சாதியப் படுகொலைகளுக்கு எதிரான கூட்டமும் ‘ஊழல் மின்சாரம்’ ஆவணப் பட வெளியீடும்
அம்பேத்கருடைய 125ஆவது பிறந்தநாளில் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிப் பொதுக்கூட்டமும் ‘ஊழல் மின்சாரம்’ ஆவணப் பட வெளியீடும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடைய 125ஆவது பிறந்தநாளில் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிப் பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கம் சார்பில் சித்திரை 01, 2047 – ஏப்பிரல் 14, 2016 அன்று சென்னை திருவொற்றியூர் பகுதியில் நடத்தப்பட்டது. எளிய மக்கள் அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தை நடைமுறைப்படுத்திய அம்பேத்கரின் நினைவை வலியுறுத்தும் வகையில் ‘ஊழல் மின்சாரம்’ ஆவணப்படம் இப்பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது….
கையூட்டு வாங்கவோ,கொடுக்கவோ கூடாது – காவல் ஆய்வாளர் அறிவுரை
கையூட்டு வாங்கவோ,கொடுக்கவோ கூடாது காவல் ஆய்வாளர் இரமேசு அறிவுரை தேவகோட்டை- தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் கையூட்டு வாங்கவோ,கொடுக்கவோ கூடாது எனப் பேசினார். விளையாட்டு விழாவிற்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சேது பாசுகரா வேளாண்மைக் கல்லூரித் தாளாளர் சேது குமணன் முன்னிலை வகித்தார். தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளார் இரமேசு சிறப்புரையில், “சிறு…
ஈழத்தமிழர் ஒரு தேசிய இனம் – கனடிய எதிர்க்கட்சி ஏற்றது.
ஈழத்தமிழர் ஒரு தேசிய இனம் – கனடிய எதிர்க்கட்சி ஏற்றது. ஈழத்தமிழர் ஒரு தேசிய இனமென்பதையும்; இடம்பெறும் தமிழர்இனவழிப்பிற்கான அனைத்துலக உசாரணையை கோருமென்றும்கனடாவின் பழமைவாதக் கட்சி அறிவிப்பு: சித்திரை 01, 2047 / 4.14.2016 அன்று நடைபெற்ற உயர் மட்டச் சந்திப்பில் கனடியத் தமிழர் தேசிய அவையும் (சூஊஊகூ) கனடாவில் தமிழர்பகுதிகளைச் சார்புபடுத்தும் மார்க்கம், மிசிசாகா, பிராமிடன், ஆட்டாவாவைச் சேர்ந்த அமைப்புகளும் கனடாவின் பழமைவாதக் கட்சியின் தலைவி (உ)ரோணா அம்புரூசு அம்மையார் அவர்கள் உடனான உயர் மட்டச் சந்திப்பை மேற்கொண்டனர். இச்சந்திப்பில் தமிழர்…
மதுவின் தாக்கத்தை ஆராய நாங்களே குழு அமைக்க வேண்டி வரும்! – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
மதுவின் தாக்கத்தை ஆராய நாங்களே குழு அமைக்க வேண்டி வரும்! – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை “உலக நலவாழ்வு அமைப்பு பரிந்துரைத்துள்ள அறிக்கைப்படி மாநில அரசு சாராயத் தாக்கத்தைக் கட்டுப்படுத்த ஒரு குழுவை அமைக்காவிட்டால், நீதிமன்றமே ஒரு குழுவை ஏற்படுத்தும்” எனத் தமிழக அரசை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. குமுக(சமூக) நீதிக்கான அமைப்பின் தலைவர் வழக்குரைஞர் கே.பாலு. அவர், சாராயம் தொடர்பான உடல்நலக் கோளாறுகளை எதிர்கொள்ள, உலக நலவாழ்வு அமைப்பு (WHO) செய்துள்ள பரிந்துரைகளை ஆய்ந்து நடைமுறைப்படுத்த மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரித்…
ஏழேகால்இலட்ச உரூபாய்ப் பரிசு தரப்போகும் ஒளிப்படப் போட்டி!
ஏழேகால்இலட்ச உரூபாய்ப் பரிசு தரப்போகும் ஒளிப்படப் போட்டி! கோவை இலட்சுமி இயந்திரப்பணிகள் (Lakshmi Machine Works Limited/LMW) நிறுவனத்தின் சார்பில் அதன் நிறுவனர் மறைந்த முனைவர் செயவர்த்தனவேலு நினைவாக கடந்த ஐந்தாண்டுகளாக நடத்தப்பட்டுவரும் தே.செ (D.J.) நினைவு ஒளிப்படப்போட்டி ஆறாவது முறையாக இப்போது நடத்தப்படுகிறது. போட்டிக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. எந்த அகவையினரும் கலந்து கொள்ளலாம். யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். படங்கள் இந்தியாவில் எடுத்ததாக இருக்கவேண்டும். அனுப்பும் படத்திற்குக் கட்டாயமாகத் தலைப்பு கொடுக்கப்பட வேண்டும். படங்களை இணையவழியில்தான் அனுப்பவேண்டும். இயற்கை…
அரசின் நெருக்கடியால் மூடப்படும் சிறப்புப் பள்ளிகள்!
அரசின் நெருக்கடியால் மூடப்படும் சிறப்புப் பள்ளிகள் வெளியூர் பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்ய அரசு ஆணை உள்ளது. ஆனால், மாநிலத்திற்குள் மட்டுமே பயணிக்க முடியும். பிற மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் சலுகைக் கட்டணத்தில் பயணிக்க இசைவில்லை. மாற்றுத்திறனாளிகளாக உள்ள விளையாட்டு வீரர்களுக்கான மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக்குக் குழு அலுவலகம் பெங்களூருவில் உள்ளது. அரசுப் பேருந்தில் பெங்களூரு சென்றால், ஓசூரில் இறக்கி விட்டு விடும் அவலம் உள்ளது. மீதிக் கட்டணம் செலுத்த முன்வந்தாலும் ஏற்பதில்லை. அதே நேரத்தில், சென்னையில்…
சேம வங்கியின் (Reserve Bank) பெயரில் வரும் மின்னஞ்சல்களை நம்பாதீர்கள்!
சேம வங்கியின் (Reserve Bank) பெயரில் வரும் மின்னஞ்சல்களை நம்பாதீர்கள்! – சேம வங்கி ஆளுநர் எச்சரிக்கை! “உங்களுக்குப் பத்துக் கோடி உரூபாய் பரிசு விழுந்திருக்கிறது”, “இத்தனை நூறாயிரம் (இலட்சம்) உரூபாய் குலுக்கலில் (lottery) உங்களுக்குக் கிடைத்திருக்கிறது” எனவெல்லாம் அன்றாடம் போலி மின்னஞ்சல்கள் வருவது வாடிக்கையானதுதான். ஆனால், அண்மையில் இது போல இந்தியச் சேம வங்கியின் (Reserve Bank of India) பெயரைப் பயன்படுத்திச் சிலருக்கு மின்னஞ்சல்கள் வந்திருந்தன. இது தொடர்பாகப் பேசிய சேம வங்கி ஆளுநர் இரகுராம் இராசன், “சேம வங்கி…
புதுவருட நிகழ்வுகளுக்குத் தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தால் நிதியுதவி
40ஆம் ஆண்டு நிறைவு- புதுவருட நிகழ்வுகளுக்குத் தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தால் நிதியுதவி வவுனியா கோவில்குளம் இறொக்கட்டு விளையாட்டுக் கழகத்தின் 40 ஆம் ஆண்டின் நிறைவு விழாவும், சித்திரைப் புதுவருட விழாவும் எதிர்வரும் 13,14 ஆம்நாள்களில் நடைபெறவுள்ளன. இந் நிகழ்வுகளுக்குத் தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தின் சார்பில் பரிசுப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக ஒருதொகைப்பணம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வு தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான சனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட…
தலவாக்கலையில் மே நாள் – மலையக மக்கள் முன்னணித் தீர்மானம்
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மே நாளைத் தலவாக்கலையில் நடாத்துவதற்கு மலையக மக்கள் முன்னணித் தீர்மானம்! தொழிலாளர் நாளை முன்னிட்டுக் கொண்டாடப்படும் மே நாள் நிகழ்வினை இம்முறை தலவாக்கலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் கொண்டாடுவதற்கு மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காகச் சிறப்புக் கூட்டம் (பங்குனி 27, ஏப்.09) தலவாக்கலையில் நடைபெற்றது. இதில் மலையக மக்கள் முண்ணணியின் தலைவரும் கல்வி அமைச்சருமான வே. இராதாகிருட்டிணன், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமான ஏ. இலாரன்சு, நிதிச்செயலாளர் யு. அரவிந்தகுமார் …
புலம்பெயர்ந்தோர் நாடு திரும்புவது நல்லதில்லை – சீ.வி.கே.சிவஞானம்
புலம்பெயர்ந்தோர் நாடு திரும்புவது நல்லதில்லை! – சீ.வி.கே.சிவஞானம் “வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத் தமிழர்கள் நாடு திரும்புவதற்கான பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படவில்லை” என்று வட மாகாண அவையின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் நாடு திரும்பி முதலீட்டு, வணிகச் செயல்பாடுகளில் ஈடுபடுமாறு அரசாங்கம் கோரியுள்ளது. ஆனால், இதற்கான பொருத்தமான சூழல் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இஃது அரசின் நேர்மை மீது ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, புலம்பெயர்ந்த மக்கள் யாரும் நாடு திரும்பவோ, இலங்கையில் வணிக முயற்சிகளில் ஈடுபடவோ விரும்ப மாட்டார்கள்…
திண்டிவனம்அருகே (கீழ்பசார்) 12 ஆம் நூற்றாண்டு கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு
திண்டிவனம்அருகே (கீழ்பசார்) 12 ஆம் நூற்றாண்டு கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு திண்டிவனம் அருகே, கீழ்ப்பசார் ஊரி்ல், சிதிலமடைந்த சிவன் கோவிலைத் திருப்பணிக்காக தோண்டிய போது, 12 ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. சிவன் கோவில் திண்டிவனம் வட்டம், ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ளது, கீழ்பசார் ஊர். இங்கு மிகவும் சிதிலமடைந்த நிலையில், சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலை மீளமைத்துத் திருப்பணி செய்வதற்காக ஊர் மக்கள் தோண்டிய போது, தொல்லியல் ஆய்வாளர் கோ.உத்திராடம் 17 ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்தார்….
மக்கள் நலக்கூட்டணியின் வலு கூடுகிறது
மக்கள் நலக்கூட்டணியின் வலு கூடுகிறது தே.தி.மு.க.-மக்கள் நலக்கூட்டணியில் வாசனின் தலைமையில் இயங்கும் தமிழ் மாநிலக் காங்கிரசு இணைந்துள்ளது. தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் 20 தொகுதிகளைத் தே.மு.தி.க.வும் 3 தொகுதிகளை ம.தி.மு.க.வும் ஒவ்வொரு தொகுதியைப் பிற 3 கட்சிகளும் என 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இதனால் போட்டியிடும் கட்சிகளின் தொகுதி எண்ணிக்கை பின்வருமாறு உடன்பாட்டிற்கு வந்துள்ளது : தே.மு.தி.க. – 104 தொகுதிகள் ம.தி.மு.க. – 29 தொகுதிகள் விடுதலைச் சிறுத்தைகள் – 25 தொகுதிகள் மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி – 25 தொகுதிகள் இந்தியப…
