கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் 91ஆவது பெருமங்கலம்
வைகாசி 25, 2049 வெள்ளி 08.06.2018 மாலை 6.00 பாம்குரோவு உணவு விடுதி, சென்னை
மரபுப் பாக்களை அனுப்புக! – முறுவல்
மரபுப் பாக்களை அனுப்புக! – முறுவல்
காவிரி ஆணையம் அமைக்கவில்லை! – பெ. மணியரசன்
காவிரித் தீர்ப்பு மூன்றாவது முறையாக அரசிதழில்! இப்போதும் ஆணையம் அமைக்கவில்லை காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை! உச்ச நீதிமன்றம் 18.05.2018 அன்று அளித்த காவிரித் தீர்ப்பை நேற்று (01.06.2018), இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டுவிட்டு, காவிரி ஆணையம் அமைக்காமல் ஒதுங்கிக் கொண்டிருப்பது கடந்த காலங்களில், அது ஏமாற்றியதுபோல் இப்போதும் செய்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பை உச்ச நீதிமன்ற ஆணையின்படி 11.12.1991 அன்று இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. ஆனால்,…
பட்டியல் சாதியர் நலன்காக்கக் கைக்கட்டுடன் மடல் எழுதிய முதல்வர் பழனிச்சாமி
பட்டியல் சாதியர் நலன்காக்கக் கைக்கட்டுடன் மடல் எழுதிய முதல்வர் பழனிச்சாமி மததிய பாசக அரசு வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் பட்டியல் சாதியர், பட்டியல் இனத்தவர், பிற்பட்டோர், சிறுபான்மையர் நலனுக்கு எதிராகவே நடந்து கொள்கிறது. அவற்றில் ஒன்றுதான் கடந்த ஆண்டு தனியார் நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் பட்டியல் சாதியர், பட்டியல் இனத்தவர், பிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கல்வி உதவித் தொகையை நிறுத்துவது. அவர்கள் செலுத்திய கல்விக்கட்டணத்தைத் திரும்பப்பெறும் வகையில் தரப்பட்ட இவ்வுதவித்தொகையை நரேந்திர(மோடி) அரசு கடந்த ஆண்டு நிறுத்தி விட்டது. எனினும் தமிழ்நாடுஅரசு நிறுத்தவில்லை….
மொழிபெயர்ப்பு அறிஞர் பாவலர் தங்கப்பா மறைவு
மொழிபெயர்ப்பு அறிஞர் பாவலர் தங்கப்பா மறைவு [மாசி 25, 1965 / 08.03.1934 – மாசி 17, 2049 / 31.05.2018] மொழி பெயர்ப்பிலும் மொழி ஆக்கத்திலும் வல்லவரான தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பா இன்று (மே 31,2018)வைகறைக்கு முன்னரே – நேற்று இரவு 01.30 மணிக்கு – இயற்கை எய்தினார். நலக்குறைவால் சில நாள் முன்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் நேற்று முதல் நாள் வீடு திரும்பினார். ஆனால், மூச்சுத் திணறலால் காலமானார். ‘வானகம், எண் 7, 11 ஆவது குறுக்குத் தெரு, ஒளவை நகர், புதுச்சேரி-…
காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் -பெ. மணியரசன்
காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் உச்ச நீதிமன்றம் 18.5.2018 அன்று இறுதி செய்த காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருபெரும் ஊனங்கள் இருக்கின்றன. ஒன்று, கருநாடக அணைகளின் மதகுகளைத் திறந்து மூடும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மட்டுமே உண்டு என்று நேரடியாகக்கூறப்படாதது. கருநாடக அணைகளின் மதகுகளைத் திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகப் பாசனத்துறையினர்க்கு ஆணை இட்டுத்தான்செயல் படுத்த முடியும் என்ற நிலை இருந்தால், கர்நாடக அரசு அவ்வாறு தன் அதிகாரிகளும் ஊழியர்களுக்கும் திறக்கக் கூடாது என்று ஆணைஇட்டால், நிலைமை என்னவாகும்? ஏனெனில் ஏற்கெனவே பலமுறை தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடும்படி உச்சநீதிமன்றம் ஆணை இட்டும் அதைச் செயல்படுத்த முடியாதுஎன்று வெளிப்படையாகக் கர்நாடக அரசு மறுத்து வந்துள்ளது. கடந்த 2016 இல் 10,000 கன அடி, 6,000 கன அடி, 2000 கன அடி தண்ணீர் திறந்து விடுமாறு பலமுறை உச்சநீதிமன்றத் தீபக் மிசுரா ஆயம் கட்டளை இட்டும் தண்ணீர் திறந்து விட மறுத்து விட்டது கருநாடக அரசு. அது மட்டுமின்றிக், கருநாடகச் சட்டப்பேரவையைக் கூட்டித் தண்ணீர் திறந்து விட முடியாதுஎன்று ஒருமனமாகத் தீர்மானம் நிறைவேற்றியது கருநாடக அரசு. உச்சநீதிமன்றக் கட்டளையை மீறியதற்காக கருநாடக அரசின் மீது உச்சநீதி மன்றமோ அல்லது இந்திய அரசோ ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு பாதிக்கப்பட்டதுதான் மிச்சம்! இரண்டாவது ஊனம், ஏதாவதொரு மாநிலம் மாற்றுக் கருத்து கூறினால் காவிரி மேலாண்மை ஆணையத்தில் வாக்களிக்கும் உரிமையுள்ள ஒன்பதுஉறுப்பினர்களின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி முடிவெடுக்க வேண்டும் என்று இருப்பதாகும். ஆணையத்தின் தலைவர் மற்றும்நான்கு உறுப்பினர்கள் –ஆக மொத்தம் ஐந்து பேர் நடுவண் அரசின் அதிகாரிகள்; நடுவண் அரசால் அமர்த்தப்படுவோர் ஆவர். தமிழ்நாடு முதலான நான்கு மாநிலங்களுக்கும் தலைக்கு ஒருவர் வீதம் நான்கு பேர். இதில் கருநாடக உறுப்பினர் மாற்றுக் கருத்து தெரிவித்து, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடமறுத்தால், நடுவண் அரசின் ஐந்து உறுப்பினர்கள்நடுவண் அரசின் வழிகாட்டுதல் படி நடந்து கொள்வார்கள். காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 – இல் வழங்கப்பட்டதிலிருந்து, இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு செயல்படுத்துமாறு 2013 – இல் உச்சநீதிமன்றம் ஆணையிட்டதிலிருந்து இதுவரை எந்தத் தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்து வருகிறது இந்திய அரசு. காங்கிரசு அரசாக இருந்தாலும் பாசக அரசாக இருந்தாலும் நடுவண் அரசின் நிலைபாடு எப்போதும்தமிழ்நாட்டிற்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதுதான். இனி அந்தப் பாகுபாடு தொடராது என்பதற்கு என்ன உறுதி? கருநாடக உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு சாதகமாக இந்திய அரசு அதிகாரிகள் நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. இந்த இருபெரும் ஊனங்கள் புதிய காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருக்கின்றன. இவற்றைச் சரி செய்வது எப்படி? இந்த ஊனங்களால் பாதிப்புவராது என்று நேரடியாகத் தெளிவாக உறுதி கூற நரேந்திர(மோடி) அரசு தயாரா? உச்சநீதிமன்றம் அப்போது தலையிட்டுச் சரிசெய்யுமா? கடந்த காலஅனுபவங்கள், “இல்லை” என்ற விடையைத்தான் தருகின்றன. இவற்றுக்கப்பால், 16.2.2018 அன்று தீபக் மிசுரா ஆயம் அறிவித்த காவிரித் தீர்ப்பு, இந்திய அரசமைப்புச் சட்டவிதிகளுக்கு முரணானது. 1956 ஆம்ஆண்டின் தண்ணீர்த் தகராறு சட்டத்திற்கு எதிரானது. அத்துடன் அத்தீர்ப்பு மரபுவழித் தண்ணீர் உரிமை (Riparian Right) என்ற அடிப்படை உரிமையைத் தகர்த்து விட்டது. தேவைக் கேற்ற தண்ணீர் பகிர்வு (Equitable Share) கோட்பாட்டைத் திணித்துள்ளது. வேளாண்மைக்கு நிகராகத் தொழில்துறைக்குத் தண்ணீர் அளிக்கும் கோட்பாட்டைப் புகுத்தியுள்ளது. இந்த அநியாயங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரை மிக மோசமாகக் குறைத்துவிட்டது உச்ச நீதிமன்றம். எனவே இதைச் சரி செய்ய காவிரி வழக்கிற்கு உச்சநீதிமன்றத்தில் ஏழு நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்பு ஆயம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான வழக்கைத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுக்க வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முல்லைப் பெரியாறு வழக்கு, உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கும் நிலையில் அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றப்பட்ட முன் எடுத்துக்காட்டையும் சுட்டிக் காட்டி வருகிறது. மேற்கண்ட எச்சரிக்கைகளுடன் – விழிப்புணர்வுடன் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது பற்றி தமிழர்கள் கவனமாக இருக்கவேண்டும். – பெ. மணியரசன் ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக்குழு ========================== செய்தித் தொடர்பகம், காவிரி உரிமை மீட்புக் குழு ========================== பேச: 76670 77075, 94432 74002 ========================== Fb.com/KaveriUrimai #SaveMotherCauvery…
இ.ஆ.ப., இ.கா.ப. தேர்வில் சமூக நீதிக்கு எதிரான புதிய விதிமுறைகள்: மத்திய அரசுக்குத் தாலின் கண்டனம்
இ.ஆ.ப., இ.கா.ப. தேர்வில் சமூக நீதிக்கு எதிரான புதிய விதிமுறைகள்: மத்திய அரசுக்குத் தாலின் கண்டனம் சென்னை: குடிமைப்பணித் தேர்வு முறையில் மத்திய அரசு புகுத்த உள்ள புதிய முறைக்குத் தாலின் பின்வருமாறு கண்டனம் தெரிவித்துள்ளார். “இ.ஆ.ப. முதலான அகில இந்தியப் பணிகளுக்கு இதுவரை ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம்(யூபிஎஸ்சி) முதல்நிலை, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வை நடத்தித் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. அதில், மிகச்சிறந்த மதிப்பெண்கள் வாங்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினச் சமுதாயங்களைச் சார்ந்த இளைஞர்கள் ஏன் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற முடியாமல்…
இலக்கியச் சிந்தனை 576 ஆவது நிகழ்வு மற்றும் குவிகம் இலக்கியவாசல் 38 ஆவது நிகழ்வு
இலக்கியச் சிந்தனை 576 ஆவது நிகழ்வு மற்றும் குவிகம் இலக்கியவாசல் 38 ஆவது நிகழ்வு ‘மாறி வரும் சிறுகதைக் களம்’ சிறப்புரை :- திருமதி காந்தலட்சுமி சந்திரமௌலி வைகாசி 12, 2049 சனிக்கிழமை 26-05-2018 மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை அரங்கம் அடைய உரையாளர் பற்றி:- தமிழிலும் ஆங்கிலத்திலும் 5 புதினங்கள், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ள எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக வடிவமைப்பவர், மொழி பெயர்ப்பாளர், தொலைக் காட்சிக்காகவும், வானொலிக்காகவும் ஏராளமான…
கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு: ‘கவியரசர் கண்ணதாசன்’
இலக்கியவீதி பாரதிய வித்தியா பவன் கிருட்டிணா இனிப்பகம் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு: ‘கவியரசர் கண்ணதாசன்’ வைகாசி 11, 2049 வெள்ளிக்கிழமை 25.05.2018 மாலை 6.30 மணி பாரதிய வித்தியா பவன், மயிலாப்பூர், சென்னை 600 004 முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : இயக்குநர் எசு.பி. முத்துராமன் அன்னம் விருது பெறுபவர் : ஓவியக்கவிஞர் அமுதபாரதி சிறப்புரை : இலக்கியச்சுடர் த. இராமலிங்கம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : முனைவர் ப. சரவணன் தகுதியுரை : செல்வி ப. யாழினி உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்
தமிழ் அருச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு
தமிழ் அருச்சகர் படிப்பு – மாணவர் சேர்க்கை அறிவிப்பு செந்தமிழ் வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் திஇநி பல்கலைக்கழகத் தமிழ் பேராயமும் இணைந்து நடத்தும், தமிழ் அருட்சுனைஞர் பட்டயப் படிப்பின் ஏழு குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. இதுவரை சற்றேறக்குறைய 700 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர். தமிழ் அருட்சுனைஞர் ஓராண்டுப் பட்டயப் படிப்பு (DIPLOMA IN TAMIL ARUTSUNAIGNAR) 8-ஆம் ஆண்டு (2018-2019) மாணவர் குழாமிற்கு (Batch) சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. சூன்…
சுனில் கில்நானியும் நானும் – சிறப்புரை : சா கந்தசாமி
விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 36 சுனில் கில்நானியும் நானும் (‘இந்தியா என்கிற கருத்தாக்கம்’ என்ற புத்தக ஆசிரியர்) சிறப்புரை:சா கந்தசாமி சாகித்திய அக்காதெமி விருதுபெற்ற எழுத்தாளர். புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று பல தளங்களில் இயங்குபவர். வைகாசி 05, 2049 / 19.05.2018 (சனிக்கிழமை) மாலை 6.00 மணி திருஇராம் குழுமஅலுவலகம் மூகாம்பிகை வளாகம் சி பி இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே ஆறாவது தளம், மயிலாப்பூர் சென்னை 600 004 அனைவரும் வருக! அன்புடன்…
பொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு!
பொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை! இந்திய அரசின் நீர்வளத்துறை இன்று (14.05.2018) உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ள காவிரி வரைவுச் செயல்திட்டம் – தன்னாட்சி அதிகாரமற்ற ஒரு பொம்மை பொறியமைவாகவே உள்ளது. “காவிரித் தண்ணீர் மேலாண்மை செயல்திட்டம் – 2018” (Cauvery Water Management Scheme 2018) என்ற பெயரில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த வரைவுத் திட்டத்தின் பிரிவு – 9, செயல்திட்டத்தின் (ஆணையத்தின்) அதிகாரங்கள், செயல்பாடுகள், கடமைகள் பற்றி குறிப்பிடுகின்றன. அதில்,…
