“தமிழக அரசு மூவர் தூக்கை நீக்க வேண்டும்”

 உயிர்வலி ஆவணப்படவிழாவில் தோழர் கி.வெங்கட்ராமன்  உரை!   இராசீவு கொலை வழக்கில் தொடர்புபடுத்தப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் குறித்தும், மரண தண்டனை ஒழிப்பு குறித்தும் பேசுகின்ற ‘உயிர்வலி’ ஆவணப்படத்தின் வெளியீட்டு நிகழ்வும், நீதிபதி வீ.ஆர்.கிருட்டிணய்யர் அவர்களின் 99ஆவது பிறந்தநாள் விழாவும் விருதுகள் வழங்கும் விழாவும் 24.11.2013 சென்னையில் நடைபெற்றது. சென்னை பிட்டி.தியாகராயர் அரங்கில், மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில்

 சீனத் தமிழ் வானொலி பொன்விழா போட்டி – அமெரிக்க வாழ் தமிழருக்கு 2 பரிசுகள்!

சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963-ஆம் ஆண்டு ஆகசுட்டுத் திங்கள் முதல் நாள்  தொடங்கியது. 1963-2013 ஆகசுட்டுஉடன் 50 ஆண்டுகள் நிறைவெய்துவதைச் சிறப்பாகக் கொண்டாடும்வகையில் சீன வானொலித் தமிழ் பிரிவு பல்வேறு போட்டிகளை நடத்தியது.  இந்தப் போட்டிகளில் உலக வாழ் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.  பொன்விழா கட்டுரைப் போட்டி, ஊடக போட்டிகள், பொது அறிவுப் போட்டி என்று நடத்தியது.   பொன்விழப் போட்டிக்கான முதல் பரிசை அமெரிக்கா வாழ் தமிழரான ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ பெற்றுள்ளார்.  பொன் விழா கட்டுரையின் ஊடகப் பரிசான சிறப்புப்…

இலங்கைக் கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி! -இராமதாசு கண்டனம்.

தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக் கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி! இராமதாசு கண்டனம்.   தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கைக் கடற்படையினருக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு  விலக்கிக் கொள்ள வேண்டும் என பாமாக நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள இந்திய கடற்படை கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கடல்சார் பாதுகாப்பு தொழில்நுட்ப படிப்பில் சிங்களக் கடற்படையினர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்

உணர்ச்சியற்ற மத்திய அரசால் இலங்கைப் படை அட்டூழியம்: முதல்வர் காட்டம்

  மீனவர்கள் மீட்பு தொடர்பாகத் தமிழக முதல்வர் இந்தியத்தலைமையாளருக்கு  மீண்டும் மடல் எழுதி உள்ளார். ” இலங்கைக் கடற்படையினரின், சட்ட  மீறல் நடவடிக்கையால், இலங்கைச் சிறையில் வாடும், தமிழக மீனவர்களின் எண்ணிக்கை,  பெருகியபடி உள்ளது. இதுபோன்ற  நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க, மத்திய அரசு, இலங்கைக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். அத்துடன், தூதரக அளவில், பேச்சு நடந்தி,  இச்சிக்கலுக்கு நிலையான தீர்வு காண வேண்டும். ஆனால், மத்திய அரசு, தொடர்ந்து கண்டு கொள்ளாமல் இருப்பது, தமிழக மீனவர்களிடம், கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில்,…

கவிஞர் செயபாலன் இன்று விடுதலை செய்யப்படலாம்

  மாங்குளத்தில் தளையிடப்பட்ட கவிஞர்  செயபாலன் இன்று வவுனியாவிலிருந்து கொழும்புக்குப் பயங்கரவாதத் தடுப்புக் காவலரால் கொண்டு செல்லப்படுகிறார்.   ‘தினக்கதிர்’ இதழ் சார்பில் செயபாலனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தன்னை இன்று விடுதலை செய்வதாகக் காவல் துறையினர் கூறியிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  கொழும்பு கொண்டு செல்லப்படும் கவிஞர் செயபாலன் சிறிலங்கா குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் இதனையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவாரா அல்லது குடிவரவு அதிகாரிகள் அவர் மீது ஏதாவது குற்றச்சாட்டை சுமத்தி வழக்கு தொடர்வார்களா என்பது தெரியவில்லை.  அவர் இன்று…

இனப்படுகொலைக்காகச் சீன முன்னாள் அதிபரைக் கைது செய்ய உத்தரவு

இனப்படுகொலைக்காகச் சீன முன்னாள் அதிபரையும், பிற தலைவர், அதிகாரிகளையும் கைது செய்ய இசுபெயின் நீதிமன்றம் உத்தரவு திபெத்தில் இனப்படுகொலை நடத்தியதாக சீன முன்னாள் அதிபர்  சியாங்கு செமீன், முன்னாள்  தலைமையாளர் (இ)லீ பெங்கு, முன்னாள் பாதுகாப்பு-காவல்துறைத் தலைவர் கியாவு  சி, திபெத்து முன்னாள்பொதுவுடைமைக் கட்சித் சென் கியான், முன்னாள் குடும்பத் திட்ட இயக்குநர் பென் பெல்யூன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று  இசுபெயினில் உள்ள திபெத்துக்கு ஆதரவான அமைப்பு அங்குள்ள நீதிமன்றத்தில்  வழக்கு பதிவு செய்தது. இதற்கிணங்க இந்து ஐவரையும்…

கருத்து வெளியிடுகின்ற தகுதி முரளிதரனுக்கு இல்லை: து. இரவிகரன்

தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் உயரிய நோக்கத்தை பற்றி அறிந்திராத முரளிதரனுக்கு தமிழர் என்கின்ற அடையாளத்துடன் கருத்து வெளியிடுகின்ற தகுதி இல்லை. என்று வடமாகாண அவையின் ஆளும்கட்சி  உறுப்பினர் து.இரவிகரன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பின்வருமாறு அவர் கண்டித்துள்ளார். இலங்கை  மட்டைப்பந்தாட்ட வீரர்  முத்தையா முரளிதரன் தனது குடும்பத்தில் ஒருவருக்கு இசைப்பிரியாவின் கதியோ பாலச்சந்திரனின் கதியோ நேர்ந்திருந்தால், அப்போதும் இவ்வாறு தான் பேசுவாரா? வடகிழக்கு மக்களின் அவலங்களையும் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தின் உயரிய நோக்கத்தையும் பற்றி அறிந்திராத முரளிதரனுக்கு தமிழர் என்கின்ற…

நெடுமாறன் முதலான 81 பேருக்குப் பிணை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச் சுற்றுச்சுவரை இடிப்பதை எதிர்த்து போராடியபோது கைதான உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் முதலான 81 பேருக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி சி.டி.செல்வம  புதன்கிழமை  பிணையில் விடுவித்து  உத்தரவிட்டார். அரசு வழக்குரைஞர் பிணைக்கு மறுப்பு தெரிவித்த  போதும்,  முறையீட்டாளர்கள் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்குள் நுழையமாட்டார்கள் என்ற உறுதியை அவர்களின் வழக்குரைஞர் சந்திரசேகரன்  அளித்ததன் அடிப்படையில் நீதிபதி பிணை விடுவிப்பு வழங்கினார். மேலும் முன்பிணைகோரி  புதிய பார்வை ஆசிரியர் முனைவர் நடராசன்  முறையிட்டதில், நீதிபதி செல்வம், அவருக்கு முன் பிணை…

பெரிய வாய்ப்பு உங்களைத் தேடி வரும்!’: முதல்வரின் அறிவுரைக் கதை

 சென்னை : “வாய்ப்புகள் உங்களை விட்டு விலகிச் செல்லும்போது வருத்தப்படாதீர்; முயலுங்கள்! அதைவிடப் பெரிய வாய்ப்பு, உங்களைத் தேடி வரும்,” என, முதல்வர் செயலலிதா, அறிவுரை வழங்கினார்.  சென்னையில், மூன்று அமைச்சர்கள் – புதுச்சேரி ச.ம.உ. இல்லத் திருமண விழா, நேற்று நடந்தது. விழாவில், முதல்வர் செயலலிதா, மணமக்களை வாழ்த்திப் பேசும்போது, கதை கூறி, அனைவருக்கும் அறிவுரை வழங்கினார்.அக்கதை வருமாறு: ஒரு கணிணி நிறுவனத்தில், தரை துடைக்கும் பணியாளராக, ஒருவர் பணி புரிந்து வந்தார். அந்த நிறுவனத்திற்குப், புதிதாக நியமிக்கப்பட்ட மேலாளர், அங்கு பணிபுரியும்,…

முதல்வர் தொடங்கிய நல்லுதவித் திட்டங்கள்

  கொசுக்களை ஒழிக்க 5.5 நூறாயிரம் நொச்சிச் செடி வழங்கும் திட்டம், வீடுகளில் 6.5 நூறாயிரம் பப்பாளி மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம், 710 இளைஞர்கள் பயிற்சி பெறச் சென்னை  மாநகராட்சியின் கட்டணமில்லாப் பயிற்சி மையம் ஆகியவற்றை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

கூடங்குளம் – இவர்களைக் கண்காணிப்பது யார் ?

இவர்களைக் கண்காணிப்பது யார் ? கூடங்குளம் அணுஉலையிலிருந்து தொடர்ந்து வெளியேறும் வெப்பநீர். தொடரும் அலட்சியம்…!   அணுஉலையைச் சுற்றிய  ஊர்களில் கடந்த வாரம் 4000 அயிரைக்கல் (கிலோகிராம்) வரை பிடிப்பட்ட மீன்கள் இந்த வாரம் வெறும் 400 அயிரைக்கல் மட்டுமே பிடிப்பட்டுள்ளன. வெப்பநீரின் சுடும்தன்மையால் மீன்கள் ஆழ்கடல் நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. விரைவில் இப்பகுதி மீனில்லாக் கடலாக மாறும் சூழ்நிலை உள்ளது. கூடங்குளம் மக்கள்வாழ்நிலமாக மாறுவது எப்போது?

மேனாள் தமிழ் ஒலிபரப்பாளர் கௌசி இரவிசங்கர் காலமானார்.

தமிழ்த் தேசிய ஊடக உலகில்புகழ் பெற்ற ஒலிபரப்பாளராக விளங்கிய திருமதி கௌசிஇரவிசங்கர் அவர்கள் காலமானார்.  பன்னாட்டு ஒலிபரப்பு அவையின் தமிழ் (ஐ.பி.சி) ஒலிரபரப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கௌசி இரவிசங்கர் கடமையாற்றினார். அக்காலப் பகுதியில் தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில் (ரி.ரி.என்) கலை நிகழ்ச்சிகள் சிலவற்றையும் கௌசி இரவிசங்கர் தொகுத்து வழங்கினார். 2002ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முகமாலையில் யாழ் – கண்டி நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பொழுது அங்கிருந்தவாறு ரி.ரி.என் தொலைக்காட்சிக்கும்,ப.ஒ.அ.(ஐ.பி.சி) வானொலிக்கும் நிகழ்வுகளை அவர் தொகுத்து வழங்கினார். அதன் பின்னர்க் கிளிநொச்சியில் நடைபெற்ற…