திங்கள் பாவரங்கம் 73
மாமூலனார் பாடல்கள் 24: சி.இலக்குவனார்
(ஆனி 8, 2045 / சூன் 22, 2014 இதழின் தொடர்ச்சி) “கண்பனி நிறுத்தல் எளிதோ” – தலைவி – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் உச பாடல். அகநானூறு 97 பாலை கள்ளி அம்காட்ட புள்ளி அம் பொறிக்கலை வறன் உறல் அம் கோடு உதிர வலம் கடந்து புலவுப்புலி துறந்த கலவுக்குழி கடுமுடை இரவுக் குறும்பு அலற நூறி நிரைபகுத்து இருங்கல் முடுக்கர்த் திற்றிகொண்டும் கொலையில் ஆடவர் போலப் பலவுடன் பெருந்தலை எருவையொடு பருந்து…
செஞ்சீனா சென்றுவந்தேன் 2– பொறி.க.அருணபாரதி
(ஆனி 8, 2045 / சூன் 22, 2014 இதழின் தொடர்ச்சி) 2. சியான் நகரம் பண்டைத் தமிழகத்தில், மதுரை, தஞ்சாவூர் முதலானஉள்ளிட்ட நகரங்கள் எப்படி முதன்மைத் தலைநகரங்களாக விளங்கினவோ, அதே போல சீனாவிற்கு 4 பண்டையத் தலைநகரங்கள் இருந்தன. அவை, பெய்சிங்(கு), நான்சிங்(கு), (தெற்கு சீனா), (உ)லோயங்(கு), சங்கன் ஆகிய நகரங்களாகும். மேலுள்ள நான்கு நகரங்களில் சங்கன் என வழங்கப்பட்ட அவ்விடம்தான் இன்று சியான் என அழைக்கப்படுகிறது. இன்றைக்கும் சீனத் தலைநகரமாக உள்ள பெய்சிங்(கு)/(பீகிங்கு) நகரம், நவீன சீனாவின் அடையாளமாக உள்ளதைப் போல்,…
உலகெங்கிலும் தூய தமிழ் பரவட்டும்! – யாழ்ப் பாவாணன்
வானில் இருந்து இறங்கிய மழையோடு வந்து வீழ்ந்தவன் நான் அல்லன் பெற்றவர்கள் ஈன்ற பின்னர் தெருவெளி அங்காடியில் விற்ற நூல்களை வேண்டிப் படித்துப் பொறுக்கிய அறிவைப் பிறருக்கு வழங்குவதே என் பணி! “பிறமொழிச் சொல் அகராதி” என்ற நூலைப் படித்துப் பொறுக்கியதில் இருந்து: ஆங்கிலத்தில் “சுகர்ட்” என்பது தமிழில் அரைப் பாவாடையே..!. இந்தியில் “சோடி” என்பது தமிழில் ‘இணை’ என்பதையே! பாரசீக மொழியில் “லுங்கி” என்பது தமிழில் மூட்டுவேட்டியே! உருது மொழியில் “தமாசு” என்பது தமிழில் வேடிக்கையே! அரபி மொழியில் “சாமீன்”…
தோழர்ஆனைமுத்து – புதுவைத் தமிழ்நெஞ்சன்
தோழமையோடு பழகுகின்ற தோழர்ஆனைமுத்து -புதுவைத் தமிழ்நெஞ்சன் பகுத்தறிவுப் பெட்டகம் சிந்தனைக் கருவூலம் தோழர் ஆனைமுத்து மாந்தநேயத் தொடர்பை ஏற்படுத்தும் அறிவுப் பாலம் ஓய்வறியா அவருழைப்பை சொல்லும் இந்த ஞாலம் அறிவே துணையெனச் சொல்லுவார் மடமையை பகுத்தறிவுத் தீயில் தள்ளுவார் ஆரியத்தை வீழ்த்தி வெல்லுவார் அறியாமையைக் கொய்வார் ஆரியத்தை வைவார் இனமான ஆடையினை நெய்வார் அறிவு மழையை அகத்தினிலே பொழிவார் குரலில் இடி..! போடுவது பொடி..! ஆனைமுத்தைப் படி..!
திருக்குறளும் பொது நோக்கமும் 3 – ‘தமிழ்ப் பெரும்புலவர்’ பேராசிரியர் சரவண ஆறுமுக(முதலியா)ர்
(ஆனி1, 2045 / 15 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) ‘‘ஆற்றல் அழியுமென் றந்த ணர்கனான் மறையைப் போற்றியுரைத் தேட்டின் புறத் தெழுதா – ரேட்டெழுதி வல்லுநரும் எல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினு மாற்றல் சோர்வின்று’’ – கோதமனார் காலஞ்சென்ற தமிழறிஞர் திருவனந்தைச் சுந்தரம் பிள்ளையவர்களும், ‘‘வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்க ளுள்ளுவரோ மநுவாதி யொரு குலத்துக் கொருநீதி’’. என்று இந்நூலின் சமரசப் பான்மையை இனிது விளக்கினார். உரையாசிரியராம் பரிமேலழகரும், ‘‘எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லோர்க்கும் பொதுப்படக் கூறுதல் இவருக்கு…
பூங்கோதை 6- வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,
ஆனி1, 2045 / 15 சூன் 2014 இதழின் தொடர்ச்சி செங்கமலத் தம்மையார் என்றாவது இடை குறுக்கே அவ்வறைக்குள் பாதுகாப்போடு வைக்கப்பட்டிருந்த ஒரு நிலைப்பேழையில் உள்ளதையைத் திறந்து அதனுள் வைக்கப்பட்டிருந்த அணிகள் முதலாய விலைபெறு பண்டங்களைச் சரிபார்த்து விட்டுப் போவார். செங்கமலத்தம்மையாரின் கணவர் சிவக்கொழுந்து அம்மையாரிடமிருந்து விடைபெற்றுச் சென்று ஆண்டுகள் ஒன்பது கடந்து விட்டன. இதே அறையில்தான் அவர் உயிர் நீத்தது. அவரை அடக்கம் செய்வதற்கு வெள்ளாடை போர்த்து தூக்கிச் சென்றபோது கண்ட அவருடைய வெளிறிய முகம் மீண்டும் பூங்கோதையின் நினைவிற்கு வந்தது. அச்சம்…
செஞ்சீனா சென்றுவந்தேன் – பொறி.க.அருணபாரதி
அறிமுகம் அலுவலகப் பணி காரணமாக, ஒரு மாத காலம் சீனா (மக்கள் சீனக் குடியரசு) செல்ல நேர்ந்தது. அங்கு நான் பெற்ற பயணஅறிவுகளின் தொகுப்பே இக்கட்டுரை! வட அமெரிக்காவில் நடைபெற வேண்டிய பல அலுவலக வேலைகளை அங்குள்ள நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்திலேயே செய்து முடிக்க, பல வட அமெரிக்கர்களை பணியிலமர்த்த வேண்டும். அவர்களுக்கு அதிகளவில் சம்பளமும் தர வேண்டும். எனவே, அப்பணிகளை குறைந்த கூலியில் முடித்துத் தருபவர்கள் எங்கிருக்கிறார்களோ, அவர்களை அமெரிக்காவிற்கு வெளியில் பணியிலமர்த்தி அப்பணிகளை முடித்துக் கொள்ள முடியும். இந்த…
தமிழே பயிற்றுமொழியாதல் வேண்டும் – பேராசிரியர் சி.இலக்குவனார்
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் இன்னும் வேற்றுமொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்பட்டு வருவது மிக மிக வருந்ததக்கது; நாணத்தக்கது. உலகில் வேறெந்த உரிமை நாட்டிலும் வேற்று மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை. நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வி கற்பிக்கப்படவே இல்லை. நம் நாட்டில் நம் மொழிவாயிலாகக் கல்வியளிக்கப் படாத காரணத்தினாலேயே பேரறிஞர்களும் புதியது புனையும் அறிவியற் கலைஞர்களும் உலகம் புகழும் வகையில் பேரளவில் தோன்றிலர். தொழில்நுட்ப அளவில் மிகவும்…
பைந்தமிழில் படிப்பது முறை ! – பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பழந்தமிழ் நாட்டில் பைந்தமிழ் மொழியில் படிப்பதுதானே முறை? இழந்தநம் உரிமை எய்திடத் தடுக்கும் இழிஞரின் செவிபட, அறை! கனித்தமிழ் நிலத்தில் கண்ணெனுந் தமிழில் கற்பது தானே சரி! தனித்தமிழ் மொழியைத் தாழ்த்திய பகையைத் தணலிட் டே, உடன் எரி! தமிழ்வழங் கிடத்தில் தாய்மொழி வழியாய்த் தமிழர் படிப்பதா பிழை? அமிழ்ந்தவர் எழுந்தால் அயலவர்க் கென்ன? அயர்வதா? நீ, முனைந் துழை! பிறந்தநம் மண்ணில் பீடுறும் தமிழில் பேசுதற் கோ, ஒரு தடை? மறந்த,பண் பாட்டை மறவர்கள் மீட்க மறிப்பவர் எவர்? கொடி றுடை! முத்தமிழ்த்…
வேண்டாக் கிளர்ச்சி வென்றது! விரும்பும் தாய்மொழி விலகியது! – பேராசிரியர் சி.இலக்குவனார்
பயிற்று மொழியைத்தேர்ந்தெடுக்கும் உரிமை மாணவர்க்கு வேண்டும் என்று சிலர் கிளர்ச்சி தொடங்கினர். தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி வாயில்களாக மாணவர்கள் கற்றுவரும் நிலை உள்ளது. ஆங்கிலத்தின் வழியாகக் கற்கும் மாணவர்களே மிகுதியாக உள்ளனர். தமிழ் வழியாகக் கற்றலைப் பையப் பைய மிகுதிப்படுத்துதலைத் தமிழக அரசு மேற்கொள்ளத் தொடங்கி உள்ளது. ஆங்கிலேயர் ஆண்டபோது, ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்தது. ஆகவே ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி அகன்று, தமிழர் ஆட்சி அமைந்தது. தமிழே ஆட்சி மொழி என்ற…
தமிழ்ப் பயிற்று மொழி – பேராசிரியர் சி.இலக்குவனார்
கல்லூரிகளிலும் தமிழைப் பயிற்றுமொழியாக்க வேண்டும் என்று கல்விப் பெரியார்களும் நாட்டு நலனில் கருத்துடைய நற்றமிழ்த் தலைவர்களும் மாணவ மணிகளும் ஓயாது வேண்டிக்கொண்டுதான் உள்ளனர். ஆனால், மொழிப்பற்றும் நாட்டுப் பற்றும் அற்றவர்கள், பதவிகளில் அமர்ந்து கொண்டு தமிழ்ப்பயிற்று மொழித் திட்டத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகின்றனர். சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கல்லூரி முதல்வர் களுக்கெல்லாம் தமிழைப் பயிற்று மொழியாக்குவது பற்றிக் கடிதம் எழுதியதாகவும் எந்தக் கல்லூரி முதல்வரும் அதற்குச் சார்பாகக் கடிதம் எழுதிலர் என்றும் ஒரு செய்தி வெளிவந்தது. கல்லூரிப் புகுமுக…
