிப் புறப்பட்டேன். காறுபாறு தம்பிரான் சௌகரியங்கள்…

௪.  திருத்தமாய்ப் பேசுங்கள்!-புலவர் வி.பொ.பழனிவேலனார்

(௩. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்?-புலவர் வி.பொ.பழனிவேலனார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்  ௪.  திருத்தமாய்ப் பேசுங்கள்! தமிழ்மொழி தோன்றிய காலம், மொழியறிஞர்களாலும் கணிக்கவியலாத புதிராயுள்ளது.  அஃது, உலக மொழிகட்கு முன்னோடியும், முதல் தாய்மொழியுமாகும்.  இத்தகு தமிழ்மொழி சேர, சோழ, பாண்டிய அரசர்களால் சீராட்டி, பாராட்டி வளர்க்கப் பெற்றதாகும்.  பாண்டியப் பேரரசு முத்தமிழ்க் கழகங்கள் மூன்று நிறுவிப் பேணியது.  மூவேந்தர் காலத்திற்குப் பின்னர் தமிழ் பல இடர்ப்பாடுகட்கு உள்ளாகியது.  தமிழ்நாடும் பலரது படையெடுப்புக்கு ஆளாகியது.  தமிழ்நாட்டை வென்று ஆண்ட அரசர்கள் தம் மொழி, சமயம், நாகரிகம்,…

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ச்சமயம் 2 – புலவர் கா.கோவிந்தன்

(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ச்சமயம் 1 – புலவர் கா.கோவிந்தன்-தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 12சமயம் 2 மேய்புலமாம் முல்லைநிலக்கடவுள், ஆயர் மகளிர் பாலும், ஆனினங்கள் பாலும் அன்புடையோனாகிய கார்மேனிக் கடவுள் மாயோன். அவன் எப்போதும், குழலில் ஒலி யெழுப்பிக் கொண்டேயிருப்பான். அதன் இசை அனைத்து உயிர்களையும் ஈர்த்து உருகச் செய்யும். இசையில் மட்டுமல்லாமல், ஆடலிலும் மகிழ்வூட்டுவன். ஆய மகளிர் கூட்டம் புடைசூழ, அவன், அல்லது அவன் பக்தன் , இன்றைய ஆயர்களைப் போலவே, எளிதில் பொருள் விளங்காப் பல் வேறு ஆடல்களை மேற்கொள்வர். பால்,…