கனடா அல்பர்ட் கம்பல் சதுக்கத்தில் கறுப்பு யூலை நிகழ்வு!

    கடந்த வாரம், ஆடி 4, 2045, சூலை 20, 2014 ஞாயிற்றுக் கிழமை மாலை 6:00 மணிக்கு கனடியத் தமிழர்கள் கருப்பு யூலையின் 31 ஆம் ஆண்டு நெருப்பு நினைவுகளை எழுச்சியோடு ஃச்கார்புரோ நகரில் உள்ள அல்பேர்ட் கம்பல் சதுக்கத்தில் நினைவு கூர்ந்தார்கள். இந்நிகழ்வில் பல்வேறு வேற்றின அரசியல் ஆன்றோர்களும் வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்கள். அவர்கள் யாவரும் தம் உரையில் தமிழர்களின் துன்பங்களில் பங்கெடுப்பதாகவும் தோளோடு தோள் நிற்கும் தோழர்களாக, தமிழ் மக்கள் துயர் தீர்க்க என்றும் தாம் இருப்போம்…

கோவை கு.இராமகிருட்டிணனுக்கு விருது

கோவை கு.இராமகிருட்டிணனுக்குச் சமூகநீதிப் போராளி விருது நந்தன் எனும் இரகுநாதனின் வீரவணக்க நிகழ்ச்சி பவுத்தம்:- ஆரிய திராவிடப் போரின்தொடக்கம்  – நூல் அறிமுகம்   ஆனி 30, 2045 / 14-07-2014 மாலை, கோவை அண்ணாமலை அரங்கில் தோழர் வெண்மணி அவர்களின் ஒருங்கிணைப்பில் தமிழர் விடுதலை இயக்கம் சார்பாக  நந்தன் எனும் ரகுநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் திராவிடநெறி எழுத்தாளர் எழில் இளங்கோவன் அவர்கள் எழுதிய, ” பவுத்தம் ஆரிய – திராவிடப் போரின் தொடக்கம் ” எனும்…

காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகமெங்கும் நடைபெற்ற போராட்டங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டுமென வலியுறுத்தி இன்று (ஆடி 5, 2045 -21.07.2014), காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் காவிரிப் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் இயங்கும் இந்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டமும், சென்னை முதலான பிற மாவட்டங்களில் இதே கோரிக்கையை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் பங்கேற்புடன் கண்டன ஆர்ப்பாட்டங்களும் எழுச்சியுடன் நடைபெற்றன. தஞ்சை மாவட்டத்தில் வணிகர்களின் ஆதரவோடு முழுமையான கடையடைப்பு நடைபெற்றது. தஞ்சை தஞ்சையில், மருத்துவக் கல்லூரி சாலை – பாலாசி நகரில் இயங்கும் இந்திய அரசின்…

தமிழ்மணம் வீசிய புழுதிவாக்கம்!

புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம் ‘சங்க இலக்கிய அறிமுகம்’ என்னும் நூல் வெளியீட்டையும் பரிசளிப்பையும் மிகச்சிறப்பாகச் செய்திருந்தது. இதன் அமைப்பாளர் திரு த.மகாராசன், பிற பொறுப்பாளர்கள் நன் முயற்சியால் தமிழ் மணம் வீசிய அரங்கு நிறைந்தவிழாவாக நடைபெற்றது. கடந்த 16.09.2012 அன்று இம்மன்றத்தின் சார்பில் நடத்தப் பெற்ற சங்க இலக்கியப் பெருவிழாவில் அறிஞர்கள் ஆற்றிய உரையையே இப்பொழுது நூல் தொகுப்பாக்கி உள்ளனர். சங்க இலக்கியக் களஞ்சியம் – ந.முத்து(ரெட்டி) சங்க இலக்கியக் கட்டுரைகள்: ஓர் அறிமுகம் – புலவர் கோ.பார்த்தசாரதி ஆற்றுப்படை நூல்கள் –…

சமற்கிருதமா? மீண்டும் ஒரு சண்டமாருதம்! – நக்கீரனில் தமிழ்க்கனல்

மீண்டும் தமிழுக்கு அவமதிப்பா எனக் கொதிக்கிறார்கள், தமிழ் அறிஞர்களும் கல்வியாளர்களும்! சமூக ஊடகங்களில் இந்தியைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என மோடி அரசு உத்தரவிட்டு.. தமிழகமே எதிர்க்க.. அது நீக்கப்பட்டது. அந்தச் சூடு ஆறாதநிலையில், சமற்கிருத வாரம் கொண்டாட உத்தரவிட்டு உசுப்பிவிட்டிருக்கிறது, தில்லி. நாடு முழுவதும் உள்ள மத்திய பள்ளிக்கல்வி வாரியப் (சி.பி.எசு.இ) பள்ளிகளில், வரும் ஆகசுட்டு 7-ஆம் நாள் முதல் 13-ஆம் நாள்வரை, ’சமற்கிருத வாரம் கொண்டாடுமாறு வாரியத்தின் இயக்குநர் சாதனா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சூன் 30-ஆம் நாளிடப்பட்ட அந்த சுற்றறிக்கையில், அப்படி…

அலைமகள் தந்ததைக் கலைமகளுக்குத் தந்த கலசலிங்கமே! – முனைவர் ச .சந்திரா

      எளிய குடும்பத்தில் பிறந்து, ஏற்றமிகு வாழ்க்கை பெற்று, பிறரை வாழ்வில் உயர்த்தும் ஏணியாகத் திகழ்ந்தவர் தி.கலசலிங்கம் அவர்கள். 1940 இல் இந்திய விடுதலைப்போரில் சிறை சென்ற விடுதலைப்போராட்ட ஈகியர் இவர். தொடக்கத்தில்அஞ்சல்துறை, கைந்நூல்(கதர்)வாரியம் ஆகியவற்றில் பணியாற்றியவர், கட்டடப்பணிகளில் ஈடுபட்டார். இதில் பெற்ற வருமானம் கொண்டு திருவில்லிபுபத்தூரில் 1984 ஆம் ஆண்டு கலசலிங்கம் பல்தொழில்நுட்பக் கல்லூரியைத் தொடங்கினார்.      பின், 1986இல் கலசலிங்கம் பொறியியல் கல்லுாரியையும், படிப்படியாக மருந்தியல் கல்லுாரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கலை…

பள்ளிகளில் தாய்மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும்: தினமணி வைத்தியநாதன் வலியுறுத்தல்

     மத்திய அரசின் பள்ளிகளிலும் பதின்நிலைப் பள்ளிகளிலும் தாய்மொழி கட்டாயமாகக் கற்றுத் தரப்பட வேண்டும் எனத் “தினமணி’ ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தினார். சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அமிர்தா வித்யாலயா தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா ஆடி 2, 2045 / 18.07.14 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவர் பின்வருமாறு பேசினார்: இந்தியாவின் பெருமையை வெளிநாட்டில் நிலைநாட்ட வேண்டுமானால், அதற்கான நாற்றங்கால் தொடக்கப் பள்ளிகளில்தான் இருக்கிறது. இந்தப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதை வேண்டா என்று சொல்லவில்லை. அதோடு,…

‘இளந்தமிழகம்’ மலர்ந்தது!

“தமிழர்களைக் காப்பாற்றுங்கள் இயக்கம்” (Save Tamils Movement) காலத்தின் தேவைக்கேற்பத் தன் பெயரைத் தமிழில் புதியதாகச் சூட்டிக் கொண்டு கொள்கை அறிக்கையையும் வெளியிட்டது. இன்று (ஆனி 29 , 2045 / சூலை 13 / ஞாயிறு) மாலை 6 மணிக்கு சென்னை தியாகராய நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள செ.தெய்வநாயகம் பள்ளியில் இது தொடர்பான விழா நடைபெற்றது. தோழர்.செய்யது, இவ்வியக்கத்தின் கடந்த ஐந்தாண்டுச் செயல்பாடுகளைத் தொகுத்து வழங்கினார். தோழர். சமந்தா தலைமையில் நடந்த முதலாம் அமர்வில் தோழர் இன்குலாப், பேரா.மணிவண்ணன், தோழர்.சுந்தரி ஆகியோர்…

பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கத்தின் கோடை விழா 2014

  பிரித்தானிய வல்வை நலன்புரிச் சங்கம் நடத்திய 2014 ஆம் ஆண்டுக்கான கோடைவிழா மிகச் சிறப்பாக கடந்த 07-07-2014 அன்று நடைபெற்று முடிந்தது. அந்நிகழ்வின் ஒளிப்படத் தொகுப்புகள் இங்கே! ஒளிப்படங்களைச் சொடுக்கிக் காண்க!  

எம்.பி.நிர்மல் அவர்களுக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவையின் பாராட்டு!

  செவ்வை நேர்த்தி அமைப்பின் மூலம் சுற்றுப்புறத் தூய்மைக்குத் தொண்டாற்றி உலகப்புகழ் பெற்றுள்ள எக்சுநோரா நிர்மல் அவர்களுக்கு வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 2014 தமிழ் விழாவில் பாராட்டினர். தமிழ் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை வெளிக்கொணர்ந்து தமிழ் ஈழ விடுதலைக்கான கருத்தாக்கத்தைப் பல தரப்பாரிடமும் ஏற்படுத்தி வரும்  அவரது தொண்டினை விழாவில் பாராட்டினர். பேரவையின் முன்னாள் தலைவரும் 2008 பேரவைத் தமிழ்விழா ஒருங்கிணைப்பாளரருமான முனைவர் தனிக்குமார் சேரன் பாராட்டுப் பட்டயம் வழங்கினார்.  வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கச் செயலாளர் முனைவர் விசயகுமார் முத்துசாமி.பொன்னாடை  அணிவத்து வாழத்தினார். சமயங்களுக்கு…

வவுனியா மன்னகுளத்தில் வள்ளுவர் முன்பள்ளி

புலம் பெயர் உறவுகளுக்குப் பாராட்டுகள்!   புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதிப் பங்களிப்பில் வவுனியா மன்னகுளம் ஊரில் கட்டப்பட்ட வள்ளுவர் முன்பள்ளி தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதிப் பங்களிப்பில் வவுனியா மன்னகுளம் ஊரில் கட்டப்பட்ட வள்ளுவர் முன்பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்விழாவல கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது, தொடக்கநிலை கற்றல் தான் ஒரு மனிதனுக்கு எழுத்தறிவிக்கிறது. வாழ்வதற்கு மிகவும் தேவையான எழுத்தறிவையும், வாசிப்பறிவையும் கற்பிக்கும் முன்பள்ளி ஒன்று…

காரைக்குடியில் வினைதீர்த்தானின் தன் முன்னேற்றப் பயிலரங்கம்

ஆனி 25 , 2045 / சூலை 9, 2014 அன்று காரைக்குடி இராம.சு.இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 80 மாணவ மாணவியருக்குத் தன்முன்னேற்றப் பயிலரங்கம் நடைபெற்றது. தன்னார்வத் தொண்டு ஆர்வலர் திரு சொ.வினைதீர்த்தான் இதனைச் சிறப்பாக நடத்தினார். பரம்பரைச்சிறப்புடைய இந்நகராட்சிப்பள்ளி 1938 இல் தொடங்கப்பட்டு நடுநிலைப்பள்ளியாகச் செயல்பட்டு வந்தது. சென்ற ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு ஆற்றல்மிகு தலைமை ஆசிரியர் திரு ஆ.பீட்டர் இராசா வழிநடத்தலில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. திரு பீட்டர் இராசா பயிலரங்கு நடத்த…