நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விருதினைப் பெற்ற சிங்களர் !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விருதினைப் பெற்ற சிங்களர் ! முனைவர் செனிவிரத்னா அவர்களை சிங்களர்தம் பகுத்தறிவின் குரலாகப் போற்றுகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.  சிங்களர் ஒருவர் உட்பட நான்கு பெருமக்களுக்கு பெருமைசால் உயரிய விருதுகளை வழங்கி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மாண்பேற்றியுள்ளது. சா.சே.வே.செல்வநாயகம் நினைவு விருது, மாமனிதர் துணைவேந்தர் அழகையா துரைராசா நினைவு விருது, அதிபர் நெல்சன் மண்டேலா நினைவு விருது, தமிழ்த் தேசிய இளைஞர் புலமைப்பரிசில் என ஆண்டுதோறும் நான்கு விருதுகளை வழங்கி மாண்பேற்றி வருகின்றது. அந்தவகையில்…

தமிழீழம் – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் அரங்கம்

தமிழர் தலைவிதி தமிழர் கையில் : பேர்லினில இடம்பெற்ற பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் அரங்கம் !    பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் அரங்கம் செருமன் தலைநகர் பேர்லினில் இடம்பெற்றது. இலங்கைத்தீவின் தேசிய இனச் சிக்கலுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஈழத் தாயகப்பகுதிகளிலும், ஈழத்தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் செயற்பட்டு வருகின்றது. கனாடாவில் இடம்பெற்றிருந்த மக்கள் அரங்கத்தின் தொடர்சியாகத் தற்போது செருமனியில் இடம்பெற்றுள்ளது. செருமன்…

புதுவையில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-3

புதுவையில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-3 புதுவைத் தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம் புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் ஆற்றி வருகிறார். சித்திரை 30, 2049  / 13.5.2018 அதன் மூன்றாவது சொற்பொழிவில் இராவணகாவியத்தின் இரண்டாம் காண்டத்தில் அமைந்துள்ள படலங்களின் பொருள்பற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார்.  புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார்.  புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி தொடர்சொற்பொழிவைத் தொடங்கி வைத்தார்.செயற்குழு உறுப்பினர் நெ.நடராசன்…

புத்தகங்களே படிக்கட்டுகள் – கவிஞர் மு.முருகேசு

புத்தகங்களே படிக்கட்டுகள்     வந்தவாசி அரசுக் கிளை  நூலக வாசகர் வட்டமும்  திரு அகிலாண்டேசுவரி மகளிர் கல்லூரியும் இணைந்து தேசிய நூலக வார வாசிப்பு விழிப்புணர்வு விழா நடத்தின. இவ்விழாவில், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குப் புத்தகங்களே என்றும் படிக்கட்டுகளாக அமைந்துள்ளன என்று நூலக வாசகர் வட்டத் தலைவரும் கவிஞருமான மு.முருகேசு குறிப்பிட்டார்.    இவ்விழாவிற்குப் பங்கேற்ற அனைவரையும் கிளை நூலகர் பூ.சண்முகம் வரவேற்றார்.   திரு அகிலாண்டேசுவரி மகளிர் கல்லூரியின் நூலகர் கே.கலாராணி, உதவி நூலகர் எசு.காந்திமதி, அரசுக் கிளை நூலகர் க.மோகன் ஆகியோர் வாழ்த்துரை…

‘தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே!’  – சென்னையில் நடந்த எழுச்சிமிகு மாநாடு!

‘தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே!’  – சென்னையில் நடந்த எழுச்சிமிகு மாநாடு! “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல!” என்ற தலைப்பில், தை 21,2049 சனி பிப்ரவரி 3, 2018 அன்று சென்னையில்தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் எழுச்சிமிகு சிறப்பு மாநாடு நடைபெற்றது.  சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையிலுள்ள அண்ணா அரங்கில் காலை 9.30 மணியளவில் தொடங்கிய மாநாட்டின் முதல் நிகழ்வாக, பெண்ணாடம் இளநிலா கலைக் குழுவினரின் பறையாட்டம் நடைபெற்றது. ‘தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்’ என்ற தலைப்பில் நடந்த ஒளிப்படக் கண்காட்சியைத் தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர்…

தமிழ்க் குறும்பாக்கள்  புதிய உயரங்களைத் தொட்டுள்ளன  – கவிஞர் மு.முருகேசு

தமிழ்க் குறும்பாக்கள்  புதிய உயரங்களைத் தொட்டுள்ளன         – கவிஞர் மு.முருகேசு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்(காஞ்சி மாவட்டம்) சார்பில், கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய குறும்பா(ஐக்கூ)  நூல் வெளியீட்டு விழா செங்கற்பட்டிலுள்ள சைலா அரங்கில் நடைபெற்றது.    இவ்விழாவிற்குக் கலை இலக்கியப் பெருமன்றம் காஞ்சி மாவட்டத் தலைவர் ஓவியக்கவி நா. வீரமணி தலைமை தாங்கினார். கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய ‘கூடிழந்த பறவையின் குரல்’  எனும் குறும்பா நூலை மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்தியா வெளியிட்டார்.  இதழாளர் கவிஞ்ர்  மு.முருகேசு பெற்றுக்கொண்டார். நூலைப் பெற்றுக்கொண்ட கவிஞர் மு.முருகேசு…

மறைமலை இலக்குவனார் நூல்கள் அறிமுக விழா – படங்கள்

  செம்மொழிச்சுடர், In Defense of Classical Tamil என்னும்  முனைவர் மறைமலை  இலக்குவனார் நூல்கள் அறிமுக விழா சென்னை கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில்  ‘செவ்வாய்தோறும்  செந்தமிழ்’ என்னும் ்தலைப்பில் இவ்வாண்டிற்கான முதல் இலக்கியக் கூட்டம் மார்கழி 18,2048 செவ்வாய் சனவரி 02,2018 அன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனாரின் செம்மொழிச்சுடர், In Defense of Classical Tamil ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா நடைபெற்றது. சிவலாயம் செ.மோகன் தலைமையில் நீதிபதி இரா.சுரேசுகுமார், தேர்ந்த இலக்கியவாதி போல் சிறப்பாக அறிமுக உரை யாற்றினார்….

இரீயூனியன் தமிழன்பர்கள் சந்திப்பு – படங்கள்

இரீயூனியன் தமிழன்பர்கள் சந்திப்பு – படங்கள் சென்னை ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் மார்கழி 18, 2048 செவ்வாய்க் கிழமை – சனவரி மாதம் 2-ஆம் நாள், தாய்த் தமிழகத்திற்கு வருகைதந்த இரீயூனியன் நாட்டைச் சார்ந்த தமிழன்பர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. ஆசியவியல் நிறுவன இயக்குநர் முனைவர் சான் சாமுவேல் வரவேற்று அறிமுக உரை நடத்தினார். தமிழன்பர்களின் குழுத்தலைவரான அருட்திரு இயோ.நீலமேகம், இரீயூனியன் நாட்டில் தமிழ்மக்களிடம் தமிழ் இல்லா நிலை குறித்து விளக்கினார். அவர்களின் இப்போதைய மொழியான கிரயோல் மொழியில் குழுவினர் தங்களை அறிமுகப்படுத்தித் தெவிவித்த…

காந்திநகர் நூலக வாசகர் வட்டத்தில் தமிழ்க்குறும்பா நூற்றாண்டு விழா

       அடையாறு காந்திநகர் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தமிழ்க் குறும்பா நூற்றாண்டு விழா நடைபெற்றது.       இவ்விழாவிற்கு கவிஞரும் இதழாளருமான மு.முருகேசு தலைமையேற்றார். வாசகர் வட்டத் தலைவர் எழுத்தாளர் வையவன் அனைவரையும் வரவேற்றார். நூலகர் நீ.அகிலன், ஓவியர் செந்தமிழ்ச் செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  விழாவில், கவிஞர்கள் க.நா.கல்யாண சுந்தரம், வசீகரன், அருணாச்சல சிவா, யுவபாரதி, சு.கணேசுகுமார், துரை.நந்தகுமார், வானவன், தயானி தாயுமானவன் முதலரன 25-க்கும் மேற்பட்ட கவிஞர்கள் குறும்பாக் கவிதைகளை (ஐக்கூ)வாசித்தனர்.  தமிழின் மூத்த குறும்பாக் கவிஞர் ஓவியர் அமுதபாரதி, தனது  குறும்பாக் கவிதைப் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டார்….

வாசிப்புப் போட்டி – 2017 தேர்வு மதிப்பீடு

வாசிப்புப் போட்டி – 2017 தேர்வு மதிப்பீடு வலைவழி வாசிப்புப் போட்டி என்பது இலகுவானதல்ல. நூல்களை வாசித்து வினாக்களுக்கான விடைகளை அந்நூல்களில் இருந்து பொறுக்கி எமக்கு அனுப்பிவைக்க வேண்டும். இந்த முயற்சியில் இறங்குவோர், வாசிப்பைச் சரியாக மேற்கொள்ள வேண்டும். உலகெங்கும் தமிழ் பேசும் மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க, வாசிப்பு மாதமாகிய ஐப்பசி (Oct) இல் அறிவித்து நடாத்தப்பட்ட ‘வாசிப்புப் போட்டி – 2017‘ இற்கான முடிவுரையை இப்பகுதியில் தருகின்றேன். இப்போட்டியில் நிறைவடையத்தக்க வகையில் விடை கிடைக்காத போதும் (அதாவது, நூல்களை வாசித்து நூலாசிரியர்களின்…

இலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1,705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு !

இலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1,705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்  புதிய இடைக்கால அரசமைப்புச் சட்ட அறிக்கையில் இடம்பெறும் ‘பிரிக்கப்படாத, பிரிக்கவொண்ணாத ஒரே நாடு’ என்ற சொல்லாட்சியையும், முறையீடு எடுத்துக்காட்டுகிறது. இலங்கையின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ஆயிரத்து எழுநூற்று ஐந்து (1,705) சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு ஒன்றினைச் செய்துள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் உலகளாவிய முறையில் ஒருங்கிணைந்த 1,705 சட்டத்தரணிகள் தமது முறைப்பாட்டை கடந்த திசம்பர் 8 ஆம் நாளன்று ஐ.நாவில் அளித்துள்ளனர். இது…